Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    48 - கானான் பங்கிடப்படுதல்

    பெத்தொரானில் கிடைத்த வெற்றி விரைவாக தெற்குக் கானானை வெற்றி பெறுவதில் தொடர்ந்தது. இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் ... அனைத்தையும் அழித்தான். அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார். பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடுங்கூடக்கில் காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.PPTam 657.1

    வடக்குப் பாலஸ்தீனத்தில் இருந்த கோத்திரங்கள் இஸ்ர வேலின் சேனைகளுக்குக் கிடைத்த வெற்றியினால் திகிலடைந்து, அவர்களுக்கு எதிரான ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்தனர். இந்த கூட்டணியின் தலைவனாக மேரோம் ஏரிக்கு மேற்புறத்தில் இருந்த ஆத்சோரின் இராஜாவாகிய யாபீன் இருந்தான். அவர்கள் தங்களுடைய எல்லாச் சேனைகளோடும் ......... புறப்பட்டார்கள். இந்த சேனை இஸ்ரவேலர்கள் கானானிலே எதிர்த்திருந்த வேறு எந்த படையைக் காட்டிலும் மிகப் பெரியதாக இருந்தது. அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஐனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடுங்கூடப் புறப்பட்டார்கள். இந்த ராஜாக்களெல்லாரும் கூடி, இஸ்ரவேலரோடேயுத்தம் பண்ணவந்து, மேரோம் என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங் கினார்கள். மீண்டும் அவர்களுக்குப் பயப்படாயாக, நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன் என்று உற்சாகப்படுத்தும் செய்தி யோசுவாவிற்குக் கொடுக்கப்பட்டது.PPTam 657.2

    ரோம் ஏரிக்கு அருகே அவன் அந்த எதிரிகளின் பாளயத் தின் மேல் விழுந்து அவர்களுடைய படைகளை வேரோடு சாய்த் தான். கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின்கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, ............ அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள். கானானி யர்களின் அகந்தையும் பெருமையுமாயிருந்த அவர்களுடைய இரதங்களும் குதிரைகளும் இஸ்ரவேலால் எடுத்துக்கொள் ளப்படக்கூடாது . தேவனுடைய கட்டளையின்படி இரதங்கள் எரிக்கப்பட்டு, குதிரைகள் முடமாக்கப்பட்டு, இவ்விதமாக யுத்தத்திற்கு உபயோகப்படாது போயின. இஸ்ரவேலர்கள் தங்கள் நம்பிக்கையை இரதங்களிலும் குதிரைகளிலும் அல்ல தங்கள் தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே வைக்க வேண்டும்.PPTam 658.1

    ஒவ்வொன்றாக பட்டணங்கள் பிடிக்கப்பட்டன. இந்தக் கூட்டமைப்பின் அரணாக இருந்த ஆத்சோர் எரிக்கப்பட்டது. யுத்தம் பல வருடங்களுக்குத் தொடர்ந்தது. ஆனால் அதன் முடிவு யோசுவாவை கானானிற்குத் தலைவனாக்கிற்று. யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.PPTam 658.2

    கானானியர்களின் வல்லமை முறியடிக்கப்பட்டிருந்தபோதும் முழுமையாக அவர்கள் துரத்திவிடப்படவில்லை. மேற்குப்புறத் திலே கடற்கரையை ஒட்டின செழிப்பான சம்பூமியை பாலஸ்தீனி யர்கள் இன்னமும் வைத்திருந்தனர். அவர்களுக்கு வடக்கே சீதோனியர்கள் இருந்தனர். லீபனோனும் சீதோனியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. எகிப்தை நோக்கின் தென்புறத்தில் தேசம் இன்னும் இஸ்ரவேலின் சத்துருக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.PPTam 658.3

    இன்னும் யோசுவா யுத்தத்தைத் தொடரக் கூடாது. இஸ்ரவேலின் தலைவனாக தன்னுடைய பொறுப்பை முடிக்கும் முன்பாக இந்த மாபெரும் தலைவன் செய்ய வேண்டிய மற்றொரு வேலை இருந்தது. ஏற்கனவே வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகளும் இன்னும் அடக்கப்பட வேண்டிய மற்ற பகுதிகளும் கோத்திரங்களுக்குப் பங்கிடப்பட வேண்டும். தன்னுடைய சொந்த சுதந்த ரத்தை தனக்குக் கீழ்ப்படுத்துவது ஒவ்வொரு கோத்திரத்தின் கடமையாயிருந்தது. ஜனங்கள் தேவனுக்கு உண்மையாக இருந்தார்களானால் அவர் அவர்களுடைய சத்துருக்களை அவர்கள் முன் துரத்துவார். அவருடைய உடன்படிக்கைக்கு அவர்கள் உண்மையாயிருக்கும் போது இன்னும் அதிகமான சுதந்தரத்தை அவர்களுக்குத் தர அவர் வாக்குப்பண்ணியிருந்தார்.PPTam 658.4

    யோசுவாவிடமும் பிரதான ஆசாரியனாகிய எலியேசரிடமும் கோத்திரங்களின் தலைவரிடமும் தேசத்தை பங்கிடுவது கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்தின் இடமும் சீட்டுப் போடுவதினால் தீர்மானிக்கப்பட்டது. மோசேதானும் இஸ்ர வேலர்கள் கானானை சுதந்தரிக்கும் போது கோத்திரங்களுக் கிடையே பங்கிடப்பட வேண்டிய தேசத்தின் எல்லைகளை, குறித் திருந்தான். அதைப் பங்கிட்டுக் கொடுப்பதில் ஒரு பிரபுவையும் நியமித்திருந்தான். லேவியின் கோத்திரம் ஆசரிப்புக் கூடாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டு, ஒதுக்கீட்டில் எண்ணப்படவில்லை. ஆனால் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாற்பத்து எட்டுப் பட்டணங்கள் அவர்களுடைய சுதந்தரமாக ஒதுக்கப்பட்டது.PPTam 659.1

    தேசத்தைப் பங்கிடுவதற்கு முன்பாக தன்னுடைய கோத்திரத் தின் தலைவர்களுடன் விசேஷமான கோரிக்கைகளோடு காலேப் வந்தான். யோசுவாவைத் தவிர்த்து காலேப்தான் இஸ்ரவேலில் மிக வயதான மனிதனாயிருந்தான். வாக்குத்தத்த தேசத்தைக்குறித்து செய்தி கொண்டுவந்த வேவுகாரர்களில் காலேபும் யோசுவாவும் மாத்திரமே நற்செய்தி கொண்டு வந்து ஆண்டவருடைய நாமத்தினாலே மேலே சென்று அதைப் பிடித்துக்கொள்ளும்படி ஜனங்களை உற்சாகப்படுத்தியிருந்தார்கள். தன்னுடைய உண்மைக் கானபலனாக உன்கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக் கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று அப்போது செய்யப்பட்ட வாக்குறுதியை காலேப் யோசுவாவிற்கு நினைவு படுத்தினான். அவ்விதம் எபிரோன் தனக்குச் சுதந்தரமாக கொடுக் கப்படவேண்டும் என்று ஒரு விண்ணப்பத்தை வைத்தான். இங்கே தான் அநேக வருடங்களாக ஆபிரகாம் ஈசாக்கு மற்றும் யாக்கோ பின் கூடாரங்களிருந்தன. இங்கேதான் மக்பேலா குகையில் அவர்கள் அடக்கம் பண்ணப்பட்டிருந்தனர். இங்கேதான் வல் லமைமிக்க தோற்றத்தினால் வேவுகாரர்களை பயமுறுத்தியிருந்த அவர்கள் வழியாக அனைத்து இஸ்ரவேலரின் தைரியத்தையும் அழித்திருந்த ஏனாக்கியர்கள் இருந்திருந்தனர். இது மற்ற அனைத்து இடத்திற்கும் மேலாக, தேவனுடைய பலத்தை நம்பி காலேப் தன் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட இடமாக இருந்தது.PPTam 659.2

    இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று, இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும், அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே ; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்று அவன் கூறினான். இந்த விண்ணப்பம் யூதாவின் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டது. தன்னுடைய அதிகாரத்தை சுய இலாபத்திற்காக உபயோகித்தான் என்கிற தோற்றம் இருக்கக்கூடாதென்கிறதற்காக, காலேப் தேசத்தைப் பங்கிடும் கோத்திரத் தலைவர்களில் ஒருவனாக இருந்தும் இந்த மனிதர்களையும் தன் கோரிக்கையைக் கொடுக்க தன்னோடு சே ர்த்துக்கொண்டிருந்தான்.PPTam 660.1

    அவனுடைய கோரிக்கை உடனடியாகக் கொடுக்கப்பட்டது. இந்த இராட்சத அரணை பத்திரமாக வெற்றிகொள்ளுவது வேறு யாரிடமும் அதிக நம்பிக்கையோடு கொடுத்திருக்கப்படக்கூடாது. காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால் யோசுவா : எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். வேவுகாரர்களின் தீய அறிக்கைக்கு முரணாக சாட்சி கொடுத்தபோது காலேபினுடைய விசுவாசம் எவ்விதம் இருந்ததோ அப்படியே இப்பொழுதும் இருந்தது. கானானை சுதந்தரிக்க தேவன் தமது ஜனங்களை நடத்துவார் என்ற அவருடைய வாக்குத்தத்தத்தை அவன் நம்பி அதில் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றினான். அவனுடைய ஜனங்களோடு வனாந்தரத்தில் அநேக வருடங்கள் அலைவதை சகித்து, இவ்விதமாக ஏமாற்றங்களையும் குற்றவாளிகளின் பாரத்தையும் அவன் பகிர்ந்து கொண்டான். எனினும் அவன் இதைக் குறித்து எவ் விதத்திலும் குற்றப்படுத்தவில்லை. மாறாக, அவனுடைய சகோதரர்கள் வனாந்தரத்திலே அழிக்கப்பட்டபோது தான் பாதுகாக்கப் பட்டிருந்ததில் தேவனுடைய இரக்கத்தை உயர்த்தினான். அனைத்து கடினங்களுக்கும் ஆபத்துகளுக்கும் வனாந்தர அலைச்சலின் வாதைகளுக்கும் நடுவிலே, கானானுக்குள் நுழைந்ததிலிருந்து சந்தித்த யுத்தங்களின் நடுவிலே, ஆண்டவர் அவனை பாது காத்திருந்தார். இப்போது எண்பது வருடங்களுக்கு மேலாகியிருந்தும் அவனுடைய பலம் தணியாதிருந்தது. ஏற்கனவே வெற்றி கொள்ளப்பட்டிருந்த தேசத்தை அவன் தனக்காகக் கேட்காமல், கீழ்ப்படுத்துவது கூடாதகாரியம் என்று வேவுகாரர்கள் நினைத் திருந்த அந்த இடத்தை எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கேட்டான். தேவனுடைய உதவியினாலே இஸ்ரவேலின் விசுவாசத்தை தள்ளாடச் செய்த அதே இராட்சதர்களின் வல்லமையிலிருந்து அந்த பலமான அரணை அவன் பற்றிக்கொள்ளுவான். கனத்திற்கான ஆசையிலோ அல்லது பொருள் சேர்க்கும் ஆசையிலோ காலேபினுடைய விண்ணப்பம் வரவில்லை. தைரியமான பழைய யுத்த மனிதன் தேவனை கனப்படுத்தக்கூடிய ஒரு உதாரணத்தை மக்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய பிதாக்கள் வெற்றிகொள்ள முடியாது என்று எண்ணியிருந்த தேசத்தை முழுமையாக கீழ்ப்படுத்தும்படி கோத்திரங்களை உற்சாகப்படுத்த வாஞ்சையாயிருந்தான்.PPTam 660.2

    நாற்பது வருடங்களாக தனது இருதயத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த சுதந்தரத்தை காலேப் பெற்றுக்கொண்டான். தேவன் தன்னோடு இருப்பார் என்ற நம்பிக்கையில் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டான். இவ்விதம் தனக்காகவும் தன் குடும்பத்தாருக்காகவும் ஒரு இடத்தை சுதந்தரித்த பின்னும் அவனுடைய வைராக்கியம் தணியவில்லை . தன் சுதந்தரத்தை அனுபவிக்கும் படியாக அவன் அமரவில்லை . மாறாக, தேவனுடைய மகிமைக்காகவும் தேசத்தின் நன்மைக்காகவும் மேற்கொண்டு வெற்றிகளைப் பெறும்படி முன்னேறினான்.PPTam 661.1

    கோழைகளும் கலகக்காரர்களும் வனாந்தரத்தில் மாண்டு போயினர். எனினும் நீதிமான்களான வேவுகாரர்கள் எஸ்கோலின் திராட்சப்பழங்களை புசித்தனர். அவர்களுடைய விசுவாசத்திற்கு ஏற்றபடி ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது. அவிசுவாசிகள் தங்கள் பயங்கள் நிறைவேறுவதைக் கண்டனர்; தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு மாறாக கானானைச் சுதந்தரிப்பது கூடாதகாரியம் என்று அறிவித்தனர். அவர்கள் அதை சுதந்தரிக்கவில்லை. ஆனால் தேவனை நம்பியிருந்தவர்கள் தங்களுடைய சர்வ வல்லமையுள்ள உதவியாளரின் பலத்தைப் பார்த் ததைப்போன்று எதிர்கொள்ள வேண்டியதிருந்த கஷ்டங்களைப் பார்த்திராது, நல்ல தேசத்திற்குள் நுழைந்தனர். விசுவாசத்தினாலேயே முற்கால மனிதர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண் டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள் - எபி. 11:33, 34, நம்முடைய விசு வாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் 1 யோவான் 5:4.PPTam 661.2

    காலேபைக்காட்டிலும் வெகுவாக வேறுபட்டிருந்த மற்றொரு ஆவி தேசத்தைப் பங்கிடுவதைக்குறித்த மற்றொரு உரிமையில் வெளிப்பட்டது. அது யோசேப்பின் பிள்ளைகளான எப்பிராயீமின் கோத்திரத்தாலும் மனாசேயின் பாதி கோத்திரத்தாலும் சேர்ந்து கொடுக்கப்பட்டது. தங்களுடைய அதிகப்படியான எண்ணிக் கையை கருத்தில் கொண்டு சுதந்தரத்தில் இரண்டு மடங்கை அவர்கள் கோரினர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த இடம் சாரோனின் பள்ளத்தாக்கை உட்படுத்திய மிக செழிப்பான தேசமாக இருந்தது. எனினும் பள்ளத்தாக்கில் இருந்த முக்கியமான பட்டணங்கள் கானானியர்களின் பிடியிலேயே இன்னமும் இருந்தது. தங்களுடைய சுதந்தரத்தை வெற்றிகொள்ளுவதில் இருக்கும் உழைப்பிலும் ஆபத்திலும் அந்தக் கோத்திரங்கள் துவண்டு, ஏற்கனவே வெற்றிகொண்ட எல்லையில் கூடுதலான பங்கை வாஞ்சித்தனர். எப்பிராயீமின் கோத்திரம் இஸ்ரவேலின் மிகப் பெரிய கோத்திரமாயிருந்தது . யோசுவாவும் அதைச் சார்ந்தவனாயிருந்தான்.PPTam 662.1

    அந்தக் கோத்திரத்தார் இயற்கையாகவே தங்களை விசே ஷமானவர்களாக எண்ணியிருந்தனர். நாங்கள் ஜனம் பெருத்தவர்களாயிருக்கிறோம், நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன? என்றார்கள். ஆனால் வளைந்து கொடுக்காத அந்தத் தலைவனிடம் நேர்மையிலிருந்து விலகுவதை எதிர்பார்க்கமுடியாது.PPTam 662.2

    அவனுடைய பதில் : நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக் கொள்ளுங்கள் என்று இருந்தது, அவர்களுடைய பதில் குற்றச்சாட்டின் உண்மையான காரணத்தைக் காண்பித்தது. கானானியர்களைத் துரத்தவேண்டிய தைரியமும் விசுவாசமும் அவர்களுக்கு இல்லாதிருந்தது. மலைகள் எங்களுக்குப் போதாது ; யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.PPTam 662.3

    தேவனுடைய வல்லமை அவருடைய ஜனங்களுக்கு உறுதி கொடுக்கப்பட்டிருந்தது. காலே பின் விசுவாசத்தையும் தைரியத்தையும் எப்பீராயிமர் கொண்டிருப்பார்களானால் அவர்கள் முன் எந்த சத்துருவும் நின்றிருக்கமாட்டான். கடின உழைப்பையும் ஆபத்துகளையும் தடுக்கும் படியான அவர்களுடைய வாஞ்சையின் சான்று யோசுவாவினால் உறுதியாக சந்திக்கப்பட்டது. நீங்கள் ஜனம் பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு ...... கானானியருக்கு இருப்புரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்தி விடுவீர்கள் என்று அவன் கூறினான். இவ்விதம் அவர்களுடைய சொந்த வாக்குவாதமே அவர் களுக்கெதிராக திருப்பப்பட்டது. அவர்கள் சொன்னதைப்போல அவர்கள் மிகப்பெரிய கூட்டமாக இருந்ததினால், அவர்கள் சகோதரர்களைப்போலவே தங்கள் பாதையை ஏற்படுத்த மிகவும் தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள். தேவனுடைய உதவியினாலே இருப்பு இரதங்களைக் குறித்து அவர்கள் பயப்பட வேண்டிய தில்லை .PPTam 663.1

    இதுவரையிலும் கில் கால் தேசத்தின் தலைமையகமாகவும் ஆசரிப்புக் கூடாரத்தின் இடமாகவும் இருந்தது. ஆனால் இப்போது அதன் நிரந்தர இடத்திற்கு அது நகர்த்தப்படவேண்டும். இது எப்பிராயீமின் சுதந்தரத்தில் இருந்த ஒரு சிறிய பட்டணத்தில் இருந்தது. இது தேசத்தின் மையத்திலிருந்து, அனைத்து கோத்திரங்களும் இலகுவாக வந்து சேரக்கூடிய இடமாக இருந்தது. ஆராதிக்கிறவர்கள் எவ்விதத்திலும் துன்புறுத்தப்படாதபடிக்கு இங்கே தேசத்தின் ஒரு பகுதி முழுவதுமாகக் கீழ்ப்படுத்தப்பட்டது. இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். ஆசரிப்புக் கூடாரம் நகர்த்தப்பட்ட போது அங்கே இன்னமும் பாளயமிட்டிருந்த கோத்திரங்கள் அதைத் தொடர்ந்து சீலோவின் அருகே கூடாரம் போட்டனர். தங்கள் சுதந்தரவீதத்திற்கு பிரிந்துபோகும் வரையிலும் அங்கே அவர்கள் தங்கியிருந்தனர்.PPTam 663.2

    ஏலியின் வீட்டாருடைய குடும்பத்தினிமித்தம் உடன்படிக் கைப்பெட்டி பெலிஸ்தியர்களின் கைகளில் விழுந்து சீலோ அழிக் கப்படும் வரை முன்னூறு வருடங்களுக்கு அது அங்கேதானே தங்கியிருந்தது. உடன்படிக்கைப்பெட்டி மீண்டும் இங்கே கூடாரத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. முடிவாக ஆசரிப்புக் கூடார ஆராதனைகள் எருசலேம் ஆலயத்திற்கு மாற்றப்பட, சீலோ இருந்த இடம் அறியாமல் போனது. ஒருகாலத்தில் அது நின்றிருந்த இடம் இப்போது இடிபாடுகளாலேயே குறிப்பிடப்படுகிறது. நீண்ட காலங்களுக்குப்பின் அதனுடைய முடிவு எருசலேமிற்கான எச்சரிப்பாக உபயோகிக்கப்பட்டது. எரேமியா தீர்க்கதரிசியின் வழியாக ஆண்டவர். நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின் சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள் ..... என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்தது போலச் செய்வேன் (எரே. 7:12-14) என்று அறிவித்தார்.PPTam 663.3

    தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, அனைத்துக் கோத்திரங்களுக்கும் அதனதனுடைய சுதந்தர வீதம் குறிக்கப்பட்டது. யோசுவா தன்னுடைய கோரிக் கையை வைத்தான். காலேபைப்போலவே அவனுக்கும் விசேஷ சுதந்தரத்தைக் குறித்த வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவன் விரிவாக்கப்பட்ட இடத்தைக் கேட்கவில்லை. மாறாக, ஒரே ஒரு பட்டணத்தை மாத்திரம் கோரினான். எப்பிராயீ மின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கொடுத்தார்கள், அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான். அந்தப் பட்டணத்திற்கு திம்னாத் சேரா. மீதியாயிருந்த பங்கு என்று பெயர் கொடுக்கப்பட்டது. அது, வெற்றியின் கொள்ளையில் தன்னுடைய பங்கை முதலாவது எடுத்துக்கொள்ளுவதற்குப் பதிலாக தன்னுடைய ஜனத்தின் மிகவும் தாழ்மையானவர்களும் கொடுக்கப்பட்ட பின்னர் தன்னுடைய உரிமையைக் கோரும்படியாக தாமதித்திருந்த, அதை வெற்றி கொண்டவனின் நேர்மையான குணத்திற்கும் சுயநலமில்லாத ஆவிக்கும் நிலையான சாட்சியாக இருக்கிறது.PPTam 664.1

    ஆறு பட்டணங்கள் யோர்தானுக்கு இருபுறத்திலும் மும்மூன்று பட்டணங்களாக மனிதனைக் கொலை செய்தவன் பாதுகாப்பிற்காக ஓடிச் செல்லக்கூடிய அடைக்கலப்பட்டணங்கள் லேவியருக்கு நியமிக்கப்பட்டது. இந்த நியமனம் மோசேயினால் கட்டளையிடப்பட்டிருந்தது . கைப்பிச்காய் ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க கொலை செய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும் படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது. (எண். 3511,12) என்று அவன் கட்டளையிட்டிருந்தான். இந்த ஏற்பாடு, கொலை செய்தவனின் தண்டனை இறந்து போனவனின் அடுத்த சந்ததி அல்லது மிக நெருங்கிய உறவினன் மேல் விழுந்திருந்து, தனிப்பட்ட பழிவாங்குகிறதைக்குறித்த பழங்காலப்பழக்கத்தினால் அத்தியாவசியப்பட்டிருந்தது. குற்றம் தெளிவாக சான்று பகரப்பட்ட சம்பவங்களில் நியாயாதிபதிகளின் விசாரணைக்காகக் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. பழிவாங்கு கிறவன் குற்றவாளியைக் கண்டு பிடிக்கும் எவ்விடத்திலும் அவனைக் கொன்று போடலாம். இந்தப் பழக்கத்தை ஒழிக்கும் அவசியத்தை ஆண்டவர் அந்த நேரத்தில் காணவில்லை. குறிப்பான நோக்கமின்றி கொன்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படியாக ஆண்டவர் இதை ஏற்பாடு செய்திருந்தார்.PPTam 664.2

    தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பாதிநாள் பிரயாண தூரத்தில் அடைக்கலப்பட்டணங்கள் வைக்கப்பட்டன. அவைகளுக்குப் போகிற பாதைகள் எப்போதும் நல்ல நிலையில் வைக்கப்பட வேண்டும். பாதை முழுவதிலும் குறிப்படையாளங்கள் நிறுத்தப்படவேண்டும். ஓடுகிற ஒருவன் எவ் விதத்திலும் ஓட்டத்தை தாமதப்படுத்த அவசியமில்லாதபடி தெளிவான வார்த்தைகளில் அடைக்கலம் என்று பெரியதாக எழுதப்பட்டிருந்தன. எபிரெயனோ அந்நியனோ பரதேசியோ யாராயிருப் பினும் இந்த ஏற்பாட்டை உபயோகிக்கலாம். குற்றமற்றவன் அவச ரமாகக் கொல்லப்படக்கூடாத அதே நேரத்தில், குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்கவும் கூடாது. அடைக்கலமாக வந்தவனின் வழக்கு முறையான அதிகாரிகளால் நியாயமாக சே பாதிக்கப்படவேண்டும். முன்னோக்கத்தோடு கொலை செய்யப்படும் குற்றத்திலில்லையெனில் அவன் அடைக்கலப்பட்டணத்திற்குள் பாதுகாக்கப்படவேண்டும். குற்றமுள்ளவன் பழிவாங்குகிறவனின் கைகளில் கொடுக்கப்பட்ட வேண்டும். குறிக்கப்பட்ட அடைக்கலத்திற்குள் தங்கியிருப்பதன் நிபந்தனையில் தான் அவன் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். குறிக்கப்பட்ட எல்லைக்கு வெளியே ஒருவன் அலைந்து, இரத்தத்திற்காக பழி வாங்குகிறவனால் கண்டுபிடிக்கப்படுவானாகில், ஆண்டவருடைய ஏற்பாடுகளை கருத்தில் கொள்ளாததினால் அவனுடைய வாழ்க்கை அதன் அபராதத்தைப் பெறும். எனினும், பிரதான ஆசாரியனின் மரணத்தின் போது அடைக்கலப்பட்டணத்திற்குள் அடைக்கலம் பெற்ற எவரும் தங்களுடைய சுதந்தரத்திற்குத் திரும்பச் செல்ல விடுவிக்கப்படுவார்கள்.PPTam 665.1

    கொலைக்குற்றத்திற்கான சோதனையில், குற்றஞ்சாட்டப்பட்டவனுக்கு எதிரான சூழ்நிலைகள் வல்லமையாக இருந் தாலும், ஒரு சாட்சியின் அடிப்படையில் அவன் ஆக்கினைக்குட் படக்கூடாது. எவனாகிலும் ஒரு மனிதனைக் கொன்று போட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலை பாதகனைக் கொலை செய்யக்கடவர்கள், ஒரே சாட்சி யைக் கொண்டு மாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச் செய்யலாகாது - எண். 35 30. இஸ்ரவேலுக்கான இந்த நடத்துதல்களை கிறிஸ்துதாமே மோசேயிடம் கொடுத்திருந்தார். தமது சீடர்களோடு இந்த பூமியில் தனிமையாக இருந்தபோது, குற்றமுள்ளவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று கற்பித்தபோது, ஒரு மனிதனுடைய சாட்சியின் வாக்கினாலே மனிதனை விடுதலை செய்யவோ அல்லது ஆக்கினைக்குட் படுத்தவோ கூடாது என்கிற போதனையை அந்த மாபெரும் போதகர் திரும்பக் கூறினார். வாக்குவாதங்களின் கேள்விகளில் ஒரு மனிதனுடைய கண்ணோட்டங்களோ அல்லது கருத்துக்களோ அதை நிவிர்த்தி பண்ணக்கூடாது. இந்தக் காரியங்கள் அனைத்திலும் இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஒன்றாக இந்தப் பொறுப்பை அவர்கள் சுமக்க வேண்டும். இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலை வரப்படும் படி. (மத். 1815, 16) என்றார்.PPTam 666.1

    கொலைக் குற்றத்தினால் விசாரிக்கப்பட்டவன் குற்றமுள்ள வனாக நிருபிக்கப்படும் போது, எந்த நிவாரணமும் மீட்கும் பொருளும் அவனை மீட்கக்கூடாது. மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது (ஆதி. 9 ) சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலை பாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும் பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலை செய்யப்படவேண்டும். அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டு போய்க் கொலை செய்யவேண்டும் என்பது ஆண்டவருடைய கட்டளையாக இருந்தது. இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலே யொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை . எண். 35 31, 33; யாத். 21:14. தேசத்தின் பாதுகாப்பும், தூய்மையும் கொலைக் குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதைக் கோரியது . தேவன் மாத்திரமே கொடுக்கக் கூடிய உயிர் மிகவும் புனிதமாகப் பாதுகாக்கப்படவேண்டும்.PPTam 666.2

    தேவனுடைய முற்கால மக்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த அடைக்கலப்பட்டணங்கள் கிறிஸ்துவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற அடைக்கலத்திற்கு அடையாளமாக இருக்கின்றன. அந்த சொற்ப காலத்திற்கான அடைக்கலங்களை நியமித்த அதே இரக்கமுள்ள இரட்சகர், தமது சொந்த இரத்தத்தை சிந்தினதின் வழியாக தேவனுடைய பிரமாணத்தை மீறுகிறவனுக்கு இரண்டாம் மரணத்திலிருந்து பாதுகாப்பிற்காக ஓடக்கூடிய நிச்சயமான அடைக்கலத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். மன்னிப்பிற்காக அவரிடம் செல்லுகிற ஆத்துமாக்களை அவருடைய கரங்களிலிருந்து எந்த வல்லமையும் வெளியே எடுக்கக்கூடாது. கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு நிறைந்த ஆறுதலுண்டாகும் படிக்கு. ரோமர் 8:1,34; எபி. 6:18.PPTam 667.1

    அடைக்கலப்பட்டணத்திற்குள் ஓடினவன் தாமதிக்கக்கூடாது. அவனுடைய குடும்பமும் வேலையும் விட்டு செல்லப்பட்டிருக் கிறது. அன்பானவர்களுக்கு பிரிவு விடை சொல்ல நேரமில்லை. அவனுடைய உயிர் கூர்முளையில் இருக்கிறது. அந்த ஒரு நோக்கத்திற்காக மற்ற அனைத்து நோக்கங்களும் தியாகம் பண்ணப்பட வேண்டும். அவர்களுடைய சோர்வு மறக்கப்பட்டு, கஷ்டங்கள் கவனிக்கப்படாது போகிறது. பட்டணத்தின் சுவர் களுக்கு உள்ளே வரும் வரையிலும் தப்பியோடுகிறவன் ஒரு நொடியாகிலும் தன் வேகத்தை குறைக்கக்கூடாது.PPTam 667.2

    கிறஸ்துவில் மறைவை காணும் வரையிலும் பாவி நித்திய அழிவிற்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறான். சுற்றி திரிவதும் கவனமின்றி இருப்பதும் அவன் பிழைப்பதற்கான ஒரே சந்தர்ப்பத்தை அவனிடமிருந்து எடுத்து விடக்கூடும். எனவே தாமதங்களும் அலட்சியமும் அவனுடைய ஆத்துமாவின் அழிவை நிச்சயப்படுத்தக் கூடும். மாபெரும் சத்துருவான சாத்தான் தேவனுடைய பிரமாணத்தை மீறின் ஒவ்வொருவனுடைய பாதையிலும் இருக்கிறான். தன்னுடைய ஆபத்தைக் குறித்த உணர்வில்லாது நித்திய அடைக்கலம் பெற ஊக்கமாகத் தேடாதவன் அழிம்பனுக்கு இரையாவான்.PPTam 667.3

    அடைக்கலப்பட்டணத்தைவிட்டு எந்த நேரத்திலும் வெளியே செல்லுகிற கைதி, இரத்தத்திற்காக பழிவாங்குகிறவனிடம் விட்டுடப்பட்டான். இவ்வாறாக அவர்களுடைய பாதுகாப்பிற்காக நித்திய ஞானமுள்ளவர் நியமித்தவைகளை கடைபிடிக்கும் படி ஜனங்கள் போதிக்கப்பட்டனர். எனினும் பாவத்தின் மன்னிப்பிற்காக கிறிஸ்துவை நம்புவது மாத்திரம் ஒரு பாவிக்குப் போதாது . விசுவாசத்தினாலும் கீழ்ப்படிதலினாலும் அவன் கிறிஸ்துவில் தங்கியிருக்கவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய் கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும் - எபி. 10:26, 27.PPTam 668.1

    இஸ்ரவேலின் இரண்டு கோத்திரங்களான காத்தும் ரூபனும் மனாசேயின் பாதி கோத்திரத்தோடு, யோர்தானைக் கடக்கும் முன்பாக தங்கள் சுதந்தரத்தை பெற்றுக்கொண்டனர். இந்த இடையர்களுக்கு அவர்களுடைய மந்தைகளுக்கு பரந்த மேய்ச்சல் நிலத்தைக் கொடுத்திருந்த செழிப்பான காடுகளைக் கொண்ட கிலேயாத்தின் மேடுகளும் பாசானும், கானானில் காணக்கூடாதிருந்த கவர்ச்சிகளைக் கொண்டிருந்தது. தங்கள் சகோதரர்களும் அவர்களுடைய சுதந்தரத்திற்குள் நுழையும் வரையும் அவர்களுடன் சேர்ந்து யுத்தங்களில் பங்கெடுப்பதாக அந்த இரண்டரைக் கோத்திரங்களும் உறுதியளித்திருந்தனர். இந்தக் கடமை உண்மையாகச் செய்யப்பட்டது. பத்துக் கோத்திரங்களும் கானானிற்குள் நுழைந்தபோது, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்து போனார்கள். ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் யுத்தசன்னத்தராய் யுத்தம் பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்து போனார்கள் யோசுவா 4:12, 13. வருடக்கணக்காக அவர்கள் தங்கள் சகோதரர்கூட இருந்து தைரியமாகப் போரிட்டனர். இப்போது தங்கள் சுதந்தரவீதத்திற்கு திரும்பும் நேரம் அவர்களுக்கு வந்திருந்தது. தங்கள் சகோதரர்களோடுயுத்தத்தில் இணைந்திருந்ததினால் கொள்ளையில் தங்கள் பங்கைப் பெற்றனர். மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் திரும்பினர். இவைகளை தங்கள் குடும்பங்களோடும் மந்தைகளோடும் பின்தங்கியிருந்தவர்களோடும் அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.PPTam 668.2

    ஆண்டவருடைய ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மிகவும் தூரமாகத் தங்கியிருப்பதினால் அவர்களுடைய சோதனை எவ்வளவு பலமாக இருக்கும் என்பதையும், தனிமைப்படுத்தப்பட்டு அலையும் அவர்கள் வாழ்க்கையில் அவர்களுடைய எல்லையிலிருக்கும் அஞ்ஞான ஜாதிகளின் வழக்கங்களுக்குள் விழுவது எவ்வளவு எளிதாக இருக்கும் என்பதையும் அறிந்த வனாக யோசுவா அவர்கள் பிரிந்து செல்லுவதை வேதனையான இருதயத்தோடு கவனித்தான்.PPTam 669.1

    தங்கள் முன் இருந்த எதிர்பார்ப்புகளினால் யோசுவாவின் மனதும் மற்ற தலைவர்களின் மனதும் நெருக்கப்பட்டிருந்த நேரத்தில், விசித்திரமான செய்திகள் அவர்களை வந்தடைந்திருந்தன . யோர்தானுக்கு அப்புறத்தில், இஸ்ரவேலர்கள் அற்புதமாகக் கடந்து வந்திருந்த ஆற்றினருகே, இரண்டரைக் கோத்திரங்களும் சீலோவில் கட்டப்பட்டிருந்த பலிபீடத்திற்கு ஒப்பனையான ஒரு பலிபீடத்தை உயர்த்தினார்கள் என்ற செய்தி வந்தது. ஆசரிப்புக் கூடாரத்தை விடுத்து மற்ற இடத்தில் ஆராதனை செய்வதை தேவனுடைய பிரமாணம் மரண தண்டனையின் பேரில் தடை செய் திருந்தது, இந்த பலிபீடத்தின் நோக்கம் அதுவாக இருக்குமானால் தொடர் அனுமதிக்கப்படும் போது மெய்யான விசுவாசத்திலிருந்து அது ஜனங்களை வெளியே நடத்தும்.PPTam 669.2

    ஜனங்களின் பிரதிநிதிகள் சீலோவில் கூடினர். தங்களுடைய உற்சாகத்திலும் கோபத்தின் உக்கிரத்திலும் குற்றஞ் செய்தவர்கள் மேல் உடனடியாக யுத்தம் செய்யும்படியாக ஆலோசனை கூறப்பட்டது, எனினும் மிகவும் ஜாக்கிரதையானவர்களின் செல்வாக்கினால், தங்கள் நடக்கையைக் குறித்து ஒரு விளக்கம் கொடுக்கும்படி இரண்டரைக் கோத்திரங்களுக்கும் முதலில் ஒரு பிரதிநிதிக்குழு அனுப்பப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரபுவாக பத்து பிரபுக்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். பேயோரின் காரியத்தில் தன்னுடைய வைராக்கியத்தை காண்பித்ததினால் குறிப்பிடப்பட்டிருந்த பினெகாஸ் அவர்களுக்குத் தலைமை தாங்கினான்.PPTam 669.3

    விளக்கம் இல்லாமல் அப்படிப்பட்ட பயங்கரமான சந்தேகத் திற்குத் திறந்திருந்த ஒரு காரியத்தில் நுழைந்ததில் இரண்டரைக் கோத்திரமும் ஒரு குற்றத்தில் இருந்தனர். அனுப்பப்பட்ட தூதுவர்கள் தங்கள் சகோதரர்கள் குற்றத்தில் இருக்கிறார்கள் என்பதை சாதகமாக எடுத்துக்கொண்டு அவர்களைக் கடினமாகக் கடிந்து கொண்டனர். தேவனுக்கு எதிராகக் கலகம் செய்ததாகக் குற்றப்படுத்தப்பட்டு, பாகால் பேயோரில் அவர்களோடு சேர்ந்து கொண்டதினால் இஸ்ரவேலின் மேல் வந்த தண்டனைகளை நினைவுகூரும்படி அவர்கள் அழைத்தனர். பலிபீடமின்றி அந்த தேசத்தில் தங்கியிருக்க காத் மற்றும் ரூபனின் பிள்ளைகளுக்கு மனதில்லையென்றால், அடுத்த பக்கத்தில் இருக்கும் தங்கள் சகோதரரின் சுதந்தரத்திலும் வாய்ப்புகளிலும் பங்குகொள்ள அனைத்து இஸ்ரவேலின் சார்பாக வரவேற்கப்படுவதாக பினெகாஸ் அறிவித்தான்.PPTam 670.1

    பதிலாக, அவர்களுடைய பலிபீடம் பலிநோக்கத்திற்காக எழுப்பப்படவில்லை யென்றும், ஆற்றினால் பிரிக்கப்பட்டிருந்தபோதும் தாங்கள் கானானிலிருக்கும் தங்கள் சகோதரர்களின் அதே விசுவாசத்தைக் கொண்டவர்கள் என்பதற்குச் சாட்சியாக எழுப்பப்பட்டதாகவும் கூறினார்கள் பிற்காலங்களில் தங்களுடைய பிள்ளைகள் இஸ்ரவேலில் பங்கில்லாதவர்களாக ஆசரிப்புக் கூடாரத்தில் பங்கெடுப்பதிலிருந்து வெளியேற்றப்படுவார்களோ என்று அவர்கள் பயந்தனர். அப்போது சீலோவிலிருக்கும் ஆண்டவருடைய பலிபீடத்தின் மாதிரியான இந்த பலிபீடம், அதைக் கட்டினவர்களும் ஜீவனுள்ள தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கும் என்றனர்.PPTam 670.2

    தூதுவர்கள் இந்த விளக்கத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, தங்களை அனுப்பினவர்களுக்கு நற்செய்தி கொண்டுவந்தனர். யுத்தத்திற்கான அனைத்து எண்ணங்களும் கலைந்து போக, தேவனைத் துதிப்பதிலும் களிகூருவதிலும் ஜனங்கள் இணைந்தனர்.PPTam 670.3

    காத் மற்றும் ரூபனின் பிள்ளைகள் தங்கள் பலிபீடத்தின் மேல் அது எழுப்பப்பட்டதன் நோக்கத்தை எழுதி, கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப் பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்றனர். இவ்விதம், எதிர்காலத்தில் அது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதை தடுக்கவும், அது சோதனையாகி விடுவதற்கான காரணத்தை அகற்றவும் அவர்கள் முயற்சித்தனர்.PPTam 670.4

    மிக நேர்மையான நோக்கத்தினால் செயல்படுகிறவர்கள் மத்தியிலும் சிறிய தப்பெண்ணங்களால் எவ்விதம் பல வேளைகளில் கடுமையான கஷ்டங்கள் எழுகின்றன! மரியாதையும் சகிப்புத்தன்மையும் செயல்படுத்தப்படாததினால் தீவிரமான அபாயகரமான விளைவுகளும் கூட தொடரலாம். ஆகானின் சம்பவத்தில், தங்கள் நடுவே இருந்த பாவத்தை கண்டுபிடிப்பதில் ஜாக்கிரதையின்றி இருந்ததினால் தேவன் தங்களைக் கடிந்து கொண்டார் என்பதை பத்து கோத்திரங்களும் நினைவு கூர்ந்தனர். இப்போது சரியாகவும் ஊக்கமாகவும் செயல்பட தீர்மானித்தனர். தங்கள் முதல் தவறை தவிர்க்கத் தீர்மானித்ததில் அவர்கள் எதிர் எல்லைக்குச் சென்றிருந்தனர். சரியான விசாரணை செய்து காரியத்தின் உண்மையை அறிந்து கொள்ளுவதற்குப் பதிலாக தங்கள் சகோதரரை கடிந்துகொள்ளவும் ஆக்கினைக்குட்படுத்தவும் திரும்பினர். காத் மற்றும் ரூபனின் பிள்ளைகளும் அதே போன்ற ஆவியை வெளிப்படுத்தியிருந்தால் நிச்சயமாக யுத்தம்PPTam 671.1

    நடந்திருக்கும். ஒருவர் பக்கத்தில் பாவத்தைக் கையாள்வதில் அலட்சியமாயிருப்பது அகற்றப்பட வேண்டியதிருக்கும் போது, மற்ற பக்கத்திலும் கடுமையான நியாயத்தீர்ப்புகளையும் ஆதாரமில்லாத சந்தேகங்களையும் தடுக்க வேண்டியது இணையான முக்கியமாயிருக்கிறது.PPTam 671.2

    தங்கள் சொந்த செயலைக் குறித்த மிகக் குறைவான குற்றச்சாட்டிற்கும் மிக அதிகமாக உணர்ச்சிவசப்படும் வேளையில், தவறில் இருக்கிறதாக தாங்கள் எண்ணுகிறவர்களிடம் அநேகர் கடுமையாக நடந்து கொள்ளுகின்றனர். கண்டிப்பதாலோ அல்லது நிந்திப்பதாலோ தவறான இடத்திலிருந்து ஒருவரும் ஒருபோதும் மீட்கப்பட்டிருக்க வில்லை . மாறாக, அநேகர் சரியான பாதையிலிருந்து துரத்தப்பட்டு, மன உணர்த்துதலுக்கு எதிராக தங்கள் இருதயங்களை கடினப்படுத்தவே நடத்தப்பட்டிருக்கின்றனர். தயவும் மரியாதையும் பொறுமையுமான ஆவி தவறு செய்கிறவர்களைக் காப்பாற்றி திரளான பாவங்களை மூடும்.PPTam 671.3

    ரூபனியர்களாலும் அவர்களுடைய கூட்டாளிகளாலும் காட்டப்பட்ட ஞானம் பின்பற்றக்கூடிய தகுதியைக் கொண்டிருக்கிறது. மெய்யான மதத்தின் காரணத்தை முன்னேற்றம் உண்மையாகத் தேடினபோது, அவர்கள் தவறாக நிதானிக்கப்பட்டு கடுமையாக கண்டிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் எந்த எதிர்ப்புணர்வையும் வெளிக்காட்டவில்லை. தங்களைப் பாதுகாக்க முயற்சிப்பதற்கு முன்பாக மரியாதையோடும் பொறுமையோடும் தங்கள் சகோதரரின் குற்றச்சாட்டுகளை அவர்கள் கவனித்தார்கள். பின்னர் தங்கள் நோக்கங்களை முழுமையாக விவரித்து, தங்கள் குற்றமின்மையை காண்பித்தனர். இவ்விதம் மிகத் தீவிரமான விளைவுகளைக்குறித்து பயமுறுத்திய சம்பவம் இணக்கமாக தீர்க்கப்பட்டது.PPTam 671.4

    சரியானதைச் செய்கிறவர்கள், தவறான குற்றச்சாட்டுகளுக்குக் கீழும் அமைதலோடு நிலைமையை கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். மனிதனால் தவறாக அர்த்தப்படுத்தப்பட்ட அனைத்தோடும் தேவன் அறிமுகமாகியிருக்கிறார். அவருடைய கரங்களில் நமது நிலைமையை நாம் பாதுகாப்பாக வைக்கலாம். அவர் ஆகானின் குற்றத்தைக் கண்டுபிடித்ததைப்போல அவர்மேல் நம்பிக்கையை வைக்கிறவர்களின் காரியங்களை நிச்சயமாக நிலைநிறுத்துவார். கிறிஸ்துவின் ஆவியினால் உந்தப்படுகிறவர்கள் நீண்ட பொறுமையும் தயவுமுள்ள அன்பைக் கொண்டிருப்பார்கள்.PPTam 672.1

    தமது ஜனங்களின் நடுவே ஒற்றுமையும் சகோதர அன்பும் இருக்கவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தமது சிலுவை மரணத்திற்கு சற்று முன்பு கிறிஸ்து ஜெபித்த ஜெபம், அவர் பிதாவோடு ஒன்றாயிருக்கிறது போல சீடர்களும் ஒன்றாயிருக்கவேண்டும் என்பதாகவும், தேவன் அவரை அனுப்பினார் என்கிறதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாகவும் இருந்தது . மிகவும் தொடக்கூடிய அற்புதமான இந்த ஜெபம் யுகங்கள் நெடுகிலும் கடந்து நம்முடைய நாள்வரைக்கும் வருகிறது. அவருடைய வார்த்தைகள் : நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறது மல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவான் 17:20) என்று இருந்தது. சத்தியத்தின் ஒரு கொள்கையையும் விட்டுவிடாது இருக்கும் போதே, இந்த ஒருமைப்பாட்டையும் அடைய வேண்டும் என்பது நம்முடைய நிலையான நோக்கமாக இருக்கவேண்டும். இதுதான் சீடத்துவத்தின் சான்று. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் (யோவான் 13:35) என்று இயேசு கூறினார். நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத் துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள் (1 பேதுரு 38, 9) என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சபைக்கு ஆலோசனை கூறினான்.PPTam 672.2