Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    51 - ஏழைகள்மேல் அக்கறையுள்ள தேவன்

    மத ஆராதனைக்காக ஜனங்களை ஒன்று கூட்டவும் ஏழைகளுக்கான ஏற்பாடு செய்யவுங்கூட அனைத்து விளைச்சல்களின் சம்பாத்தியத்திலும் இரண்டாவது தசமபாகம் கோரப்பட்டது. முதலாவது தசமபாகத்தைக் குறித்து ஆண்டவர் லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசம பாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன் (எண். 18:21) என்று அறிவித்திருந்தார். ஆனால் இரண்டாவதைக் குறித்து : நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும் படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசம பாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக (உபா. 1422 23, 1611-14) என்று அவர் கட்டளையிட்டார். இந்த தசமபாகத்தை அல்லது அதற்கு இணையான பணத்தை இரண்டு வருடங்களுக்கு ஆசரிப்புக் கூடாரம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவர்கள் கொண்டுவரவேண்டும். தேவனுக்கு நன்றியறிதலான காணிக்கையையும் ஆசாரியர்களுக்குக் குறிக்கப் பட்ட பகுதியையும் கொடுத்த பிறகு மீந்திருப்பதை ஏழைகளும் அந்நியர்களும் திக்கற்றவர்களும் விதவைகளும் பங்கு பெறக்கூடிய பண்டிகைகளுக்கு உபயோகிக்க வேண்டும். இவ் விதம் தோத்திர காணிக்கைகளுக்காகவும் வருடாந்தர பண்டிகை களின் விருந்துகளுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேவனுடைய சேவையில் போதனையையும் உற்சாகத்தையும் பெறும்படி இவ்விதமாக ஜனங்கள் ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் தோழமைக்குள் கொண்டுவரப்பட்டனர்.PPTam 689.1

    எனினும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும் படி (உபா. 6532612) என்று மோசே சொன்னதைப்போல், ஒவ்வொரு மூன்றாவது வருடத்திலும் இந்த இரண்டாவது தசம பாகம் லே வியர்களையும் ஏழைகளையும் பராமரிப்பதற்காக வீட்டிலிருந்தே உபயோகிக்கப்பட வேண்டும். இந்த தசம பாகம் நற்கிரியைகளுக்கும் விருந்தோம்பலுக்கும் தேவையான பணத்தை ஏற்பாடு செய்யும்.PPTam 690.1

    மேற்படியான ஏற்பாடுகளும் ஏழைகளுக்காகச் செய்யப்பட்டது. ஆண்டவருடைய கோரிக்கைகளை உணர்ந்த பிறகு ஏழை களுக்காக இணைக்கப்பட்டிருந்த தாராளமாக இளகிய விருந்தோம்பும் ஆவியை தவிர வேறு எதுவும் மோசேயினால் கொடுக்கப்பட்ட சட்டங்களை மிகவும் வேறுபடுத்திக் காட்ட வில்லை . தேவன் தமது ஜனங்களை அதிகமாக ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தபோதும் அவர்களுக்கிடையே வறுமை முற்றிலும் அறியப்படாதிருக்க வேண்டும் என்பது அவருடைய வடிவமைப்பாக இல்லை. ஏழைகள் தேசத்திலிருந்து அற்றுப் போகக்கூடாது என்று அவர் அறிவித்தார். அவர்களுடைய பரிவையும் தயவையும் நற்கிரியைகளையும் செயல்படுத்தக்கூடிய ஜனங்கள் எப்போதும் அவருடைய பிள்ளைகளின் நடுவே இருப்பார்கள். இப்போது இருப்பதைப்போலவே வறுமைக்கும் வியாதிக்கும் சொத்துக்களை இழப்பதற்கும் விடப்பட்ட மனிதர்கள் அப்போதும் இருந்தனர். எனினும் தேவனால் கொடுக்கப்பட்ட போதனைகளை பின்பற்றினவரையிலும் அவர்களிடையே இரந்துண்டவர்கள் இருக்கவில்லை; உணவின்றி துன்பப்பட்ட வர்களும் இல்லாதிருந்தனர்.PPTam 690.2

    நிலத்தின் விளைச்சலில் ஒரு பகுதியின் மேலான உரிமையை தேவனுடைய பிரமாணம் ஏழைகளுக்குக் கொடுத்தது. பசியோ டிருக்கும் போது ஒரு மனிதன் தன் அயலானின் வயலிலோ பழத் தோட்டத்திலோ திராட்சத்தோட்டத்திலோ நுழைந்து தன் பசியை திருப்திப்படுத்த தானியத்தையோ பழத்தையோ சாப்பிட சுதந்திரம் பெற்றிருந்தான். இந்த அனுமதியினிமித்தமே இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாளில் ஒரு வயலின் வழியாக கடந்து போன போது நின்று கொண்டிருந்த கதிரைக் கொய்து தின்றனர்.PPTam 690.3

    அறுவடை செய்யப்பட்டிருந்தவயல், பழத்தோட்டம், மற்றும் திராட்டத்தோட்டத்தில் பொறுக்கக்கூடியதெல்லாம் ஏழைக்குச் செ பாந்தமானது. நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போக வேண்டாம் ....... நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்ட பின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம் ...... நீ உன் திராட்சப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப் போகவேண் டாம், அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டு விடுவாயாக. நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக (உபா. 24:19-22, லேவி . 199,10) என்று மோசே கூறினான்.PPTam 691.1

    ஒவ்வொரு ஏழாவது வருடத்திலும் ஏழைகளுக்காக விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓய்வு வருடம் என்று அழைக்கப்பட்ட அது, அறுவடையின் முடிவில் துவங்கியது. சே ர்ப்பின் காலத்தைத் தொடர்ந்த காலத்தில் மக்கள் விதைக்கக்கூடாது. வசந்த காலத்தில் அவர்கள் தங்கள் திராட்சத்தோட்டங்களை ஆயத்தப்படுத்தக்கூடாது, அதிலிருந்து அவர்கள் அறுவடை யையோ அல்லது திராட்சவிளைச்சலையோ எதிர்பார்க்கக்கூடாது. தேசம் ஏராளமாக விளைவிப்பவைகளைப் புதிதாக இருக்கும் போது சாப்பிடலாம்; ஆனால் அதின் எந்த ஒரு பகுதியையும் தங்களுடைய களஞ்சியத்தில் சேர்க்கக்கூடாது. இந்த வருடத்தின் விளைவு அந்நியருக்கும் திக்கற்றோருக்கும் விதவைகளுக்கும் வயலிலிருக்கும் சிருஷ்டிகளுக்குங்கூட இலவசமாயிருக்க வேண்டும். யாத். 23:10, 11; லேவி. 25:PPTam 691.2

    ஒருவேளை நிலம் ஐனங்களின் தேவைகளுக்குப் போதுமான அளவு மாத்திரம் விளைவிக்குமானால், தானியம் சேர்க்கப்படாத வருடத்தில் அவர்கள் எவ்விதம் பிழைப்பார்கள்? இதற்கு, நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண் ணுவேன். அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும். நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம் மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள், அதின் பலன் விளையும் வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள் (லேவி 25, 21, 22) என்கிற ஆண்டவருடைய வாக்குத்தத்தம் ஏராளமான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.PPTam 691.3

    ஓய்வு வருடத்தைக் கைக்கொள்ளுவது தேசத்திற்கும் மக் களுக்கும் நன்மையாக இருக்க வேண்டும். ஒரு பருவகாலம் முழுவதிலும் உழப்படாதிருந்த நிலம் பின்னர் ஏராளமாக விளை விக்கும். வயலின் நெருக்கும் உழைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அந்த வருடத்தில் செய்யவேண்டிய மற்ற வேலைகளைச் செய்யவும், வரப்போகும் வருடங்களில் செலவு செய்யவேண்டிய சரீர பலத்தை திரும்பவும் கொண்டுவரவும் அவர்கள் களிகூர்ந் திருந்த ஓய்வு ஒரு சந்தர்ப்பத்தை அனைவருக்கும் கொடுத்தது. தியானிக்கவும் ஜெபிக்கவும் ஆண்டருடைய போதனைகள் கோரிக்கைகளோடு தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் தங்கள் வீட்டாருக்குப் போதிக்கவும் அதிக நேரம் அவர்களுக்கு இருந்தது.PPTam 692.1

    ஓய்வு வருடத்தில் எபிரெய அடிமைகள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்தப் பங்குமின்றி அனுப்பப்படக்கூடாது என்பது ஆண்டவருடைய கட்டளையாக இருந்தது . அவனை விடுதலை பண்ணி அனுப்பிவிடும் போது அவனை வெறுமையாய் அனுப்பி விடாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக - உபா. 15:13,14.PPTam 692.2

    உழைப்பாளிகளின் சம்பளம் சரியாகக் கொடுக்கப்படவேண்டும், உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்கா யாக. அவன் வேலை செய்த நாளில் தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிட வேண்டும், அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான் உபா. 24:14, 15PPTam 692.3

    வேலையிலிருந்து தப்பி வந்தவர்களை நடத்தும் விதத்திலும் விசேஷமான கட்டளைகள் கொடுக்கப்பட்டன. தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக. அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்குச் சம்மதியான இடத்தைத் தெரிந்து கொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக, அவனை ஒடுக்க வேண்டாம் உபா.23:15,16PPTam 692.4

    ஏழைகளுக்கு ஏழாவது வருடம் கடனிலிருந்து விடுதலை யாகும் வருடமாக இருந்தது. தேவையிலிருக்கும் தங்கள் சகோ தரனுக்கு வட்டியில்லாமல் பணம் கடனாகக் கொடுக்கும்படி எபிரெயர்கள் எல்லா நேரங்களிலும் போதனை கொடுக்கப்பட்டிருந்தனர். ஏழை மனிதனிடமிருந்து வட்டி வாங்குவது வெளிப்படையாக தடை செய்யப்பட்டிருந்தது. உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்க வேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப் போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக. நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக லேவி. 253537. விடுதலையின் வருடம் வரையிலும் கடன் திருப்பிச் செலுத்தப்படாது இருக்கு மானால் முதலீடும் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட முடியாது. இதற்காகத் தேவைப்பட்ட உதவியை தன் சகோதரனுக்குக் கொடுக்காது வைத்திருப்பதற்கு எதிராக ஜனங்கள் வெளிப்படை யாக எச்சரிக்கப்பட்டனர். உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம்PPTam 693.1

    கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன் மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு, அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்ப தில்லை, ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்க வேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன் கொடுப்பாயாக - உபா. 157-9,11,8.PPTam 693.2

    தங்களுடையதாராளம் தங்களை வறுமைக்குக் கொண்டுவரும் என்று எவரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவது நிச்சயமாக செழுமையிலேயே முடியும். நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை, நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை (உபா. 15) என்று அவர் கூறினார்.PPTam 693.3

    ஏழு ஓய்வு வருடங்களுக்குப்பின்பு ஏழுமுறை ஏழு வருடங்களுக்குப்பின்பு, யூபிலி வருடமான விடுதலையின் வருடம் வந்தது. அப்பொழுதும் ........ உங்கள் தேசமெங்கும் எக்காளச் சத்தம் தொனிக்கும் படி செய்ய வேண்டும். ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம், அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்லேவி . 25.9.10.PPTam 694.1

    ஏழாம் மாதம் பத்தாந் தேதியில் ..... பாவநிவாரண நாளில் யூபிலியின் எக்காளம் முழக்கப்பட்டது. விடுதலையின் வருடத்தை வரவேற்க யாக்கோபின் பிள்ளைகள் அனைவரையும் அழைத்த அந்த சத்தம் யூத ஜனங்கள் குடியிருந்த தேசமெங்கும் கேட்கப்பட்டது. பாவ நிவாரண நாளில் இஸ்ரவேலின் பாவங்களுக்கான நிவிர்த்தி செய்யப்பட்டு, அந்நாளிலேதானே இருதயத்தின் களிப்போடு ஜனங்கள் யூபிலியை வரவேற்பார்கள்.PPTam 694.2

    ஓய்வு வருடத்தில் இருந்ததைப்போலவே தேசம் விதைக்கப் படவோ அறுக்கப்படவோ கூடாதிருந்து, அது விளைவிக்கும் அனைத்தும் ஏழைகளின் உரிமையான சொத்தாகக் கருதப்பட வேண்டும். எபிரெய அடிமைகளின் ஒரு வகுப்பார் ஓய்வு வருடத்தில் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ளாத அனைவரும் இப்போது விடுவிக்கப்பட்டார்கள். எனினும் நிலவுடமை சொத்து முழுவதும் அதன் முதல் உரிமையாளருக்கு திரும்பிவருவதினால் யூபிலி வருடம் விசேஷமாகப் பிரித்துக் காட்டப்பட்டது. தேவனுடைய விசேஷ கட்டளையின்படி தேசம் சீட்டுப் போட்டு பிரிக்கப்பட்டிருந்தது. பிரிக்கப்பட்ட பிறகு தன்னுடைய நிலத்தை விற்பதற்கு எவருக்கும் சுதந்தரம் இல்லை . வறுமை கட்டாயப்படுத்தாத பட்சத்தில் அவன் தன்னுடைய நிலத்தை விற்கக்கூடாது. அப்படியும், அவனோ அல்லது அவனுடைய இனத்தானோ அதை மீட்க விரும்பும்போது, நிலத்தை வாங்கினவன் திரும்பவும் விற்க மறுக்கக்கூடாது. மீட்கப்பட்ட பிறகு யூபிலி வருடத்தில் அது அதை முதலில் கொண்டிருந்தவனுக்கோ அல்லது அவனுடைய சுதந்தரவளிக்கோ திரும்ப வரும்.PPTam 694.3

    தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்க வேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள். (லேவி. 25:23) என்று ஆண்டவர் இஸ்ரவேலுக்கு அறிவித்திருந்தார். தாங்கள் கொஞ்ச காலம் பெற்றுக்கொள்ளும் படி அனுமதிக்கப்பட்டிருந்த தேசம் தேவனுடையது என்கிற உண்மையும், அவரே அதற்கு தனியுரிமை கொண்டவர் என்பதும், அவர் ஏழைகளுக்கும் நல்வாய்ப்பை இழந்தவர்களுக்கும் விசேஷ கவனம் கொடுப்பார் என்பதும் மக்களின் மனதில் பதிக்கப்படவேண்டும். மிகவும் செல்வந்த னானவனைப்போலவே ஏழையும் தேவனுடைய உலகத்தில் அதே உரிமையைப் பெற்றிருக்கிறான் என்பது அனைவரின் மனங்களிலும் பதிக்கப்படவேண்டும்.PPTam 694.4

    ஆதரவற்ற துயரம் கொண்டவர்களின் வாழ்க்கையில் துன்பத்தைக் குறைப்பதற்காகவும் சில நம்பிக்கையின் கதிர்களைக் கொண்டுவருவதற்காகவும் வெளிச்சத்தை வீசுவதற்காகவும் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் இரக்கமுள்ள சிருஷ்டிகரால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.PPTam 695.1

    சொத்து மற்றும் வல்லமையின் மேலிருக்கும் மிகுதியான அன்பை ஆண்டவர் தடை செய்வார். ஒரு வகுப்பார் வறுமையிலும் கீழ்நிலையிலும் இருக்கும் போது மற்ற வகுப்பார் செல்வத்தைத் தொடர்ந்து குவிப்பதில் மாபெரும் தீமைகளே விளையும். சில கட்டுப்பாடுகள் இல்லாதபோது செல்வந்தர்களின் வல்லமைகள் ஏகபோகமாகி விடும், ஏழைகள் தேவனுடைய பார்வையில் அதேபோன்று தகுதியைக் கொண்டிருந்தும், அதிக செழிப்பாயிருக்கிற சகோதரர்களால் கீழானவர்களாகக் கருதப்பட்டு நடத்தப்படுவார்கள். இப்படிப்பட்ட ஒடுக்குதல் ஏழைகளின் கட்டுக்கடங்காத உணர்ச்சியைத் தூண்டி, விரக்தியையும் துயரத்தையும் உண்டாக்கி, அது சமுதாயத்தை சன்மார்க்க ஒழுங்கிலிருந்து தவறச் செய்து, ஒவ்வொரு குற்றத்திற்குமான கதவைத் திறக்கும். தேவன் ஸ்தாபித்திருந்த ஒழுங்குகள் சமுதாயச் சமநிலையை முன்னேற்றுவதற்காகவே வடிவமைக்கப்பட்டன. ஓய்வு வருடம் மற்றும் யூபிலி வருடத்தின் ஏற்பாடுகள் தேசத் தினுடைய சமுதாய மற்றும் அரசியல் பொருளாதாரத்தில் இந்த இடைப்பட்ட காலத்தில் தவறாக நடந்தவைகளை சரிசெய்யும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.PPTam 695.2

    இந்த ஒழுங்குகள் செல்வந்தர்களைப்போலவே ஏழைகளையும் ஆசீர்வதிக்கும்படியாக திட்டம் பண்ணப்பட்டிருந்தன. இவைகள் பேராசையையும் சுயத்தை உயர்த்துகிற குணத்தையும் கட்டுப்படுத்தி, இரக்கத்தின் நேர்மையான ஆவியை விருத்தி செய்யும். அனைத்து வகுப்பாரிடமும் நல்ல நினைவையும் நம்பிக்கையையும் வளர்ப்பதன் வழியாக சமுதாய ஒழுங்கை முன்னேற்றி அரசாங்கத்தை நிலைநிறுத்தலாம். நாம் அனைவரும் மனிதநேயத்தின் மாபெரும் வலையில் இணைத்து பின்னப் பட்டிருக்கிறோம். மற்றவர்களை உயர்த்தவும் அவர்களுக்கு நன்மை செய்யவும் நாம் செய்யக்கூடிய அனைத்தும் நம்மீது ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். ஒருவரையொருவர் சார்ந் திருக்கும் பிரமாணம் சமுதாயத்தின் அனைத்து வகுப்பாரிடையும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐசுவரியவான்கள் ஏழைகளைச் சார்ந்திருப்பதைக்காட்டிலும் ஏழைகள் ஐசுவரியவான்களை அதிகம் சார்ந்து இல்லை. ஐசுவரியமான அயலார்மேல் தேவன் அளித்திருக்கிற ஆசீர்வாதங்களில் ஒரு வகுப்பார் பங்கு கேட்கும்போது, மற்றவர்களுக்கு, உண்மையான உழைப்பும் ஏழைகளின் முதலீடான மனபலமும் சரீர பெலமும் தேவைப் படுகிறது.PPTam 695.3

    ஆண்டவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் நிபந்தனையில் மாபெரும் ஆசீர்வாதங்கள் இஸ்ரவேலருக்கு வாக்குப்பண்ணப்பட்டன. நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன். பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும். திராட்சப்பழம் பறிக்குங் காலம் வரைக்கும் போரடிப்புக்காலம் இருக்கும், விதைப்புக்காலம் வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள். தேசத்தில் சமாதானம் கட்டளையிடு வேன், தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள் : துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணு வேன் ; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை .... நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் .... நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும் ..... என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில் நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும், உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள். நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள் (லேவி. 264-17) என்று அவர் அறிவித்தார். இந்த உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களில் சம்பங்கு வேண்டும் என்று நிர்பந்திக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஆனால் இது சிருஷ்டிகருடைய நோக்கமல்ல. பல்வேறுபட்ட நிலைகள் என்பது சோதிக்கவும் குணத்தை விருத்தி செய்யவும் ஆண்டவர் வடிவமைத்த வழிமுறைகளில் ஒன்று. எனினும் உலக சம்பத்து வைத்திருக்கிறவர்கள், துன்பப்படுகிறவர்களுக்கும் தேவையிலிருக்கிறவர்களுக்கும் நன்மை செய்ய உபயோகிக்கும்படி கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய பொருட்களுக்கு தாங்கள் வெறும் உக்கிராணக்காரர்களே என்று எண்ண வேண்டும், ஏழைகள் எப்போதும் நம்மோடு இருப்பார்கள் என்று கிறிஸ்து அறிவித்தார். அவர் தமது விருப்பங்களை துன்பப்படுகிற தமது மக்களின் விருப்பங்களோடு இணைத்துக்கொள்ளுகிறார். நமது மீட்பரின் இருதயம் ஏழைகள் மேலும் பூமியிலிருக்கிற தாழ்ந்த நிலையிலுள்ள தம்முடைய பிள்ளைகள் மேலும் இரக்கப்படுகிறது. அவர்கள் இந்த பூமியில் தம்முடைய பிரதிநிதிகள் என்று அவர் செ பால்லுகிறார். துன்பப்படுகிறவர்கள் மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் அவர் உணருகிற அந்த அன்பை நம்முடைய இருதயங்களில் எழுப்பும்படியாகவே அவர்களை நம் நடுவே வைத்திருக்கிறார். அவர்களுக்குக் காண்பிக்கப்படுகிற இரக்கமும் நற்கிரியைகளும் தமக்கே காண்பிக்கப்பட்டதைப்போல கிறிஸ்து ஏற்றுக்கொள்ளு கிறார். அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையும் நெகிழ்ச்சியும் அவருக்கே செய்யப்பட்டதைப் போல அவர் கருதுகிறார்.PPTam 696.1

    ஏழைகளின் நன்மைக்காக தேவனால் கொடுக்கப்பட்ட பிரமாணம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிருக்குமானால், சன்மார்க்க ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் உலகப்பிரகாரமாகவும் உலகத்தின் இன்றைய நிலைமை எவ்வாறு வேறுபட்டிருக்கும்! சுயநலமும் சுயமுக்கியத்துவமும் இப்போது காண்பிக்கப்படுவதைப் போல வெளிக்காட்டப்பட்டிருக்காது. மாறாக, மற்றவர்களின் நன்மைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் அனைவரும் ஒரு தயவை நேசித்திருப்பார்கள். இன்றைக்கு அநேக நாடுகளிலே பரவலாக காணப்படுகிற ஆதரவற்ற நிலை இருந்திருக்காது.PPTam 697.1

    தேவன் இணைத்திருக்கிற கொள்கைகள் ஏழைகளை ஐசுவரியவான்கள் ஒடுக்குவதினாலும் செல்வந்தர்கள் மேல் ஏழைகள் காண்பிக்கிற சந்தேகம் வெறுப்பினாலும் விளைந்த பயங்கரமான தீமைகளைத் தடுத்திருக்கும். மிக அதிக சொத்துக்களைக் குவிப்பதையும், எல்லையற்ற ஆடம்பரத்தில் திளைப்பதையும் தடுக்கும் போதே, இந்த மகத்தான செல்வத்தை அடைவதற்குத் தேவைப்பட்ட சரியாக கூலி கொடுக்கப்பட்டிராத ஆயிரக்கணக் கானோரிடம் ஏற்பட்டிருந்த கீழான தரத்தையும் அறியாமையையும் அது தடுத்திருக்கும். அராஜகத்திலும் இரத்தம் சிந்துவதிலும் உலகத்தை இப்போது பயமுறுத்திக்கொண்டிருக்கிற பிரச்சனைகளுக்கு அது ஒரு சமாதானமான விடிவைக் கொண்டுவந் திருக்கும்.PPTam 697.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents