Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    57 - பெலிஸ்தர் பிடித்துச்சென்ற உடன்படிக்கை பெட்டி

    ஏலியின் வீட்டுக்கு மற்றொரு எச்சரிப்பு கொடுக்கப்பட வேண்டும். தேவன் பிரதான ஆசாரியனுடனும் அவனுடைய குமாரர்களுடனும் தொடர்பு கொள்ள முடியாது. அவர்களுடைய பாவங்கள் அடர்ந்த மேகத்தைப் போல் அவருடைய பரிசுத்த ஆவியானவரின் சமூகத்தை அடைத்திருந்தது. தீமையின் மத்தியிலும் குழந்தை சாமுவேல் பரலோகத்திற்கு உண்மையாக இருந்தான். ஏலியின் குடும்பத்திற்கான கண்டிப்பின் செய்தி உன்னதமானவரின் தீர்க்கதரிசியாக சாமுவேலுக்குக் கொடுக்கப்பட்ட வேலையாயிருந்தது.PPTam 760.1

    அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை . ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்தில் படுத்துக் கொண்டிருந்தான், அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்து போகுமுன்னே சாமுவேலும் படுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டார்.’ ஏலியின் சத்தம் என்று யூகித்து குழந்தை ஆசாரியனின் படுக்கையருகே சென்று : ‘இதோ, இருக்கிறேன், என்னைக் கூப்பிட்மரே என்று கூறியது. நான் கூப்பிடவில்லை, திரும்பிப் போய்ப் படுத்துக்கொள்” என்று அவனுக்கு பதில் கிடைத்தது. மூன்று முறை சாமுவேல் அழைக்கப்பட்டான். மூன்று முறையும் இவ்விதமே அவன் பதிலளித்தான். பின்னர், இந்த மர்மமான அழைப்பு தேவனுடைய குரல் தான் என்று ஏலி உணர்த்தப்பட்டான். குழந்தையுடன் பேசும்படியாக நரைத்த தெரிந்து கொள்ளப்பட்டதம்முடைய ஊழியக்காரனை ஆண்டவர் கடந்து சென்றார். இது தன்னில் தானே கசப்பானதும் ஏலியும் அவன் வீட்டாரும் பெறத்தகுதியான கண்டனையாகவும் இருந்தது.PPTam 760.2

    ஏலியின் இருதயத்தில் எந்தவித வெறுப்போ பொறாமையோ எழும்பவில்லை. மீண்டும் அழைக்கப்பட்டால் “கர்த்தாவே சொல்லும் ; அடியேன் கேட்கிறேன்” என்று பதில் தரும்படி அவன் சாமுவேலுக்குக் கூறினான். மீண்டும் ஒரு முறை குரல் கேட்கப்பட்டது. அந்தக் குழந்தை. “சொல்லும், அடியேன் கேட்கிறேன்“ என்று பதில் கொடுத்தது. மாபெரும் தேவன் தன்னோடு பேசுவார் என்ற நினைவில் அவ்வளவு பிரமிப்படைந்திருந்ததால் சொல்லும்படியாக ஏலி சொல்லியிருந்த அதே வார்த்தைகளை அவனால் நினைவுகூர முடியவில்லை.PPTam 761.1

    “கர்த்தர் சாமுவேலை நோக்கி : இதோ, நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொரு வனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன். அவன் குமாரர் தங்கள் மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒரு போதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.PPTam 761.2

    இந்த செய்தியை தேவனிடமிருந்து பெறும் முன்பாக ‘ ‘சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான், கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. அதாவது தீர்க்கதரிசிகளுக்கு கொடுக்கப்பட்டதைப் போன்ற தேவனுடைய சமூகத்தின் இப்படிப்பட்ட நேரடியான வெளிக்காட்டல்களோடு அவன் அறிமுகமாகியிருக்கவில்லை . வாலிபனுடைய ஆச்சரியம் மற்றும் விசாரணையின் வழியாக ஏலி அதைக் குறித்து கேட்கும்படியாக, எதிர்பாராதவிதத்தில் தம்மை வெளிப்படுத்துவது ஆண்டவருடைய நோக்கமாயிருந்தது.PPTam 761.3

    தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பயங்கரமான ஒரு செய்தியின் நினைவால் சாமுவேல் பயத்திலும் ஆச்சரியத்திலும் நிரப்பப்பட்டான். காலையில் வழக்கம் போல் ஆனால் தன் இளம் இருதயத்தில் பாரமான சுமையோடு தன் கடமைகளுக்கு அவன் சென்றான். பயங்கரமான கண்டனத்தை வெளிப்படுத்தும்படி ஆண்டவர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கவில்லை. எனவே ஏலியின் சமுகத்தை கூடுமானவரையிலும் தவிர்த்து அவன் மௌனமாயிருந்தான். தான் நேசித்து பயபக்தியோடு மதித்திருந்த ஒருவருக்கு எதிரான தெய்வீக நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கும்படி சில் கேள்விகள் தன்னைக் கட்டாயப்படுத்திவிடக்கூடாது என்று அவன் பயந்தான். செய்தி தனக்கும் தன் வீட்டாருக்கும் சில மாபெரும் பேரழிவுகளை முன்னறிவித்திருக்கிறது என்பதில் ஏலி நிச்சயமாயிருந்தான். சாமுவேலை அழைத்து தேவன் வெளிப்படுத்தினதை உண்மையாக அறிவிக்கும்படி கட்டளையிட்டான். வாலிபன் கீழ்ப்படிய, அந்த வயதான மனிதன் தாழ்மையான அர்ப்பணிப்போடு திகைக்கவைக்கிற தீர்ப்பிற்கு பணிந்தான். அவர் கர்த்தர். அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக” என்று அவன் சொன்னான்.PPTam 762.1

    எனினும் உண்மையான மனந்திரும்புதலின் கனிகளை ஏலி வெளிக்காட்டவில்லை. தன்னுடைய குற்றத்தை அறிக்கை செய்தான். ஆனால் பாவத்தை விட்டுவிட தவறினான். வருடா வருடம் ஆண்டவர் தமது நியாயத்தீர்ப்புகளை தாமதித்திருந்தார். கடந்தகால தவறுகளை மீட்பதற்கு அந்த வருடங்களில் அதிகம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தைக் கெடுத்து வல்லமையான இஸ்ரவேலின் ஆயிரக்கணக்கானோரை அழிவிற்கு நடத்தியிருந்த தீமைகளை சரிசெய்ய எந்தவல்லமையான வழியையும் அந்த வயதான ஆசாரியன் எடுக்கவில்லை . மீறுதலில் இன்னும் அதிக கடினமடைவதற்கு ஓப்னி மற்றும் பினெகாசின் இருதயங்களை தேவனுடைய நீடிய இரக்கம் தைரியப்படுத்தியிருந்தது. அவனுடைய வீட்டாருக்கான எச்சரிப்பு மற்றும் கண்டிப்பான செய்திகள் ஏலியினால் தேசம் முழுவதற்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் வழியாக தன்னுடைய கடந்தகால நெகிழ்ச்சிகளின் தீமையான செல்வாக்கை ஓரளவிற்குச் சரிக்கட்ட ஏலி நம்பியிருந்தான். ஆனால் ஆசாரியர்களால் செய்யப்பட்டதைப்போலவே மக்களாலும் எச்சரிப்புகள் கருத்தில் கொள் ளப்படாது போயிற்று. இஸ்ரவேலில் வெளிப்படையாக செய்யப்பட்டிருந்த அக்கிரமங்களைக் குறித்து அறிந்திருந்த சுற்றியிருந்த தேசங்களின் மக்களும் தங்கள் விக்கிரகவணக்கத்திலும் குற்றங்களிலும் துணிகரமடைந்தனர். இஸ்ரவேலர்கள் தங்கள் உண்மையைக் காத்திருந்தால் எவ்விதம் உணர்ந்திருப்பார்களோ அவ்விதம் தங்கள் பாவங்களுக்காக குற்ற உணர்வடையவில்லை. ஆனாலும் பிரதிபலனளிக்கும் நாள் வந்து கொண்டிருந்தது. தேவனுடைய அதிகாரம் அப்புறம் வைக்கப்பட்டு அவருடைய ஆதராதனை நெகிழப்பட்டு தள்ளப்பட்டது. தம்முடைய நாமத்தின் கனத்தை பராமரிப்பதற்காக அவர் குறுக்கிடுவது அவசியமாயிருந்தது.PPTam 762.2

    “இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள், பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள். தேவனுடைய ஆலோசனையோ தீர்க்கதரிசியோ அல்லது பிரதான ஆசாரியனின் ஒப்புதலோ இல்லாமலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம் பேர் வெட்டுண்டு போனார்கள்.“ சிதறப்பட்டு சோர்ந்துபோயிருந்த படைகள் தங்களுடைய பாளயத்திற்குத் திரும்பின் போது, “இஸ்ரவேலின் முப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? என்றார்கள் தேசம் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளுக்காக முதிர்ந்திருந்தது. எனினும் இந்த பயங்கரமான பேரழிவிற்குதங்களுடைய சொந்த பாவங்களே காரணம் என்கிறதை அவர்கள் காணாதிருந்தனர். சீலோவிலிருக் கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வருவோம், அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது” என்று அவர்கள் கூறினர். உடன்படிக்கைப் பெட்டி சேனைக்குள் வர வேண்டுமென்று ஆண்டவர் எந்தக் கட்டளையோ அல்லது அனுமதியோ கொடுத்திருக்கவில்லை. எனினும் இஸ்ரவேலர்கள் வெற்றி தங்களுடையது என்று நம்பிக்கையாயிருந்து, ஏலியின் குமாரர்களால் அது பாளயத்திற்குள் கொண்டுவரப்பட்டபோது மகா ஆர்ப்பரிப்பாய் ஆர்ப்பரித்தார்கள்.PPTam 763.1

    பெலிஸ்தர் உடன்படிக்கைப் பெட்டியை இஸ்ரவேலின் தேவனாகப் பார்த்தார்கள். யெகோவா தமது ஜனத்திற்காக நடப்பித்த வல்லமையான கிரியைகள் அனைத்தும் அதன் வல்லமைக்குக் கொடுக்கப்பட்டது. மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பைக் கேட்டு அது நெருங்கி வருவதைக் கண்டபோது : எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள், பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்து கொண்டார்கள் : தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து ஐயோ நமக்கு மோசம் வந்தது; இதற்கு முன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே . ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள் தானே. பெலிஸ்தரே, திடன் கொண்டு புருஷரைப்போல் நடந்து கொள்ளுங்கள், எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்தது போல், நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம் பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.PPTam 764.1

    பெலிஸ்தர் கொடுமையாகத் தாக்கினர். அது மாபெரும் படுகொலையில் இஸ்ரவேலின் தோல்வியில் முடிவடைந்தது. முப்பதாயிரம் மனிதர்கள் போர்க்களத்தில் மடிந்தனர். தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி பிடிக்கப்பட்டது, அதை காக்கும்படி சண் டையிட்டபோது ஏலியின் இரண்டு குமாரர்களும் விழுந்தார்கள். இவ்விதம் சரித்திரத்தின் பக்கங்களில் அனைத்து எதிர்காலத் திற்குமான சாட்சியாக தேவனுடைய ஜனங்களென்று சொல்லிக்கொள்ளுகிறவர்களின் அக்கிரமம் தண்டிக்கப்படாது போகாது என்று மீண்டும் வைக்கப்பட்டது. தேவனுடைய சித்தத் தைக்குறித்த அறிவு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அவ்வளவு பெரியதாக அதை அலட்சியப்படுத்துகிறவர்களின் பாவமும் இருக்கும்.PPTam 764.2

    சம்பவிக்கக் கூடிய மிகவும் பயப்படும் பேராபத்து இஸ்ரவேலின் மேல் வந்தது. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி பிடிக்கப்பட்டு சத்துருவின் உடைமையில் இருந்தது, அவருடைய சமுகம் மற்றும் யெகோவாவுடைய வல்லமையின் அடையாளம் அவர்கள் நடுவிலிருந்து அகற்றப்பட்டபோது, மகிமை மெய்யாகவே இஸ்ரவேலைவிட்டுப் பிரிந்திருந்தது. இந்த பரிசுத்தப் பெட்டியோடு தேவனுடைய மிக ஆச்சரியமான சத்தியம் மற்றும் வல்லமையின் வெளிப்பாடுகள் இணைந்திருந்தன. முற்காலத்தில் அது தோன்றிய இடங்களிலெல்லாம் அற்புதமான வெற்றிகள் சாதிக்கப்பட்டிருந்தன. அது பொற்கேருபீன்களின் செட்டைகளால் நிழலிடப்பட்டிருக்க வருணிக்கப்படக் கூடாத ஷெக்கினாவின் மகிமை, உன்னதமான தேவனுடைய காணக்கூடிய அடையாளம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் தங்கியிருந்தது. ஆனால் அது இப்போது எந்த வெற்றியையும் கொண்டுவந்திருக்கவில்லை. இந்தச் சமயத்தில் பாதுகாப்பைக் கொடுப்பதாக அது காண்பிக்க வில்லை. இஸ்ரவேல் முழுவதிலும் புலம்பல் உண்டாயிற்று.PPTam 764.3

    அவர்களுடைய விசுவாசம் பெயர் விசுவாசமே என்பதையும் தேவனோடு போராடி மேற்கொள்ளும் அதன் வல்லமையை அது இழந்திருந்தது என்பதையும் அவர்கள் உணராதிருந்தார்கள். உடன்படிக்கைப் பெட்டிக்குள்ளிருந்த தேவனுடைய பிரமாணம் அவருடைய சமுகத்தின் அடையாளமாயிருந்தது. ஆனால் அந்த கட்டளைகளின் மேல் அவர்கள் அவமதிப்பைக் காண்பித்திருந்து அதன் கோரிக்கைகளை புறந்தள்ளியிருந்து தங்கள் நடுவிலிருந்த ஆண்டவரின் ஆவியை துக்கப்படுத்தியிருந்தனர். ஜனங்கள் பரிசுத்த நியமங்களுக்கு கீழ்ப்படிந்தபோது ஆண்டவர் தமது நித்திய வல்லமையினால் அவர்களுக்காகக் கிரியை செய்யும்படி அவர்களோடு இருந்தார். ஆனால் உடன்படிக்கைப்பெட்டியைப் பார்த்து அதை தேவனோடு தொடர்பு படுத்தாமலும், அவருடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதினால் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சித்தத்தை கனப்படுத்தாமலும் இருக்கும் போது ச ராதாரண பெட்டியைக் காட்டிலும் அதிகமான ஒரு பயனும் அதினால் ஏற்படாது. விக்கிரக ஆராதனை தேசங்கள் அவர்களுடைய தேவர்களைப் பார்ப்பதைப்போல அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியை அது தனக்குத் தானே வல்லமையும் இரட்சிப்பையும் கொண்டிருந்ததைப்போலப் பார்த்தனர். அது கொண்டிருந்த கற்பனைகளை அவர்கள் மீறினர். உடன்படிக்கைப் பெட்டியை அவர்கள் ஆராதித்தது சம்பிரதாயத்திற்கும் மாய்மாலத்திற்கும் விக்கிரகவணக்கத்திற்கும் அவர்களை நடத்தியது. அவர்களுடைய பாவம் அவர்களை தேவனிடமிருந்து பிரித்திருந்தது. அவர்கள் தங்கள் அக்கிரமத்திற்காக மனம் வருந்தி அதை விடும் வரையிலும் அவரால் அவர்களுக்கு வெற்றியைத் தரமுடியாது.PPTam 765.1

    உடன்படிக்கைப் பெட்டியும் ஆசரிப்புக் கூடாரமும் மையத்தில் இருப்பது மாத்திரம் போதாது; ஆசாரியர்கள் பலி செலுத்துவதும் மக்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதும் போதாது; இருதயத்தில் அக்கிரமத்தை நேசித்திருப்பவர்களுடைய விண்ணப்பங்களை ஆண்டவர் கருத்தில் கொள்ளுவதில்லை. வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது“ (நீதி 28:9) என்று எழுதப்பட்டிருக்கிறது.PPTam 765.2

    படை யுத்தத்திற்குச் சென்ற போது கண்கள் மங்கி வயதாகியிருந்த ஏலி சீலோவில் தங்கியிருந்தான். போராட்டத்தின் விளை விற்காக கலங்கின அச்சத்தோடு அவன் காத்திருந்தான். “தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது.“ ஆசரிப்புக் கூடாரத்தின் வாயிலருகே ஒவ்வொரு நாளும் நெருஞ்சாலையின் பக்கமாக அமர்ந்து யுத்தகளத்திலிருந்து வருகிற ஒரு தூதுவனை நாளுக்கு நாள் எதிர்பார்ப்போடு பார்த்திருந்தான்.PPTam 766.1

    சற்று நேரத்தில் ஒரு பென்யமீனன் யுத்தத்திலிருந்து தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின் மேல் புழுதியை வாரிப்போம் கொண்டு பட்டணத்திற்குச் செல்லுகிற ஏற்றத்தில் வேகமாக வந்தான். பாதையில் இருந்த வயதான மனிதனை கவனிக்காமல் கடந்து பட்டணத்திற்குச் சென்று வாஞ்சையோடு எதிர்பார்த்துக் கூடியிருந்தவர்களுக்கு தோல்வி மற்றும் இழப்பின் செய்திகளை அறிவித்தான்.PPTam 766.2

    ஆசரிப்புக் கூடாரத்தின் அருகே இருந்த காவலாளிக்கு புலம்பலும் அழுகையின் சத்தமும் கேட்டது. தூதுவன் அவனிடம் கொண்டு வரப்பட்டான். அவன் ஏலியிடம் : இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக் குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி, பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்“ என்று கூறினான். இவை அனைத்தும் பயங்கரமானதாக இருந்தபோதும் எதிர்பார்த்திருந்ததினால் ஏலியால் தாங்கமுடிந்தது. ஆனால் தூதுவன். “தேவனுடைய பெட்டியும் பிடிபட் டுப்போயிற்று” என்று கூறிய போது சொல்லக்கூடாத வேதனை அவன் முகத்தில் தோன்றியது. தன்னுடைய பாவமே இவ்விதம் தேவனைக் கனவீனப்படுத்தி இஸ்ரவேலிலிருந்து அவருடைய சமுகத்தை விலக்கிக்கொள்ளச் செய்தது என்ற நினைவு அவன் தாங்கக்கூடியதற்கும் மிஞ்சினதாயிருந்தது. அவனுடைய பெலம் போனது. அவன் கீழே விழுந்து பிடரி முறிந்து செத்துப்போனான்.PPTam 766.3

    பினெகாசின் மனைவி அவளுடைய கணவன் பயபக்தியற்ற வனாயிருந்தும் தேவனுக்கு பயந்த பெண்ணாக இருந்தாள். அவளுடைய மாமனின் மரணமும் கணவனின் மரணமும் எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது என்கிற பயங்கரமான செய்தியும் அவளுக்கு மரணத்தைக் கொண்டு வந்தது . இஸ்ரவேலின் கடைசி நம்பிக்கையும் போய் விட்டது என்று உணர்ந்து, தன்னுடைய இறுதி மூச்சில். “மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்ற வார்த்தைகளை திரும்பத்திரும்பக் கூறியவளாக அந்த இடுக்கமான மணிநேரத்தில் பிறந்த குழந்தைக்கு இக்கபோத் அல்லது மகிமையற்றது என்று பெயரிட்டாள்.PPTam 766.4

    ஆண்டவர் தமது பிள்ளைகளை முற்றிலும் தள்ளியிருக்க வில்லை. புறஜாதிகளின் மேன்மைபாராட்டலை அவர் நீண்டகாலம் சகிக்கமாட்டார். இஸ்ரவேலை தண்டிக்கும் கருவியாக பெலிஸ்தரை அவர் உபயோகித்திருந்தார்; பெலிஸ்தரைத் தண்டிக்கும் படியாக உடன்படிக்கைப் பெட்டியை உபயோகித்தார். கீழ்ப்படிதலுள்ள தமது பிள்ளைகளின் பலமாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்படியாக கடந்த காலத்தில் தெய்வீகப் பிரசன்னம் அதோடு இருந்தது. அவருடைய பரிசுத்த பிரமாணத்தை மீறுகிறவர்களுக்கு பயங்கரத்தையும் அழிவையும் கொண்டு வரும்படியாக காணக்கூடாத சமுகம் இன்னும் அதோடு இருக்கும். தம்முடைய பிள்ளைகள் என்று அழைத்துக் கொள்ளுகிறவர்களின் உண்மையற்ற நிலையைத் தண்டிப்பதற்காக ஆண்டவர் பல வேளைகளில் தம்முடைய கசப்பான சத்துருக்களை உப யோகிக்கிறார். இஸ்ரவேல் கண்டிப்பை அனுபவிப்பதினால் துன்மார்க்கர் சில காலம் களிகூரலாம். ஆனால் அவர்களும் பரிசுத்தமான, பாவத்தை வெறுக்கிற தேவனுடைய தீர்ப்பைச் சந்திக்கவேண்டிய காலம் வரும். எங்கெல்லாம் அக்கிரமம் நேசிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் வேகமாகவும் தவறில்லாமலும் பின்தொடரும்.PPTam 767.1

    தங்களுடைய முக்கியமான ஐந்து பட்டணங்களில் ஒன்றான அஸ்தோத்தின் வெற்றிக்காக பெலிஸ்தர் உடன்படிக்கைப் பெட்டியை கொண்டு சென்று, அவர்களுடைய தெய்வமான தாகோனின் வீட்டில் வைத்தனர். இதுவரையிலும் உடன்படிக்கைப் பெட்டியோடு இருந்த வல்லமை தங்களுடையது என்றும் அது தாகோனுடைய வல்லமையோடு இணையும்போது அவர்களை வெற்றி கொள்ள முடியாதவர்களாக்கும் என்றும் கற்பனை செய்தனர். ஆனால் அடுத்த நாள் கோவிலில் நுழைந்தபோது தங்களைத் திகைக்கவைத்த காட்சியை அவர்கள் கண்டனர். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக தாகோன் முகங்குப்புற விழுந்து கிடந்தது . ஆசாரியர்கள் பயபக்தியோடு விக்கிரகத்தை உயர்த்தி அதனிடத்தில் திரும்ப வைத்தனர். ஆனால் அடுத்தநாள் காலையில் அது விசித்திரமாக உருச்சிதைவடைந்து உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் விழுந்து கிடக்க அவர்கள் கண்டனர். இந்த விக்கிரகத்தின் மேற்பகுதி மனிதனுடையதைப் போன்றும் அதன் கீழ்ப்பகுதி மீனைப்போன்றும் இருந்தது. மனிதனுடைய உருவத்தைக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் வெட்டப்பட்டிருந்தது, மீனின் பகுதி மாத்திரம் மீந்திருந்தது. ஆசாரியர்களும் மக்களும் பயத்தால் பீடிக்கப்பட்டனர். இந்த மர்மமான சம்பவத்தை தீமையின் அடையாளமாகக் கண்டு எபிரெயர்களின் தேவனுக்கு முன்பாக தங்கள் மேலும் தங்கள் விக்கிரகங்கள் மேலும் அச்சுறுத்தும் அழிவை எதிர்பார்த்தனர். இப்போது அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியை கோவிலிலிருந்து அகற்றி தனியான ஒரு கட்டடத்தில் வைத்தனர்.PPTam 767.2

    அஸ்தோத்தின் குடிகள் துயரமான ஆபத்தான வியாதியினால் அடிக்கப்பட்டனர். இஸ்ரவேலின் தேவனால் எகிப்தியர்மேல் அனுப்பப்பட்ட வாதைகளை நினைவு கூர்ந்து தங்களுடைய உபத்திரவத்தை அவர்கள் நடுவிலிருந்த உடன்படிக்கைப் பெட்டியின் மேல் வைத்தனர். அதை காத்திற்கு அனுப்ப தீர்மானித்தனர். ஆனால் அதை அகற்றின் இடத்திற்கும் வாதை தொடர்ந்தது, அந்த பட்டணத்தின் மனிதர் அதை எக்ரோனுக்கு அனுப்பினர். இங்கே மக்கள் பயத்தோடும் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்று போட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள்’ என்ற கூக்குரலோடும் அதைப் பெற்றுக்கொண்டனர். காத் மற்றும் அஸ்தோத்தின் மக்கள் செய்ததைப்போலவே பாதுகாப்பிற்காக அவர்கள் தங்கள் தேவர்களிடம் திரும்பினர். ஆனால் அவர்களுடைய துயரத்தில் அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம்” எழும்பும் வரைக்கும் அழிம்பனுடைய வேலை தொடர்ந்தது. மனிதர்களின் வீடுகளின் நடுவே அதிக காலம் அதை வைத்திருக்கப் பயந்து மக்கள் அதை திறந்த வயலில் வைத்தனர். அங்கே சுண்டெலியின் வாதை தொடர்ந்தது. அது தேசத்தை தொந்தரவு செய்து வயலிலும் களஞ்சியத்திலும் இருந்த நிலத்தின் விளைவுகளை அழித்தது. வியாதியினாலும் பஞ்சத்தினாலும் முழுமையான அழிவு இப்போது தேசத்தை பயமுறுத்தியது.PPTam 768.1

    ஏழு மாதங்கள் உடன்படிக்கைப்பெட்டி பெலிஸ்தியாவில் இருந்தது. இந்தக் காலத்தில் அதை மீண்டும் கொண்டுவர இஸ்ரவேலர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை . ஆனால் பெலிஸ்தரோ அதன் சமுகத்திலிருந்து அதைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போடு இருந்ததைப்போலவே அதன் சமுகத்திலிருந்து விடுவித்துக்கொள்ளவும் விருப்பத்தோடு இருந்தனர். பலத்தின் ஆதாரமாக இருப்பதற்குப் பதிலாக அது அவர்களுக்கு மகா பெரிய கனமும் சாபமுமாக இருந்தது. எனினும் என்ன செய்வது என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். ஏனெனில் அது எங்கு சென்ற போதும் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் தொடர்ந்தது. மக்கள் பூசாரிகள் குறிசொல்லுகிறவர்களோடு தேசத்தின் பிரபுக்களையும் அழைத்து “கர்த்தருடைய பெட்டியைப் பற்றி நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிட லாம்” என்று தீவிரமாக விசாரித்தனர். விலையுயர்ந்த மீறுதலின் காணிக்கையோடு திருப்பி அனுப்பும்படி ஆலோசனை கூறப்பட்டது. அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறது மல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்று பூசாரிகள் கூறினர். வாதையை தள்ளுவதற்கோ அல்லது நீக்குவதற்கோ அழிவைக் கொண்டு வந்த உருவங்களையோ அல்லது விசேஷமாக பாதிக்கப்பட்ட சரீரத்தின் அவயவத்தையோ பொன், வெள்ளி அல்லது மற்ற உலோகத்தால் செய்வது முற்காலத்தில் புறஜாதிகளின் பழக்கமாக இருந்தது. இது ஒரு தூண்மீதோ அல்லது எளிதில் பார்க்கக் கூடிய இடத்திலோ வைக்கப்பட்டு இவ்விதம் எடுத்துக்காட்டப்பட்ட தீமைகளுக்கெதிரான வல்லமையான பாது காப்பாக நினைக்கப்பட்டது. அதேபோன்ற வழக்கம் இன்றைக்கும் சில புறஜாதி மக்களிடம் இருக்கிறது. வியாதியினால் துன்பப்படுகிற ஒரு மனிதன் சுகமடையும் படி தன்னுடைய விக்கிரகத்தின் கோலிலுக்குப் போகும் போது தேவனுக்கு காணிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதியின் உருவத்தை தன்னுடன் கொண்டு செல்வான்.PPTam 769.1

    அப்போதிருந்த மூடபழக்கங்களின் வழியாகத்தான் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்த வாதையின் எடுத்துக்காட்டுகளாக “உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செய்யும்படி பெலிஸ்தரின் அதிபதிகள் மக்களை நடத்தினார்கள்.PPTam 769.2

    இந்த ஞானிகள் பெட்டியோடு இருந்த மர்மமானவல்லமையை தாங்கள் சந்திக்க ஞானமின்றி இருந்த வல்லமையை அறிக்கை செய்தனர். எனினும் மக்கள் தங்கள் விக்கிரகாராதனையிலிருந்து திரும்பி ஆண்டவரை சேவிக்க ஆலோசனை கூறவில்லை. தேவனுடைய மூழ்கடிக்கும் நியாயத்தீர்ப்புகளினால் அவருடைய அதிகாரத்திற்கு ஒப்புக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் இன்னமும் இஸ்ரவேலின் தேவனை வெறுத்தனர். அவரோடு எதிர்த்து நிற்பது பிரயோஜனமற்றது என்று தேவனுடைய நியாயத்தீர்ப்புகளினால் பாவிகள் உணர்த்தப் படலாம். இவ்விதம் அவருடைய கட்டுப்பாட்டிற்கு எதிராக இருதயத்தில் கலகம் செய்யும் போதே அவருடைய வல்லமைக்கு ஒப்புக்கொடுக்க அவர்கள் கட்டாயப்படுத் தப்படலாம். அப்படிப்பட்ட ஒப்படைப்பு பாவியை இரட்சிக்காது. மனிதனுடைய மனந்திரும்புதல் ஏற்றுக்கொள்ளப்படு முன்பாக இருதயம் தேவனுக்கு ஒப்படைக்கப்பட- தெய்வீகக் கிருபையினால் கீழ்ப்படுத்தப்பட வேண்டும்.PPTam 770.1

    துன்மார்க்கருக்கு தேவனுடைய நீடிய பொறுமை எவ்வளவு பெரியதாயிருக்கிறது. விக்கிரகாராதனைக்காரரான பெலிஸ்தர்களும் பின்வாங்கின இஸ்ரவேலர்களும் ஒரேவிதமாக தேவனுடைய ஈவுகளை அனுபவித்திருந்தனர். நன்றியில்லாத கலகக்கார மனிதர்களின் பாதையில் கவனித்திராத பத்தாயிரம் கிருபைகள் மௌனமாக விழுந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு ஆசீர்வாதமும் அதைக் கொடுத்தவரைக்குறித்து அவர்களிடம் பேசியது. ஆனால் அவர்கள் அவருடைய அன்பைக் கவனிக்காதவர்கள் போல இருந்தனர். மனித பிள்ளைகளின் மேல் தேவனுடைய பொறுமை மிகவும் பெரியதாக இருக்கிறது. ஆனாலும் தங்களுடைய மனந்திரும்பாத நிலையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தபோது, அவர்களைப் பாதுகாக்கும் தம் கரத்தை அவர்களிடமிருந்து அவர் விலக்கினார். தேவனுடைய சிருஷ்டிகளிலும் அவருடைய எச்சரிப்புகளிலும் ஆலோசனைகளிலும் அவருடைய வார்த்தைகளின் கடிந்துகொள்ளுதலிலும் அவருடைய குரலை கேட்க அவர்கள் மறுத்தனர். இவ்விதம் நியாயத்தீர்ப்புகளினால் அவர்களோடு பேசும்படியாக அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.PPTam 770.2

    பெட்டியை அதன் சொந்த தேசத்திற்கு திரும்ப அனுப்புவதை எதிர்க்க ஆயத்தமாயிருந்த சில் பெலிஸ்தர் அவர்கள் நடுவே இருந்தனர்,PPTam 770.3

    இஸ்ரவேலர்களின் தேவனுடைய வல்லமையை அவ்விதம் ஒப்புக்கொள்ளுவது பெலிஸ்தியாவின் அகந்தையைச் சிறு மைப்படுத்துவதாயிருக்கும். ஆனாலும் பார்வோன் மற்றும் எகிப்தியர்களுடைய பிடிவாதத்தை பின்பற்றாதபடியும், இவ்விதம் இன்னும் அதிக துன்பங்களை தங்கள் மேல் வருவித்துக்கொள்ளாத படியும், பூசாரிகளும் குறிசொல்லுகிறவர்களும் ” ஜனங்களுக்கு அறிவுரை கூறினர். அனைவருடைய ஒப்புதலையும் பெற்ற ஒரு திட்டம் இப்போது ஆலோசிக்கப்பட்டு உடனடியாக செயல் படுத்தப்பட்டது. தீட்டுப்படுத்துவதன் அனைத்து ஆபத்துகளையும் தவிர்ப்பதற்கேதுவாக, மீறுதலின் பொற்காணிக்கையோடு பெட்டி ஒரு புது வண்டியின் மேல் வைக்கப்பட்டது. இந்த வண்டியுடன் இதுவரையிலும் நுகம் பூட்டப்டாதிருந்த இரண்டு பசுக்கள் இணைக் கப்பட்டன. அவைகளின் கன்றுகள் வீட்டிலே அடைக்கப்பட, தாங்கள் விரும்பும் இடத்திற்குப் போகும்படி இந்த மாடுகள் சுதந்தரமாக விடப்பட்டன. பெட்டி லேவியர்களின் பட்டணத்திற்கு அருகாமையிலிருந்த பெத்ஷிமேசுக்குப் போகும் வழியில் இஸ்ரவேலர்களிடம் திரும்பிப் போகுமானால், இந்த மாபெரும் தீமையை இஸ்ரவேலின் தேவனே தங்களுக்குச் செய்திருக்கிறார் என்பதை பெலிஸ்தர் ஏற்றுக்கொள்ளுவார்கள். அல்லாதபோது, அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்து கொள்ளலாம்” என்றார்கள்.PPTam 771.1

    சுதந்தரமாக விடப்பட்ட மாடுகள் தங்கள் கன்றுகளிலிருந்து திரும்பி கூப்பிட்டுக்கொண்டே பெத்ஷிமேசிற்கான நேர்வழியைப் பிடித்தன. எந்த மனிதகரமும் நடத்தாத போதும் பொறுமையான மாடுகள் தங்கள் வழியில் தொடர்ந்தன. தெய்வீக பிரசன்னம் அதற்குத் துணையாக வர, குறிக்கப்பட்ட அதே இடத்திற்கு பத்திரமாக அது கடந்து சென்றது.PPTam 771.2

    அது கோதுமை அறுப்பின் காலமாயிருந்தது. பெத்ஷிமேசின் மனிதர் பள்ளத்தாக்கில் அறுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள். அந்த வண்டில் பொஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது, அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது. அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் ச ர்வாங்கதகன பலியாகச் செலுத்தினார்கள்.“ பெத்ஷிமோசின் எல்லை வரையிலும் பெட்டியைப் பின்தொடர்ந்த பெலிஸ்திய அதிபதிகள் அது பெற்றுக்கொள்ளப்பட்டதைக் கண்டவர்களாக எக்ரோனுக்குத் திரும்பினர். வாதை நிறுத்தப்பட்டது. இஸ்ரவேலின் தேவனிடமிருந்து வந்த நியாயத்தீர்ப்புகளே இந்த பேரழிவுகள் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.PPTam 771.3

    பெட்டி தங்களின் எல்லையில் இருக்கிறது என்கிற செய்தியை பெத்ஷிமேசின் மனிதர் விரைவாக பரப்ப, சுற்றிலுமிருந்த தேசங்களின் மக்கள் அது திரும்ப வருவதை வரவேற்கக் கூடினர். முதலில் பலிபீடமாக உபயோகப்பட்ட கல்லின் மேல் பெட்டி வைக்கப்பட்டு அதன் முன்பு கூடுதலான பலிகள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்டன. ஆராதனை செய்தவர்கள் தங்கள் பாவங்களைக் குறித்து மனம் வருந்தியிருப்பார்களானால் தேவனுடைய ஆசீர்வாதம் அவர்களைச் சென்றடைந்திருக்கும். ஆனால் அவர்கள் அவருடைய பிரமாணங்களுக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்திருக்கவில்லை. நன்மையின் அடையாளமாக அதன் வருகையில் அவர்கள் களிகூர்ந்திருந்தபோதும் அதன் பரிசுத்தத்தைக் குறித்த உண்மையான உணர்வு இல்லாதிருந்தனர். அதை வைக்கும்படி ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துவதற்குப் பதிலாக வயலிலேயே தங்கியிருக்கும்படி அவர்கள் அதை அனுமதித்தனர். அந்த பரிசுத்தமான பெட்டியைத் தொடர்ச்சியாகப் பார்க்கவும், எவ்விதம் ஆச்சரியமான விதத்தில் அது திரும்பக் கொண்டுவரப்பட்டது என்பதை தொடர்ந்து பேசவும் செய்தபோது அதன் அசாதாரண வல்லமை எங்கே இருக்கிறது என்பதை அனுமானிக்கத் துவங்கினர். கடைசியாக தெரிந்து கொள்ளும் ஆவல் மேற்கொள்ள அதன் மூடியை அகற்றி அதைத் திறக்கத் துணிந்தனர்.PPTam 772.1

    உடன்படிக்கைப்பெட்டியை பயத்தோடும் பக்தியோடும் கருதும்படியாக அனைத்து இஸ்ரவேலரும் போதிக்கப்பட்டிருந்தனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதை நகர்த்த வேண்டியிருந்தபோது லேவியர்கள் அதைப் பார்க்கக்கூடாது. வருடத்தில் ஒரு முறை மாத்திரமே பிரதான ஆசாரியன் அதைப் பார்க்க அனுமதிக்கப்பட்டான். புறஜாதி பெலிஸ்தர்கூட அதன் மூடியை அகற்ற தைரியம் கொண்டிருக்கவில்லை. காணக்கூடாத பரலோகத் தூதர்கள் எப்போதும் அதன் பிரயாணங்களிலெல்லாம் அதோடு வந்தனர். பெத்ஷிமேசின் மக்களுடைய பயபக்தியற்ற தைரியம் உடனடியாக தண்டிக்கப்பட்டது. அநேகர் சடிதியான மரணத்தினால் அடிக்கப்பட்டனர்.PPTam 772.2

    உயிர்பிழைத்தவர்கள் இந்த நியாயத்தீர்ப்பினால் தங்களுடைய பாவங்களுக்கான மனவருத்தத்திற்கு நடத்தப்படவில்லை. மாறாக, மூடநம்பிக்கை கொண்ட பயத்தோடு மாத்திரம் அதைப் பார்த்தனர். அதன் சமூகத்திலிருந்து விடுவிக்கப்படும் வாஞ்சையோடு, எனினும் அதை அப்புறப்படுத்த தைரியமற்றவர்களாக பெத்ஷிமேசின் மனிதர்கள் அதை எடுத்துச்செல்லும்படியாக அழைத்து கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பினர், மாபெரும் மகிழ்ச்சியோடு அந்த இடத்தின் மனி தர்கள் பரிசுத்தப் பெட்டியை வரவேற்றனர். கீழ்ப்படிந்து உண்மை யாயிருப்பவர்களுக்கு அது தெய்வீகதயவைக்குறித்த உறுதிமொழி என்று அவர்கள் அறிந்திருந்தனர். பயபக்தியான மகிழ்ச்சியோடு அதைத் தங்கள் பட்டணத்திற்குக் கொண்டுவந்து, லேவியனாகிய அபினதாபின் வீட்டில் வைத்தனர். இந்த மனிதன் அந்த பொறுப்பிற்கு தன் மகன் எலெயாசரை நியமித்தான். அது அநேக வருடங்கள் அங்கே இருந்தது.PPTam 772.3

    அன்னாளின் மகனுக்கு ஆண்டவர் தம்மை வெளிப்படுத்தின் இந்த வருடங்களிலிருந்து தீர்க்கதரிசன ஊழியத்திற்கு சாமுவேல் அழைக்கப்பட்டிருந்தது இஸ்ரவேலர்களால் ஒப்புக்கொள்ளப் பட்டிருந்தது. வேதனையும் சோதனையும் நிறைந்த கடமையாயிருந்த போதும் ஏலியின் வீட்டாருக்கு தேவனுடைய எச்சரிப்பை உண்மையாகக் கொடுத்ததன் வழியாக யெகோவாவின் தூதுவனாக தன்னுடைய பற்றுக்கு சாமுவேல் சான்று கொடுத்திருந்தான். “கர்த்தர் அவனுடனேகூட இருந்தார், அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போக விடவில்லை. சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தான் முதல் பெயெர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது.“PPTam 773.1

    இஸ்ரவேல் ஒரு தேசமாக இன்னமும் மதமற்றவர்களாகவும் விக்கிரகாராதனை செய்கிறவர்களாகவும் தொடர்ந்து கொண்டிருந்து, அதன் தண்டனையாக பெலிஸ்தரின் கீழ் இருந்து வந்தனர். இந்தக் காலத்தில் மக்களுடைய மனங்களை அவர்களுடைய பிதாக்களின் தேவனிடத்திற்கு திருப்பத்தேடி சாமுவேல் தேசமெங்குமிருந்த பட்டணங்களையும் கிராமங்களையும் சந்தித்து வந்தான். அவன் முயற்சிகள் பலனில்லாமலில்லை. தங்கள் சத்துருக்களின் ஒடுக்குதலை இருபது வருடங்களாக அனுபவித்த பின்னர் இஸ்ரவேலர்கள் “கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள்.“ சாமுவேல் அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்” என்று ஆலோசனை கூறினான். செய்முறை பக்தியும் மனதிலிருந்து வரும் மதமும் கிறிஸ்து இந்த பூமியிலிருந்த போது அவரால் போதிக்கப்பட்டபடியே, சாமுவேலின் நாட்களில் போதிக்கப்பட்டதை இங்கே நாம் காணலாம். கிறிஸ்துவின் கிருபையில்லாத மதத்தின் வெளித் தோற்றங்கள் முற்கால இஸ்ரவேலர்களுக்கு பயனற்றதாயிருந்தது, அதேபோலத்தான் தற்கால இஸ்ரவேலுக்கும்.PPTam 773.2

    முற்கால இஸ்ரவேல் அனுபவித்ததைப் போன்ற அதே உண்மையான முழுமனதோடு கூடிய மதத்தின் மலர்ச்சி இன்றைக்கும் அவசியமாயிருக்கிறது.PPTam 774.1

    தேவனிடம் திரும்பும் அனைவரும் எடுக்கவேண்டிய முதல் அடி பாவத்திற்காக மனம் வருந்துவதே ! ஒருவரும் இதை மற்றொருவருக்காக செய்யக்கூடாது. நாம் தனித்தனியாக நம் ஆத்துமாக்களை தேவன் முன்பு தாழ்த்தி நம் விக்கிரகங்களை அப்புறப்படுத்த வேண்டும். நாம் செய்யக்கூடிய அனைத்தையும் செய்த பின்பு ஆண்டவர் தமது இரட்சிப்பை வெளிக்காட்டுவார்.PPTam 774.2

    கோத்திரங்களின் தலைவருடைய ஒத்துழைப்போடு மாபெரும் கூட்டம் மிஸ்பாவிலே கூடியது. இங்கே பவித்திரமான உபவாசம் ஆசரிக்கப்பட்டது. ஆழ்ந்த தாழ்மையோடு மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர். தாங்கள் கேட்ட போதனைகளுக்குக் கீழ்ப்படியும் தங்கள் தீர்மானத்தின் சான்றாக சாமுவேலின் மேல் நியாயாதிபதி என்ற அதிகாரத்தை வைத்தனர்.PPTam 774.3

    இவ்வாறு ஒன்று கூடியதையுத்தத்திற்கான ஆலோசனை என்று பெலிஸ்தர் அர்த்தப்படுத்தி, வல்லமையான படையோடு இஸ்ரவேலரின் திட்டம் முதிருவதற்கு முன்பாக அவர்களைக் கலைத்துவிட வந்தனர். அவர்கள் நெருங்கி வருவதைக் குறித்த செய்தி இஸ்ரவேலில் மாபெரும் திகிலை உண்டாக்கியது. மக்கள் சாமுவேலிடம். ‘நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கிரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும்” என்று மன்றாடினர்.PPTam 774.4

    சாமுவேல் தகனபலியை செலுத்திக்கொண்டிருந்தபோது பெலிஸ்தர் யுத்தத்திற்கு மிக நெருங்கி வந்தனர். அப்போது அக்கினிக்கும் புகைக்கும் இடிமுழக்கத்திற்கும் நடுவே சீனாயில் இறங்கி வந்த ஒருவர், இஸ்ரவேல் பிள்ளைகளுக்காக சிவந்த சமுத்திரத்தைப் பிரித்து, யோர்தானின் நடுவே பாதையை உண்டாக்கினவருமானவர், மீண்டும் தமது வல்லமையை வெளிக்காட்டினார். பயங்கரமான புயல் முன்னேறிக் கொண்டிருந்த சேனையின் மீது வெடித்தது. வல்லமையான போர்வீரர்களின் மாத்த சாரங்கள் பூமி முழுவதிலும் சிதறடிக்கப்பட்டது.PPTam 774.5

    இஸ்ரவேலர்கள் நம்பிக்கையிலும் பயத்திலும் நடுங்கினவர்களாக மௌனமாக பிரமிப்போடு நின்றுகொண்டிருந்தனர். தங்கள் சத்துருக்களின் படுகொலையைக் கண்டபோது தங்களுடைய மனந்திரும்புதலை ஆண்டவர் ஏற்றுக்கொண்டார் என்று அறிந்தனர். யுத்தத்திற்கு ஆயத்தப்படாதிருந்தபோதும் கொலை செய்யப்பட்ட பெலிஸ்தரின் ஆயுதங்களை எடுத்து பெத்காரம் வரையிலும் ஓடிக்கொண்டிருந்தசேனையை துரத்தினர். இருபது வருடங்களுக்கு முன்பாக, பெலிஸ்தர்முன் இஸ்ரவேல் அடிக்கப்பட்டு ஆசாரியர்கள் கொல்லப்பட்டு பெட்டி பிடிக்கப்பட்ட அதே களத்தில் இந்த குறிப்பான வெற்றி பெறப்பட்டது. மீறுதலின் பாதை பேரழிவிற்கும் தோல்விக்கும் மாத்திரமே நடத்தும்போது, தேசங்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் தேவனுக்குக் கீழ்ப்படியும் பாதையே பாதுகாப்பும் மகிழ்ச்சியுமான பாதையாக இருக்கிறது. பெலிஸ்தர் இப்போது முழுமையாகக் கீழ்ப்படுத்தப்பட அவர்கள் இஸ்ரவேலிடமிருந்து எடுத்துக்கொண்ட அரண்களை திரும்ப ஒப்படைத்து அநேகவருடங்களாக வெறுப்பின் செயல்களிலிருந்து பின்வாங்கியிருந்தனர். மற்ற தேசங்கள் இதே உதாரணத்தை பின்பற்ற, இஸ்ரவேலர் சாமுவேலின் ஆட்சி முடியும் வரையிலும் சமாதானத்தை அனுபவித்திருந்தனர்.PPTam 775.1

    இந்த சம்பவம் மறக்கப்படக்கூடாதென்று மிஸ்பாவிற்கும் சே ணுக்கும் இடையே மாபெரும் கல்லை நினைவுக்கல்லாக சாமுவேல் நிறுத்தினான். “இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்“ என்று மக்களிடம் சொன்னவனாக அந்தக் கல்லை எப்னேசர் உதவியின் கல்” என்று அவன் அழைத்தான்.PPTam 775.2