Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    58 - தீர்க்கதரிசிகளின் பள்ளிகள்

    இஸ்ரவேலர்களின் கல்வியை ஆண்டவர்தாமே கட்டளையிட்டிருந்தார். அவர்களுடைய ஆவிக்குரிய விருப்பங்களுக்கு மாத்திரம் அவருடைய கவனம் கொடுக்கப்படவில்லை. அவர்களுடைய மன அல்லது சரீர நலத்தை பாதித்த அனைத்தும் தெய்வீக ஏற்பாட்டின் பொருளாயிருந்து, தெய்வீக பிரமாணத்தின் எல்லைக்குள் வந்தது.PPTam 776.1

    தங்கள் குழந்தைகளுக்கு தமது நியமங்களைப் போதிக்கவும் அவர்களுடைய பிதாக்களோடு அவர் நடந்து கொண்டவிதங்களோடு அவர்களை அறிமுகப்படுத்தவும் தேவன் எபிரெயர் களுக்குக் கட்டளையிட்டிருந்தார். இது ஒவ்வொரு பெற்றோரின் வி சேஷக் கடமைகளில் ஒன்றாக மற்றவர்களிடம் கொடுக்கப் படக்கூடாத ஒன்றாக இருந்தது. தகப்பன் மற்றும் தாயின் அன்பான இருதயங்கள் அந்நிய உதடுகளின் இடத்தில் தங்கள் குழந்தைகளுக்கு போதனை கொடுக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு அனுதின் சம்பவங்களோடும் தேவனைக் குறித்த நினைவுகளை இணைக்க வேண்டும். தமது மக்களை விடுவித்ததில் தேவனுடைய வல்லமையான செயல்களும் வரவிருக்கும் மீட்பரைக்குறித்த வாக்குத்தத்தங்களும் இஸ்ரவேலின் வீடுகளில் அடிக்கடி திரும்ப விவரிக்கப்பட வேண்டும். உபயோகப்படுத் தப்பட்ட உருவகங்களும் அடையாளங்களும் கொடுக்கப்பட்ட பாடங்களை மனதில் அதிக உறுதியாகப் பதித்தன. தேவனுடைய ஏற்பாடு மற்றும் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த மாபெரும் சத் தியங்கள் இளம் மனங்களில் பதிக்கப்பட்டன. வெளிப்படுத்தப் பட்ட வார்த்தைகளிலும் இயற்கையின் காட்சிகளிலும் தேவனை ஒரேவிதமாகப் பார்க்க அது பயிற்றுவிக்கப்பட்டது. வானத்தின் நட்சத்திரங்களும், வயலின் மரங்களும் மலர்களும், உயர்ந்த மலைகளும் துள்ளியோடும் அருவிகளும் சிற்றலை கொண்ட அருவிகளும் அனைத்தும் சிருஷ்டிகரைக் குறித்துப் பேசின. ஆசரிப்புக் கூடாரத்தின் பவித்திரமான பலி மற்றும் ஆராதனைக் கடுத்த சேவைகளும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் தேவனுடைய வெளிப்பாடாக இருந்தது.PPTam 776.2

    இப்படிப்பட்ட பயிற்சியே கோசேனின் தாழ்மையான இல்லத்தில் மோசேயின் பயிற்சியாயிருந்தது. இதுவே விசுவாசமுள்ள அன்னாளால் சாமுவேல் பெற்ற பயிற்சி, பெத்லகேமில் வசித் தபோது குன்றுகளில் தாவீது பெற்ற பயிற்சி, தன் தகப்பனின் வீட்டிலிருந்து சிறையிருப்பு தன்னைப் பிரிக்கும் முன்பாக தானியேல் பெற்ற பயிற்சியும், அப்படிப்பட்டதே நாசசேரத்தில் கிறிஸ்துவின் இளமைப்பருவத்தில் அவர் பெற்றதும் ! அதே பயிற்சிதான் பரிசுத்த எழுத்துக்களின் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள பாட்டியாகிய லோவிசாளின் உதடுகளிலிருந்தும் தாயாகிய ஐனிகேயாளிடமிருந்தும் குழந்தை தீமோத்தேயு பெற்றுக்கொண்டதும்!PPTam 777.1

    வாலிபரின் போதனைக்காக தீர்க்கதரிசிகளின் பள்ளிகள் ஸ்தா பிக்கப்பட்டு இன்னும் மேற்படியான ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. ஒரு வாலிபன் இஸ்ரவேலில் போதகனாகும்படி தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களை ஆழமாகத் தேடிப்பார்க்கவும் உன்னதத்திலிருந்து ஞானத்தைத் தேடவும் விரும்பினால், இந்தப் பள்ளிகள் அவனுக்குத் திறந்திருந்தன. தீர்க்கதரிசிகளின் பள்ளிகள் சாமுவேலால் உண்டு பண்ணப்பட்டு, எங்கும் பரவியிருந்த சீர்கேடுகளுக்கு தடையாகச் செயல்பட்டு, வாலிபரின் சன்மார்க்க ஆவிக்குரிய நன்மைக்கு ஏற்பாடு செய்வதாகவும் எதிர்கால தேசத்தினுடைய மனிதர்கள் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் என்னும் தகுதியில் தேவனுக்குப் பயந்து செயல்பட அவர்களை ஆயத்தப்படுத்தி, இவ்விதம் தேசத்தின் எதிர்கால செழிப்பை முன்னேற்றவும் நியமிக்கப்பட்டன. இந்த நோக்கத்தைச் செயல்படுத்துவதில் பக்தியுள்ள புத்தியுள்ள கெட்டிக்கார வாலிபரின் குழுக்களை சாமுவேல் கூட்டினான். இவர்கள் தீர்க்கதரிசிகளின் புத்திரர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தேவனோடு தொடர்பு கொண்டு அவருடைய வார்த்தைகளையும் கிரியைகளையும் ஆராய்ந்த போது, அவர்களுடைய இயற்கையான திறமையோடு மேலேயிருந்து வந்த ஞானமும் சேர்க்கப்பட்டது. போதித்தவர்கள் தெய்வீக சத்தியத்தில் தேர்ந்தவர்களாக மாத்திரமல்லாது அவர்கள் தானும் தேவனுடனான தொடர்பில் களிகூர்ந்து அவருடைய ஆவியின் விசேஷ நன்கொடைகளைப் பெற்றவர்களாகவுமிருந்தார்கள். ஜனத்தில் படித்திருந்த மற்றும் பக்தியாயிருந்தவர்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் அவர்கள் அனுபவித்தனர்.PPTam 777.2

    சாமுவேலின் நாட்களில் ராமாவில் ஒன்றும் அப்போது தேவனுடைய பெட்டி இருந்த கீரியாத்யாரீமில் மற்றொன்றுமாக இரண்டு பள்ளிகள் இருந்தன. மற்றவைகள் பின்னான நாட்களில் ஸ்தாபிக்கப்பட்டன.PPTam 778.1

    இந்தப் பள்ளிகளின் மாணவர்கள் தங்களுடைய சொந்த வேலைகளால் நிலத்தை உழுதோ அல்லது ஏதாவது தொழில் செய்தோ இயந்திர தொழில் செய்தோ தங்களை பராமரித்தும் வந்தனர். இஸ்ரவேலில் இது அந்நியமாகவோ அல்லது தரந்தாழ்ந்ததாகவோ நினைக்கப்படவில்லை. உண்மையில் பிரயோஜனமான வேலையைக் குறித்த அறியாமையில் பிள்ளைகளை வளர அனுமதிப்பது ஒரு குற்றமாக எண்ணப்பட்டது. தேவ னுடைய கட்டளைப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதாவது தொழில் கற்றுத்தரப்பட்டது. அவன் பரிசுத்த ஊழியத்திற்குப் பயிற்றுவிக்கப்பட்ட போதும் மத போதகர்களில் அநேகர் கைவேலை செய்வதினால் பிழைத்திருந்தனர். அப்போஸ்தலர்களின் காலத்திலுங் கூட பவுலும் ஆக்கில்லாவும் தங்களுடைய கூடாரத்தொழிலினால் தங்கள் பிழைப்பிற்காக சம்பாதித்ததினால் குறைவாக மதிக்கப்பட்டிருக்கவில்லை.PPTam 778.2

    இந்தப் பள்ளிகளில் மோசேக்குக் கொடுக்கப்பட்ட போதனை களோடு தேவனுடைய பிரமாணமும், பரிசுத்த சரித்திரமும் பரிசுத்த இசையும் கவிதைகளும் முதன்மைப்பாடங்களாக இருந்தன. தாங்கள் உள்ளே நுழைந்தபோது இருந்ததைவிடவும் தேர்ச்சி அடைந்து வெளியே வரும்போது தேவனைக்குறித்தும் மத சத் தியங்களைக்குறித்தும் மிகக் குறைவாகவே பெற்றிருக்கிற அநேக மாணவர்களைப் பயிற்றுவிக்கிற மதபள்ளிகளைக்காட்டிலும், அந்த பள்ளியின் போதனை முறைகள் வெகுவாக வேறுபட்டிருந்தன. முற்கால இந்தப் பள்ளிகளில் அனைத்து பாடங்களின் பிரம்மாண்டமான நோக்கமும் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுவதும் அவருக்கான மனிதனுடைய கடமையை அறிந்து கொள்ளுவதுமாயிருந்தது. பரிசுத்த சரித்திரத்தின் பதிவுகளில் யெகோவாவின் அடித்தடங்கள் அடையாளம் காணப்பட்டன. அடையாளங்களால் முன்வைக்கப்பட்ட மாபெரும் சாத்தியங்கள் கண்ணோட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு அனைத்து சத்தியங்களின் மையப்பொருளை உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை விசுவாசம் பற்றிக் கொண்டது.PPTam 778.3

    அர்ப்பணிப்பின் ஆவி நேசிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஜெபத்தின் கடமை மாத்திரம் கற்றுத்தரப்படவில்லை. மாறாக எவ்விதம் ஜெபிக்க வேண்டும் என்பதும் எவ்விதம் தங்கள் சிருஷ்டிகரை நெருங்க வேண்டும் என்பதும் அவர்மேல் எவ்விதம் விசுவாசம் வைக்கவேண்டும் என்பதும் அவருடைய ஆவியானவரின் கட்டளைகளுக்கு எவ்விதம் கீழ்ப்படிய வேண்டும் என்பதும் கற்றுக்கொடுக்கப்பட்டது. தேவனுடைய பொக்கிஷ சாலையிலிருந்து பழையதும் புதியதுமான பரிசுத்தமான அறிவுகள் கொண்டு வரப்பட்டு தீர்க்கதரிசனங்களிலும் பரிசுத்தமான பாடல்களிலும் தேவ ஆவி வெளிப்படுத்தப்பட்டது.PPTam 779.1

    தூய்மையும் நேர்மையும் உயர்த்தக்கூடியதுமானவைகளுக்கு நினைவுகளை உயர்த்துகிறதும், ஆத்துமாவில் தேவனுக்கான அர்ப்பணிப்பையும் நன்றியையும் எழுப்புகிறதுமான பரிசுத்த நோக்கங்களுக்கு இசை உபயோகப்படுத்தப்பட்டது. முற்கால வழக்கத்திற்கும் இப்போது இசை பலவேளைகளில் அர்ப்பணிக் கப்படுகிறதற்குமிடையே என்ன ஒரு வேறுபாடு ! எத்தனை பேர் இந்த ஈவை தேவனை மகிமைப்படுத்த உபயோகிப்பதற்குப் பதிலாக சுயத்தை உயர்த்த பயன்படுத்துகிறார்கள்! இசையின் மேல் இருக்கும் பிரியம், தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தடை செய்திருக்கிற இன்பத்திற்காக கூடுகிற உலகத்தை நேசிக்கிறவர்களோடு இணையும் படி ஜாக்கிரதையற்றிருக்கிறவனை நடத்துகிறது. இவ்விதம் சரியாக உபயோகிக்கப்பட்டால் மாபெரும் ஆசீர்வாதமாக இருக்கக்கூடியது, மனதை கடமையிலிருந்தும் நித்திய காரியங்களைப் புரிந்து கொள்ளுவதிலிருந்தும் இழுக்கும்படி சாத்தான் உபயோகிக்கிற மிகவும் வெற்றியுள்ள முகவர்களில் ஒன்றாக ஆகிறது.PPTam 779.2

    பரலோக பிராகாரங்களில் தேவனை ஆராதிப்பதில் இசை ஒரு பங்கு வகிக்கிறது. நம்முடைய துதியின் கீதங்களில் பரலோக இசைக்குழுவிற்கு கூடியவரையிலும் இணக்கமாயிருக்க நாம் முயற்சிக்க வேண்டும். குரலை முறையாக பயிற்றுவிப்பது கல்வியில் முக்கியமான காரியமாயிருக்கிறது. இது நெகிழப்படக்கூடாது. மத ஆராதனையில் பாடுவது ஜெபத்தில் தேவனை துதிப்பதைப் போன்ற ஒரு செயலாகும். பாடலுக்கு சரியான வெளிப்பாடு கொடுக்கும்படி அதன் ஆவியை இருதயம் உணரவேண்டும்.PPTam 780.1

    தேவனுடைய தீர்க்கதரிசிகளால் போதிக்கப்பட்ட அந்தப் பள்ளிகளுக்கும் நம்முடைய இன்றைய கல்விக்கூடங்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு எவ்வளவு அகன்றதாயிருக்கிறது! உலகத்தினுடைய பழமொழிகளாலும் வழக்கங்களாலும் ஆட்சி செய்யப்படாத எவ்வளவுகுறைவான பள்ளிகள் காணப்படுகின்றன. முறையான கட்டுப்பாட்டிலும் நியாயமான ஒழுங்கிலும் வருந்தத்தக்க குறைவு இருக்கிறது. கிறிஸ்தவர் களென்று சொல்லிக் கொள்ளுகிற மக்களுக்கு மத்தியிலும் தேவனுடைய வார்த்தையைக் குறித்து நிலவி வரும் அறியாமை அச்சஞ்தருகிறதாயிருக்கிறது. மேலோட்டமான பேச்சுகளும் வெறும் உணர்வுகளுமே சன்மார்க்க மற்றும் மதப் போதனைகளை நடத்துகின்றன. தேவனுடைய நீ தியும் இரக்கமும், பரிசுத்தத்தின் அழகும், சரியாகச் செய்வதன் நிச்சயமான பலனும், பாவத்தின் மிகவும் கொடிய குணமும், பயங்கரமான அதன் விளைவுகளின் நிச்சயமும் வாலிபரின் மனங்களில் பதிக்கப்படுவதில்லை . குற்றம், வீணாக்குதல், காமவெறி ஆகியவைகளின் பாதைகளில் வாலிபருக்குப் போதனை செய்ய தீமையான தோழமைகள் போதிக்கின்றன.PPTam 780.2

    எபிரெயர்களின் முற்காலப் பள்ளிகளிலிருந்து நன்மைக் கேதுவாக கற்றுக்கொள்ளக் கூடிய சில பாடங்கள் இன்றைய ஆசிரியர்களுக்கு இல்லையா? மனிதனை உண்டாக்கினவர் அவனுடைய சரீர, மன, ஆத்தும் முன்னேற்றத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். எனவே கல்வியின் மெய்யான வெற்றி சிருஷ்டிகரின் திட்டத்தை முன் கொண்டு செல்ல மனிதனுக்கு இருக்கும் பற்றின் மேல் தான் இருக்கிறது.PPTam 780.3

    கல்வியின் மெய்யான நோக்கம் ஆத்துமாவில் தேவனுடைய சாயலை திரும்பவும் கொண்டுவருவதே. ஆதியிலே தேவன் மனிதனை தம்முடைய சாயலாக சிருஷ்டித்தார். நேர்மையான குணங்களை அவனுக்குக் கொடுத்தார். அவன் மனம் நன்கு சமச்சீரானதாக இருந்தது. அவனுடைய அனைத்து வல்லமைகளும் இணக்கமாயிருந்தன. ஆனால் விழுகையும் அதன் விளைவுகளும் இந்த ஈவுகளை முறைகேடாக்கின், பாவம் மனிதனில் தேவனுடைய சாயலை கொடுத்ததோடல்லாது ஏறக்குறைய அழித்தும் விட்டது. இதை மீண்டும் நிலை நிறுத்தவே இரட்சிப்பின் திட்டம் உருவாக்கப்பட்டு, கிருபையின் ஒரு வாழ்க்கை மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது. மனிதனை அவன் முதலில் உருவாக்கப்பட்டிருந்த பரிபூரணத்திற்கு மீண்டும் கொண்டுவருவதே வாழ்க்கையின் மிக உயர்ந்த மற்ற அனைத்தையும் கீழ்ப்படுத்துகிற நோக்கம், வாலிபரின் போதனையில் தெய்வீக நோக்கத்தோடு ஒத்துழைப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரின் கடமையாயிருக்கிறது. இவ்வாறு செய்வதில் அவர்கள் தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறார்கள். 1 கொரி. 3:9.PPTam 780.4

    மனம் ஆத்துமா மற்றும் சரீரத்தில் மனிதன் கொண்டிருக்கும் வெவ்வேறு தகுதிகள் அனைத்தும், எட்டக்கூடிய மிக உயர்ந்த தரத்தை அடைய உபயோகப்படுத்தும்படி தேவனால் அவர்களுக் குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய சாயலான தேவனுடைய குணம், தயவும் அன்புமாயிருக்கிறபடியினால் இது சுயநலத்தோடு தனக்கு மாத்திரமே வைத்துக்கொள்ளும் நாகரீகமுமாக இருக்க முடியாது. சிருஷ்டிகர் நம்மேல் வைத்திருக்கிற ஒவ்வொரு மனத்திறனும் ஒவ்வொரு பண்பும் அவருடைய மகிமைக்காகவும் நம்முடைய சக மனிதர்களை உயர்த்துவதற்காகவும் உபயோகப்படுத்தப்பட வேண்டும் இப்படிப்பட்ட உபயோகத்தில் அதனுடைய மிகுந்த தூய்மையும் மிகுந்த நேர்மையும் மகிழ்ச்சியான செயல்பாடும் காணப்படுகிறது.PPTam 781.1

    இந்த கொள்கைகள் கோருகிற முக்கியத்துவம் அதற்குக் கொடுக்கப்படுமானால் இன்றைக்கு இருக்கிற பயிற்சி முறைகள் சிலவற்றில் மிகப்பெரிய மாறுதல் ஏற்படும். அகந்தைக்கும் சுயநல ஆசைகளுக்கும் ஈர்த்து போட்டியின் ஆவியை பற்றவைப்பதற்குப் பதிலாக நன்மையும் சத்தியமும் அழகுமானதின் மேல் ஒரு அன்பைத் தூண்ட ஆசிரியர்கள் முயற்சிப்பார்கள் சி றப்பாயிருப்பதற்கான ஒரு வாய்பை தூண்டுவார்கள். சிருஷ்டிகருடைய நோக்கத்தை நிறைவேற்றவும் அவருடைய சாயலை பெற்றுக்கொள்ளவும் தங்களில் தேவன் கொடுத்திருக்கிற ஈவுகளை விருத்தி செய்யவே மாணவர்கள் தேடுவார்கள், மற்றவர்களை மிஞ்ச அல்ல. உலகத்தரத்திற்கு மாத்திரம் நடத்தப்படுவதற்குப் பதிலாக அல்லது தன்னில் தானே குறையுள்ளதும் குறைவானதுமாயிருக்கிற சுயத்தை உயர்த்துகிற விருப்பத்திற்கு தூண்டப்படுவதற்குப் பதிலாக சிருஷ்டிகரை அறியவும் அவரைப்போல ஆகவும் மனம் அவரிடம் நடத்தப்படும்.PPTam 781.2

    கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், பரிசுத்தரின் அறிவே அறிவு . நீதி . 9:10. வாழ்க்கையின் மாபெரும் வேலை குணத்தைக் கட்டுவதே. தேவனை அறியும் அறிவே மெய்யான கல்வியின் அஸ்திபாரமாயிருக்கிறது. இந்த அறிவைக் கொடுப்பதும் அதற்கு இசைவாக குணத்தை வார்ப்பிப்பதும் ஆசிரியர்களுடைய வேலையின் நோக்கமாயிருக்கவேண்டும். தேவனுடைய பிரமாணம் அவருடைய குணத்தின் பிரதிபலிப்பாயிருக்கிறது. எனவே சங்கீதக்காரன்: உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள் உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன் (சங். 119 172,104) என்று சொல்லுகிறான். தேவன் தம்மை அவருடைய வார்த்தைகளிலும் சிருஷ்டிப்பின் கிரியைகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட புத்தகங்கள் வழியாகவும் இயற்கையின் புத்தகங்களிலிருந்தும் தேவனைக்குறித்த அறிவை நாம் பெறவேண்டும்.PPTam 782.1

    எந்த பாடத்தில் திளைக்கும் படி மனம் பயிற்றுவிக்கப்படு கிறதோ அதற்கு இசைவாக தன்னை படிப்படியாக மாற்றிக்கொள்ளுவது மனதின் சட்டமாயிருக்கிறது. சாதாரண காரியங்களில் மாத்திரம் ஆக்கிரமிக்கப்படும்போது அது குறைவுள்ளதும் குறுகியதும் பெலவீனமுள்ளதுமாக ஆகும். கடினமான பிரச்சனைகளோடு போராட தேவைப்படாத போது கொஞ்ச காலத்தில் அது வளர்ச்சியின் வல்லமையை ஏறக்குறைய இழந்துவிடும். கற்பிக்கும் வல்லமையாக வேதாகமம் எந்த ஒரு போட்டியாள ருமின்றி இருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் ஆழமான சிந்தனைக்கும் உன்னதமான ஆவலுக்கும் மனம் உயர்ந்த பொருளை கண்டுபிடிக்கிறது. மனிதன் கொண்டிருக்கிற சரித் திரங்களில் வேதாகமமே மிக அதிக போதனையைக் கொடுக்கும் சரித்திரத்தைப் பெற்றிருக்கிறது. அது நித்திய சத்தியத்தின் ஊற்றிலிருந்து புதியதாக வந்தது. தெய்வீகக் கரம் அதன் தூய்மையை காலங்கள் நெடுகிலும் பாதுகாத்திருக்கிறது. நுழையும்படி மனித ஆராய்ச்சி வீணாகவே தேடுகிற வெகுதூரத்திலிருக்கிற கடந்த காலத்தை அது பிரகாசிப்பிக்கிறது. தேவனுடைய வார்த்தையில் உலகத்திற்கு அஸ்திபாரமிட்டு வானங்களை விரித்து வைத்தவல்லமையை நாம் காண்கிறோம். மனித்தப்பெண்ணத்தால் அல்லது பெருமையால் கொடுக்கப்படாத மனித இனத்தின் சரித்திரத்தை இங்கு மாத்திரமே நாம் காண்கிறோம். இந்த உலகம் அறிந்திருக்கிற மாபெரும் மனிதர்களுடைய போராட்டங்களும் தோல்விகளும் வெற்றிகளும் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இங்கே கடமை மற்றும் விதியின் மாபெரும் பிரச்சனைகள் திறக்கப்பட்டிருக்கின்றன காணக்கூடியதை காணக்கூடாத உலகத்திலிருந்து பிரிக்கிற திரை உயர்த்தப்பட்டு, பாவத்தின் முதல் நுழை விலிருந்து நீதி மற்றும் சத்தியத்தின் முடிவான வெற்றிவரைக்குமுள்ள, எதிரெதிரான நன்மை மற்றும் தீமையின் வல்லமைகளுடைய போராட்டத்தை நாம் காண்கிறோம். அனைத்தும் தேவனுடைய குணத்தின் வெளிப்பாடுகளே . அவருடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கிற சத்தியங்களை பயபக்தியோடு சிந்திப்பதால் மாணவரின் மனது நித்தியமானவரின் மனதோடு உறவிற்குள் கொண்டுவரப்படுகிறது. அப்படிப்பட்ட ஆராய்ச்சி குணத்தை சுத்திகரித்து தகுதிப்படுத்துவது மாத்திரமல்ல, மனதின் வல்லமைகளை விரிவாக்கவும் திடப்படுத்தவும் கூட தவறாது.PPTam 782.2

    வேதாகமத்தின் போதனை மனிதனுடைய இந்த வாழ்க்கையின் அனைத்து உறவுகளிலும் அவனுடைய செல்வத்தின் மேலும் முக்கியமான பங்கைக் கொண்டிருக்கிறது. தேசத்தின் செழிப்பிற்கான மூலைக்கல்லாயிருக்கிற கொள்கைகளை சமுதாயத்தின் நலத்தோடு கட்டப்பட்டிருக்கிற கொள்கைகளையும் குடும்பத்தின் பாதுகாப்பாக இருக்கிறவைகளையும் இந்த வாழ்க்கையில் உபயோகமான நிலையையும் மகிழ்ச்சியையும் கனத்தையும் அடைவதற்கு உதவுகிற அல்லது எதிர்கால நித்திய வாழ்க்கையை அடைவதற்கு உதவுகிற கொள்கைகளையும் அது திறக்கிறது. எந்த வாழ்க்கை நிலைக்கும் அல்லது எந்த மனித அனுபவத்திற்கும் அவசியமான ஆயத்தத்தை வேதாகமத்தின் போதனை கொடுக்கிறது. மனிததத்துவப்பாடங்களை உன்னிப்பாக கற்பதைவிட, தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து அதற்குக் கீழ்ப்படிவார்களானால், அது அதிக ஞானமும் பலமுமுள்ள மனிதர்களை உலகத்திற்குக் கொடுத்திருக்கும். அது பலமுள்ள மனிதர்களையும் தீர்மானமான குணமுடையவர்களையும் கூர்மையான கவனமுள்ளவர்களையும் தெளிவான நியாயமுள்ளவர்களையும் தேவனுக்குக் கனமும் உலகத்திற்கு ஆசீர்வாதமுமாயிருக்கக்கூடிய மனிதர்களையும் கொடுக்கும்.PPTam 783.1

    அறிவியலின் ஆராய்ச்சியிலும் சிருஷ்டிகரைக் குறித்த அறிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தில் தேவனுடைய கையெழுத்தின் விளக்கமே மெய்யான அறிவியல். தேவனுடைய ஞானம் மற்றும் வல்லமையின் புதிய சான்றுகளையே தன்னுடைய ஆராய்ச்சியிலிருந்து அறிவியல் கொண்டுவருகிறது. சரியாகப் புரிந்து கொள்ளப்படுமானால் இயற்கையின் புத்தகமும் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையும் தேவனுடைய கிரியையின் ஞானம் மற்றும் நலம் பயக்கும் சட்டங்களைக் குறித்த சில காரியங்களை நமக்குப் போதித்து, தேவனோடு நம்மை அறிமுகப்படுத்துகிறது.PPTam 783.2

    சரியான மாணவன் சிருஷ்டிப்பின் அனைத்து கிரியைகளிலும் தேவனைக் காணும் படியாக நடத்தப்பட வேண்டும். தமது போதனைகளை எளிமையாக்கி, தம்மைக் கேட்டுக்கொண்டிருந்த வர்களின் மனங்களில் அவைகளை ஆழமாகப் பதிப்பதற்காக நன்கு பழக்கமான இயற்கையின் காட்சிகளிலிருந்து விளக்கங்களை எடுத்த மாபெரும் போதகருடைய மாதிரியை ஆசிரியர்கள் பிரதி எடுக்க வேண்டும். இலையடர்ந்தகிளைகளில் பாடும் பறவைகளும் பள்ளத்தாக்கின் மலர்களும் உயர்ந்த மரங்களும் கனி நிறைந்த நிலங்களும் முளைத்து வரும் தானியமும் தரிசு நிலமும் தன்னுடைய பொற்கதிர்களால் வானத்தைப் பிரகாசிப்பிக்கும் அஸ்தமிக்கிற சூரியனும் அனைத்தும் போதனையின் முறைகளாக செயல்பட்டன. தம்மை கேட்டுக்கொண்டிருந்தவர்களின் பார்வைக்கு இந்தப் பொருட் கொண்டுவரப்பட்டபோதெல்லாம் அவைகளோடு அவர் இணைத்திருந்த சத்தியப்பாடங்கள் அவர்களுடைய நினைவிற்குக் கொண்டு வரப்படும் படியாக சிருஷ்டிகரின் காணக்கூடிய கிரியைகளை அவர் தாம் பேசின் ஜீவவார்த்தைகளோடு இணைத்தார்.PPTam 784.1

    வெளிப்படுத்தப்பட்ட பக்கங்களில் காட்டப்பட்டிருக்கிற தெய்வீகத்தின் பதிப்பு உயர்ந்த மலைகளிலும் கனி நிறைந்த பள்ளத்தாக்குகளிலும் பரந்த சமுத்திரத்திலும் காணப்படுகின்றது. இயற்கையின் காரியங்கள் சிருஷ்டிகரின் அன்பைக் குறித்து மனிதனிடம் பேசுகின்றன. எண்ணக் கூடாத வானத்திலும் பூமியிலுமுள்ள அடையாளங்களின் வழியாக அவர் நம்மை அவரோடு இணைத்திருக்கிறார். இந்த உலகம் முழுவதும் துயரமும் வருத்தமும் நிறைந்ததல்ல, தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பது திறக்கும் ஒவ்வொரு மொட்டிலும் ஒவ்வொரு மலரின் இதழ்களிலும் புல்லின் ஒவ்வொரு கூரிலும் எழுதப்பட்டிருக்கிறது. பாவத்தின் சாபம் முள்ளையும் குருக்கையும் பூமியில் பிறப்பித்திருந்தபோதும் குருக்களின் மேல் மலர்கள் இருக்கின்றன; முட்கள் ரோஜாக்களால் மறைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையிலிருக்கும் அனைத்தும் தேவனுடைய இளகிய தகப்பனைப்போன்ற கவனிப்பிற்கும் தமது பிள்ளைகளை மகிழ்விக்க அவர் கொண்டிருக்கும் வாஞ்சைக்கும் சான்று பகருகிறது. அவருடைய தடைகளும் உத்தரவுகளும் அவருடைய அதிகாரத்தை வெளிக்காட்டுவதற்காக மாத்திரம் அல்ல. அவர் செய்கிற அனைத்திலும் அவருடைய பிள்ளைகளின் நலம் அவருடைய கண்ணோட்டமாயிருக்கிறது. தன்னிடமே வைத்துக்கொள்ளுவது அவர்களுடைய சிறப்பானதாயிருக்கு மானால், அவைகளை விட்டு விட வேண்டும் என்று அவர் கோருவதில்லை.PPTam 784.2

    இந்த வாழ்க்கையில் மதம் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உகந்ததாக இல்லை என்று சமுதாயத்தின் சிலவகுப்பாரிடையே நிலவுகிற இந்தக் கருத்து மிகவும் தீங்கு விளைவிக்கும் தவறுகளில் ஒன்றாக இருக்கிறது. வேதாகமம் : கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான் (நீதி. 1923) என்று சொல்லுகிறது. நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்? உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். தீமையை விட்டு விலகி, நன்மை செய், சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்து கொள் - சங்.34:12-14. ஞானத்தின் வார்த்தைகள் : அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம் - நீதி. 4:22. (44)PPTam 785.1

    மெய்யான மதம், தேவனுடைய சரீர - மன மற்றும் சன்மார்க்க சட்டங்களுக்கு இணக்கமாக மனிதனைக் கொண்டுவருகிறது. அது சுயகட்டுப்பாட்டையும் அமைதியையும் இச்சையடக்கத்தையும் போதிக்கிறது. அது மனதை தகுதிப்படுத்தி, சுவையைச் சுத்திகரித்து, பகுத்தறிவை பரிசுத்தப்படுத்துகிறது. அது ஆத்துமாவை பரலோகத்தின் தூய்மையில் பங்கெடுக்கவைக்கிறது. தேவனுடைய அன்பிலும் அனைத்தையும் ஆட்சி செய்கிற ஏற்பாட்டிலும் வைக்கும் விசுவாசம், எதிர்பார்ப்பு மற்றும் கவலையின் பாரத்தை இலகுவாக்குகிறது. மிக உயர்ந்த அல்லது மிக தாழ்ந்த நிலையிலும் மகிழ்ச்சியினாலும் போதுமென்கிற நினைவினாலும் அது இருதயத்தை நிரப்புகிறது. சுகத்தை முன்னேற்றவும் வாழ்க்கையை நீட்டிக்கவும் அதனுடைய அனைத்து ஆசீர்வாதங்களையும் மிக நிறைவாக அனுபவிக்கவும் மதம் நேரடியாகச் செயல்படுகிறது. ஒருபோதும் தவறாத மகிழ்ச்சியின் ஊற்றை அது ஆத்துமாவிற்குத் திறக்கிறது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் அவர்கள் தங்களுக்காக தேடுகிறதைக் காட்டிலும் மிகவும் மேலான சிலவற்றை அவர்களுக்கு அவர் கொடுக்கவிருக்கிறார் என்பதை உணருவார்களானால்! தேவனுடைய சித்தத்திற்கு முரணாக நினைத்து செயல்படும் போது மனிதன் தன்னுடைய சொந்த ஆத்துமாவிற்கு மாபெரும் காயத்தையும் அநியாயத்தையும் உண்டாக்குகிறான். எது சிறந்தது என்பதை அறிந்து தம்முடைய சிருஷ்டிகளுக்கு நன்மையானதை திட்டம் செய்கிறவரால் தடைபண்ணப்பட்டிருக்கிற பாதையில் எந்த மெய்யான சந்தோஷமும் மகிழ்ச்சியும் காணப்படமுடியாது. மீறுதலின் பாதை துயரத்திற்கும் அழிவிற்குமே நடத்துகிறது. ஆனால் ஞானத்தின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைக்களெல்லாம் சமா தானம். நீதி. 3:17.PPTam 785.2

    எபிரெயர்களின் பள்ளிகளில் பழக்கப்படுத்தப்பட்டிருந்த சரீர மற்றும் மன பயிற்சிகள் நன்மைக்கேதுவாக ஆராயப்படலாம். அப்படிப்பட்ட பயிற்சிகளின் மதிப்பு போற்றப்படுவதில்லை. மனதிற்கும் சரீரத்திற்கும் இடையே நெருக்கமான உறவு இருக்கிறது. உயர்ந்த சன்மார்க்க மற்றும் அறிவு சார்ந்த சாதனைகளை அடையும் படி நம்முடைய சரீரத்தை கட்டுப்படுத்துகிற சட்டங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். பலமும் சமநிலையிலுமான குணத்தை அடைவதற்கு மன மற்றும் சரீர வல்லமைகள் செயல்படுத்தப்பட்டு விருத்தி செய்யப்பட வேண்டும். தேவன் நம்மிடம் கொடுத்திருக்கிற அதிசயமான சரீரத்தை நடத்துவதை காட்டிலும் அது நல்ல சுகத்தில் பாதுகாக்கப்படக்கூடிய சட்டங்களைக் கட்டிலும் வேறு என்ன முக்கியமான ஆராய்ச்சி வாலி பர்களுக்கு இருக்கக்கூடும்?PPTam 786.1

    இஸ்ரவேலின் நாட்களைப்போலவே இப்போதும் வாழ்க்கையின் நடைமுறைக் கடமைகளில் ஒவ்வொரு வாலிபரும் போதிக் கப்படவேண்டும். தேவைப்படும் போது தன் பிழைப்பிற்கான சம்பாத்தியத்தை அடையும்படி சரீர் உழைப்பின் ஏதாவது ஒரு அறிவை ஒவ்வொருவரும் அடைய வேண்டும்.PPTam 786.2

    இது வாழ்க்கையின் மாறுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு மாத்திரமல்ல; சரீரமன மற்றும் சன்மார்க்க விருத்தியின் மேல் வைக் கும் செல்வாக்கிற்கு எதிராகவும் அத்தியாவசியமாயிருக்கிறது. தனக்கு ஆதரவளிக்க சரீர உழைப்பு ஒருபோதும் அவசியப்படாது என்ற உறுதி இருந்தாலும் வேலை செய்ய அவன் கற்பிக்கப்பட வேண்டும். சரீர உழைப்பில்லாது எவரும் தெளிவான சரீரத்தையோ அல்லது பலமான ஆரோக்கியத்தையோ பெற்றிருக்க முடியாது. நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட உழைப்பு பலமும் சுறுசுறுப்புமான மனதையும் நேர்மையான குணத்தையும் அடைவதற்கு மிகவும் அவசியம்.PPTam 786.3

    ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு நாளின் ஒரு பகுதியை சுறுசுறுப்பான உழைப்பிற்கு அர்ப்பணிக்க வேண்டும். இவ்விதம் தொழிற்பழக்கங்கள் உண்டாக்கப்பட்டு சுயத்தை நம்பியிருக்கும் ஆவி உற்சாகப்படுத்தப்படும். அதே நேரம் வாலிபன் பல வேளைகளில் சும்மாயிருப்பதன் விளைவாக வருகிற அநேக தீமைகளிலிருந்தும் கீழ்த்தரமான பழக்கங்களிலிருந்தும் மறைக்கப்படுவான். இவை அனைத்தும் கல்வியின் முதன்மை நோக்கத்தோடு இணைந்ததாக இருக்கிறது. ஏனெனில் உழைப்பையும் ஜாக்கிரதையையும் தூய்மையையும் உற்சா கப்படுத்துவதில் சிருஷ்டிகரோடு நாம் இணைக்கமாகிறோம்.PPTam 787.1

    தேவனை கனப்படுத்துவதும் சக மனிதரை ஆசீர்வதிப்பதுமே தாங்கள் உண்டாக்கப்பட்டதன் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வாலிபர்கள் நடத்தப்படட்டும். பரலோகத்தின் தகப்பன் அவர்களிடம் வெளிக்காட்டியிருக்கிற இளகிய அன்பையும் இந்த வாழ்க்கையின் ஒழுக்கம் அவர்களை ஆயத்தப்படுத்துகிற உயர்ந்த முடிவையும் தேவனுடைய குமாரர்களாக ஆவதற்காக அழைக்கப்பட்டிருக்கிற மரியாதையையும் அவர்கள் பார்க்கட்டும். இதுவரையிலும் அவர்களுடைய மனதைக் கவர்ந்திருந்த அற்பமான சுயநல நோக்கங்களிலிருந்தும் இன்பங்களிலிருந்தும் வெறுப்போடும் கண்டனையோடும் ஆயிரக்கணக்கானோர் திரும்புவார்கள். பலனின் நம்பிக்கையிலோ அல்லது தண்டனையின் பயத்திலோமாத்திரமல்ல தேவன் கொடுத்திருக்கும் வல்லமைகளை தரந்தாழ்த்தி, தேவனுடைய சாயலான மனுஷகத்தின்மேல் கறையை ஏற்படுத்துவதால் மறைந்திருக்கும் கீழான அதன் தரத்தைக்குறித்த உள்ளார்ந்த உணர்வினால் பாவத்தை வெறுக்கவும் அதைத் தடுக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ளுவார்கள்.PPTam 787.2

    குறைவான ஆசைகளோடு இருக்கவேண்டும் என்று தேவன் வாலிபர்களை அழைக்கவில்லை. மனிதனை வெற்றியுள்ளவ னாகவும் மனிதர்களிடையே கனமுள்ளவனாகவும் மாற்றுகிற குணத்தின் கூறுகளான மேலான நன்மையின் மேலிருக்கும் கட்டுக்கடங்காத வாஞ்சை, வெல்ல முடியாத சித்தம், விறுவிறுப் பான உழைப்பு,களைப்படையாத விடாமுயற்சி இவைகள் நசுக்கப்படக்கூடாது. பூமியைக் காட்டிலும் வானங்கள் உயர்ந்திருக் கிறதைப் போலவே வெறும் சுயநலமான உலக ஆசைகளைக்காட்டிலும் மிக உயர்ந்த நோக்கங்களுக்கு தேவனுடைய கிருபையினால் அவர்கள் நடத்தப்பட வேண்டும். இந்த வாழ்க்கையில் துவங்கப்பட்ட கல்வி வரவிருக்கும் வாழ்க்கையில் தொடரப்படும். ஒவ்வொருநாளும் தேவனுடைய அதிசயமான கிரியைகளும், பிரபஞ்சத்தை சிருஷ்டித்து பராமரித்து வருகிற அவருடைய ஞானத்தையும் வல்லமையையும் குறித்த சான்றுகளும், மீட்பின் திட்டத்திலிருக்கும் அன்பு மற்றும் ஞானத்தின் நித்திய இரகசியமும் புதிய அழகோடு மனதிற்குத் திறக்கும். தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷ ருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. 2கொரி . 29. இந்த வாழ்க்கையிலும் தானே அவருடைய பிரசன்னத்தின் பார்வையை நாம் பெற்று, பரலோகத்தோடு தொடர்பு கொள்ளும் மகிழ்ச்சியை நேசிக்கலாம். ஆனாலும் முழுமையான அதன் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் இனிமேல் தான் அடையப்படும். தேவனுடைய சாய லுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட மனிதன் அடையக்கூடிய மகிமையான முடிவை நித்தியம் மாத்திரமே வெளிப்படுத்தக்கூடும்.PPTam 787.3