Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    7 - ஜலப்பிரளயம்

    ஆதாமின் மீறுதலின் விளைவாலும் காயீன் செய்த கொலையாலும் நோவாவின் காலத்தில் இரட்டை சாபம் பூமியின் மீது தங்கியிருந்தது. என்றாலும் இது இயற்கையை மிக அதிகமாக மாற்றியிருக்கவில்லை. அழிவின் அடையாளங்கள் இருந்தன. என்றாலும் பூமி தேவனுடைய ஏற்பாட்டின் பரிசுகளால் செழிப்பாகவும் அழ காகவும் இருந்தது. குன்றுகள் கனிகளால் நிறைந்த திராட்சக்கிளை களுக்கு ஆதரவளித்த கம்பீரமான மரங்களால் முடிசூட்டப்பட்டிருந்தன. பரந்த தோட்டத்தைப்போன்ற சம்பூமி, பசுமையான தாவ ரங்களால் உடுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான பூக்களின் வாசனை யால் இனிமையாயிருந்தது. பூமியின் கனிகள் மிக அதிகமான வகை களில் எல்லையற்றிருந்தது. மரங்கள் இப்போது காணப்படும் எதை விடவும் உருவிலும் அழகிலும், பூரணமான பரிமாணத்தில் இருந்தன . அவைகளின் கட்டைகள் நுண்ணியதாகவும், கடினமானதா கவும் கற்களைப்போன்று நன்கு தாங்கக்கூடியதாகவும் இருந்தது. பொன், வெள்ளி மற்றும் விலைமதிப்பான கற்கள் ஏராளமாயிருந்தன.PPTam 86.1

    ஆரம்பகால பலத்தை மனித இனம் இன்னும் தக்கவைத்திருந்தது. வாழ்நாளை நீட்டிக்கும் மரத்தை நெருங்க முடியாமற்போனதிலிருந்து சில சந்ததிகளே கடந்திருக்கின்றன. மனிதனுடைய வாழ் நாள் இன்னமும் நூற்றாண்டுகளால் அளக்கப்பட்டிருந்தது. திட்டம் தீட்டவும் அதைச் செயல்படுத்தவும் அபூர்வமானவல்லமைகளைப் பெற்றிருந்த நீண்டகாலம் வாழ்ந்த அந்த மக்கள், தேவனுடைய வேலைக்கு தங்களை அர்ப்பணித்திருந்தால், சிருஷ்டிகரின் பெயரை இந்த பூமியில் புகழ்ச்சியாக்கி, அவர் எதற்காக அவர் களுக்கு ஜீவனைக் கொடுத்திருந்தாரோ, அதை நிறைவேற்றியிருப் பார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறினார்கள். பயங்கர உருவமும் பலமும் கொண்ட, ஞானத்திற்கும் மிக ஞானமாக வியக்கத்தக்க வேலைகளை வகுக்கும் திறனும் கொண்ட அநேக இராட்சதர்கள் அங்கு இருந்தார்கள். ஆனால் அக்கிரமத்துக்கு பிடி யைத் தளர்த்தி அவர்கள் குற்றம் அவர்களுடைய திறமைக்கும் பல வித திறன்களுக்கும் சரிவிகிதத்தில் இருந்தது.PPTam 86.2

    ஜலப்பிரளயத்துக்கு முன்பு வாழ்ந்த இவர்கள் மீது அநேக ஐசுவரியமான ஈவுகளை தேவன் வைத்திருந்தார். ஆனால் அவருடைய ஆசீர்வாதங்களை தங்களை மகிமைப்படுத்திக் கொள்ள பயன்படுத்தி, தங்கள் பாசத்தை - கொடுத்தவர் மேலல் லாது, கொடுக்கப்பட்டவைகளின் மேல் வைத்ததால், அவைகளை அவர்கள் சாபமாக மாற்றினார்கள். தங்களுக்கு வசிப்பிடத்தைக் கட்டுவதில் பொன்னையும் வெள்ளியையும் விலையேறப்பெற்ற கற்களையும் நல்ல மரங்களையும் உபயோகித்தார்கள். மேலும் தங்கள் வசிப்பிடங்களை திறமையான கைவேலைகளால் அழகு படுத்துவதில் ஒருவரையொருவர்மிஞ்சுவதற்குப் பிரயாசப்பட்டார்கள். தங்களுடைய சொந்த பெருமையான இருதயத்தின் வாஞ்சைகளை திருப்திப்படுத்த மாத்திரமே நாடி, இன்பமும் துன்மார்க்கமு மான காட்சிகளில் களிகூர்ந்தார்கள். தங்கள் அறிவில் தேவனைக் கொண்டிருக்க விரும்பாமல், விரைவில் அவரையே மறுதலிக்கச் சென்றார்கள். இயற்கையின் தெய்வத்திற்கு பதிலாக இயற்கையை வணங்கினார்கள். மனித ஞானத்தை மகிமைப்படுத்த தங்களுடைய கரங்களின் கிரியைகளை வணங்கி, வார்க்கப்பட்ட சிலைகளுக்கு முன் பணிய தங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தார்கள்.PPTam 87.1

    பசுமையான வயல்களிலும், நல்ல மரங்களின் நிழலிலும் தங்கள் சிலைகளுக்கு பலிபீடங்களை நிறுத்தினார்கள். தங்கள் பலனை வருடம் முழுவதும் கொடுத்த தழைத்திருந்த விஸ்தாரமான தோப்புகள், பொய்யான தேவர்களின் ஆராதனைக்காக பிரதிஷ்டைபண்ணப்பட்டது. இந்தத் தோப்புகளோடு நீண்ட சுற்றுகள் கொண்ட தெருக்கள், அனைத்து விளக்கங்களிலும் தரக்கூடிய பழமரங்களால் நிறைந்து, சிலைகளால் அலங்கரிக்கப்பட்டு, உணர்வுகளுக்கு மகிழ்ச்சிதருகிற அல்லது மக்களுடைய சின்றின்பத்திற்கு ஊழியம் செய்யக்கூடியதாக இருந்து, இவ்வாறு விக்கிரக ஆராதனையில் பங்கெடுக்கும்படி அவர்களை மயக்கியது.PPTam 87.2

    மனிதர்கள் தேவனை தங்களுடைய அறிவிலிருந்து எடுத்துப் போட்டு, தங்களுடைய சொந்த கற்பனைகளில் தோன்றிய உருவங்களை வணங்கினார்கள். விளைவாக, அவர்கள் அதிகமதிகமாக தரந்தாழ்ந்தார்கள். விக்கிரகங்களை புகழ்வதால் அதை வணங்கு கிறவர்கள் மேல் வரும் பலனை சங்கீதக்காரன். அவைகளைப் பண் ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள் (சங்கீதம் 11:58) என்கிறான். காண்கிறதினால் நாம் மாறுகிறோம் என்பது மனித மனதின் நியமம். சத்தியத்தையும் தூய்மையையும் பரிசுத்தத்தையும் குறித்து மனிதன் எவ்வளவு புரிந்திருக்கிறானோ அதற்கு மேல் அவன் எவ்வளவும் உயரமாட்டான். மனம் மனித தன்மைக்கும் மேலாக ஒருபோதும் உயர்த்தப்படவில்லையெனில், முடிவில்லாத ஞானத்தையும் அன் பையும் புரிந்து கொள்ள அது விசுவாசத்தினால் உயர்த்தப்பட வில்லையெனில், மனிதன் நிச்சயமாக கீழ்நோக்கி மூழ்கிக்கொண்டே இருப்பான். பொய்யான தேவர்களை வணங்கினவர்கள், தங்கள் தேவர்களை மனித குணங்களாலும் உணர்ச்சிகளாலும் மூட, அவர் களுடைய குணத்தின் தரம், பாவமனித சாயலுக்குத் தரம் தாழ்ந்தது. விளைவாக, அவைகள் கெட்டுப்போயிருந்தது. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டார். பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது, பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் தமது கட்டளைகளை வாழ்க்கையின் சட்டங்களாக மனிதனுக்குக் கொடுத்திருந்தார். ஆனால் அவருடைய பிரமாணம் மீறப்பட்டது. எனவே மனதில் தோன்றக்கூடிய அனைத்து பாவங்களும் விளைந்தது. மனிதனுடைய துன்மார்க்கம் மறைவற்றதும் துணிகரமானது மாயிருந்தது. நீதிதரையிலே மிதிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் கூக்குரல் பரலோகத்தை எட்டினது.PPTam 88.1

    ஆதியிலே இருந்த தெய்வீக முறைக்கு முரண்பாடான பலதார மணம் துவக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதைக் குறித்த காரியத்தில் தமது ஒழுங்கு முறையைக் காண்பிக்க ஆண்ட வர் ஆதாமுக்கு ஒரு மனைவியைக்கொடுத்தார். ஆனால் விழுகைக் குப்பின்பு, தங்களுடைய பாவ இச்சைகளைத் தொடரும்படி மனி தன் தெரிந்துகொண்டான். அதன் விளைவாக, குற்றங்களும் நிர்ப்பந்தங்களும் விரைவாக அதிகரித்தது. திருமண உறவாகிலும் அல்லது சொந்துக்களைக்குறித்த உரிமைகளாகிலும் மதிக்கப்பட வில்லை. அயலகத்தானுடைய மனைவிகளையாவது சொத்துக்களையாவது இச்சித்த எவனும் அவைகளை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டான். மனிதன் கொடுமையின் கிரியைகளில் பேரு வகை கொண்டான். மிருகங்களின் உயிரை அழிப்பதில் மகிழ்ந் தான். உணவிற்காக மாம்சத்தை எடுத்துக்கொண்டது மனித உயிரையும் ஆச்சரியமாக அலட்சியப்படுத்தும் வரைக்கும் அவர்களை இன்னமும் கொடுமையும் இரத்தவெறியும் கொண்டவர்களாக்கிற்று.PPTam 88.2

    உலகம் இன்னமும் தன் இளமைக்காலத்தில் இருந்தது. என்றாலும் அக்கிரமம் ஆழமாக, தேவன் அதற்கு மேல் பொறுக்கக்கூடாத விதத்தில் எங்கும் படர்ந்தது. அவர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின் மேல் வைக்காமல், நிக்கிரகம் பண்ணுவேன் என்றார். தமது ஆவி குற்றமுள்ள இனத்தோடு எப்போதும் போராடாது என்று அவர் அறிவித்தார். உலகத்தையும் அதன் பொக்கிஷங்களையும் தங்கள் பாவங்களால் கொடுப்பதை அவர்கள் நிறுத்தாவிட்டால், அவர்களை தம்முடைய சிருஷ்டிகளாக இராதபடி துடைத்துப் போட்டு, அவர்களை எவைகளைக் கொண்டு ஆசீர்வதிக்க அவர் விரும்பியிருந்தாரோ, அவைகளையும் அழித்துவிடுவார். வயலின் மிருகங்களையும் ஏராளமான உணவை அவர்களுக்கு கொடுத்து வந்த தாவரங்களையும் துடைத்துப்போட்டு, இந்த அழகிய பூமியை பாழும் அழிவும் கொண்ட காட்சியாக்குவார்.PPTam 89.1

    நிலவிவந்த தீமைகளுக்கு நடுவே, மெய்யான தேவனை அறி கிற அறிவையும் சன்மார்க்கத் தீமையின் அலையையும் தடுக்கும்படி மெத்தூசலா, நோவா மற்றும் அநேக மக்கள் உழைத்தனர். ஜலப் பிரளயத்துக்கு 120 வருடங்களுக்கு முன்பாக ஒரு பரிசுத்த தூதன் வழியாக தேவன் நோவாவுக்கு தமது நோக்கத்தை அறிவித்து, பேழையைக் கட்டும் படி அவனை நடத்தினார். பேழையைக் கட்டுவதனால், துன்மார்க்கரை அழிக்கும்படி தேவன் பூமியின் மேல் வெள்ளம் போன்று தண்ணீரை அனுப்பப்போகிறார் என்று அவன் உபதேசம் பண்ணவேண்டும். அந்தச் செய்தியை நம்புகிறவர்கள் மனந்திரும்பி, புதுப்பித்து, மன்னிப்பு பெறுவதின் மூலம் இரட்சிக் கப்பட ஆயத்தப்படுவார்கள். வெள்ளத்தைக் குறித்து தேவன் தனக்குக் காண்பித்தவைகளை ஏனோக்கு தன் பிள்ளைகளிடம் மீண்டும் மீண்டும் செல்லிவந்தான். நோவா பிரசங்கிப்பதைக் கேட்ட மெத்தூசலாவும் அவன் குமாரரும் பேழையை கட்டுவதற்கு உதவினார்கள்.PPTam 89.2

    பேழையின் மிகச் சரியான அளவையும் அதை கட்டுவதில் ஒவ்வொரு காரியத்தையுங் குறித்த வெளிப்படையான நடத்துதல்களையும் தேவன் நோவாவிற்குக் கொடுத்தார். மா பெரும் பலமுள்ள தாங்கக்கூடிய ஒரு கட்டமைப்பை மனித ஞானம் வகுத்திருக்கவே முடியாது. தேவனே அதை வடிவமைத்தார். நோவா, அதை கட்டினான். தண்ணீரில் மிதக்கும்படி அது ஒரு கப் பலின் உடற்பகுதியைப்போல் கட்டப்பட்டாலும், சிலகாரியங்களில் அது ஒரு வீட்டுக்கு ஒத்திருந்தது. மூன்று மாடி கட்டிடத்தின் உயர மும், அதன் ஒரு பக்கத்தில் ஒரு கதவோடும் அது கட்டப்பட்டது. வெளிச்சம் உயரத்திலிருந்து வந்து வெவ்வேறு அறைகளை ஒளிப் படுத்தும்படியும் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான வருடங்கள் எந்த அழிவையும் காணக்கூடாத மருத அல்லது கொப்பேர் மரம் உபயோகிக்கப்பட்டது. மிகப்பிரம்மாண்டமான அந்த அமைப்பு மெதுவான மற்றும் கடின உழைப்பைக் கொண்டிருந்தது. மரங்களின் மாபெரும் உருவத்தாலும் அவைகளின் தன்மையாலும், இப் போது இருப்பதைக்காட்டிலும் அப்போதிருந்த மனிதர்கள் அதிக பலமுள்ளவர்களாக இருந்தபோதும் உத்திரங்களை ஆயத்தப்படுத்த அதிக பலம் தேவைப்பட்டது. வேலையைப் பூரணமாக்கும்படி மனிதன் செய்யக்கூடியதெல்லாம் செய்யப்பட்டது. என்றபோதும் பூமியின் மீது வரவிருந்த புயலை மனிதன் செய்யக்கூடிய அனைத்தும் எதிர்த்து நின்றிருக்காது. அலைமோதிய தண்ணீர்கள் மேல் தேவன் மாத்திரமே தமது ஊழியக்காரரை காப்பாற்ற முடியும்.PPTam 90.1

    விசுவாசத்தினாலே நோவாதற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டு பண்ணினான், அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். எபிரெயர் 11:7. நோவா உலகத்திற்கு எச்சரிப்பின் செய்தியைக் கொடுத் துக்கொண்டிருந்தபோது, அவனுடைய வேலை அதனுடைய உண் மைக்கு சாட்சி பகர்ந்தது. இப்படியாகத்தான் அவனுடைய விசு வாசமும் பூரணமடைந்து, சான்று பகர்ந்தது. தேவன் சொன்னதை அப்படியே நம்புவதைக் குறித்த ஒரு உதாரணத்தை அவன் உலகத் துக்குக் கொடுத்தான். தான் வைத்திருந்த அனைத்தையும் பேழையின் மேல் முதலீடு செய்தான். மிகவும் மகத்தான பேழையை வறண்ட நிலத்தின் மேல் அவன் கட்டத் துவங்கினபோது, அந்த விசித்தரமான காட்சியைக் காணவும், ஒரு போதகனுடைய ஊக்கமான ஆர்வம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்கவும், ஒவ்வொரு திசையிலிருந்தும் திரளானவர்கள் வந்தார்கள். அந்தப் பேழையின் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் மக்களுக்கு ஒரு சாட்சியாக இருந்தது.PPTam 90.2

    முதலில் அநேகர் எச்சரிப்பைக் கேட்பவர்கள் போலக் காணப் பட்டார்களென்றாலும் உண்மையான மனந்திரும்புதலோடு அவர்கள் தேவனிடம் திரும்பவில்லை. தங்களுடைய பாவங்களை விட்டு விலக அவர்கள் விருப்பமின்றி இருந்தார்கள். பிரளயம் வரு வதற்கு முன்னான காலத்தில் அவர்களுடைய விசுவாசம் சோதிக் கப்பட்டது. அவர்கள் சோதனையை தாங்குவதில் தோல்வியடைந் தார்கள். அங்கு நிலவின் அவிசுவாசத்தால் மேற்கொள்ளப்பட்டவர்களாக , பவித்திரமான தூதை நிராகரிப்பதற்கு, அவர்கள் தங்களுடைய முந்தைய தோழர்களுடன் முடிவில் இணைந்தார்கள். சிலர் ஆழமாக உணர்த்தப்பட்டார்கள். அவர்கள் எச்சரிப்பின் வார்த்தைகளை கவனித்திருக்கக்கூடும். ஆனால் வேடிக்கை பேசவும் பரிக சிக்கவும் அங்கே அநேகர் இருந்ததால், அவர்களும் அதே ஆவியில் பங்குகொண்டார்கள். கிருபையின் அழைப்பை தடுத்து, விரை வில் தைரியமும் இணக்கமுமற்ற நிந்தனைக்காரருக்கு இடையே இருந்தார்கள். ஒரு முறை வெளிச்சத்தைப் பெற்றிருந்து, உணர்த்து கிற தேவ ஆவியை தடுக்கிறவர்களைப்போன்று வேறு எவரும் அசட்டை செய்வதில் பாவத்தில் அவ்வளவு தூரம் போகமாட் டார்கள்.PPTam 91.1

    அந்தத் தலைமுறையினர் அனைவரும் முழுமையான விக் கிரக ஆராதனைக்காரராக இருக்கவில்லை. அநேகர் தேவனை தொழுகிறவர்களாகக் கூறிக்கொண்டார்கள். தங்களுடைய விக்கிரகங்கள் தெய்வத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும், அவைகளின் வழியாக மக்கள் தெய்வீக நபரைக்குறித்து தெளி வாகப் புரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். நோவாவின் போதகத்தை நிராகரிப்பதில் இவர்கள் முன்னணியில் இருந்தார்கள். தேவனை பொருட்களால் எடுத்துக்காட்ட முயற்சித்தபோது, அவர் களுடைய மனங்கள் அவருடைய மகத்துவத்திற்கும் வல்லமைக் கும் இருளடைந்தது. அவருடைய குணத்தின் பரிசுத்தத்தை உணர முடியாமற்போயினர். பாவம் பொதுவான ஒன்றாக மாறி, பாவ மாகவே தோன்றாமல் இருக்க, முடிவாக, தெய்வீக சட்டம் நடை முறையில் இல்லை, மீறுதலை தண்டிக்கிறது அவருடைய குணத் திற்கு முரண்பாடானது என்று அறிவித்து, அவருடைய நியாயத் தீர்ப்புகள் பூமியின் மேல் விழும் என்கிறதை மறுதலித்தனர். அந்தத் தலைமுறையினர் தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந் திருந்தார்களானால், அவருடைய குரலை அவருடைய ஊழியக் காரன் கொடுத்த எச்சரிப்பில் உணர்ந்திருப்பார்கள். ஆனால் வெளிச்சத்தை நிராகரித்ததில் அவர்கள் குருடடைந்ததால், நோவா வின் தூது ஒரு தவறான தூது என்று உண்மையாகவே நம்பினார்கள்.PPTam 91.2

    திரளானோரோ அல்லது அதிகமான மக்களோ சரியான பக் கத்தில் நின்றிருக்கவில்லை. தேவனுடைய நியாயத்திற்கும் அவ ருடைய பிரமாணங்களுக்கும் எதிராக முழு உலகமும் நின்றிருந்தது, நோவா ஒரு வெறியனைப்போல் எண்ணப்பட்டான். தேவனுக்குக் கீழ்ப்படியாதிருக்க ஏவாளை சோதித்தபோது : நீங்கள் சாகவே சாவ தில்லை (ஆதி 3:4) என்று சாத்தான் அவளிடம் சொன்னான். மா பெரும் உலகப்பிரகாரமான கனம் கொண்ட ஞானமுள்ள மனிதர்கள் அதையே திரும்பக்கூறினார்கள். தேவன் அச்சுறுத்துவதெல் லாம் நம்மை மிரட்டி, கட்டாயப்படுத்துவதற்காகவே, அவை ஒரு போதும் நடக்காது, நீங்கள் அதைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க அவசியமில்லை, இந்த உலகத்தை உண்டாக்கின் தேவனாலே இந்த உலகம் அழிக்கப்படுவதையும், அவர்தாமே உண்டாக்கின் மக்களை அவர் தண்டிப்பதும் போன்ற இப்படிப்பட்ட சம்பவம் ஒருபோதும் நிகழாது; சமாதானத்தோடிருங்கள், பயப்பட வேண்டியதில்லை, நோவா ஒரு முரட்டுத்தனம் கொண்ட வெறியன் என்று சொன்னார்கள். ஏமாற்றப்பட்ட கிழவனுடைய மடத்தனத்தைக் குறித்து உலகம் களிகூர்ந்தது. தேவனுக்கு முன்பாக தங்கள் இரு தயங்களைத் தாழ்த்துவதற்குப்பதிலாக, தேவன் தமது ஊழியக் காரன் மூலமாக பேசவே இல்லை என்பதைப்போல் தங்களுடைய கீழ்ப்படியாமையிலும் துன்மார்க்கத்திலும் அவர்கள் தொடர்ந் தார்கள்.PPTam 92.1

    ஆனால் புயலுக்கு நடுவிலே நிற்கிற மலையைப்போல் நோவா நின்றிருந்தான். பிரபலமான இகழ்ச்சியாலும் ஏளனத்தாலும் சூழப்பட்டிருந்தபோதும், தனது பரிசுத்தமான நேர்மையாலும் அசையாத விசுவாசத்தாலும் தன்னை இனம் பிரித்துக் காட்டினான். தமது ஊழியக்காரன் மூலமாக தேவனுடைய சத்தம் தொனித்ததால் அவனுடைய வார்த்தைகளில் ஒரு வல்லமை இருந்தது. மனித ஞானத்தை பொறுத்தமட்டில் இது கூடாத காரியம் என்று நிதானிக் கக்கூடிய சம்பவங்களைக் குறித்த அவனுடைய சத்தம் அந்தத் தலைமுறையினரின் காதுகளில் 120 வருடங்களாக பவித்திரமாக விழுந்து கொண்டிருந்தபோது, தேவனோடு அவன் கொண்டிருந்த இணைப்பு, நித்திய வல்லமை கொண்டவரின் பெலத்தில் அவனைப் பெலப்படுத்தினது.PPTam 92.2

    இயற்கையின் நியதிகள் நிலையாக நிறுத்தப்பட்டவைகள் என்று ஜலப்பிரளயத்துக்கு முன்னான உலகம் காரணப்படுத்திக் கொண்டிருந்தது. அடுத்தடுத்த காலங்கள் முறையாக வந்துகொண்டிருந்தன. இதற்கு முன்பு மழை பெய்ததே இல்லை. பூமி பனி யாலோ அல்லது மூடுபனியாலோ நீர் பாய்ச்சப்பட்டுக்கொண்டிருந்தது. ஆறுகள் தங்கள் எல்லையை ஒருபோதும் கடந்ததில்லை, மாறாக, தங்கள் நீரை பாதுகாப்பாக கடலில் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தன. நியமிக்கப்பட்ட கட்டளைகள் அவை தங்கள் கரையை மீறாதபடி தண்ணீரை தடுத்திருந்தது. இம்மட்டும் வா, மிஞ்சி வராதே (யோபு 38:11) என்று சொல்லி, அவைகளை தடுத்து வைத்திருந்தவரின் கரத்தை இந்தக் காரணப்படுத்துகிறவர்கள் உணரவில்லை .PPTam 93.1

    காலம் கடந்தபோது, இயற்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாததால், பயத்தினால் நடுங்கியிருந்த மனிதர்கள் தைரிய மடையத் துவங்கினார்கள் இப்போது சொல்வதைப்போலவே இயற்கை இயற்கையின் தேவனுக்கும் மேலானது என்றும், அவைகள் மிக உறுதியாக ஏற்படுத்தப்பட்டிருப்பதால், தேவன்கூட அவைகளை மாற்ற முடியாது என்றும் அவர்கள் காரணம் சொன் னார்கள். நோவாவின் செய்தி சரியானதாக இருக்குமென்றால், இயற்கை தன் முறையிலிருந்து மாறவேண்டும் என்று காரணப் படுத்தி, அந்த செய்தி வஞ்சகமான மிகப்பெரிய வஞ்சகமான ஒன்று என்று உலகத்தின் மனதிலே பதித்தார்கள். தேவனுடைய எச்சரிப் புக்கு, எச்சரிப்பு கொடுக்கப்படுவதற்கு முன் எவ்வாறு ஒரு அலட் சியத்தைக் காண்பித்தார்களோ, அதே அலட்சியத்தை வெளிக்காட்டி னார்கள். தங்களுடைய விழாக்களிலும் பெருந்திண்டியான விருந்துகளிலும் தொடர்ந்து, புசித்து குடித்து, நட்டு கட்டி, எதிர் காலத்தில் அடைவோம் என்று தாங்கள் நம்பியிருந்த நன்மைகளுக் கேற்ப திட்டங்களை தீட்டினார்கள். நித்தியமானவரைக் குறித்த எந்த பயமும் இல்லை என்று சாட்சி பகருவதற்கேதுவாக, தேவனுடைய கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் துன்மார்க் கத்தில் மிக அதிக தூரம் சென்றார்கள். நோவா சொன்னதில் ஏதா கிலும் உண்மை இருக்குமென்றால், புகழ்வாய்ந்த ஞானியான விவேகிகளும், மாபெரும் மனிதர்களும் அவைகளைப் புரிந்து கொண்டிருப்பர்கள் என்று உறுதியாகக் கூறிக்கொண்டார்கள்.PPTam 93.2

    ஜலப்பிரளயத்துக்கு முன்னான மக்கள் எச்சரிப்பை நம்பி, தங்கள் பொல்லாதகிரியைகளைக்குறித்து மனம் வருந்தியிருந்தால், பின் நாட்களில் நினிவேக்குச் செய்ததைப்போல் ஆண்டவர் தமது கோபத்திலிருந்து திரும்பியிருப்பார். ஆனால் அவர்களுடைய மனசாட்சிக்கு வந்த கண்டனங்களையும் தேவனுடைய தீர்க்கதரிசியின் எச்சரிப்புகளையும் பிடிவாதமாக தடுத்தினால், அந்த சந்தியினர் தங்கள் அக்கிரமத்தின் அளவை நிறைத்து, அழிவுக் கென்று முதிர்ந்தார்கள்.PPTam 93.3

    அவர்களுடைய கிருபையின் காலம் முடியவிருந்தது. நோவா தேவனிடமிருந்து பெற்ற வழி முறைகளை உண்மையாகப் பின்பற்றினான். ஆண்டவர் கற்பித்தப்படி பேழை ஒவ்வொரு பகுதியிலும் முடிவடைந்து, மனிதனுக்காகவும் மிருகங்களுக்காகவும் அதில் உணவும் சேகரித்து வைக்கப்பட்டது. இப்போது தேவனுடைய ஊழியக்காரன் தனது கடைசி முறையீட்டை மக்கள் முன் வைத்தான். அடைக்கலம் கிடைத்திருக்கும் போதே அதைப் பெற்றுக்கொள்ளும்படியாக, வார்த்தைகளால் விவரிக்கக்கூடாத பாரம் நிறைந்த வாஞ்சையில் அவன் அவர்களிடம் மன்றாடினான். மீண்டும் அவர்கள் அவனுடைய வார்த்தைகளை நிராகரித்து, பரியாசமும் வேடிக்கையுமான வார்த்தைகளை பேசினார்கள். சடு தியாக பரிகசித்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தின் மேல் ஒரு மௌனம் விழுந்தது. வெறிகொண்டதிலிருந்து மிகச் சாதுவான ஒவ்வொரு விதமான மிருகங்களும் மலையிலிருந்தும் காட்டிலிருந் தும் பேழையை நோக்கி அமைதியாக வந்து கொண்டிருந்தன. இரைகிற காற்றின் ஓசை கேட்டது. இதோ, எல்லா திசைகளி லிருந்தும் பறவைகள் கூட்டங்கூட்டமாக வந்தன. அவைகளின் எண்ணிக்கை வானத்தை இருட்டடிக்க, அவைகள் பூரணமான ஒழுங்கோடு பேழையின் உள்ளே சென்றன. மனிதர்கள் கீழ்ப் படியாமலிருந்தபோது, மிருகங்கள் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தன. பரிசுத்த தூதர்களால் நடத்தப்பட்டு, அவைகள் ஆணும் பெண்ணும் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக் குட்பட்டன . சுத்தமான மிருகங்கள் ஏழு ஏழாக நுழைந்தன. உலகம் வியப்போடு பார்த்தது. சிலர் பயத்தோடும் பார்த்தார்கள். இந்த விசித்தரமான சம்பவத்திற்கு காரணம் கொடுக்க வீணாகவே தத் துவ ஞானிகள் அழைக்கப்பட்டனர். அவர்களால் கற்பனை செய் யக்கூடாத இரகசியமாக அது இருந்தது. வெளிச்சத்தை விடாப் பிடியாக நிராகரிப்பதில் மனிதர் கடினப்பட்டிருந்ததால், இந்தக் காட்சியும் கூட தற்போதைய உந்துதலையே அவர்களில் உண்டு பண்ணியது. சூரியன் தனது மகிமையில் பிரகாசிப்பதையும், பூமி ஏறக்குறைய ஏதேனின் அழகில் மூடப்பட்டிருப்பதையும் சபிக்கப்பட்ட அந்த இனம் கண்டபோது, எழும்பின் பயத்தை தங்களுடைய மூர்க்கத்தனமான களிப்பினால் விரட்டியடித்தனர். தங்களுடைய கொடுமையின் செயல்களால் ஏற்கனவே எழுப் பப்பட்டிருந்த தேவனுடைய கோபத்தை தங்கள் மேல் வரவேற்றதைப்போல காட்சியளித்தார்கள்.PPTam 94.1

    தேவன் நோவாவிடம் : நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன் என்றார். நோவாவின் எச்சரிப்புகள் உலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தபோதிலும் அவ னுடைய செல்வாக்கும், உதாரணமும் அவனுடைய குடும்பத்துக்கு ஆசீர்வாதமாக இருந்தது. அவனுடைய விசுவாசத்திற்கும் உண் மைக்கும் பலனாக, அவனுடைய குடும்பத்தார் அனைவரையும் அவனோடுகூட தேவன் பாதுகாத்தார். பெற்றோர்களின் தெய்வ பக்திக்கு எப்படிப்பட்ட ஒரு ஊக்கமூட்டுதல் !PPTam 95.1

    குற்றமுள்ள இனத்திற்கான மன்றாட்டுகளை கிருபை நிறுத் தியது. வயலின் மிருகங்களும் ஆகாயத்தின் பறவைகளும் அடைக் கல இடத்திற்குள் பிரவேசித்தன. நோவாவும் அவனது குடும்பத் தாரும் பேழைக்குள் இருந்தனர். கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். கண்களைக் குருடாக்குமளவு பிரகாசமான மின்னலைப்போன்ற ஒரு ஒளி தோன்றி, வானத்திலிருந்து இறங் கினமின்னலைக் காட்டிலும் பிரகாசமான மகிமையின் மேகம் ஒன்று பேழையின் கதவின் முன் தங்கியது. பேழையின் உள்ளே இருக்கிற வர்களால் மூடக்கூடாதபடி இருந்த மாபெரும் கதவு காணக்கூடாத கரங்களால் அதன் இடத்திற்கு மெதுவாக கொண்டுவரப்பட்டது. நோவா உள்ளேயும், தேவனுடைய கிருபையை நிராகரித்தவர்கள் வெளியேயும் அடைக்கப்பட்டனர். தேவனுடைய முத்திரை அந்தக் கதவின் மேல் இருந்தது. தேவன் அதை மூடினார். தேவன்மாத்திரமே அதைத் திறக்க முடியும். இவ்வாறாகவே, கிறிஸ்து, தாம் வானத் தின் மேகங்கள் மேல் வருவதற்கு முன்பாக குற்றமுள்ள இனத்திற்கான பரிந்து பேசுதலை நிறுத்தும் போது, கிருபையின் கதவு அடைக் கப்படும். அதற்குப்பின் தெய்வீக கிருபை துன்மார்க்கரை கட்டுப் படுத்தாது. கிருபையை நிராகரித்தவர்கள் மேல் சாத்தான் முழு கட் டுப்பாடும் கொண்டிருப்பான். அவர்கள் தேவனுடைய மக்களை அழிக்க முயற்சிப்பார்கள். ஆனால் நோவா பேழைக்குள் அடைக் கப்பட்டதைப்போலவே, நீதிமான்கள் தெய்வீகவல்லமையினால் மறைக்கப்படுவார்கள். PPTam 95.2

    நோவாவும் அவனது குடும்பமும் பேழைக்குள் பிரவேசித்து ஏழு நாட்கள் வரையிலும் வரப்போகும் புயலைக் குறித்த எந்த அடையாளமும் காணப்படவில்லை. இந்தக் காலத்தில் அவர்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. அது, வெளியே இருந்த உலகத்துக்கு வெற்றியின் நேரமாக இருந்தது. வெளிப்படையான தாமதம் நோவாவின் செய்தி வஞ்சகமே என்றும், வெள்ளம் ஒரு போதும் வராது என்றும் அவர்கள் நம்பியிருந்ததை உறுதிப்படுத் தியது. பறவைகளும் மிருகங்களும் பேழைக்குள் நுழைந்ததும் தேவனுடைய தூதன் கதவை மூடினதுமான தாங்கள் கண்ட பவித்திரமான காட்சிகளை மீறி, தங்களுடைய விளையாட்டு களிலும் போட்டிகளிலும் தொடர்ந்து, தேவனுடைய வல்லமையின் குறிப்பிட்ட வெளிப்படுத்துதல்களான இந்த அடையாளங்களை யுங்கூட வேடிக்கையாக்கினார்கள். இதுவரை செய்யத் துணிந்திராத தைரியமான கொடுஞ்செயல்களோடு உள்ளே இருக்கிறவர்களை எள்ளி நகையாடி, கூட்டமாக பேழையைச் சுற்றிலும் கூடினார்கள்.PPTam 95.3

    ஆனால் எட்டாம் நாளிலே கார்மேகங்கள் வானத்தை நிரப் பியது. அதை இடியும் மின்னலும் தொடர்ந்தது. விரைவில் மழையின் பெருந்துளிகள் விழத்துவங்கியது. உலகம் இதுவரை அப்படி எதையும் கண்டதில்லை . மனிதரின் இருதயம் பயத்தால் கவ்வப்பட்டது. அனைவரும் இரகசியமாக நோவா சரிதானோ? உலகம் அழிவுக்கென்று குறிக்கப்பட்டதோ? என்று வினவிக்கொண்டார்கள். வானம் இன்னம் இருண்டு கொண்டே வந்தது. பெய்து கொண்டிருந்த மழை தீவிரமடைந்தது. மிருகங்கள் காட்டுத்த பயத்தினால் அலைந்தன. ஒவ்வாத அவைகளின் அழுகை தங்களுடைய முடிவையும் மனிதனுடைய முடிவையும் குறித்து புலம்பு வதைப்போன்று தோன்றியது. பின்னர், மகா ஆழத்தின் ஊற்றுக்கண் களெல்லாம் பிளந்தன ; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. பயங்கரமான நீர்வீழ்ச்சியைப் போல மேகங்களிலிருந்து தண்ணீர் வரு வதாகக் காணப்பட்டது. ஆறுகள் தங்கள் கரைகளை உடைத்து பள் ளத்தாக்குகளை மூழ்கடித்தது. சொல்ல முடியாத உந்துதலோடு பூமியிலிருந்து தண்ணீர் மேல் நோக்கி எழுந்து, மிகப்பெரிய பாறைகளை வானத்தில் நூற்றுக்கணக்கான அடி தூரம் வீசியது. இவைகள் கீழே விழுந்தபோது பூமியின் ஆழத்தில் புதையுண்டது.PPTam 96.1

    மக்கள் முதலாவது தங்கள் கைகளின் கிரியைகள் அழிவதைக் கண்டார்கள். அவர்களுடைய அற்புதமான கட்டங்களும் அவர் களுடைய சிலைகளை நிறுத்தியிருந்த அழகான தோட்டங்களும் தோப்புகளும் வானத்தின் மின்னலால் அழிக்கப்பட்டு, அவை களின் சிதைவுகள் வெகு தூரத்திற்கு வீசி எறியப்பட்டன. மனித பலி கொடுக்கப்பட்டிருந்த பீடங்கள் தகர்க்கப்பட்டு, அதை தொழுது கொண்டவர்களை ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையின் முன் நடுங்கவும், தங்களுடைய சீரழிவும் விக்கிரக ஆராதனையுமே தங்களுடைய அழிவைக் கொண்டுவந்திருக்கிறது என்று அறியவும் வைத்தது.PPTam 96.2

    புயலின் சீற்றம் அதிகரித்தபோது, மரங்களும் கட்டடங்களும் பாறைகளும் பூமியின் ஒவ்வொரு திசையிலும் எறியப்பட்டன. மனிதனுடைய மற்றும் மிருகங்களுடைய பயம் விவரிக்கக் கூடியதற்கு மிஞ்சினதாயிருந்தது. கடும் புயலின் இரைச்சலுக்கு மேலாக, தேவனுடைய அதிகாரத்தை உதறின் மக்களின் கதறல் கேட்கப்பட்டது. போராடின் இயற்கையின் மத்தியில் இருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருந்த சாத்தானுங்கூட தன் உயிருக்கு பயந் தான். அவன் மிகவல்லமையான இனத்தைக் கட்டுப்படுத்துவதில் மகிழ்ந்து, அவர்கள் தங்களுடைய அருவருப்புகளைச் செய்ய பிழைக்க வேண்டும் என்றும், பரலோகத்தின் அதிபதிக்கு எதிரான கலகத்தை தொடரவேண்டுமென்றும் விரும்பியிருந்தான். இப் போது அவன் தேவனுக்கு எதிராக சபித்து, பழிசொல்லி, அநீதியும் கொடுமையும் கொண்டவர் என்று அவரைக் குற்றப்படுத்தினான். சாத்தானைப்போலவே மக்களில் அநேகர் தேவனைத் தூஷித்தார்கள். அவர்களுக்கு முடிந்திருக்குமானால், வல்லமையின் ஆசனத் திலிருந்து அவரை பிய்த்துப்போட்டிருப்பார்கள். மற்றவர்கள் பயத்தினால் பரபரப்படைந்து, பேழையை நோக்கி கைகளை விரித்து நுழையும் அனுமதிக்காக மன்றாடினார்கள். ஆனால் அவர்கள் மன்றாட்டுகள் வீணாகவே இருந்தன. பரலோகத்திலே அரசா ளுகிற தேவன் ஒருவர் உண்டென்று அவர்களுடைய மனசாட்சி அவர்களுக்கு உணர்த்தியது. கடைசியாக அவரை உண்மையாக அழைத்தார்கள். ஆனால் அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடு தலுக்கு திறந்திருக்கவில்லை. அந்த பயங்கரமான மணி நேரத்திலே, தேவனுடைய பிரமாணங்களை மீறினதே அவர்களுக்கு அழிவைக் கொண்டுவந்தது என்கிறதைக் கண்டார்கள். என்றபோதும் தண்டனையின் பயத்தினால் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டார்களே ஒழிய, உண்மையான மன வருத்தத்தையோ, தீமையின் மேல் ஒரு அருவருப்பையோ அவர்கள் உணரவில்லை. ஒருவேளை நியாயத் தீர்ப்பு திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டிருக்குமானால், பரலோகத் திற்கு எதிராகவே மீண்டும் திரும்பியிருப்பார்கள். அப்படியே பூமி அக்கினியினால் அழிக்கப்படுவதற்கு முன் தேவனுடைய நியாயத் தீர்ப்புகள் அதன்மேல் விழும் போது மனந்திரும்பியிராதவர்கள் தங்களுடைய பாவம் எது என்பதை, எங்கே பாவம் செய்தோம் என்பதை அவருடைய பரிசுத்த பிரமாணங்களை தள்ளிவிட்டதே பாவம் என்பதை அறிவார்கள். என்றாலும் பழைய உலகத்துப் பாவிகளை விடவும் அதிக மனவருத்தம் அடையமாட்டார்கள்.PPTam 97.1

    சிலர் தங்கள் விரக்தியில் பேழையை உடைத்து நுழைய முயன் றார்கள். ஆனால் மிக உறுதியான அதன் அமைப்பு அவைகளைத் தாங்கி நின்றது. அலைமோதும் தண்ணீரால் அடித்துச் செல்லப்படும் வரைக்கும் அல்லது பாறைகளும் மரங்களும் மோதுவதினால் தங்கள் பிடிப்பு நெகிழும் வரைக்கும் சிலர் பேழையோடு ஒட்டிக்கொண்டிருந்தார்கள். இரக்கமற்ற காற்றுகளால் அடிக்கப்பட்டு, மாபெரும் அலைகளால் அலைகழிக்கப்பட்டபோது, பிரம்மாண்டமான பேழையின் ஒவ்வொரு இழையும் நடுங்கியது. உள்ளே இருந்த மிருகங்களின் கதறல்கள் அவைகளின் பயத்தையும் வலியையும் விவரித்தது. என்றாலும் போராடிக்கொண்டிருந்த இயற்கையின் மூலக்கூறுகளின் மத்தியிலே பாதுகாப்பாகப் பயணிப்பதை அது தொடர்ந்தது. பலத்தில் மிஞ்சிய தூதர்கள் அதைப் பாதுகாக்கும் படி பணிக்கப்பட்டிருந்தனர்.PPTam 98.1

    மாபெரும் புயலைக் கண்ட மிருகங்கள், மனிதர்களிடமிருந்து உதவி பெறலாம் என்று எதிர்பார்ப்பதைப்போல் அவர்களை நோக் கிப் பாய்ந்தன. பலங்கொண்ட மிருகங்கள் உறுதியான ஜீவனைக் கொண்டவைகள் என்றும், உயர்ந்து வரும் தண்ணீர்களுக்குத் தப்பும்படி அவைகள் மிக உயர்ந்த இடங்களுக்கு ஏறும் என்றும் அறிந்து, சில மக்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் அவைகள் மேல் கட்டிக்கொண்டார்கள், சிலர் மலைகள் மேலோ, குன்றுகள் மேலோ ஓங்கி உயர்ந்து நின்ற மரங்களோடே தங்களை கட்டினார்கள். ஆனால் அவைகள் வேரோடு சாய்ந்து தங்கள் மேலிருந்த உயிரினங்களின் பாரத்தினால் பொங்கி எழுந்த அலை களுக்குள் புரண்டு போனது. பாதுகாப்பை வாக்குப்பண்ணின் இடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கைவிடப்பட்டன. நீர் உயர உயர, மக்கள் மிக உயர்ந்த மலைகளுக்கு அடைக்கலம் தேடி ஓடினார்கள். அடித்துச் செல்லப்படும் வரை கால்வைக்கும் இடத்திற்காக பல வேளைகளில் மனிதனும் மிருகமும் ஒன்றாக போராடின.PPTam 98.2

    உயர்ந்த மலைச் சிகரங்களிலிருந்து மனிதர்கள் இரைகின்ற சமுத்திரத்தைக் கண்டார்கள். தேவனுடைய ஊழியக்காரனின் பவித்திரமான வார்த்தைகள் பரியாசமான நிந்தையான வார்த் தைகளாக அப்போது அவர்களுக்குத் தோன்றவில்லை. தாங்கள் தவறவிட்ட சந்தர்ப்பங்களுக்காக சபிக்கப்பட்ட அந்தப் பாவிகள் எவ்வளவாக ஏங்கினார்கள் ! கிருபையின் ஒருமணி நேரத்திற்காக, இரக்கத்தின் மற்றொரு சந்தர்ப்பத்திற்காக நோவாவின் உதடுகளிலிருந்து வரும் ஒரு அழைப்பிற்காக அவர்கள் எவ்வளவாக மன் றாடினார்கள். ஆனால் கிருபையின் இனிய குரல் அவர்கள் காது களில் இனிமேல் விழுவதற்கில்லை . நீதியைவிட எவ்வளவும் குறையாத அன்பும் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளும் பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரின. பழிதீர்த்த தண் ணீர்கள் கடைசி அடைக்கலத்தையும் அழிக்க, தேவனை அசட்டை செய்தவர்கள் இருண்ட ஆழங்களில் அழிந்து போனார்கள்.PPTam 98.3

    தேவனுடைய வார்த்தையினாலே ...... அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக் கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்து போகும் நாள் வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. 2 பேதுரு 3:57. மற்றுமொரு புயல் வருகிறது. பூமி தேவனுடைய கோபத் தினால் மீண்டும் அழிக்கப்படவிருக்கிறது. பாவமும் பாவிகளும் அழிக்கப்படுவார்கள்.PPTam 99.1

    ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்து மக்களின் மேல் பழி வாங்குதலைக் கொண்டுவந்த பாவங்கள் இன்றும் இருக்கின்றன. மனிதருடைய உள்ளத்திலிருந்து தேவபயம் விரட்டப்பட்டு, அவ ருடைய பிரமாணங்கள் இகழ்வாகவும் தனக்கு சம்பந்தமில்லாதது போலவும் நடத்தப்படுகிறது. அந்தத் தலைமுறையினரின் உலக ஜீவியம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிற தலைமுறையினருடைய உலக ஜீவியத்திற்கு இணையாக இருந்தது. ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக் கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும் (மத்தேயு 24:38, 39) என்று கிறிஸ்து கூறினார். புசித்ததற்கும் குடித்ததற்கும் ஜலப்பிரளயத்துக்கு முன் வாழ்ந்தவர்களை தேவன் ஆக்கினைக்குட்படுத்தவில்லை. அவர்களுடைய சரீர தேவைகளை சந்திக்கும்படி ஏராளமான நிலத்தின் விளைச்சலை அவர் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அந்த ஈவுகளை, அவைகளை கொடுத்தவருக்கு நன்றி தெரிவிக்காது எடுத்துக்கொண்டதிலும், கட்டுப்பாடின்றி உணவில் திளைத்து தங்களை கீழ்த்தரமாக்கிக்கொண்டதிலும் அவர்களுடைய பாவம் இருந்தது. திருமணம் செய்வது சட்டப்படியானதே. திருமணம் தேவ னுடைய ஒழுங்கில் இருந்தது. அவர் ஸ்தாபித்த முதல் நியமனங்களில் ஒன்றாக இருந்தது. இந்த ஏற்பாட்டிற்கு பரிசுத்தத்தையும் அழகையும் ஆடையாக்கி, இதைக்குறித்த விசேஷ வழிகாட்டு தல்களை அவர் கொடுத்திருந்தார். ஆனால் இந்த வழிகாட்டுதல்கள் மறக்கப்பட்டு, திருமணம் கெட்டுப்போய், உணர்ச்சிகளுக்கு ஊழி யம் செய்யும் ஒன்றாக மாற்றப்பட்டிருந்தது.PPTam 99.2

    அதேபோன்ற நிலைமை இன்றும் நிலவுகிறது. தன்னில் தானே சட்டமாயிருக்கிறவைகள் மிஞ்சிய அளவு செய்யப்படுகிறது. பசி கட்டுப்பாடின்றி திளைக்கப்படுகின்றது. தங்களை கிறிஸ்துவின் பின்னடியார்களாக அழைத்துக்கொள்ளுகிறவர்கள், தங்களுடைய பெயர்கள் சபை ஏடுகளில் மதிப்பான இடங்களில் இருக்கும்போதே, குடிகாரர்களோடு புசித்துக் குடிக்கிறார்கள். இச்சையடக்கமின்மை, சன்மார்க்க ஆவிக்குரிய வல்லமைகளை உணர்விழக்கச் செய்து கீழான உணர்ச்சிகளில் திளைப்பதற்கான வழியை ஆயத்தம் செய் கிறது. சிற்றின்பங்களை கட்டுப்படுத்தும் நிர்ப்பந்தத்தின்கீழ் இருப்பதை உணராது திரளானோர் இச்சைக்கு அடிமைகளாகிறார்கள். உணர்வுகளின் இன்பங்களுக்காக - இந்த உலகத்திற்காக, இந்த உலகத்திற்காக மாத்திரமே மனிதர்கள் வாழுகிறார்கள். ஆடம்பரத்திற்காகவும், தோற்றத்திற்காகவும் நேர்மை தியாகம் பண்ணப்படுகிறது. ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவர்கள், நீதியைப் புரட்டி ஏழைகளை ஒடுக்குகிறார்கள். அடிமைகளும் மனித ஆத்துமாக்களும் இன்னமும் வாங்கப்பட்டுவிற்கப்படுகிறது. உயர்ந்த இடத்திலும் தாழ்ந்த இடத்திலும் மோசடியும் பரிதானக் கொள்ளையும் கண்டிக்கப்படுவதில்லை. மனித நேயம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று தோன்றுமளவு கொலைகள் காரண மில்லாத இரக்கமற்ற கொலைக் குற்றங்கள் அச்சகங்களின் பதிவு களில் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட துன்மார்க்க மான இரக்கமற்ற குணங்கள் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டதால், அது ஒரு விமரிசனத்தைக் கொண்டு வருவதில்லை; ஆச்சரியத்தையும் உண்டாக்குவதில்லை. அடக்கிவைக்கப்பட்டிருந்த உணர்ச்சி மற்றும் ஒழுங்கின்மையின் தீ, கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கும் போது பூமியை ஆபத்துகளாலும் அழிவுகளாலும் நிரப்பும் என் பதன் குறிப்படையாளங்களே தேசங்களை ஊடுறுவிக்கொண்டிருக் கிற ஒழுங்கின்மையின் ஆவியும், உலகத்தின் பயத்தை அவ்வப் போது தூண்டுகின்ற அதன் விளைவுகளுமாம். பிரளயத்துக்கு முந் திமி உலகத்தைக் குறித்து ஆவியின் ஏவுதலால் கொடுக்கப்பட்டிருக்கிற காட்சி, இன்றைய நாகரீக சமுதாயம் எதை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறதோ, அந்த நிலையை மிக உண்மையாக எடுத்துக்காட்டுகிறது. இப்போதுங்கூட, இந்த நூற்றாண்டிலும், கிறிஸ்தவ நாடுகளிலேயே, பழைய உலகத்தின் பாவிகள் எதற்காக அழிக்கப்பட்டார்களோ, அதேவிதமான குற்றங்கள் தினமும் மோசமாகவும் பயங்கரமாகவும் செய்யப் படுகின்றன.PPTam 100.1

    மக்கள் மனந்திரும்புதலுக்கு நடத்தப்பட்டு அவ்வாறு பய முறுத்தப்பட்ட அழிவுக்கு தப்பிக்கும் படி உலகத்தை எச்சரிக்கும்படி யாக பிரளயத்துக்கு முன் தேவன் நோவாவை அனுப்பினார். கிறிஸ்து இரண்டாம் முறையாக தரிசனமாகும் காலம் நெருங்கும் போது, இந்த மாபெரும் சம்பவத்துக்கு ஆயத்தப்படும் படி உல கத்துக்கான ஒரு எச்சரிப்போடு ஆண்டவர் தமது ஊழியக்காரரை அனுப்புகிறார். திரளானவர்கள் தேவனுடைய பிரமாணங்களை மீறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர் இப்போது கிருபை யாக, அதனுடைய பரிசுத்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் படி அவர்களை அழைக்கிறார். பாவத்தை விட்டுவிடுவதின் மூலம் தேவனிடத்திற்கு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது. பாவத்தை விட்டுவிடுவதற்கு மிகப்பெரிய தியாகம் செய்யவேண்டியதிருக்கும் என்று அவர்கள் உணருகிறார்கள். தங்களுடைய வாழ்க்கை தேவ னுடைய சன்மார்க்க அரசாங்கத்தின் தூய்மையான கொள்கைக ளோடு இசைவாக இல்லாததினால், அவர்கள் அவருடைய எச்சரிப் புகளை ஏற்க மறுத்து அவருடைய பிரமாணத்தின் அதிகாரத்தை மறுதலிக்கிறார்கள்.PPTam 101.1

    பிரளயத்துக்கு முன்பு இருந்த மிக அதிக ஜனத்தொகையில் நோவாவின் வழியாக வந்த தேவனுடைய வார்த்தையை எட்டு ஆத்துமாக்கள் மாத்திரமே விசுவாசித்து கீழ்ப்படிந்திருந்தது. நூற்று இருபது வருடங்களாக நீதியைப் பிரசங்கித்தவன் வரப்போகும் அழிவைக் குறித்து உலகத்தை எச்சரித்தான். ஆனால் அவனுடைய செய்தி நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது. அதேபோல இப்போ தும் இருக்கும், கீழ்ப்படியாதவர்களை தண்டிக்க நியாயப்பிர மாணிக்கர் வரும் முன்பாக, மீறுகிறவர்கள் மனந்திரும்பி, தங்கள் விசுவாசத்திற்குத் திரும்பும் படியாக எச்சரிக்கப்படுகிறார்கள். ஆனால் அதிகமானோருக்கு இந்த எச்சரிப்புகள் வீணாகவே இருக் கும். கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சை களின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத் தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ் டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லு வார்கள் (2 பேதுரு 3:3, 4) என்று அப்போஸ்தலனான பேதுரு சொல் லுகிறான். வெளிப்படையாக பக்தியற்றிருக்கிறவர்களால் மாத்திர மல்ல, நம்முடைய தேசத்தில் மேடையேறிப் பிரசங்கிக்கிற அநேக ரிடமிருந்து இந்த வார்த்தைகள் மீண்டும் சொல்லப்படுகிறதை நாம் கேட்கிறதில்லையா? எச்சரிப்பாயிருக்கக் காரணம் எதுவுமில்லை என்று சொல்லுகிறார்கள். கிறிஸ்து வருவதற்கு முன்பாக இந்த உலகமும் மனந்திரும்ப வேண்டும், நீதி ஆயிரம் வருடங்கள் அரசாளவேண்டும், சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த வித மாகவே இருக்கிறது; இந்த எச்சரிப்பாளர்களிடமிருந்து வரும் எச் சரிப்புகளால் எவரும் அமைதி இழக்க வேண்டியதில்லை, சமாதா னம் சமாதானம் ! என்கிறார்கள். ஆனால் ஆயிரவருடத்தைக்குறித்த உபதேசம் கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலர்களும் போதித்த வைகளுடன் இசைவாக இல்லை . மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ (லூக்கா 18:8) என்ற கேள் வியை இயேசு கேட்டார். நோவாவின் காலத்தில் இருந்தது போல உலகத்தின் நிலையும் இருக்கும் என்று அவர் அறிவிக்கிறார். முடிவு நெருங்கும் போது அக்கிரமம் மிகுதியாவதை நாம் காணலாம் என்று பவுல் நம்மை எச்சரிக்கிறான் . ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள் 1தீமோ 4:1; கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும் (2 தீமோ. 3:1) என்று அப்போஸ்தலன் கூறுகிறான். தேவபக்தியின் வேஷத்தைத்தரித்திருக்கிறவர்களிடம் காணப்படப் போகிற திகைப்பூட்டும் பாவங்களின் வரிசையை அவன் கொடுக் கிறான்.PPTam 101.2

    தங்களுடைய கிருபையின் காலம் முடிந்து கொண்டிருந்த போது, ஜலப்பிரளயத்துக்கு முன்னான மக்கள் தங்களை உணர்ச்சி யூட்டுகிற கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் தங்களை கொடுத்திருந்தனர். கடைசி பவித்திரமான எச்சரிப்பினால் ஈர்க்கப்பட்டுவிடாமல் மக்களின் மனதை களியாட்டிலும் இன்பத் திலும் மூழ்கடிக்க செல்வாக்கும் வல்லமையும் கொண்டிருந்தவர்கள் தீவிரமாயிருந்தனர். அதே நிலை நம்முடைய நாட்களில் நடக்கிறதை நாம் காணவில்லையா? எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிருக் கிறது என்று தேவனுடைய ஊழியக்காரர்கள் செய்தி கொடுத்துக் கொண்டிருக்க உலகம் களியாட்டிலும் இன்பம் தேடுவதிலும் மூழ்கியிருக்கிறது. தேவனிடத்தில் அலட்சியம் காண்பித்து, வரப்போகும் அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றக்கூடிய சாத்தியங்களால் ஈர்க்கப்படாதபடி அவர்களைத் தடுக்கிற தொடர்ச்சியான களிப்பின் சுழற்சிகள் இருந்துகொண்டே இருக்கின்றன.PPTam 102.1

    நோவாவின் காலத்தில் தண்ணீரால் இந்த உலகம் அழிக்கப் படுவது நடக்கக்கூடாதகாரியம் என்று தத்துவஞானிகள் அறிவித் தனர். அதைப்போலவே இப்போதும் இந்த உலகம் அக்கினியால் அழிக்கப்பட முடியாது, அது இயற்கையின் நியதிகளோடு முரண்பட்டது என்று அறிவியல் சார்ந்த மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இயற்கையின் தேவனால், தமது சட்டங்களை ஏற்படுத்தி கட்டுப்படுத்துகிறவரால், தமது கரத்தின் கிரியைகளை தமது சொந்த நோக்கத்தை செயல்படுத்த உபயோகிக்க முடியும்.PPTam 103.1

    மாபெரும் ஞானிகள் தங்களுக்கு திருப்தியுண்டாக இந்த உல கம் தண்ணீரால் அழிக்கப்படுவது நடக்கக்கூடாத காரியம் என்று உறுதியாகக் கூறியபோது, மக்களின் பயம் அடக்கப்பட்டபோது, நோவாவின் தீர்க்கதரிசனத்தை அனைவரும் ஒரு ஏமாற்றாகக் கருதி, அவனை ஒரு வெறியனாகப் பார்த்தபோது, அப்போது, தேவனுடைய நேரம் வந்தது. மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல் லாம் பிளந்தன, வானத்தின் மதகுகளும் திறவுண்டன் . பரியாசக் காரர் ஜலப்பிரளயத்தில் மூழ்கடிக்கப்பட்டார்கள். பெருமையான அனைத்து தத்துவங்களுடனும், தங்களுடைய ஞானம் பைத்தியம் என்பதையும், நியதிகளைக் கொடுத்தவர் இயற்கையின் நியதிகளைக்காட்டிலும் மேன்மையானவர் என்பதையும், சர்வவல்லமை யுள்ளவருக்கு தமது நோக்கங்களை நிறைவேற்ற எதுவுமே தேவைப்படாது என்பதையும் மனிதர்கள் மிக தாமதமாகக் கண் டார்கள். நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும். லூக்கா 17:26, 30. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும், அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்று போம், பூதங்கள் வெந்து உருகிப் போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். 2பேதுரு 3:10. தத்துவங்களின் காரணங்கள் தேவனுடைய நியா யத்தீர்ப்புகளைக் குறித்த பயத்தை விரட்டிவிட்ட போது, நீண்டகால சமாதானத்தையும் செழிப்பையும் மதபோதகர்கள் முன் சுட்டிக் காட்டியபோது, உலகம் தனது தொழில் மற்றும் இன்பம், நடுதல் மற்றும் கட்டுதல், கொண்டாட்டங்கள் மற்றும் இன்பம் சேர்த்தல் ஆகிய சுழற்சிகளில் ஈடுபட்டு, தேவனுடைய எச்சரிப்புகளை புறக்கணித்து, அவரது தூதுவர்களை பரிகசிக்கும்போது, அப் போது சடுதியான அழிவு அவர்கள் மேல் வரும், அவர்கள் தப்பிப் போவதில்லை . 1தெச 5:3.PPTam 103.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents