Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    62 - தாவீது அபிஷேகம்பண்ணப்படுதல்

    தாலாட்டப்பட்டு, கிழக்கத்திய ஞானிகளால் தொழுதுகொள் ளப்பட்ட குழந்தை இயேசு பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன், மகாஇராஜாவின் நகரமான எருசலேமிற்கு சில மைல் தென்புறத்தில் ஈசாயின் குமாரனாகிய தாவீது பிறந்த பெத்லகேம் இருந்தது.PPTam 837.1

    இரட்சகர் வருவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பாக தாவீது தனது வாலிபத்தின் புத்துணர்ச்சியில் பெத்லகேமைச் சுற்றியிருந்த மலைகளில் மேய்ந்து கொண்டிருந்த தனது மந்தைகளை காவல் காத்திருந்தான். இந்த எளிய மேய்ப்பன் தானே இயற்றின் பாடல்களைப் பாட அவனுடைய வாலிப் குரலுக்கு அவனுடைய சுரமண்டலம் இனிமையான இசையை சே ர்த்திருந்தது. ஆண்டவர் தாவீதைத் தெரிந்து கொண்டு, பிற்காலங்களில் அவனிடம் ஒப்படைக்கும்படி திட்டமிடப்பட்டிருந்த வேலைக்காக மந்தைகளோடு இருந்த தனிமையான வாழ்க்கையில் அவனை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.PPTam 837.2

    இவ்விதம் தாழ்மையான மேய்ப்பனுடைய வாழ்க்கையின் இளைப்பாறுதலில் தாவீது வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனைக் குறித்து சாமுவேல் தீர்க்கதரிசியிடம் ஆண்டவர் பேசிக்கொண்டிருந்தார். இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின் சவுலுக்காக நீ எந்த மட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய், நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன், அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்து கொண்டேன் என்றார் .... நீ ஒரு காளையைக் கையோடே கொண்டு போய், கர்த்தருக்குப் பலியிட வந்தேன் என்று சொல்லி, ஈசாயைப் பலி விருந்துக்கு அழைப்பாயாக, அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன், நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம் பண்ணுவாயாக என்றார். கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மேய்ப்பர்.PPTam 837.3

    தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டு வந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். மூப்பர்கள் பலிக்கான வரவேற்பை ஏற்றுக்கொண்டனர். சாமுவேல் ஈசாயையும் அவன் குமாரர்களையுங்கூட அழைத்திருந்தான். பலிபீடம் அமைக்கப் பட்டு, பலி ஆயத்தமாயிருந்தது. மந்தையை காவலின்றி விடுவது பாதுகாப்பாயிராததினால் ஆடுகளை காவல் பண்ணும் படி விடப்பட்டிருந்த இளைய குமாரனாகிய தாவீதைத்தவிர ஈசாயின் வீட்டார் அனைவரும் வந்திருந்தனர்.PPTam 838.1

    பலி முடிவடைந்து பலிவிருந்தில் பங்கெடுக்கும் முன்பாக சாமுவேல் ஈசாயின் குமாரர்களுடைய தோற்றத்தை தீர்க்கதரிசனக் கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கினான். எலியாப் முதல் குமாரனாயிருந்து மற்றவர்களைக் காட்டிலும் உயரத்திலும் அழ கிலும் ஏறக்குறைய சவுலை ஒத்திருந்தான். அவனுடைய அழகான அமைப்பும் நேர்த்தியாக வளர்ச்சியடைந்திருந்த உருவமும் தீர்க்கதரிசியின் கவனத்தைக் கவர்ந்தது. பிரபுவைப்போன்ற தோற்றத்தை சாமுவேல் பார்த்தபோது, கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்று நினைத்து, அவனை அபிஷேகம் பண்ணுவதற்கான தெய்வீக ஒப்புதலுக்காகக் காத்திருந்தான். ஆனால் யெகோவா வெளித்தோற்றத்தை பார்த் திருக்கவில்லை. எலியாப் ஆண்டவருக்கு பயப்பட்டிருக்கவில்லை. அவன் சிங்காசனத்திற்கு அழைக்கப்பட்டிருப்பானானால் பெருமையான வற்புறுத்தும் அதிபதியாக இருந்திருப்பான். நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம், நான் இவனைப் புறக்கணித்தேன், மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். என்பது சாமுவேலுக்கான ஆண்டவருடைய வார்த்தையாக இருந்தது. எந்த வெளிப்புற அழகும் ஆத்துமாவை தேவனுக்கு பரிந்துரைக்க முடியாது. குணத்திலும் நடக்கையிலும் வெளிக்காட்டப்படுகிற ஞானமும் சி றப்பும் மனிதனுடைய உண்மையான அழகை விவரிக்கிறது. உள்ளே இருக்கும் இருதயத்தின் மதிப்பே சேனைகளின் தேவனால் அங்கீகரிக்கப்படுவதைத் தீர்மானிக்கிறது. நம்மையும் மற்றவர்களையும் நியாயந்தீர்க்கிறதில் இந்த சத்தியத்தை மிக ஆழமாக நாம் உணர வேண்டும். முகத்தின் அழகிற்கு அல்லது உருவத்தின் நேர்த்திக்குக் கொடுக்கப்படுகிற மதிப்பு எவ்வளவு வீணானது என்பதை சாமுவேலின் தவறிலிருந்து நாம் கற்கலாம். பரலோகத்திலிருந்து விசேஷ ஒளி இல்லாதபோது இருதயத்தின் இரகசியங்களை புரிந்து கொள்ளுவதற்கோ அல்லது தேவனுடைய ஆலோசனையை சிந்திக்கிறதற்கோ மனிதனுடைய ஞானம் எவ்வளவு தகுதியற்றது என்பதையும் நாம் காணலாம். அவருடைய சிருஷ்டிகளின் உறவிலிருக்கிற தேவனுடைய நினைவுகளும் வழிகளும் அழிந்து போகிற மனங்களுக்கு மிக உயரத்தில் இருக்கிறது. ஆனால் அவருடைய நன்மைப் பயக்கும் திட்டங்கள் மனிதனுடைய முறைகளினால் விரக்தியடையாது இருப்பதற்கேதுவாக தங்களுடைய சித்தத்தை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும் போது, எந்த இடத்தை நிரப்ப அவருடைய பிள்ளைகள் தகுதிப்படுத்தப்பட்டார்களோ அதே இடத்தை நிரப்ப கொண்டுவரப்படுவார்களென்றும், அவர்கள் கைகளில் கொடுக் கப்பட்டிருக்கிற வேலையை நிறைவேற்ற தகுதிப்படுத்தப் படுவார்களென்றும் நாம் நிச்சயமாக இருக்கலாம்.PPTam 838.2

    எலியாப் சாமுவேலின் பரிசோதனையிலிருந்து கடந்து போனான். அந்த ஆராதனையில் கலந்திருந்த ஆறு சகோதரர்களும் தீர்க்கதரிசியால் கவனிக்கப்படும் படி அடுத்தடுத்து கடந்து சென்றார்கள். ஆனால் அவர்களில் எவரையும் தாம் தெரிந்து கொண்டதாக ஆண்டவர் அடையாளம் கொடுக்கவில்லை. வேதனை நிறைந்த சந்தேகத்தோடு இந்த வாலிபர்களில் கடைசியானவனை சாமுவேல் பார்த்தான். தீர்க்கதரிசி குழம்பிப்போய் தடுமாறினான். ஈசாயிடம் : உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று விசாரித்தான். தகப்பன் : இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்று பதில் கொடுத்தான். அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்க மாட்டேன் என்று சொல்லி அவனை அழைப்பிக்க சாமுவேல் கட்டளையிட்டான்.PPTam 839.1

    தீர்க்கதரிசி பெத்லகேமிற்கு வந்து அவனை அழைக்கிறார் என்கிற தூதுவனின் எதிர்பாராத அழைப்பினால் தனிமையான மேய்ப்பன் திகைத்தான் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியும் நியாயாதிபதியுமானவர் ஏன் தன்னைப் பார்க்க விரும்பவேண்டும் என்று ஆச்சரியத்தோடு கேள்வி கேட்டான். எனினும் தாமதமின்றி அழைப்பிற்குக் கீழ்ப்படிந்தான். அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்தான். அழகாகவும் துணிச்சலாகவும் அடக்கமாகவுமிருந்த மேய்ப்பனை சாமுவேல் பிரியத்தோடு பார்த்தபோது, ஆண்டவருடைய குரல். இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம் பண்ணு என்று தீர்க்கதரிசியிடம் பேசியது. மேய்ப்பன் என்னும் தாழ்மையான வேலையில் தாவீது தன்னை தைரியமுள்ளவனாகவும் விசுவாசமுள்ளவனாகவும் நிரூபித்திருந்தான். இப்போது தமது ஜனத்தின் தளபதியாயிருக் கும்படி தேவன் அவனைத் தெரிந்தெடுத்திருந்தார். அப்பொழுது சாமுவேல் . தைலக் கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம் பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர்தாவீதின் மேல் வந்து இறங்கியிருந்தார்; தீர்க்கதரிசி இப்போது அவனுக்கு நியமிக்கப்பட்டிருந்த வேலையை முடித்திருந்து விடுவிக்கப்பட்ட மனதோடு ராமாவிற்குத் திரும்பினான்.PPTam 840.1

    சாமுவேல் ஈசாயின் குடும்பத்திற்குக்கூட தான் வந்ததின் காரணத்தை அறிவிக்கவில்லை. தாவீதை அபிஷேகம் செய்த சடங்கும் இரகசியமாகச் செய்யப்பட்டது. அது அந்த வாலிபனுக் காகக் காத்திருந்த உயர்ந்த எதிர்காலத்தின் அறிவிப்பாயிருந்து, வரும் வருடங்களின் வெவ்வேறு அனுபவங்கள் மற்றும் ஆபத்துக்களுக்கு மத்தியில் அவனுடைய வாழ்க்கையின் வழியாக நிறை வேற்றப்படவிருந்த தேவனுடைய நோக்கத்திற்கு உண்மையாயிருக்க அவனை ஏவும்.PPTam 840.2

    தாவீதின் மேல் வழங்கப்பட்ட மாபெரும் கனம் அவனை இறுமாப்படைய நடத்தவில்லை. ஆக்கிரமிக்க வேண்டிய உயர்ந்த தகுதி இருந்திருந்தும் அவன் அமைதியாக தன்னுடைய வேலையில் தொடர்ந்து ஆண்டவருடைய திட்டம் அவருடைய சொந்த நேரத்திலும் வழியிலும் நிவிர்த்தியாகும் படியாக காத்திருப்பதில் மனநிறைவாயிருந்தான். அபிஷேகம் பண்ணப்படுவதற்கு முன் இருந்ததைப்போலவே தாழ்மையோடும் அடக்கத்தோடும் இந்த மேய்ப்பன் குன்றுகளுக்குத் திரும்பி, எப்போதும் செய்ததைப் போலவே அன்பாகத் தன்னுடைய மந்தைகளை கண்காணித்து பாதுகாத்தான். எனினும் புதிய ஏவுதலோடு தன்னுடைய பாடல்களை இயற்றி தன் சுரமண்டலத்திலும் வாசித்தான். அவன் முன்பாக செழிப்பானதும் விதவிதமான அழகும் கொண்ட நிலப்பரப்பு இருந்தது. திராட்சச்செடிகள் கொத்துக் கொத்தான கனிகளோடு சூரிய ஒளியால் பிரகாசித்தது. காட்டு மரங்கள் அவைகளின் பசுமையோடு காற்றில் அசைந்தன . தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல தன் பாதையில் ஓட மனமகிழ்ச்சியாயிருந்த சூரியன் தன் வெளிச்சத்தினால் வானங்களை பிரகாசிப்பிக்கிறதை அவன் கண்டான். குன்றுகளின் பாறையான சிகரங்கள் வானம் வரையிலும் எட்டின. வெகு தூரத்தில் மோவாபின் மலைச்சுவர்களின் வறண்ட சிகரங்கள் எழுந்திருந்தன. இவை அனைத்திற்கும் மேல் படர்ந்திருந்த வானத்தின் இளநீலம் பரவியிருந்தது. அதற்கும் அப்பால் தேவனிருந்தார். அவனால் அவரைப் பார்க்க முடியாவிடினும் அவருடைய கிரியைகள் அவருடைய துதியால் நிறைந்திருந்தன. பகலின் வெளிச்சமும், மின்னிய காடும் மலைகளும், பசும்புல் நிலமும் அருவிகளும் நன்மையும் பூரணமுமான ஒவ்வொரு வரத்தையும் கொடுக்கிற சோதிகளின் பிதாவைக் காண மனதை எடுத்துச் சென்றது. அவனுடைய சிருஷ்டிகரின் குணத்தையும் மாட்சிமையையுங் குறித்த அனுதின் வெளிப்பாடுகள் இளம் கவிஞனின் மனதை துதியினாலும் களிப்பினாலும் நிரப்பியது. தேவனையும் அவருடைய கிரியைகளையும் சிந்தித்ததில் தாவீதின் மன மற்றும் இருதய திறன்கள் அவனுடைய வருங்கால வாழ்க்கையின் வேலைக்காக முன்னேற்றமடைந்து அவனைப் பலப்படுத்திக்கொண்டிருந்தது. அவன் அனுதினமும் தேவனோடு நெருங்கின் தோழமைக்குள் வந்துகொண்டிருந்தான். அவனுடைய பாடல்களை ஏவவும் அவனுடைய சுரமண்டலத்தின் இசையை எழுப்பவும் புதிய ஆய்வுப் பொருட்களுக்காக அவனுடைய மனம் தொடர்ச்சியாக புதிய ஆழங்களைத் துளைத்துக்கொண்டிருந்தது. அவனுடைய குரலின் இனிமை காற்றில் ஊற்றப்பட்டு, பரலோகத்திலிருக்கிற தூதர்களின் பாடல் களிப்பிற்கு பதில் தருவதைப்போல் மலைகளிலிருந்து எதிரொலித்தது.PPTam 840.3

    தனிமையான மலைகளில் அந்த வருடங்களின் உழைப்பிற்கும் அலைச்சலுக்கும் வந்த பலன்களை யார் அளக்கக்கூடும்? இயற்கையோடும் தேவனோடும் கொண்ட தோழமை, மந்தைகளின் மேலிருந்த கவனம், ஆபத்துக்களும் விடுதலைகளும், துக்கங்களும் மகிழ்ச்சிகளும், அவனுடைய தாழ்மையான வாழ்க்கையும் தாவீதின் குணத்தை வார்ப்பித்து அவனுடைய எதிர்கால வாழ்க்கைக்கு செல்வாக்குக் கொடுப்பதற்காக மாத்திரமல்ல, இஸ்ரவேலின் இனிய பாடகனின் வழியாக வரவிருக்கும் அனைத்து யுகங்களிலும் தேவனுடைய மக்களின் மனங்களில் அன்பையும் விசுவாசத்தையும் தூண்டி, யாருக்குள் அனைத்து சிருஷ்டிகளும் ஜீவித்திருக்கிறதோ, அவருடைய நித்தியமான அன்பின் இருதயத்திற்அவர்களை நெருக்கமாகக் கொண்டு வருவதற்குமாக இருந்தது, தாவீது அவனுடைய ஆண்மையின் அழகிலும் பலத்திலும் பூமியின் உன்னதமானவர்களோடு உயர்ந்த இடத்தை எடுத்துக்கொள்ள தன்னை ஆயத்தப்பட்டுக்கொண்டிருந் தான். தேவனிடமிருந்த வந்த தெய்வீக ஈவுகளான அவனுடைய திறமைகள், அவைகளைக் கொடுத்த தெய்வீக நபரின் மகிமையை உயர்த்தும்படியாக உபயோகிக்கப்பட்டன. சிந்தித்து தியானிக்க அவனுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் அவனை தேவனுக்கும் தூதர்களுக்கும் பிரியமானவனாக்கின் அந்த ஞானத்திலும் பக்தியிலும் அவனைச் செழிப்பாக்கின . அவனுடைய சிருஷ்டிகரின் பரிபூரணத்தை அவன் சிந்தித்தபோது தேவனைக் குறித்த தெளிவான எண்ணங்கள் அவன் ஆத்துமாவின் முன் திறந்தன. மறைவாயிருந்த ஆய்வுப் பொருட்கள் பிரகாசிக்கப்பட்டன. கடினமானவைகள் எளிமையாக்கப்பட்டன. குழப்பங்கள் இசை வாக்கப்பட்டன. புதிய வெளிச்சத்தின் ஒவ்வொரு கதிரும் புதிய மகிழ்ச்சியையும் அர்ப்பணிப்பின் இனிமையான பாடல்களையும் தேவனுக்கும் மீட்பருக்கும் மகிமையாகக் கொண்டு வந்தது. அவனை அசைத்திருந்த அன்பு, அவனை சூழ்ந்து கொண்ட வருத்தம், அவனைச் சந்தித்த வெற்றிகள் அனைத்தும் சுறுசு றுப்பான அவன் சிந்தைக்கு ஆய்வுப்பொருட்களாயிருந்தன. தனது வாழ்க்கையின் அனைத்து ஏற்பாடுகளிலும் தேவனுடைய அன்பை கண்டபோது அவனுடைய இருதயம் மேலும் அதிக ஊக்கமான துதியோடும் நன்றியோடும் துடிக்க, அவனுடைய குரல் இனிமையான இசையில் ஒலிக்க, அவனுடைய சுரமண்டலம் பெருமகிழ்ச்சியில் இணைந்தது. அந்த வாலிபன் பலத்திலிருந்து பலத்திற்கும், அறிவிலிருந்து அறிவிற்கும் முன்னேறினான். தேவனுடைய ஆவியானவர் அவன் மேலிருந்தார்.PPTam 841.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents