Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    63 - தாவீதும் கோலியாத்தும்

    தேவனால் தான் நிராகரிக்கப்பட்டதையும், தீர்க்கதரிசியால் தனக்குக் கூறப்பட்ட கண்டன வார்த்தைகளின் பலத்தையும் சவுல் இராஜா உணர்ந்தபோது, கசப்பான கல்கத்தாலும் விரக்தியாலும் நிரப்பப்பட்டான். இராஜாவின் பெருமையான தலையை பணியவைத்தது மெய்யான மனந்திரும்புதல் அல்ல. தனது பாவத்தின் காயப்படுத்தும் குணத்தைக்குறித்த தெளிவான அறிவு அவனுக்கு இல்லாதிருந்தது. தன்னுடைய வாழ்க்கையை புதுப்பிக்க அவன் எழும்பவில்லை. மாறாக, இஸ்ரவேலின் சிங்காச னத்திலிருந்து தன்னை அகற்றி தொடர்ந்து அரசனாகும் தகுதியை தன்னுடைய சந்ததியிலிருந்தும் எடுத்துப்போட்டது தேவனுடைய அநியாயம் என்ற அவனுடைய நினைவை அடைகாத்தான். அவனுடைய வீட்டின் மேல் கொண்டுவரப்பட்டிருந்த அழிவின் எதிர்பார்ப்பினால் எப்போதும் அவன் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தான். அவனுடைய சத்துருக்களை எதிர்கொண்டதில் அவன் காண்பித்த வீரம், கீழ்ப்படியாத அவனுடைய பாவத்தை ஈடு செய்யவேண்டும் என்று நினைத்தான். தேவனுடைய கடிந்து கொள்ளுதலை தாழ்மையோடு அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, சிந்திக்கும் திறனையே இழந்துவிடும் எல்லைக்குப் போகும் வரையிலும் அவனுடைய அகந்தையான ஆவி விரக்தியடைந்தது. இனிமையான இசைக்கருவியின் குணமாக்கும் குறிப்புகள் கலங்கிப்போன அவனுடைய ஆவியை அமைதிப்படுத்தும் என்ற நம்பிக்கையில், திறமையான இசைக்கலைஞனின் சேவையைத் தேடும் படியாக அவனுடைய ஆலோசகர்கள் அவனை அறிவுறுத்தினர். தேவனுடைய ஏற்பாட்டின்படி சுரமண்டலத்தை திறமையாக வாசிக்கக்கூடிய தாவீது அரசன் முன்பு கொண்டு வரப்பட்டான். உயர்ந்த பரலோகத்திலிருந்து ஏவப்பட்ட அவ னுடைய இசை, விரும்பிய பலனைக் கொண்டிருந்தது. சவுலின் மனதில் தங்கியிருந்து அடைகாக்கப்பட்டிருந்த துக்கமான இருண்டமேகம் துரத்தப்பட்டது.PPTam 843.1

    தாவீதின் ஊழியம் சவுலின் அவையில் தேவைப்பட்டிராத போது அவன் குன்றுகளின் நடுவிலிருந்த தன்னுடைய மந்தை களுக்குத் திரும்பி, தன்னுடைய ஆவி மற்றும் நடத்தையின் எளிமையை பராமரிப்பதில் தொடர்ந்தான். அசுத்த ஆவி இராஜாவை விட்டுப் போகும் வரையிலும் கலங்கியிருந்த அவன் மனதை ஆற்றும்படி அவசியப்பட்ட போதெல்லாம் திரும்பவும் இராஜாவின் முன்பு அழைக்கப்பட்டான். தாவீதிலும் அவனுடைய இசையிலும் சவுல் மகிழ்ச்சியை வெளிக்காட்டியிருந்தபோதும், அந்த வாலிப மேய்ப்பன் அரசனின் வீட்டிலிருந்து ஒரு விடுதலையின் உணர்வோடும் மகிழ்ச்சியோடும் மேய்ச்சலின் வயலுக்கும் மலைகளுக்கும் திரும்பிச் சென்றான்.PPTam 844.1

    தாவீது தேவ கிருபையிலும் மனித தயவிலும் வளர்ந்து கொண்டிருந்தான். அவன் ஆண்டவருடைய வழியில் போதிக்கப்பட்டிருந்து இதற்கு முன் ஒருபோதும் இல்லாத அளவு தேவனுடைய சித்தத்தை முழுமையாகச் செய்ய தன்னுடைய இருதயத்தைத் திருப்பினான். அவனுடைய சிந்தனைக்குப் புதிய ஆய்வுப் பொருட்கள் இருந்தன. அவன் இராஜாவின் மன்றத்திலிருந்து, அரசாங்கத்தின் பொறுப்புகளைக் கண்டிருந்தான். சவுலின் ஆத்துமாவை கலக்கியிருந்த சில சோதனைகளை அவன் கண்டுபிடித்திருந்து, இஸ்ரவேலின் முதல் இராஜாவினுடைய குணத்திலும் நடவடிக்கையிலுமிருந்த சில இரகசியங்களுக்குள்ளும் நுழைந்திருந்தான். அரசாங்கத்தின் மகிமை துக்கத்தின் இருண்ட மேகத்தால் நிழலிடப்பட்டிருந்ததைக் கண்டிருந்து, சவுலின் வீட்டார் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு வெகுதூரத்தில் இருந்தனர் என்று அறிந்தான். இந்தக் காரியங்கள் அனைத்தும் இஸ்ரவேலின் மேல் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த அவனுக்கு கலங்கின சிந்தைகளையே கொண்டுவந்தன. எனினும் ஆழ்ந்த தியானத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்து எதிர்பார்ப்புகளின் நினைவினால் அலைகழிக்கப்பட்ட போது, அவன் தன்னுடைய சுரமண்டலத்திற்குத் திரும்பி ஒவ்வொரு நன்மையையும் துவக்குகிறவரிடம் தன்னுடைய மனதை உயர்த்தின் பாடல்களைக் கொண்டுவந்தான். எதிர்காலத்தின் எல்லையை நிழலிட்டதாகத் தோன்றின் இருண்ட மேகங்கள் மறைந்து போயின.PPTam 844.2

    தேவன் தாவீதுக்கு நம்பிக்கையின் பாடங்களைப் போதித்துக் கொண்டிருந்தார். மோசே அவனுடைய வேலைக்குப் பயிற்றுவிக் கபட்டதைப் போல், தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தை வழிநடத்துகிறவனாக ஈசாயின் குமாரனை ஆண்டவர் பொருத் திக்கொண்டிருந்தார். பெரிய மேய்ப்பன் அவருடைய மேய்ச்சலின் ஆடுகள் மேல் கொண்டிருக்கும் கவனத்தை மந்தைகளைப் பாதுகாத்திருந்ததால் அவன் புரிந்து கொண்டு வந்தான்.PPTam 845.1

    தாவீது தன்னுடைய மந்தைகளோடு அலைந்திருந்த தனிமையான மலைகளும் காட்டர்ந்த இடுக்குகளும் இரை கவ்வும் மிருகங்கள் பதுங்கின் இடங்களாக இருந்தன . யோர்தானின் காடுகளிலிருந்து சிங்கமும் அல்லது மலைகளுக்கிடையே இருந்த குகைகளிலிருந்து கரடியும் பசியோடும் மூர்க்கத்தோடும் மந்தைகளைத் தாக்கும்படி அடிக்கடி வந்தது. தாவீதின் காலத்திலிருந்த வழக்கத்தின்படி அவன் தன்னுடைய கவணையும் மேய்ப்பனின் கோலையுமே ஆயுதமாக வைத்திருந்தான். எனினும் தன்னுடைய பொறுப்பில் இருந்ததைப் பாதுகாப்பதில் தன்னுடைய பலத்திற்கும் தைரியத்திற்கும் அவன் ஏற்கனவே அத்தாட்சி கொடுத்திருந்தான். பின்னதாக இந்த எதிர்பாராத சம்பவங்களை விவரித்தபோது : ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்து போய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன், அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன் (1 சாமு. 17:34, 35) என்று கூறினான். இந்தக் காரியங்களில் தாவீது பெற்ற அனுபவம் அவனுடைய இருதயத்தை சோதித்து, அவனில் தைரியத்தையும் மனோபலத்தையும் விசுவாசத்தையும் முன்னேற்றமடையச் செய்தது,PPTam 845.2

    சவுலின் அரண்மனைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பாகவே தைரியமான செயல்களால் தாவீது தன்னை அடையாளப்படுத்தியிருந்தான். அரசனின் கவனத்திற்கு அவனை அழைத்து வந்த அதிகாரி அவனைக் குறித்து : அவன் பராக்கிரமசாலி, யுத்த வீரன், காரிய சமர்த்தன், கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்று அறிவித்தான்.PPTam 845.3

    பெலிஸ்தருக்கு எதிராக இஸ்ரவேலர்களால் யுத்தம் அறிவிக்கப்பட்டபோது ஈசாயின் மூன்று குமாரர்கள் சவுலின் படையில் சேர்ந்தனர். ஆனால் தாவீது வீட்டில் தங்கியிருந்தான். எனினும் சில காலம் கழித்து சவுலின் பாளயத்தைப் பார்க்கச் சென்றான். தகப்பனுடைய கட்டளையின்படி அவனுடைய மூத்த சகோதரர்களுக்கு ஒரு செய்தியையும் பரிசையும் கொண்டு சென்று, அவர்கள் இன்னமும் பாதுகாப்பிலும் சுகத்திலும் இருக்கிறார்களா என்று அறிந்துவரவேண்டும். ஆனால் இந்த வாலிபமேய்ப்பனிடம் ஈசாய்க்குத் தெரிந்திராத ஒரு உயர்ந்த ஊழியம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலின் படைகள் ஆபத்திலிருந்தன. தனது ஜனத்தைக் காப்பாற்றும்படியாக தாவீது ஒரு தூதனால் நடத்தப் பட்டான்.PPTam 846.1

    தாவீது படையை நெருங்கின் போது ஏதோ ஒரு சம்பவம் துவங்கப் போவதைப்போன்ற குழப்பத்தின் சத்தத்தைக் கேட்டான். சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்காக ஆர்ப்பரித்தார்கள். இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் படைகளுக்கு எதிரெதிராக அணிவகுத்து நின்றனர். தாவீது சேனைக்குள் ஓடி தன் சகோதரரிடம் வந்து அவர்களை வாழ்த்தினான். அவன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, பெலிஸ்தரில் முதன்மையான கோலியாத் முன்வந்து அவமதிப்பான வார்த்தைகளில் இஸ்ரவேலரை நிந்தித்து, தனிப்பட்ட சண்டையில் அவனைச் சந்திக்கக்கூடிய ஒரு மனிதனை அவர்களில் ஆயத்தப்படுத்தும்படி சவால் விட்டான். அவன் தன்னுடைய சவாலை திரும்பவும் கூறினான். அனைத்து இஸ்ரவேலரும் பயத்தினால் நிரம்பின்தை தாவீது கண்டான். நாளுக்குநாள் பெலிஸ்தனுடைய நிந்தனை அவர்கள் மேல் வீசப்பட்டும், பெருமை பாராட்டுகிறவனை மௌனமாக்க அது ஒரு முதன்மையானவனை எழுப்பாததை அறிந்த போது அவனுடைய ஆவி அவனுக்குள் தூண்டப்பட்டது. ஜீவனுள்ள தேவனுடைய கனத்தையும் அவருடைய ஜனத்தின் மதிப்பையும் பாதுகாக்க அவன் வைராக்கியத்தினால் உந்தப்பட்டான்.PPTam 846.2

    இஸ்ரவேலின் படைகள் மன சோர்வடைந்திருந்தன. அவர்களுடைய தைரியம் துவண்டிருந்தது. அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி : வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான் என்று சொல்லிக்கொண்டார்கள். அவமானத்திலும் கோபத்திலும் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தன் எம்மாத்திரம். என்று தாவீது அறிவித்தான்.PPTam 846.3

    தாவீதின் மூத்த சகோதரனான எலியாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது அந்த இளமனிதனின் ஆத்துமாவைத் தூண்டிவிட்ட உணர்வுகளை நன்கு அறிந்தான். மேய்ப்பனாக இருந்தும் தாவீது அபூர்வமாகக் காணப்படுகிற துணிவையும் தைரியத்தையும் பலத்தையும் வெளிக்காட்டியிருந்தான். தங்களுடைய தகப்பன் வீட்டிற்கு சாமுவேல் இரகசியமாக வந்ததும் மௌனமாக திரும்பிச் சென்றதும் சகோதரர்களின் மனங்களில் அவனுடைய வருகையின் உண்மையான நோக்கத்தைக் குறித்த சந்தேகங்களை எழுப்பியிருந்தது. தங்களுக்கு மேலாக தாவீது கனப்படுத்தப்பட்டதைக் கண்டபோது அவர்களுடைய பொறாமை எழுந்தது. அவனுடைய உண்மைக்கும் சகோதர மென்மைக்கும் காட்ட வேண்டிய அன்பையும் கனத்தையும் அவர்கள் காட்டவில்லை. வெறுமனே ஒரு வாலிப மேய்ப்பனாக அவர்கள் அவனைக் கண்டனர். இப்போது அவன் கேட்ட கேள்வி பெலிஸ்திய இராட்சதனை மௌனமாக்க எந்த முயற்சியையும் எடுத்திராத தன்னுடைய கோழைத்தனத்திற்கான கடிந்து கொள்ளுதலாக எலியாபால் எடுத்துக்கொள்ளப்பட்டது. மூத்த சகோதரன் : நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும் உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்று கோபமாகக் கூறினான். தாவீதின் வார்த்தைகள் : நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று மரியாதையும் தீர்மானமுமான வார்த்தைகளாக இருந்தன.PPTam 847.1

    தாவீதின் வார்த்தைகள் இராஜாவிடம் திரும்பக் கூறப்பட்ட அவன் தனக்கு முன் அந்த வாலிபனை அழைத்தான். இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்கவேண்டியதில்லை, உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம் பண்ணுவேன் என்று அவன் சொன்ன போது, சவுல் ஆச்சரியத்தோடு மேய்ப்பனின் வார்த்தைகளைக் கவனித்தான். தாவீதை அவனுடைய நோக்கத்திலிருந்து திருப்ப சவுல் முயற்சித்தான். ஆனால் அந்த வாலிபனை அசைக்க முடியாது. தன்னுடைய தகப்பனின் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது கிடைத்த அனுபவத்தோடு தொடர்புபடுத்தி அவன் எளிமையான அடக்க மான விதத்தில் பதில் கொடுத்தான். பின்னர் என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ் தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான், அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து : போ . கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்று கூறினான்.PPTam 847.2

    பெலிஸ்திய இராட்சதனின் அகந்தையான சவாலுக்கு முன் பாக நாற்பது நாட்கள் இஸ்ரவேலின் சேனை நடுங்கியிருந்தது, ஆறு முழமும் ஒரு அங்குலமும் இருந்த அவனுடைய பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தபோது அவர்களுடைய இருதயங்கள் அவர்களுக்குள் துவண்டது. அவன் தலையின் மீது வெண்கல தலைசீரா இருந்தது; ஐயாயிரம் சேக்கல் நிறைகொண்ட ஒரு போர்க் கவசத்தைத் தரித்துக்கொண்டிருந்தான். அவன் கால்களின் மேல் வெண்கல சல்லடைக்கவசம் இருந்தது. அவனுடைய போர்க்கவசம் வெண்கல தகடுகளால் செய்யப்பட்டிருந்தது. அத்தகடுகள் மீனின் செதில்களைப்போன்று ஒன்றின் மீது ஒன்று வைக்கப்பட்டு எந்த ஏவுகணையும் அம்பும் துளைக்கக் கூடாதபடி நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது. தன் பின்புறம் அந்த இராட்சதன் ஒரு மிகப்பெரிய ஈட்டியை வைத்திருந்தான். அதுவும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படை மரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும், பரிசை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.PPTam 848.1

    நீங்கள் யுத்தத்துக்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தான் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும். அவன் என்னோடு யுத்தம் பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம், நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து, எங்களைச் சேவிக்க வேண்டும் என்று சொல்லி, பின்னும் அந்தப் பெலிஸ்தன். நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம் பண்ண ஒருவனை விடுங்கள் என்று காலையும் மாலையும் உரத்தக் குரலில் சொன்னவனாக இஸ்ரவேலின் பாளயத்தை கோலியாத் நெருங்கியிருந்தான்.PPTam 848.2

    கோலியாத்தின் சவாலை ஏற்றுக்கொள்ள சவுல் தாவீதுக்கு அனுமதி கொடுத்திருந்தபோதும், தாவீது தைரியமாக மேற்கொண்டிருந்ததில் வெற்றியடைவான் என்பதில் இராஜா நம்பிக்கையற்றிருந்தான். வாலிபனுக்கு இராஜாவின் சொந்த ஆயுதங்களைத் தரித்துவிடும் படியான கட்டளை கொடுக்கப்பட்டது. கனமான வெண்கல தலைசீரா அவன் தலையின் மேல் வைக்கப்பட்டு, ஒரு போர்க்கவசமும் அணிவிக்கப்பட்டது. அரசனின் பட்டயம் வஸ்திரங்கள் மேல் கட்டப்பட்டிருந்தது. இவ்விதம் ஆயுதந்தரிக்கப் பட, அவன் தன்னுடைய வேலையைத் துவங்கினான். ஆனால் வெகு விரைவிலேயே பின்னிட்டான். எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருந்த மனங்களில் வந்த முதல் எண்ணம். இணையில்லாத போட்டியில் அந்த எதிரியை சந்திப்பதில் தன்னுடைய வாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்கக்கூடாதென்று தாவீது தீர்மானித்துவிட்டான் என்பதாகவே இருந்தது. ஆனால் அந்ததைரியமானவாலிப மனதின் நினைவில் அது வரவேயில்லை அவன் சவுலிடம் திரும்பி வந்தபோது : நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று கூறி, கனமான கவசங்களை அகற்றும் படியான அனுமதிக்காக மன்றாடினான். இராஜாவின் ஆயுதங்களை அப்புறம் வைத்தவனாக, அதற்குப் பதிலாக மேய்ப்பனின் அடைப்பப் பையோடும் எளிமையான கவணோடும் தன் தடியை மாத்திரம் தன் கையிலெடுத்துக்கொண்டான். ஓடையிலிருந்து ஐந்து கூழாங்கல்லுகளை எடுத்து, தன் பையில் வைத்துக்கொண்டான். பின்னர் கையில் கவணை பிடித்தவனாக பெலிஸ்தனை நெருங் கினான். இஸ்ரவேலின் யுத்த வீரர்களில் மிகவும் வல்லமையான வனை சந்திக்கும் எதிர்பார்ப்பில் இராட்சதன் தைரியத்தோடு முன்வந்தான். அவனுடைய ஆயுததாரி அவனுக்கு முன் நடந்தான். தன் முன் எவரும் நிற்க முடியாது என்பதைப் போன்று அவன் காட்சியளித்தான். அவன் தாவீதின் அருகே வந்தபோது, சிறிய வயதினிமித்தம் பையன் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு வாலிபனையே அங்கு கண்டான். தாவீதின் முகம் ஆரோக்கியத் தினால் சிவந்ததாயும், கவசத்தால் பாதுகாக்கப்பட்டிராத சமச்சீரான அவனுடைய உருவம் கோலியாத்திற்கு சாதகமாகக் காட்டப்பட்டிருந்தது. எனினும் அந்த வாலிப உருவத்திற்கும் பெலிஸ்தனின் பிரம்மாண்டமான உருவத்திற்கும் இருந்த விகிதத்தில் மிகக் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது.PPTam 848.3

    கோலியாத் ஆச்சரியத்தாலும் கோபத்தாலும் நிறைந்தான். நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்றான். அவன் அறிந்திருந்த அனைத்து தேவர்கள் நாமத்திலும் மிகவும் பயங்கரமான சாபங்களைதாவீதின் மேல் எறிந்தான். என்னிடத்தில் வா; நான் உன் மாமிசத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்று ஏளனத்தோடு கத்தினான்.PPTam 849.1

    பெலிஸ்தரில் முதன்மையானவன்முன் தாவீது பெலமிழக்க வில்லை. முன்நோக்கிச் சென்றவனாக தன்னுடைய எதிரியிடம் : நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேட்கத்தோடும் என்னிடத்தில் வருகிறாய், நானோநீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றைய தினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன், அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள், கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்ட மெல்லாம் அறிந்து கொள்ளும், யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று கூறினான்.PPTam 850.1

    அவனுடைய குரலில் ஒரு பயமின்மையின் தொனியும் அவனுடைய அழகான முகத்தில் வெற்றி மற்றும் களிப்பின் தோற்றமும் இருந்தது. இனிமையான குரலில் தெளிவாகக் கொடுக்கப்பட்ட இந்தப் பேச்சு காற்றில் மிதந்து யுத்தத்திற்காக அணிவகுத்திருந்த ஆயிரக்கணக்கானவர்களின் காதுகளில் தெளிவாக விழுந்தது. கோலியாத்தின் கோபம் மிகுந்த உச்சத்திற்கு உயர்ந்தது. உக்கிரத்தில் பகை தீர்க்க அவனுடைய முன்தலையை பாதுகாத்திருந்த தலைசீராவை தூக்கினவனாக அவன் தனது எதிராளியிடம் வேகமாக வந்தான். ஈசாயின் குமாரன் தன்னுடைய எதிராளிக்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தான். அப்பொழுது அந்தப்பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக்கிட்டி வருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி, தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலேவைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியில் பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.PPTam 850.2

    இரண்டு படைகளிலும் அதிர்ச்சி பரவியது. தாவீது கொல்லப் படுவான் என்பதில் அவைகள் நம்பிக்கையாயிருந்தன. ஆனால் அந்தக்கல் காற்றில் விர் என்று ஒலித்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்தை நோக்கி நேராக பாய்ந்து சென்ற போது வல்லமையான அந்த படைவீரன் தடுமாறுவதையும் தள்ளாடுவதையும் சடிதியான குருட்டாட்டத்தினால் அடிக்கப்பட்டவனாக தன் கைகளை விரிப்பதையும் அவர்கள் கண்டனர். இராட்சதன் தள்ளாடி அசைந்து வெட்டப்பட்ட கர்வாலி மரத்தைப்போல தரையில் விழுந்தான். தாவீது ஒரு நொடியும் காத்திருக்கவில்லை. விழுந்து போன பெலிஸ்தனின் உருவத்தின் மேல் ஏறி, கோலியாத்தின் கனமான பட்டயத்தை இரண்டு கைகளாலும் பிடித்தான். ஒரு நொடி முன்னதாக, அந்தப் பட்டயத்தால் வாலிபனின் தலையை அவன் தோளிலிருந்து பிரித்து அவன் சரீரத்தை ஆகாயத்துப் பறவைகளுக்குக் கொடுப்பதாக இராட்சதன் பெருமை பாராட்டியிருந்தான். இப்போது அது ஆகாயத்தில் உயர்த்தப்பட்டது. பெருமை பாராட்டினவனின் தலை அவன் கழுத்திலிருந்து உருண்டது. இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து பெருமகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு எழுந்தது, பெலிஸ்தர் திகிலினால் பீடிக்கப்பட்டனர். யுத்தம் துரிதமாகப் பின்வாங்குவதில் முடிவடைந்தது. ஓடிக்கொண்டிருந்த சத்துருக்களைத் தூரத்தின் எபிரெயர்களின் வெற்றி முழக்கம் மலைகளின் சிகரங்களில் எதிரொலித்தது. அவர்கள் ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லை மட்டும், எக் ரோனின் வாசல்கள் மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாரா யீமின் வழியிலும், காத்பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய் துரத்தின் பிற்பாடு, திரும்பி வந்து அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள். தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான், அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.PPTam 850.3