Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    68 - சிக்லாகில் தாவீது

    பெலிஸ்தரோடு யுத்த களத்திற்குச் சென்றிருந்தபோதும் தாவீதும் அவன் மனிதர்களும் சவுலுக்கும் பெலிஸ்தருக்கும் இடையேயான யுத்தத்தில் பங்கெடுக்க வில்லை. இரண்டு படைகளும் யுத்தத்தில் சந்திக்க ஆயத்தமானபோது ஈசாயின் மகன் தன் மாபெரும் குழப்பமான சூழ்நிலையில் இருப்பதைக் கண்டான். அவன் பெலிஸ்தருக்காக யுத்தஞ் செய்வான் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவனுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தை விட்டு யுத்த களத்திலிருந்து திரும்பியிருப்பானானால், கோழைகளோடு தன்னை அடையாளப்படுத்துவது மாத்திரமல்ல, அவனைப் பாதுகாத்து அவன் மேல் நம்பிக்கை வைத்திருந்த ஆகீசுக்கும் நன்றியில்லாது துரோகஞ் செய்கிறவனாகக் காணப்படுவான். அப்படிப்பட்ட ஒரு செயல் அவன் பெயரை அபகீர்த்தியினால் மூடி, சவுலைக் காட்டிலும் அதிகம் பயப்படக் கூடிய எதிரிகளின் கோபத்திற்கு அவனை வெளிப்படுத்தியிருக்கும். எனினும் இஸ்ரவேலுக்கு எதிராக யுத்தஞ் செய்ய ஒரு நொடிகூட அவனால் சம்மதிக்கக்கூடாதிருந்தது. அப்படிச் செய்வானானால் தேசத்துரோகி தேவனுக்கும் அவனுடைய ஜனத்திற்கும் துரோகி ஆகியிருப்பான். அது இஸ்ரவேலின் சிங்காசனத்திற்கிருந்த அவனுடைய பாதையை என்றைக்குமாக அடைத்திருக்கும். சவுல் யுத்தத்தில் மடிவானானால் அவனுடைய மரணம் தாவீதின் மேல் சுமத்தப்படும்.PPTam 906.1

    தான் பாதையை தவறவிட்டதாக தாவீது உணர்ந்தான். யெகோவாவின் மற்றும் அவருடைய மக்களின் வெளிப்படையான சத்துருக்களை விட, தேவனுடைய மலைகளின் பலமான அரண்களில் அடைக்கலம் பெற்றிருந்தால் எவ்வளவு நன்மையாக இருந்திருக்கும். ஆனாலும் ஆண்டவர் தமதுமிகுந்தகிருபையினால் இந்தத் தவறுக்காக தம்முடைய ஊழியக்காரனை அவனுடைய துயரத்திலும் குழப்பத்திலும் தனியே விட்டு விடுவதின் மூலம் தண்டிக்கவில்லை . தாவீது தெய்வீக வல்லமையின் பிடியை தளர்த்தியிருந்து, தவறு செய்து, கண்டிப்பான உண்மையிலிருந்து திரும்பியிருந்தபோதும் அவனுடைய இருதயத்தின் நோக்கம் இன்னமும் தேவனுக்கு உண்மையாயிருந்தது. தேவனுடைய மற்றும் இஸ்ரவேலுடைய சத்துருக்களுக்கு உதவுவதில் சாத்தானும் அவனுடைய சேனையும் ஓய்வில்லாதிருந்தபோது, தாவீதை அவன் விழுந்திருந்த ஆபத்திலிருந்து விடுவிக்க ஆண்டவருடைய தூதர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். நேரிடவிருக்கிற போராட்டத்தில் தாவீதும் அவனுடைய படையும் தங்களோடு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பரலோகத் தூதுவர்கள் பெலிஸ்திய பிரபுக்களின் மனங்களை அசைத்தனர்.PPTam 907.1

    இந்த எபிரெயர் என்னத்திற்கு என்று பெலிஸ்திய பிரபுக்கள் ஆகீஸை நெருக்கினார்கள். ஆகீஸ் மிக முக்கியமான போர்த்தோழனைப் பிரிய மனமற்றவனாக, இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்க வில்லை என்றான்.PPTam 907.2

    ஆனால் பிரபுக்கள், இந்த மனுஷன் நீர் குறித்ததன் இடத்திற்குத் திரும்பிப் போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடேகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை, இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக் குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்ற தங்களுடைய கோரிக்கையில் கோபத்தோடு பிடிவாதமாயிருந்தனர். தங்களுடைய புகழ்பெற்ற முதன்மையானவனின் கொலையும், அந்தச் சம்பவத்தில் பெற்ற இஸ்ரவேலின் வெற்றியும் பெலிஸ்திய பிரபுக்களின் மனதில் இன்னமும் புதிதாக இருந்தது. தாவீது அவனுடைய மக்களுக்கு எதிராக சண்டையிடுவான் என்று அவர்கள் நம்பவில்லை. அப்படியே செய்தாலும் யுத்தத்தின் மும்மூரத்தில் அவர்கள் பக்கம் திரும்பிவிட்டால் சவுலின் முழு படையும் கொடுக்கும் பாதிப்பைக் காட்டிலும் அவன் மிக அதிக தீங்கு செய்வான்.PPTam 907.3

    விட்டுக்கொடுக்கும்படி ஆகீஸ் இவ்விதம் பலவந்தம்பண்ணப் பட, அவன் தாவீதை அழைத்து : நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லு கிறேன், நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள் முதல் இன்றைய வரைக் கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை ; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல. ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன் மேல் தாங்கள் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய் விடு என்று கூறினான்.PPTam 908.1

    தன்னுடைய மெய்யான உணர்வுகளைக் காட்டிவிடும் பயத்தில் தாவீது : ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம் பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள் முதற்கொண்டு இன்றைய வரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்று பதிலளித்தான்.PPTam 908.2

    ஆகீஸின் பதில் தாவீதின் இருதயத்தில் ஒரு அவமானத்தையும் ஒரு குற்ற உணர்வின் வருத்தத்தையும் கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் தான் செய்யக் குனிந்திருந்த வஞ்சகங்கள் யெகோவாவின் ஊழியக்காரன் என்ற தகுதிக்கு எவ்வளவு கீழானவை என்று நினைத்திருந்தான். அதை அறிவேன், நீ தேவனுடைய தூதனைப் போல் என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்கிறார்கள். இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்று இராஜா கூறினான். இவ்விதம் தாவீது அகப்பட்டிருந்த கண்ணி அகற்றப்பட, அவன் சுதந்தரமாக விடப்பட்டான்.PPTam 908.3

    மூன்று நாள் பிரயாணத்திற்குப்பின்பு தாவீதும் அவனுடைய அறுநூறு மக்களின் படையும் தங்களுடைய பெலிஸ்திய வீடான சிக்லாகை அடைந்தது. ஆனால் ஒரு அழிவின் காட்சி அவர்களைச் சந்தித்தது. தாவீது இல்லை என்கிறதை சாதகமாக எடுத்துக் கொண்ட அமலேக்கியர் தங்களுடைய எல்லையில் அவன் செய்த திடீர் ஆக்கிரமிப்பிற்கு தங்கள் படைகளோடு வந்து பழிவாங்கியிருந்தனர். காவலின்றி விடப்பட்டிருந்தபோது அவர்கள் அதிரடியாக பட்டணத்திற்கு வந்து, அதைக் கொள்ளையடித்து மி குந்த கொள்ளையோடு அனைத்து பெண்களையும் குழந்தைகளையும் அடிமையாக பிடித்துச் சென்றிருந்தனர்.PPTam 909.1

    திகிலினாலும் திகைப்பினாலும் ஊமையாகி, தாவீதும் அவன் மனிதர்களும் கருகிப்போய் புகைந்து கொண்டிருந்த அழிவுகளை சற்று நேரம் மௌனமாகப் பார்த்தனர். பின்னர் பயங்கரமான அழிவின் உணர்வு அவர்களுக்கு உண்டானது. யுத்தத்திற்கு பழகியிருந்த அந்த வீரர்கள் அழுகிறதற்குத் தங்களில் பெலனில் லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.PPTam 909.2

    இங்கே மீண்டும் பெலிஸ்தருக்கு நடுவே வைக்கும்படியாக தன்னை நடத்தியிருந்த அவிசுவாசத்தினிமித்தம் தாவீது கடிந்து கொள்ளப்பட்டான். தனது மக்களுக்கு மத்தியிலும் தேவனுடைய சத்துருக்களுக்கு மத்தியிலும் எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கும் என்பதைக் காணும் சந்தர்ப்பம் அவனுக்கு இருந்தது. தாவீதின் பின் சென்றவர்கள் தங்களுடைய பேரழிவுகளுக்கு அவன்தான் காரணமென்று அவன் மேல் திரும்பினர். அமலேக்கியர் மேல் படையெடுத்திருந்ததில் அவர்களுடைய பழிவாங்கும் எண்ணத்தை அவன் தூண்டியிருந்தான். அப்படியிருந்தும் தங்கள் சத்துருக்களின் மத்தியில் பாதுகாப்பாயிருக்கும் மிகுந்த நம்பிக்கையில் பட்டணத்தை காவலின்றி விட்டுச் சென்றிருந்தான். துயரத்தினாலும் கோபத்தினாலும் மூர்க்கமடைந்தவர்களாக அவ னுடைய வீரர்கள் எந்தவொரு செயலையும் செய்ய ஆயத்த மாயிருந்து தங்களுடைய தலைவனை கல்லெறியப்போவதாகவும் மிரட்டினர்.PPTam 909.3

    எல்லா மனித ஆதரவிலிருந்தும் அறுப்புண்டதாக தாவீது காணப்பட்டான். பூமியிலே அவனுக்குப் பிரியமாயிருந்த அனைத்தும் அவனிடமிருந்து துடைத்தெடுக்கப்பட்டது. சவுல் தேசத்திலிருந்து அவனைத் துரத்தியிருந்தான், பெலிஸ்தர் பாளயத்திலிருந்து அவனைத் துரத்தியிருந்தனர்; அமலேக்கியர் அவன் பட்டணத்தை கொள்ளையிட்டிருந்தனர், அவனுடைய மனைவிகளும் பிள்ளைகளும் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர், அவனுடைய சொந்த பழக்கமான நண்பர்கள் அவனுக்கெதிராகத் திரண்டு, அவனைக் கொல்லப்போவதாகவும் பயமுறுத்தினர். இந்த முடிவின் வேதனையான மணித்துளிகளில் சூழ்நிலைகளில் மனதை வைப்பதற்கு மாறாக, உதவிக்காக அவன் தேவனை ஊக்கமாகப் பார்த்தான். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். தன்னுடைய சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கையை திரும்பிப் பார்த்தான். எங்கேயாகிலும் ஆண்டவர் அவனைக் கைவிட்டிருக்கிறாரா? தேவனுடைய தயவின் அநேக சான்றுகளை திரும்ப நினைத்த போது அவன் ஆத்துமா புத்துணர்ச்சியடைந்தது. தாவீதின் பின்னடியார்கள் அவர்களுடைய அதிருப்தி மற்றும் பொறுமையின்மையில் அவனுடைய துன்பத்தை இரட்டிப்பான வருத்தமாக்கியிருந்தனர். துக்கிப்பதற்கு இன்னும் அதிகமான காரணம் இருந்தபோதும் தேவனுடைய மனிதன் மனோபலத்தோடு நின்றான். நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் (சங். 56:3) என்பது அவனுடைய இருதயத்தின் மொழியாக இருந்தது. கஷ்டத்திலிருந்து வெளியே வருவதற்கான வழியை அவனால் காணக்கூடாதிருந்தும் தேவனால் காணக்கூடும், என்ன செய்வதென்று அவர் அவனுக்குப் போதிப்பார்.PPTam 909.4

    அகிமெலேக்கின் குமாரனான அபியத்தாரை அழைப்பித்து: தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடர் வேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று விசாரித்தான். அதற்கு அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் (1சாமு. 30:8) என்று பதில் வந்தது.PPTam 910.1

    இந்த வார்த்தைகளால் துக்கம் மற்றும் உணர்வுகளின் கொந்தளிப்பு நின்று போனது. தாவீதும் அவன் வீரர்களும் ஓடிக்கொண்டிருக்கும் தங்கள் சத்துருவை உடனடியாகத் தொடர்ந்தனர். அவர்களுடைய வேகம் விரைவாக இருந்ததால், காசாவினருகே மத்திய தரைக்கடலில் கலக்கும் பே சோர் ஆற்றண்டை வந்தபோது அவர்களில் இருநூறு பேர் பெலவீனத் தினால் பின்தங்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். மீதியிருந்த நானூறு பேரோடு தாவீது அச்சமின்றி முன்னேறினான்.PPTam 910.2

    முன் சென்ற போது இளைப்பிலும் பசியிலும் ஏறக்குறைய சாவ தைப்போன்று இருந்த ஒரு எகிப்திய அடிமையைக் கண்டனர். ஆகாரமும் பானமும் எடுத்துக்கொண்டபோது அவன் உயிரடைய, படையெடுத்திருந்த அமலேக்கியரின் கொடிய தலைவனால் சாகும் படி அவன் விட்டுவிடப்பட்டிருந்ததை அறிந்தனர். படையெடுப்பையும் கொள்ளையையுங்குறித்த கதைகளை அவன் கூறினான். பின்னர் கொல்லப்பட மாட்டான் அல்லது அவனுடைய தலைவனிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படமாட்டான் என்ற உறுதியைப் பெற்ற பின் தாவீதின் கூட்டத்தாருடைய சத்துருக்களின் பாளயத்திற்கு அவர்களை நடத்த அவன் ஒப்புக்கொண்டான்.PPTam 910.3

    அவர்களுடைய பாளயத்தைக் காணும் தூரத்திற்கு வந்தபோது களியாட்டத்தின் காட்சி அவர்களுக்குத் தென்பட்டது. வெற்றியடைந்தசேனைமிகப்பெரிய பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதா தேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். உடனடியாக தாக்குதல் கட்டளையிடப்பட, பின்தொடர்ந்தவர்கள் தங்கள் இரையின் மீது கொடூரமாகப் பாய்ந்தனர். அமலேக்கியர் திகிலடைந்து குழம்பினர். யுத்தம் இரவு முழுவதும் அடுத்த நாள் காலையில் முழு சேனையும் கொல்லப்படும் வரையிலும் தொடர்ந்தது. நானூறு மனிதர் மாத்திரம் ஒட்டகங்கள் மேல் ஏறி தப்பிச்சென்றனர். ஆண்டவருடைய வார்த்தை நிறைவேறியது. அமலேக்கியர் பிடித்துக்கொண்டு போன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். அவர்கள் கொள்ளையாடிக்கொண்டு போன எல்லாவற்றிலும், சி றியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.PPTam 911.1

    தாவீது அமலேக்கியரின் எல்லையில் படையெடுத்தபோது அவனுடைய கைகளில் அகப்பட்ட அனைத்து குடிகளையும் பட்டயத்திற்குட்படுத்தினான். தேவனுடைய கட்டுப்படுத்தும் வல்லமை இல்லாதிருந்தால், அமலேக்கியர் சிக்லாகில் மக்களை அழித்து பழிவாங்கியிருப்பார்கள். சிறைக்கைதிகளை உயிரோடு வைக்கவும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான கைதிகளை வீட்டிற்கு நடத்தி வருவதில் வெற்றியின் கனத்தை உயர்த்தவும் விரும்பியிருந்து, பின்னர் அவர்களை அடிமைகளாக விற்கவும் அவர்கள் தீர்மானித்திருந்தனர். இவ்விதம் அவர்கள் சிறைக் கைதிகளுக்கு தீங்கிழைக்காது அவர்களுடைய கணவன்மார் களிடமும் தகப்பன்களிடமும் திரும்ப கொடுக்கும்படியாக தேவனுடைய நோக்கத்தை அறியாமலேயே நிறை வேற்றியிருந்தனர். பூமியின் அனைத்து வல்லமைகளும் நித்தியமான ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வல்லமையான அதிபதிக்கும் மிகக் கொடுமையான ஒடுக்குகிறவனுக்கும் அவர்: இம்மட்டும் வா, மிஞ்சி வராதே, (யோபு 38:11) என்று சொல்லுகிறார். தீமையின் வாய்க்கால்களைச் சரிக்கட்ட தேவனுடைய வல்லமை தொடர்ச்சியாக செயல்படுத்தப்படுகிறது. அவர் அழிப்பதற்கு அல்ல மாறாக, அவர்களைத் திருத்தவும் பாதுகாக்கவும் மனிதருக்கிடையே வேலை செய்துகொண்டிருக்கிறார்.PPTam 911.2

    மாபெரும் களிப்போடு வெற்றிபெற்றவர்கள் வீடு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தனர். பின் தங்கியிருந்த தங்கள் கூட்டாளிகளை அடைந்தபோது நானூறு பேரில் அதிக சுயநலமும் ஒழுங்கு மற்றிருந்தவர்கள் யுத்தத்தில் பங்குபெறாதவர்கள் கொள்ளையை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று நிர்ப்பந்தித்தனர். ஒவ்வொருவனும் தன்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் பெற்றுக்கொள்ளுவது அவர்களுக்குப் போதும் என்றனர், ஆனால் தாவீது அப்படிப்பட்ட ஒழுங்கை அனுமதிக்க மாட்டான். என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்ய வேண்டாம்,...... யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ் வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்கு வீதம் கிடைக்கவேண்டும், சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்று அவன் கூறினான். இவ்விதம் காரியம் அமைதிப்படுத்தப்பட, படையெடுப்பதில் மதிப்போடு இணைக்கப்பட்டிருந்த அனைவரும் மெய்யான யுத்தத்தில் பங்கெடுத்தவர்களுக்கு இணையாக கொள்ளையில் பங்கு பெற வேண்டும் என்பது பின்னர் இஸ்ரவேலில் சட்டமாயிற்று.PPTam 912.1

    சிக்லாகிலிருந்து எடுக்கப்பட்டிருந்த அனைத்து கொள்ளை யையும் திரும்பப் பெற்றுக்கொண்டதோடு அமலேக்கியருக்குச் செ பந்தமான ஏராளமான மந்தைகளையும் மாடுகளையும் தாவீதின் படைகள் பிடித்தது. இவைகள் தாவீதின் கொள்ளை என்று அழைக்கப்பட்டன . சிக்லாகிற்குத்திரும்பினபின் இவைகளிலிருந்து தன்னுடைய சொந்த யூதக் கோத்திரத்தின் மூப்பருக்கு அவன் பரிசுகளை அனுப்பினான். இந்தப் பங்கிடுதலில் தங்களுடைய ஜீவனுக்காக இடம் விட்டு இடம் ஓடும்படி நெருக்கப்பட்டிருந்த நாட்களில், மலையின் அரண்களில் அவனுக்கும் அவன் பின்னடியாருக்கும் நண்பர்களான அனைவரும் நினைவு கூரப்பட்டனர். வேட்டையாடப்பட்டு தப்பியோடினவனுக்கு மிகவும் விலைமதிப்பாயிருந்த அவர்களுடைய தயவும் பரிவும் இவ்விதம் நன்றியோடு நினைவுகூரப்பட்டது.PPTam 912.2

    தாவீதும் அவனுடைய படையும் சிக்கலாகிற்கு மூன்றாவது நாளில் திரும்பினர். அழிக்கப்பட்ட தங்கள் வீடுகளை திரும்ப எடுத்து நிறுத்த வேலை செய்தபோது, இஸ்ரலுகே கும் பெலிஸ்தருக்குமிடையே நடந்த யுத்தத்தின் செய்திகளுக்காக ஏக்கமான மனதோடு கவனித்திருந்தனர். சடிதியாக ஒரு தூதுவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின் மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு பட்டணத்திற்குள் நுழைந்தான். உடனடியாக அவன் தாவீதிடம் கொண்டு வரப்பட, அவன் தாவீதுடைய தயவை விரும்பினவனாக, அவனை வல்லமையுள்ள அதிபதியாக ஒப்புக்கொள்ளுவதை வெளிப்படுத்தி, அவன் முன் பயபக்தியோடு பணிந்தான். யுத்தம் என்னவாயிற்றென்று தாவீது ஊக்கமாக விசாரித்தான். தப்பி வந்தவன் சவுலின் மரணத்தையும் யோனத்தானின் மரணத்தையும் அறிவித்தான். உண்மையின் எளிய வார்த்தைகளையும் சற்றுத் தாண்டிக் கூறினான். இடைவிடாது தன்னை உபத்திரவப்படுத்தினவனுக்கு எதிராக தாவீது பகைமை பாராட்டுவான் என்று யூகித்தவனாக, இராஜாவைக் கொன்றவன் என்ற கனத்தை அந்த அந்நியன் தனக்குச் சம்பாதிக்க நம்பியிருந்தான். யுத்தத்தில் இஸ்ரவேலின் அரசன் காயப்பட்டதைக் கண்டதாகவும் அவன் சத்துருக்களால் மிகவும் நெருக்கப்பட்ட தாகவும், அவனுடைய சொந்த வேண்டுகோளின்படி தூதுவன் அவனைக் கொன்றதாகவும் சற்றுப் பெருமையோடு கூறினான். அவன் தலையிலிருந்த கிரீடத்தையும் அவன் கைகளிலிருந்த வளையல்களையும் தாவீதிடம் அவன் கொண்டுவந்திருந்தான். இந்த செய்திகள் மகிழ்ச்சியோடு அறிவிக்கப்படும் என்றும் தன்னுடைய செயலுக்காக விலையுயர்ந்த பரிசு கொடுக்கப்படும் என்றும் நம்பிக்கையோடு எதிர்பார்த்தான்.PPTam 913.1

    ஆனால் தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தானும், கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.PPTam 913.2

    பயங்கரமான செய்தியின் முதல் அதிர்ச்சி கடந்தது. தாவீதின் நினைவுகள் அந்நிய செய்தியாளனிடம் திரும்பியது. தன்னுடைய சொந்த வார்த்தையின்படியே அவன் குற்றவாளியாயிருந்தான். தலைவன் அந்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டான். அவன் நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்று பதிலளித்தான். தாவீது அவனை நோக்கி : கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரைக் கொன்று போடும் படி நீ உன் கையை நீட்டப் பயப்படாமற்போனது என்ன என்றான். தாவீது சவுலை இரண்டு முறை தன் கைகளில் பெற்றிருந்தான். ஆனாலும் கொல்லும் படியாக நிர்ப்பந்திக்கப்பட்டபோது இஸ்ரவேலை ஆட்சி செய்யும் படி தேவனுடைய கட்டளையினால் பிரதிஷ்டை பண்ணப்பட்டிருந்தவனை கொல்ல தன் கைகளை உயர்த்த மறுத்திருந்தான். ஆனால் அமலேக்கியன் இஸ்ரவேலின் அரசனைக் கொலை செய்ததை பெருமையாக பேசத் துணிந்திருந்தான். அவன்தானே மரணத்திற்கு ஏதுவான குற்றத்தில் தன்னைக் குற்றப்படுத்தியிருந்தான். தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. தாவீது: உன் இரத்தப்பழி உன் தலையின் மேல் இருப்பதாக கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை நான் கொன்று போட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்று கூறினான்.PPTam 913.3

    சவுலின் மரணத்தைக் குறித்ததாவீதின் வருத்தம் உண்மையான தும் ஆழமானதுமாயிருந்து, நேர்மையான குணத்தின் தாராளத்தைப் புலப்படுத்தியது. அவனுடைய சத்துருவின் விழுகையில் அவன் களிகூரவில்லை . அவன் இஸ்ரவேலின் சிங்காசனத்தில் ஏறுவதற்கு இருந்த தடை அகற்றப்பட்டது. ஆனாலும் இதில் அவன் களிகூரவில்லை . சாவு சவுலின் அவநம்பிக்கையும் கொடுமையும் நினைவிலிருந்து அழித்திருந்தது. இப்போது அவனுடைய சரித்திரத்தில் அவனுடைய நேர்மையையும் அரச தன்மையையும் தவிர்த்து வேறு எதுவும் நினைக்கப்படவில்லை. சவுலின் பெயர் மிகவும் உண்மையாகவும் சுயநலமின்றியும் தோழமை கொண்டிருந்த யோனத்தானோடு இணைக்கப்பட்டிருந்தது.PPTam 914.1

    தன்னுடைய இருதயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்த தாவீதின் பாடல் தேசத்திற்கும் பின்தொடர்ந்த அனைத்து யுகத்திற்கும் ஒரு பொக்கிஷமாகியது.PPTam 914.2

    இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள். பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும், விருத்தசே தனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும், அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள். கில் போவா மலைகளே, உங்கள் மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இராமலும் போவதாக, அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம் பண்ணப்படாதவர்போல .... உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்து போனதில்லை, கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப்பார்க்கிலும் பல முமுள்ளவர்களாயிருந்தார்கள். இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின் மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். போர் முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே; யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே . என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது, ஸ்திரீகளின் சிநேகத்தைப் பார்க்கிலும் அதிகமாயிருந்தது. பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே ; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்து போயிற்றே (2 சாமு 1:19-21) என்று பாடினான்.)PPTam 914.3