Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    72 - அப்சலோம் கலகம் செய்தல்

    நாலத்தனை திரும்பச் செலுத்த வேண்டும் என்பது நாத்தான் தீர்க்கதரிசியின் உவமானத்தைக் கேட்டபோது தாவீது தன்னை அறியாமலே தன்மீது கொடுத்த தீர்ப்பாக இருந்தது. அவனுடைய சொந்தத் தீர்ப்பின்படியே அவன் தீர்க்கப்பட வேண்டும். அவனுடைய குமாரருள் நான்கு பேர் விழ வேண்டும். ஒவ்வொரு குமாரனின் இழப்பும் தகப்பனுடைய பாவத்தின் விளைவாக இருக்கும்.PPTam 956.1

    முதல் மகனான அம்னோனின் வெட்கக்கேடான குற்றம் தண்டிக்கப்படாமலும் கடிந்து கொள்ளப்படாமலும் போவதற்கு தாவீதால் அனுமதிக்கப்பட்டது. பிரமாணம் விபச்சாரக்காரன் மேல் மரணத்தை அறிவித்தது. அம்னோனின் இயற்கைக்கு மாறான குற்றம் அவனை இரட்டிப்பான குற்றவாளியாக்கிற்று. ஆனால் தாவீது தன் சொந்தப் பாவத்தின் சுயகண்டனையினால் தவறு செய்தவனை நியாயத்திற்குள் கொண்டு வரத் தவறினான். இவ்வளவு கேவலமாக தவறிழைக்கப்பட்டிருந்த சகோதரியின் இயல்பான பாதுகாவலனான அப்சலோம் பழிவாங்கும் தன் நோக்கத்தை இரண்டு முழு வருடங்களுக்கு மறைத்திருந்தான். எனினும் முடிவில் மிக நிச்சயத்தோடு அடிக்கும் படியாகவே மறைத்திருந்தான். அரச குமாரரின் விருந்தில் குடிபோதையில் இருந்த மிகவும் முறை கேடான அம்னோன் அவனுடைய சகோதரனின் கட்டளைப்படி கொலை செய்யப்பட்டான்.PPTam 956.2

    இரட்டத்தனையான நியாயத்தீர்ப்பு தாவீதிற்கு அளக்கப்பட்டது. அப்சலோம் ராஜகுமாரரையெல்லாம் அடித்துக் கொன்று போட்டான்; அவர்களில் ஒருவரும் மீந்திருக்க விடவில்லை என்கிற தாய், தாவீதுக்குச் செய்தி வந்தது. அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு நின்றார்கள். எருசலேமிற்கு கலக்கத்தோடு திரும்பி வந்த இராஜாவின் குமாரர் நடந்ததை தங்கள் தகப்பனுக்கு வெளிப்படுத்தினார்கள். அம்னோன் மாத்திரம் கொல்லப்பட்டான். அப்சலோம் அவனுடைய தாயின் தகப்பனான கே சூரின் இராஜாவான தலமாயிடம் ஓடிப்போனான்.PPTam 957.1

    தாவீதின் மற்ற குமாரரைப்போலவே அம்னோனும் சுயத்தில் திளைக்க விடப்பட்டிருந்தான். தேவனுடைய கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாதவனாக தன்னுடைய இருதயத்தின் ஒவ்வொரு நினைவையும் திருப்திப்படுத்த அவன் தேடினான். அவன் மாபெரும் பாவம் செய்திருந்தபோதிலும் தேவன் அவன் மேல் நீண்டகாலம் பொறுமையாயிருந்தார். இரண்டு வருடங்கள் மனந்திரும்பும்படியான சந்தர்ப்பம் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் தன் பாவத்தில் தொடர்ந்தான். தன் குற்றம் தன்மேல் இருக்க, நியாயந்தீர்க்கும் பயங்கரமான நியாய சங்கத்திற்குக் காத்திருக்கும்படியாக மரணத்தினால் வெட்டப்பட்டான்.PPTam 957.2

    அம்னோனின் குற்றத்தைத் தண்டிக்கும் கடமையை தாவீது நெகிழ்ந்திருந்தான். இராஜாவும் தகப்பனுமானவருடைய உண்மையின்மையினாலும், மகனுடைய மனவருத்தமின்மையினாலும் ஆண்டவர் சம்பவங்களை அவைகளின் இயல்பான பாதையில் செல்ல அனுமதித்து அப்சலோமை தடைகட்டாதிருந்தார். பெற்றோர்கள் அல்லது அதிபதிகள் அக்கிரமத்தைத் தண்டிக்கும் தங்கள் கடமையை நெகிழும் போது, தேவன்தாமே வழக்கை தமது கரங்களில் எடுத்துக்கொள்ளுவார். கட்டுப்படுத்தும் அவரது வல்லமை தீமையின் முகவரிடமிருந்து ஓரளவு அகற்றப்பட, சூழ்நிலைகளின் தொடர்ச்சி எழும்பி, பாவத்தை பாவத்தால் தண்டிக்கும்.PPTam 957.3

    தாவீது அம்னோனை அநீதியாக நடத்தியதின் தீய விளைவு முடிவடையவில்லை. ஏனெனில் இங்கேதான் அப்சலோம் தன் தகப்பனிடமிருந்து பிரியத் துவங்கினான். அவன் கே சூருக்குத் தப்பிச்சென்ற பிறகு, தாவீது தன் மகனுடைய குற்றம் தண்டனைக்குரியது என்று உணர்ந்து, திரும்பி வருவதற்கு அவனுக்கு அனுமதி மறுத்தான். இது இராஜா ஈடுபட்டிருந்த சிக்கலான தீமைகளிலிருந்து அவனை விடுவிப்பதைவிடவும் அதை அதிகமாக்கும் இயல்பையே கொண்டிருந்தது. பேராசையும் ஆற்றலும் பெற்றிருந்து கொள்கையற்றவனாயிருந்த அப்சலோம், நாடு கடத்தப்பட்டதினால் இராஜாங்கத்தின் நடவடிக்கைகளில் பங்கு பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டு, விரைவில் ஆபத்தான ச தித்திட்டங்களுக்குத் தன்னைக் கொடுத்தான்.PPTam 957.4

    இரண்டு வருடங்களின் முடிவில் தகப்பனுக்கும் மகனுக்குமிடையே ஒரு ஒப்புரவைக் கொண்டுவர யோவாப் ஒரு முயற்சி எடுத்தான். இந்த கண்ணோட்டத்தில், தெக்கோவாவில் ஞானத்திற்குப் பெயர்பெற்றிருந்த ஒரு பெண்ணுடைய சேவையை அவன் பெற்றான். யோவாபினால் போதிக்கப்பட்டPPTam 958.1

    அந்தப் பெண் அவளுக்கு ஒரே ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்த இரண்டு குமாரர்களை உடைய விதவையாகத் தன்னைக் காட்டினாள். ஒரு வாக்குவாதத்தில் இவர்களில் ஒருவன் மற்றவனைக் கொன்றான். இப்போது குடும்பத்தின் உறவினர்கள் யாவரும் பழிவாங்கும்படி பிழைத்திருக்கிறவனை ஒப்புக்கொடுக்கவேண்டும் என்றனர். அந்தத் தாய்: இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின் மேல் வைக்காதபடிக்கு, எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள். இராஜாவின் உணர்வுகள் இந்த மன்றாட்டினால் தொடப்பட, அவளுடைய குமாரனுக்கு அரசாங்க பாதுகாப்பைத் தருவதாக அவன் உறுதிகொடுத்தான்.PPTam 958.2

    வாலிபனின் பாதுகாப்பிற்கான இராஜாவின் அடுத்தடுத்த வாக்குத்தத்தங்களை பெற்ற பிறகு, இராஜாவின் பொறுமைக்காக மன்றாடி, துரத்தப்பட்டவனை தன்னுடைய வீட்டிற்கு அழைக்காததால் குற்றத்தில் இருக்கிற ஒருவனைப்போல் அவன் பேசினதாக அறிவித்தாள். பின்னர் : நாம் மரிப்பது நிச்சயம். திரும்பச் சேர்க்கக் கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மை விட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார் என்றாள். பாவியின் மேலிருக்கும் தேவனுடைய அன்பைக்குறித்த இந்த இளகிய தொடக்கூடிய விளக்கம் ஒரு முரட்டு போர்வீரனான யோவாபிடமிருந்து வந்தது, இஸ்ரவேலர்கள் மீட்பின் மாபெரும் சாத்தியங்களோடு பழகியிருப்பதற்கான குறிப்பான சான்றைக் கொடுக்கிறது. இராஜா தேவனுடைய கிருபைக்கான தன்னுடைய சொந்தத் தேவையை உணர்ந்தவனாக இந்த மன்றாட்டை தடுக்க முடியாது போனான். யோவாபிற்கு நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்பPPTam 958.3

    அழைத்துக்கொண்டுவா என்ற கட்டளை கொடுக்கப்பட்டது.PPTam 959.1

    அப்சலோம் எருசலேமிற்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டான். எனினும் அவையில் காணப்படவோ அல்லது தன் தகப்பனை சந்திக்கவோ அனுமதிக்கப்படவில்லை . தாவீது தன் குமாரரிடம் திளைத்திருந்ததன் தீய விளைவுகளைக் காணத் துவங்கினான். இந்த அழகான திறமையான மகனை இளக்கமாக நேசித்த போதும் அப்சலோமிற்கும் அவனுடைய மக்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்படி அப்படிப்பட்ட குற்றத்தின் மேலிருக்கிற அருவருப்பு வெளிக்காட்டப்படுவது அவசியம் என்று அவன் உணர்ந்தான். அவையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவனாக அப்சலோம் தன் சொந்த வீட்டில் இரண்டு வருடங்கள் வாழ்ந்திருந்தான். அவன் சகோதரி அவனோடு வசித்தாள். அவளுடைய சமூகம் அவள் அனுபவித்த சரிசெய்யப்படக்கூடாத தவறைக் குறித்த நினைவை உயிருள்ளதாக வைத்தது. பொதுமக்களின் கணிப்பில் இளவரசன் குற்றஞ் செய்தவன் என்பதைக்காட்டிலும் ஒரு நாயகனாகவே இருந்தான். இது சாதகமாயிருக்க, மக்களின் இருதயங்களைச் சம்பாதிக்க அவன் செயல்பட்டான். அவனுடைய தோற்றம் அவனை பார்க்கிற அனைவருடைய பாராட்டுதலையும் சம்பாதிப்பதாயிருந்தது. இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் ச வுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை, உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. பேராசையோடு உணர்ச்சிவசப்பட்டு மனக்கிளர்ச்சியோடிருந்த அப்சலோமை இரண்டு வருடங்கள் மனத்தாங்கல் என்று யூகித்திருந்ததை அடைகாக்கும்படி விட்டுவைத்தது இராஜாவின் பங்கில் ஞானமானதாக இல்லை. எருசலேமிற்கு திரும்ப அனுமதித்தும் தன்னுடைய சமூகத்திற்கு வர அவனை அனுமதிக்காதிருந்த தாவீதின் செயல், மக்களுடைய பரிவை அவனுக்கு சேர்த்தது.PPTam 959.2

    தேவனுடைய பிரமாணத்தை மீறின் தன் சொந்த செயலை எப்போதும் தன் முன் வைத்தவனாக, தாவீது சன்மார்க்க ரீதியாக முடங்கிப்போவனைப்போலத் தோன்றினான். பாவத்திற்கு முன்பு தைரியமும் தீர்மானமுமாயிருந்த அவன் இப்போது பெலவீனமும் தீர்மானமற்றவனுமாக இருந்தான். மக்கள் மேலிருந்த அவனுடைய செல்வாக்கு பெலமிழந்திருந்தது. இவையனைத்தும் இயற்கைக்கு மாறான மகனுடைய திட்டங்களுக்கு சாதகமாயிருந்தது.PPTam 959.3

    யோவாபுடைய செல்வாக்கின் மூலம் அப்சலோம் மீண்டும் தகப்பனுடைய சமூகத்தில் அனுமதிக்கப்பட்டான். வெளிப்படையான ஒப்புரவு காணப்பட்ட போதும் தன்னுடைய பேராசை கொண்டதியத்திட்டத்தில் அவன் தொடர்ந்தான். இப்போது அவன் ஏறக்குறைய அரச தகுதியை பெற்றிருந்து, இரதங்களையும் குதிரைகளையும் தனக்கு முன் ஓடும் ஐம்பது மனிதரையும் கொண்டிருந்தான். ஓய்வெடுப்பதையும் தனிமையாயிருப்பதையும் இராஜா அதிகமதிகமாக தேடியிருந்தபோது, அப்சலோம் பிரபலமாகும் பிரியத்தை பெற விடாமுயற்சியோடிருந்தான்.PPTam 960.1

    தாவீதின் அலட்சியம் மற்றும் தடுமாற்றத்தின் செல்வாக்கு அவனுக்குக் கீழிருந்தவர்களுக்கும் பரவியது. நீதி செலுத்துவது நெகிழப்பட்டும் தாமதிக்கப்பட்டும் இருந்தது. அப்சலோம் தந்திரமாக அதிருப்தியின் ஒவ்வொரு காரணத்தையும் தனக்கு சாதகமாகத் திருப்பினான். தங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளை அறிவித்து நஷ்ட ஈட்டைப் பெறும்படி விண்ணப்பதாரர்கள் கூடியிருந்த பட்டணத்தின் வாசலில், பாராட்டப்படும் தோற்றத்தைக் கொண்டிருந்த இந்த மனிதன் நாளுக்குநாள் காணப்பட்டான். அவர்களுடைய வேதனைக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தி, அரசாங்கத்தின் தகுதியின்மைக்கு வருந்தினவனாக, அப்சலோம் அவர்களோடு கலந்து அவர்களுடைய வருத்தங்களைக் கவனித்துவந்தான். இவ்விதம் ஒரு இஸ்ரவேலனுடைய கதையைக் கேட்ட பிறகு இந்த பிரபு: உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்று பதில் கொடுப்பான். கூடவே, வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு, என்னைத் தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.PPTam 960.2

    பிரபுவின் மறைமுகமான தந்திரங்களால் தூண்டப்பட்டதால் அரசாங்கத்துடனான அதிருப்தி வேகமாகப்பரவிக்கொண்டிருந்தது. அப்சலோமின் புகழ்ச்சி அனைவருடைய உதடுகளிலும் இருந்தது. அவன் பொதுவாக இராஜாங்கத்தின் சுதந்தரவாளியாகக் கருதப்பட்டான். அந்த உயர்ந்த தகுதிக்கு அவன் தகுதியானவன் என்று மக்கள் அவனைப் பெருமையோடு பார்த்தனர். அவன் சிங்காசனத்தை ஆக்கிரமிப்பான் என்கிற விருப்பம் தூண்டப்பட்டது. இந்தப் பிரகாரமாக அப்சலோம் .... இஸ்ரவேல் மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான். இன்னமும் தன் குமாரன் மேலிருந்த பிரியத்தினால் குருடானவனாக அரசன் எதையும் சந்தேகிக்கவில்லை . அப்சலோம் எடுத்திருந்த அரச பதவி தன்னுடைய அவைக்கு கனத்தை சேர்க்கும் நோக்கத்தில் இருந்ததாக ஒப்புரவாகுதலின் மகிழ்ச்சியை வெளிக்காட்டுவதாக தாவீதால் கருதப்பட்டது.PPTam 960.3

    பின்தொடரவிருப்பவைகளுக்கு மக்களின் மனங்கள் ஆயத்தப் பட்டிருக்க, தெரிந்தெடுக்கப்பட்ட மனிதரை கோத்திரங்கள் அனைத்திற்கும் ஒரு கலகத்திற்காக அப்சலோம் இரகசியமாக அனுப்பினான். அவனுடைய துரோகத்திட்டங்களை மறைக்க இப்போது மதபக்தி என்னும் போர்வை தெரிந்துகொள்ளப்பட்டது. நாடு கடத்தப்பட்டிருந்தபோது வெகு நாட்களுக்கு முன் செய்த ஒரு பொருத்தனை எப்ரோனில் செலுத்தப்பட வேண்டும். அப்சலோம் இராஜாவிடம் : நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவு கொடும். கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பிவரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியாதேசத்தில் கே சூரிலே குடியிருக்கும் போது, பொருத்தனை பண்ணினேன் என்று கூறினான். பிரியமான தகப்பன் அவனுடைய குமாரனிலிருந்த இந்த பக்தியின் சான்றினால் ஆறுதலடைந்தவனாக, ஆசீர்வாதத்தோடு அனுப்பினான். இப்போது இந்த சதித்திட்டம் முழுவதும் முதிர்ச்சியடைந்தது. அப்சலோமுடைய மாய்மாலத்தின் உச்ச செய்கை இராஜாவை குருடாக்க மாத்திரமல்ல, மக்களுடைய நம்பிக்கையை ஸ்தாபிக்கவும், இவ்விதம் தேவன் தெரிந்து கொண்ட இராஜாவிற்கு எதிராக கலகத்திற்கு அவனை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது,PPTam 961.1

    அப்சலோம் எப்ரோனுக்குச் சென்றான். எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறு பேர் அப்சலோமோடே கூடப் போனார்கள், அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள். மகன் மேல் தாங்கள் கொண்ட அன்பு தகப்பனுக்கு எதிராக கலகம் செய்ய தங்களை நடத்துகிறது என்பதை அறியாதவர்களாக இந்த மனிதர் போனார்கள். எப்ரோனில் வந்ததும் அப்சலோம் உடனடியாக அகி தோப்பேலை அழைத்தனுப்பினான். இவன் தாவீதின் முதன்மை ஆலோசகரில் ஒருவனான, ஞானத்திற்கான உயர்ந்த புகழைக் கொண்டவனாயிருந் தான். இவனுடைய கருத்துக்கள் தேவனுடைய வாக்கியங்களைப் போலவே பாதுகாப்பானதும் ஞானமுள்ளதுமாக கருதப்பட்டிருந்தது. அகிதோப்போல் இந்த சதிகாரரோடு சேர்ந்தான். அவனுடைய ஆதரவு அப்சலோமின் கொடியின் கீழ் தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து செல்வாக்கான மனிதர்களை சேர்க்க, அவன் காரியத்தை நிச்சயமான வெற்றியுள்ளதாகத் தோன்றச் செய்தது. கலகத்தின் எக்காளம் தொனித்தபோது, தேசம் எங்குமிருந்த இளவரசனின் வேவுகாரர்கள் அப்சலோம் இராஜாவானான் என்னும் செய்தியை பரப்பினர். அநேக மக்கள் அவனிடம் கூடினர்.PPTam 961.2

    இந்த நேரத்தில் எருசலேமிலிருந்த இராஜாவிற்கு ஒரு எச்சரிப்பு கொண்டு செல்லப்பட்டது. இராஜா தன்னுடைய சிங்காச னத்திற்கு வெகு அருகில் ஒரு கலகம் வெடிப்பதைக் காண ச டிதியாக எழுப்பப்பட்டான். அவனுடைய சொந்த மகன், அவன் நேசித்து நம்பியிருந்தவன், அவனுடைய கிரீடத்தையும் சந்தேகமில்லாமல் அவனுடைய உயிரையும் எடுக்க திட்டமிட்டுக்கொண்டிருந்தான். தன்னுடைய ஆபத்தில் தன்மேல் அதிக காலம் தங்கியிந்த மனச்சோர்வை உதறிவனாக, தன்னுடைய ஆதிக்காலத்தின் ஆவியோடு இந்த பயங்கரமான அவசரத்தை சந்திக்க தாவீது ஆயத்தமானான். வெறும் இருபது மைல்கள் தூரத்திலிருந்த எப்ரோனில் அப்சலோம் தன் படைகளைத் திரட்டிக்கொண்டிருந்தான். கலகக்காரர்கள் எருசலேமின் வாசல்களில் அதிசீக்கிரம் இருப்பார்கள்.PPTam 962.1

    தன்னுடைய அரண்மனையிலிருந்து தாவீது தன்னுடைய தலைநகரைப் பார்த்தான். வெடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம் - சங். 48:2. அதை படுகொலைக்கும் பேரழிவிற்கும் வெளிக்காட்டுவதைக் குறித்த நினைவினால் நடுங்கினான். அவனுடைய சிங்காச னத்திற்கு இன்னமும் உண்மையாக இருந்த மக்களை தன்னுடைய உதவிக்கு அழைத்து தன்னுடைய தலைநகரை காப்பாற்ற அவர்களை நிறுத்தவேண்டுமா? எருசலேமில் இரத்தம் ஓட அனுமதிக்க வேண்டுமா? அவனுடைய தீர்மானம் எடுக்கப்பட்டது. தெரிந்துகொள்ளப்பட்ட நகரத்தின் மேல்யுத்தத்தின் பயங்கரங்கள் விழக்கூடாது. அவன் எருசலேமை விட்டுச் செல்வான். பின்னர் அவனுடைய மக்களின் உண்மையை சோதித்து, அவனுக்கு ஆதரவாக திரளும் சந்தர்ப்பத்தை அவர்களுக்குக் கொடுப்பான். இந்த மாபெரும் நெருக்கடியில் பரலோகம் அவன்மேல் வைத்திருந்த அதிகாரத்தை பராமரிப்பது தேவனுக்கும் அவனது மக்களுக்கும் அவன் செய்யும் கடமையாக இருந்தது. போராட்டத்தின் இந்த பிரச்சனையை அவன் தேவனிடம் கொடுப்பான்.PPTam 962.2

    அவனால் நேசிக்கப்பட்ட மகனுடைய கலகத்தால், தாழ்மையிலும் துக்கத்திலும், தாவீது சிங்காசனத்திலிருந்தும், அவனுடைய அரண்மனையிலிருந்தும், தேவனுடைய பெட்டியிலிருந்தும் துரத்தப்பட்டவனாக எருசலேமின் வாசல்களைக் கடந்தான். மக்கள் மரண ஊர்வலத்தைப் போன்ற நீண்ட துக்க ஊர்வலத்தில் அவன் பின் சென்றனர். தாவீதின் மெய்க்காப்பாளரான கிரேத்தியரும், பிலேத்தியரும், ஈத்தாயின் கட்டளையின் கீழ் காத்தூரிலிருந்து வந்திருந்த அறுநூறு பேராகிய கித்தியரும் இராஜாவிற்குத் துணை சென்றனர், ஆனால் தாவீது குறிப்பிடக்கூடிய சுயநலமின்மையோடு, அவனுடைய பாதுகாப்பைத் தேடியிருந்த இந்த அந்நியர்கள் அவனுடைய பேரழிவிற்கு உட்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இருந்தான். அவனுக்காக அவர்கள் இந்த தியாகத்தைச் செய்ய ஆயத்தமாக இருந்ததில் அவன் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிக்காட்டினான். பின்னர் இராஜாகித்தியனாகிய ஈத்தாயிடம் : நீ எங்களுடனே கூட வருவானேன்? நீ திரும்பிப் போய், ராஜாவுடனேகூட இரு, நீ அந்நிய தேசத்தான், நீ உன் இடத்துக்குத் திரும்பிப் போகலாம். நீ நேற்றுத்தானே வந்தாய், இன்று நான் உன்னை எங்களோடே நடந்து வரும்படிக்கு அழைத்துக் கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்துக்குப் போகிறேன், நீ உன் சகோதரரையும் அழைத்துக் கொண்டு திரும்பிப்போ, கிருபையும் உண்மையும் உன்னோடேகூட இருப்பதாக என்று கூறினான்.PPTam 963.1

    ஈத்தாய் : ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும் இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்கிறேன் என்று பதிலளித்தான். இந்த மனிதர் புறஜாதி மார்க்கத்திலிருந்து யெகோவாவின் ஆராதனைக்கு மாறியிருந்தனர். இப்போது தங்களுடைய தேவனுக்கும் தங்களுடைய இராஜாவிற்கும் தங்கள் மெய்ப்பற்றை அவர்கள் மிக நேர்த்தியாக நிரூபித்தனர். மூழ்குவதைப்போன்று தோன்றியிருந்த அவனுடைய காரியத்திற்கு காண்பித்த பக்தியை தாவீது நன்றியுள்ள இருதயத்தோடு ஏற்றுக்கொண்டான். அனைவரும் கீதரோன் ஆற்றைக் கடந்து வனாந்தரத்தை நோக்கிய பாதையில் சென்றனர்.PPTam 963.2

    மீண்டும் ஊர்வலம் நின்றது. பரிசுத்த ஆடைகளை அணிந் திருந்த ஒரு கூட்டம் அவர்களைச் சந்தித்தது. சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டியை அவனோடேகூட இருந்து சுமக்கிற சகலலேவியரும் வந்தார்கள். தாவீதின் பின் சென்றவர்கள் இதை ஒரு மகிழ்ச்சியான சகுனமாக பார்த்தனர். பரிசுத்தமான அடையாளத்தின் இந்த சமூகம் அவர்களுடைய விடுதலையையும் முடிவான வெற்றியையுங்குறித்த உறுதிமொழியாக இருந்தது. தைரியமாக இருந்து இராஜாவிற்காக ஒன்று சேர அது மக்களை ஏவும். எருசலேமில் அது இல்லாதிருப்பது அப்சலோமைப் பின்னபற்றினவர்களுக்கு திகிலைக் கொண்டுவரும்.PPTam 964.1

    கர்த்தருடைய பெட்டியைக் கண்டதும் மகிழ்ச்சியும்PPTam 964.2

    ஆனால் விரைவாக மற்ற சிந்தனைகள் அவனுக்கு வந்தன. தேவனுடைய சுதந்தரத்திற்கு நியமிக்கப்பட்ட அதிபதியாக அவன் பவித்திரமான பொறுப்பிலிருந்தால் சொந்த விருப்பங்களல்ல, தேவனுடைய மகிமையும் அவர் மக்களின் நன்மையுமே இஸ்ரவேலின் இராஜாவுடைய மனதில் மிகவும் மேலானதாக இருக்கவேண்டும். கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணின் தேவன் எருசலேமைக்குறித்து: இது .... நான் தங்கும் இடம், (சங். 13214) என்று கூறியிருந்தார். தெய்வீக அதிகாரம் இல்லாது, ஆசாரியனாவது இராஜாவாவது அவருடைய சமூகத்தின் அடையாளத்தை அங்கேயிருந்து நகர்த்தும் அதிகாரத்தை பெற்றிருக்கவில்லை. தாவீது தெய்வீக கற்பனைக்கு இசைவாக தன்னுடைய இருதயமும் வாழ்க்கையும் இருக்கவேண்டும் என்றும், இல்லாத பட்சத்தில் வெற்றியைக் காட்டிலும் பேரழிவின் காரணமாகவே பெட்டி இருக்கும் என்று அறிந்தான். அவனுடைய மாபெரும் பாவம் எப்போதும் அவன் முன் இருந்தது. இந்தச் ச தித்திட்டத்தில் அவன் தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பைக் கண்டான். அவனுடைய வீட்டைவிட்டு விலகாத பட்டயம் இப்போது உருவப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தின் விளைவு என்னவாயிருக்கும் என்பதை அவன் அறியாதிருந்தான். அவர்களுடைய தெய்வீக அரசனின் சித்தத்தை உள்ளடக்கியிருந்து, அந்த ஆட்சி எல்லையினுடைய அரசியலமைப்பும் அதன் செழிப்பிற்கு அஸ்திபாரமுமாக இருந்த இந்த பரிசுத்த பிரமாணங்கள் அவனுக்காக தலைநகரிலிருந்து நகர்த்தப்படக்கூடாது.PPTam 964.3

    சாதோக்கிடம் : தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபைகிடைத்ததானால், நான் அதையும் அவர்வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார். அவர் : உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன், அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்று கட்டளை கொடுத்தான்.PPTam 965.1

    கூடவே தாவீது : நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? ஜனங்களைப் போதிக்க தேவனால் நியமிக்கப்பட்டவன் அல்லவோ என்றான். நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டு பேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும். எனக்கு அறிவிக்கிறதற்கு உங்களிடத்திலிருந்து செய்தி வருமட்டும், நான் வனாந்தரத்தின் வெளிகளிலே தரித்திருப்பேன் என்றான். கலகக்காரரின் அசைவுகளையும் நோக்கங்களையும் அறிந்து, அவர்களுடைய குமாரரான அகிமாஸ் மற்றும் யோனத்தான் வழியாக இரகசியமாக அவைகளை அறிவிப்பதன் வழியாக ஆசாரியர் பட்டணத்தில் அவனுக்கு நல்ல சேவை செய்யலாம்.PPTam 965.2

    ஆசாரியர்கள் எருசலேமிற்கு நேராகத் திரும்பின் போது பிரிந்து சென்ற கூட்டத்தின்மேல் ஒரு ஆழமான நிழல் விழுந்தது. அவர்களுடைய அரசன் தப்பியோடுகிறவன்; அவர்கள்தானும் துரத்தப்பட்டவர்கள்; தேவனுடைய பெட்டியாலும் கைவிடப் பட்டவர்கள் எதிர்காலம் பயத்தினாலும் எதிர்பார்ப்பினாலும் இருண்டிருந்தது. தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுது கொண்டு, ஒலிவ மலையின் மேல் ஏறிப்போனான், அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுது கொண்டு ஏறினார்கள். அப்சலோமோடே கட்டுப்பாடு பண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. மீண்டும் தன்னுடைய பேரிடரில் தன்னுடைய சொந்த பாவத்தின் விளைவுகளை உணரதாவீது நெருக்கப்பட்டான். திறமையானவனும் அரசியல் தலைவர்களில் மிகத் தந்திரமானவனுமான அகிதோப்போல் தாவீதை விட்டுச் சென்றது, அவனுடைய பேத்தியான பத்சேபாளுக்கு இழைக்கப்பட்ட தவறில் காட்டப்பட்ட குடும்ப அவமானத்தின் பழிவாங்குதலால் தூண்டப்பட்டிருந்தது.PPTam 965.3

    தாவீது : கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான். மலையின் உச்சிக்குச் சென்றபோதுPPTam 966.1

    தன்னுடைய ஆத்தும் பாரத்தை தேவன்மேல் வைத்து தெய்வீக இரக்கத்திற்காக தாழ்மையோடு மன்றாடி தாவீது ஜெபத்தில் பணிந்தான். அவனுடைய ஜெபம் உடனடியாக பதிலளிக்கப்பட்ட தைப் போலத் தோன்றியது. ஞானமும் திறமையுமான ஆலோச கனாயிருந்து தாவீதிற்கு உண்மையான நண்பனாக தன்னைக் காண்பித்திருந்த அர்க்கியனாகிய ஊசாய் தன்னுடைய அங்கி கிழிக்கப்பட்டவனாகவும் தலையில் மண்ணை இரைத்தவனாகவும், தன்னுடைய சிங்காசனத்தை இழந்து நாடோடியாக ஓடிக்கொண்டிருந்த இராஜாவோடு இருக்கும்படியாக இப்போது வந்தான். உண்மையும் விசுவாச இருதயமும் கொண்டிருந்த இந்த மனிதனில், தலைநகரின் ஆலோசனைகளில் இராஜாவின் விருப்பங்களுக்காக சேவை செய்ய தேவைப்பட்ட ஒருவனை தெய்வீக அறிவூட்டலினால் பெற்றதைப்போல் தாவீது கண்டான். தாவீதின் வேண்டுதலின்படி, அப்சலோமிற்கு தன்னுடைய சே வையைக் கொடுக்கவும் அகிதோப்பேலின் தந்திரமான ஆலோசனையை தோற்றக்கடிக்கவும் ஊசாய் எருசலேமிற்குத்திரும்பினான்.PPTam 966.2

    இருளில் பெற்ற இந்த வெளிச்சத்தின் ஒளிக்கதிரோடு இராஜாவும் அவனைப் பின்தொடர்ந்தவர்களும் ஒலிவ மலையின் கிழக்குச் சரிவில், மலைகள் மற்றும் பாழான இடங்கள் வழியாகவும், மலை இடுக்குகள் வழியாகவும், கற்களும் முட்களுமான செங்குத்தான வழிகளிலும் யோர்தானை நோக்கித் தொடர்ந்தனர். தாவீது ராஜா ப கூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக் கொண்டே நடந்து வந்து, சகல ஜனங்களும், சகல பலசாலிகளும் தாவீதின் வலது புறமாகவும் இடது புறமாகவும் நடக்கையில், தாவீதின் மேலும் தாவீது ராஜாவுடைய சகல ஊழியக்காரரின் மேலும் கற்களை எறிந்தான். சீமேயி அவனைத் தூஷித்து : இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ. சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன் மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப் பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக் கொடுத்தார், இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய், நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.PPTam 966.3

    தாவீதின் செழிப்பில், தன்னுடைய வார்த்தையிலாகிலும் செய்கையிலாகிலும் தான் உண்மையான குடிமகனல்ல என்று சீமேயி காண்பித்திருக்கவில்லை. ஆனால் இராஜாவின் துன்பத்தில் இந்த பென்யமீனன் அவனுடைய மெய்யான குணத்தை வெளிக்காட்டினான். அவன் தாவீதை அவனுடைய சிங்காசனத்தில் கனம் பண்ணியிருந்தான். ஆனால் அவனுடையPPTam 967.1

    சிறுமையில் சபித்தான். கீழ்த்தரமும் சுயநலமுமானவனாக, மற்றவர்களையும் தன்னுடைய குணத்திலேயே அவன் பார்த்தான். சாத்தானால் ஏவப்பட்டு, தேவன் சிட்சித்திருந்தவன்மேல் தன்னுடைய வெறுப்பைக் காண்பித்தான். துன்பத்தில் இருக்கும் ஒருவனை வெற்றி கொள்ளவோ தூற்ற வோ அல்லது துயரப்படுத்தவோ மனிதனை நடத்துகிற ஆவி சாத்தானின் ஆவி தாவீதிற்கு எதிராக சீமேயியின் குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய்யானவை அடித்தளமற்றதும் தீங்கான அவதூறுமாயிருந்தது. தாவீது சவுலுக்காவது அல்லது அவன் வீட்டாருக்காவது தவறிழைத்ததன் குற்றத்தில் இல்லை. சவுல் அவனுடைய வல்லமையில் முழுமையாக இருந்த போது அவனைக் கொன்றிருக்கலாம். அப்படிச் செய்யாமல் அவனுடைய அங்கியை மாத்திரம் வெட்டியிருந்தான். ஆண்டவர் அபிஷேகம் பண்ணியிருந்தவனுக்கு இவ்விதம் அவமரியாதையை காண்பித்ததற்காக அவன் தன்னை நிந்திக்கவும் செய்தான்.PPTam 967.2

    அவன்தானும் இரைமிருகத்தைப்போல வேட்டையாடப்பட்ட போதும், மனித உயிரின் மேல் தாவீது வைத்திருந்த பரிசுத்தமான கவனத்தைக் குறித்து குறிப்பான சான்று கொடுக்கப்பட்டது. ஒருநாள் அதுல்லாம் குகையில் அவன் மறைந்திருந்தபோது அவனுடைய வாலிப வாழ்க்கையின் பிரச்சனையில்லாத சு தந்தரத்திற்கு அவனுடைய நினைவுகள் திரும்ப, தப்பியோடினவன் : பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின் மேல் ஆவல் கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீ ர் கொண்டு வருகிறவன் யார் (2 சாமு. 23:13-17) என்று வியந்தான். பெத்லகேம் அந்தக் காலத்தில் பெலிஸ்தரின் கைகளில் இருந்தது. ஆனால் தாவீதின் படையைச் சேர்ந்த மூன்று பலசாலிகள் காவலைத்துளைத்துச்சென்று பெத்லகேமின் தண்ணீரைதாவீதிற்குக் கொண்டுவந்தனர். அவனால் அதைக் குடிக்க முடியவில்லை . தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச் செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று கூறினான். அந்தத் தண்ணீரை பயபக்தியோடு தேவனுக்குக் காணிக்கையாக ஊற்றினான். தாவீது ஒருயுத்த மனிதனாயிருந்தான். அவனுடைய வாழ்க்கையின் அதிக காலம் கொடுமையின் காட்சி களுக்கு மத்தியில் செலவழிந்திருந்தது. ஆனாலும், இப்படிப்பட்ட கடும் சோதனையைக் கடந்து வந்த அனைவரிலும் சிலர் மாத்திரமே, கடினப்படுத்தி சன்மார்க்கத்தை தகர்க்கும் அதன் செல்வாக்கினால் தாவீதைப்போல் பாதிக்கப்படாது இருந்திருக்கிறார்கள்.PPTam 967.3

    அவனுடைய பலசாலியான தளபதிகளில் ஒருவனான தாவீதின் சகோதரியின் மகன் அபிசாய், சீமேயியின் அவமதிப்பான வார்த்தைகளைக் கேட்கக்கூடாதிருந்தான். அவன் : அந்தச் செத்த நாய் ஆண்டவனைத் தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமா? என்றான். ஆனால் இராஜா அவனைத் தடுத்து, இதோ, என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும் அவன் அப்படிச் செய்யக்கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிபந்தனைகளுக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார். என்று கூறினான்.PPTam 968.1

    மனச்சாட்சி கசப்பானதும் சிறுமைப்படுத்துகிறதுமான உண்மைகளை தாவீதிற்கு பூரணமாக சொல்லிக்கொண்டிருந்தது. அவனுடைய விசுவாசமான குடிகள் சடிதியான அவனுடைய எதிர்காலத்தின் திருப்புமுனையைக்கண்டு அதிசயித்தனர். அது இராஜாவிற்கு இரகசியமாக இல்லை. இதைப்போன்ற அச்சம் நிறைந்த நேரங்கள் அவனுக்குப் பல வேளைகளில் இருந்திருக்கிறது. தேவன் தன்னுடைய பாவங்களை இவ்வளவு காலம் பொறுத்திருந்து, பழிவாங்குவதை தாமதப்படுத்தியிருந்ததைக் குறித்து அவன் அதிசயித்தான். இப்போது அவசரமும் வருத்தமுமான ஓட்டத்தில், வெறுங்காலோடு, அரச அங்கி சணலாடைக்கு மாற்றப்பட்டதாக, அவன்பின் சென்றவர்களின் புலம்பல்கள் மலைகளில் எதிரொலிப்பை எழுப்பிவிட, அவன் பிரியமான தலைநகரைக்குறித்து அவனுடைய பாவத்தின் காட்சி நடந்த இடத்தைக் குறித்து நினைத்தான். தேவனுடைய நன்மையையும் நீடிய பொறுமையையும் நினைத்தபோது, அவன் நம்பிக்கையற்றவனாக இருக்கவில்லை . ஆண்டவர் இன்னும் அவனிடம் இரக்கத்தோடு இடைப்படுவார் என்று அவன் உணர்ந்தான்.PPTam 968.2

    தவறு செய்கிற அநேகர் தங்களுடைய சொந்தப் பாவங்களுக்கு தாவீதின் விழுகையைச் சுட்டிக்காட்டி சாக்குக் கொடுக்கின்றனர். ஆனால் எத்தனை வெகு சிலர் தாவீதின் மனவருத்தத்தையும் தாழ்மையையும் வெளிக்காட்டுகின்றனர் ! அவன் வெளிக்காட்டின் பொறுமையோடும் மனபலத்தோடும் எத்தனை பேர் கடிந்துகொள்ளுதலையும் தண்டனையையும் சகிப்பார்கள்? அவன் தன் பாவத்தை அறிக்கையிட்டிருந்து, தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரனாக, தன்னுடைய கடமையைச் செய்யவருடங்களாகத் தேடியிருந்தான். தன்னுடைய இராஜ்யத்தை மேற்கொண்டுவர அவன் உழைத்திருந்தான். அவனுடைய ஆட்சியின்கீழ் இதற்கு முன் ஒருபோதும் பெற்றிராத பலத்தையும் செழிப்பையும் அது அடைந்திருந்தது. தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்காக ஐசுவரியமான பொருட்களை அவன் சேகரித்திருந்தான். இப்போது அவனுடைய வாழ்நாளின் அனைத்து ஊழியமும் அப்புறம் துடைத்தெறியப்படுமோ? அர்ப்பணிப்பான வருடங்களின் உழைப்புகளும், ஞானமும் பயபக்தியும் அனுபவமும் மரியாதையுமான உழைப்பும், தேவனுடைய கனத்தையும் இஸ்ரவேலின் செழிப்பையும் கருத்தில் கொள்ளாத கட்டுப்பாடற்ற துரோக மகனின் கைகளில் தாண்டிப் போகுமா? இந்த மாபெரும் துன்பத்தில் தேவனுக்கு எதிராக முறுமுறுப்பது தாவீதிற்கு எவ்வளவு இயல்பானதாகத் தோன்றியிருக்கும்!PPTam 968.3

    ஆனால் அவன் தன்னுடைய சொந்தப் பாவத்தில், பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டான். தாவீதின் இருதயத்தை ஏவியிருந்த ஆவியை மீகா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் விளக்குகிறது. நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ் செய்தேன், அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்கு மட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன் - மீகா 7:8, 9. ஆண்டவர் தாவீதைக் கைவிடவில்லை . மிகக் கொடுமையான தவறுமற்றும் அவமானத்தின் கீழிருந்த அவனுடைய அனுபவத்தின் இந்தப் பகுதியில் அவன் தன்னை தாழ்மையானவனாகவும் சுயநலமற்றவனாகவும் தாராளமானவனாகவும் அடங்குகிறவனாகவும் காண்பித்தது, அவனுடைய முழு அனுபவத்திலும் மிக நேர்த்தியானவைகளில் ஒன்றாக இருந்தது. வெளிப்படையான, மிக ஆழமான இந்த சிறுமையின் மணி நேரத்தில் இருந்ததைப்போன்று இஸ்ரவேலின் அதிபதி வேறு ஒருபோதும் பரலோகத்தின் பார்வையில் மிகவும் மெய்யாகவே பெரியவனாக இருந்ததில்லை.PPTam 969.1

    பாவத்தில் கண்டிக்கப்படாதிருக்கவும், தேவனுடைய நியமங்களை மீறின் போது சமாதானத்திலும் செழிப்பிலும் தன்னுடைய சிங்காசனத்தில் அமரவும் தேவன் தாவீதை அனுமதித்திருந்தால், அவன் சரித்திரத்தை வேதாகம மதத்திற்கு நிந்தனையாக குறிப்பிட்டுக் காட்ட சந்தேகிக்கிறவர்களுக்கும் சமய நம்பிக்கையற்றவர்களுக்கும் சில காரணங்கள் கிடைத்திருக்கும். ஆனால் தாவீதை இந்த அனுபவத்திற்குள் கடக்கச் செய்ததால், தம்மால் பாவத்தை சகித்துக்கொள்ளவும் முடியாது அதற்கான ச ராக்குப்போக்குகளை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று ஆண்டவர் காண்பிக்கிறார். பாவத்தை நடத்துவதில் எப்படிப்பட்ட மாபெரும் முடிவுகளை தேவன் தமது பார்வையில் வைத்திருக்கிறார் என்பதைக் காண தாவீதின் சரித்திரம் நம்மை நடத்துகிறது. மிக இருண்ட நியாயத்தீர்ப்புகளின் வழியாகவும் அவருடைய கிருபையையும் நன்மையான நோக்கங்களின் செயல்பாடுகளையும் தடங்காண அது நம்மைத் தகுதிப்படுத்துகிறது. அவர் தாவீதை கோலின் கீழ் கடந்து வரச் செய்தார். ஆனால் அவனை அழிக்கவில்லை. உலை சுத்திகரிப்பதற்கே, பாசிப்பதற்கு அல்ல. ஆண்டவர் : என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறி நடந்தால், அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன். ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிச்காமலும் இருப்பேன் (சங். 8931-33) என்று கூறுகிறார்.PPTam 970.1

    தாவீது எருசலேமை விட்டுச் சென்றதும் அப்சலோமும் அவனுடைய படையும் நுழைந்து இஸ்ரவேலின் அரண்களை எந்தப் போராட்டமுமின்றி ஆக்கிரமித்துக் கொண்டது. புதிதாக முடிசூட்டப்பட்ட அரசனை முதலில் வாழ்த்தினவர்களில் ஊசாயும் இருந்தான். இளவரசன் தன்னுடைய தகப்பனின் பழைய நண்பனும் ஆலோசகனுமாயிருந்தவனுடைய இணக்கத்திற்காக ஆச்சரியமும் களிப்பு மடைந்தான். அப்சலோம் வெற்றியைக் குறித்து நம்பிக்கையாயிருந்தான். இவ்வளவு தூரம் அவனுடைய ச தித்திட்டங்கள் செழிப்படைந்திருந்தன. தன்னுடைய சிங்காச னத்தை உறுதிப்படுத்தி, தேசத்தின் நம்பிக்கையை பெறும் ஆசையில் ஊசாயை அவைக்கு வரவேற்றான்.PPTam 970.2

    அப்சலோம் இப்போது பெரிய படையினால் சூழப்பட்டிருந் தான். ஆனால் அது யுத்தத்திற்குப் பழக்கமில்லாத மனிதர்களால் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரையிலும் அவர்கள் போராட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. தாவீதின் சூழ்நிலை நம்பிக்கையற்றது அல்ல என்று அகி தோப்போல் நன்கு அறிந்திருந்தான். தேசத்தின் மிகப் பெரிய பகுதி இன்னமும் அவனுக்கு உண்மையாக இருந்தது. இராஜாவிற்கு உண்மையாக இருந்து யுத்தத்தில் பழகியிருந்த யுத்த வீரர்களால் அவன் சூழப்பட்டிருந்தான். அவனுடைய படைதிறமையும் அனுபவமுங் கொண்ட தளபதிகளால் நடத்தப்பட்டிருந்தது. புதிய அரசனுக்கு ஆதரவாக எழும்பின் முதல் உற்சாக கொந்தளிப்பிற்குப்பின் ஒரு எதிர்விளைவு வரும் என்று அகிதோப்போல் அறிந்திருந்தான். கலகம் தோல்வியடையுமானால் அப்சலோம் தன் தகப்பனோடு ஒப்புரவைப் பெறக்கூடும். அப்போது அகிதோப்போல் முதன்மை ஆலோசகனாக கலகத்திற்கான முதல் முக்கிய காரணனாக வைக்கப்படுவான். அவன் மீது மிகவும் பாரமான தண்டனைகள் விழும். அப்சலோம் தன் அடிகளை பின்னாக வைப்பதை தடுக்கும்படி, ஒப்புரவாவதை கூடாத காரியமாக்க முழு தேசத்தின் பார்வையிலும் செயல்பட ஆலோசனை கூறினான்.PPTam 970.3

    பாதாளத்தின் தந்திரத்தோடு இந்த தந்திரசாலி, முறைகேடான கலகத்தோடு முறைகேடான குற்றத்தையும் இணைக்க அப்சலோமை நெருக்கினான். அனைத்து இஸ்ரவேலின் பார்வையிலும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளை தனக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். கிழக்கத்திய நாடுகளின் வழக்கத்தின்படி, இவ்விதம் தன் தகப்பனின் சிங்காசனத்தை தான் எடுத்துக் கொண்டதாக அறிவிக்க வேண்டும். அப்சலோம் இந்த தீய ஆலோசனையை செயல்படுத்தினான். இவ்விதம், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; .... நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய் விப்பேன் (2சாமு. 1211, 12) என்று தீர்க்கதரிசியினால் தாவீதிற்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை நிறைவேறி யது. தேவன் இந்த தீமையான செயல்களைத் தூண்டினார் என்றல்ல, தாவீதின் பாவத்தினிமித்தம் அவைகளைத் தடுக்க அவர் தம்முடைய வல்லமையை உபயோகிக்கவில்லை.PPTam 971.1

    அகிதோப்போல் அவனுடைய ஞானத்தினிமித்தம் மிக உயர் வாக மதிக்கப்பட்டிருந்தான். ஆனாலும் தேவனிடமிருந்து வரும் வெளிச்சம் இல்லாதிருந்தான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். நீதி 910. இது அகிதோப்பேலிடம் இல்லாதிருந்தது. அவ்வாறில்லையெனில் துரோகத்தின் வெற்றியை முறைகேடான குற்றத்தின் மேல் வைத்திருக்கமாட்டான். தங்களுடைய திட்டங்களை மேற்கொள்ள, எல்லாவற்றையும் ஆட்சி செய்யும் ஒருவர் இல்லை என்பதைப் போல் கெட்ட இருதயமுள்ள மனிதர் துன்மார்க்கத்தைத் திட்டம் பண்ணுகிறார்கள். ஆனால் பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். சங்24. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை, என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள், தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும் (நீதி. 1:30-32) என்று ஆண்டவர் அறிவிக்கிறார்.PPTam 971.2

    தன்னுடைய பாதுகாப்பைச் சம்பாதிக்கும் திட்டத்தில் வெற்றியடைந்தவனாக தாவீதிற்கு எதிரான உடனடி செயலின் அவசியத்தைக் குறித்து அகிதோப்பேல் அப்சலோமை துரிதப்படுத்தினான். நான் பன்னீராயிரம் பேரைத்தெரிந்து கொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும். அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போய், அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன், அப்போது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவ தினால், நான் ராஜா ஒருவனை மாத்திரம் வெட்டி, ஜனங்களை யெல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப்பண்ணுவேன் என்று கூறினான். இந்தத் திட்டம் இராஜாவின் ஆலோசகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது செய்யப்பட்டிருக்குமானால் தாவீரை தக் காக்க ஆண்டவர் தலையிடாத பட்சத்தில் அவன் நிச்சயமாக கொல்லப்பட்டிருப்பான். ஆனால் புகழ்பெற்ற அகிதோப்போலைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் காரியங்களை நடத்தி வந்தது. இப்படிக் கர்த்தர் அப்சலோமின் மேல் பொல்லாப்பை வரப்பண்ணும் பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.PPTam 972.1

    ஊசாய் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை. வேவுகாரன் என்ற சந்தேகம் அவன் மேல் வைக்கப்படாதபடி அழைக்கப்படாதபோது அவன் நுழைய மாட்டான். ஆனால் கூட்டம் கலைந்த பிறகு தன் தகப்பனுடைய ஆலோசகன்மேல் உயர்ந்த மதிப்பு வைத்திருந்த அப்சலோம் அகிதோப்பேலின் திட்டத்தை அவன் முன் காண்பித்தான். கொடுக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படுமானால் தாவீது மரிப்பான் என்பதை ஊசாய் கண்டான். எனவே, அகித்தோப்போல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான். மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்த வீரனுமாயிருக் கிறார், அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார். இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார் என்று கூறினான். அப்சலோமின் படைகள் தாவீதைத் தொடருமானால் அவர்கள் இராஜாவை பிடிக்கமாட்டார்கள். ஒருவேளை பின்னிடுவார்களானால் அது அவர்களை சோர்வடையச் செய்து அப்சலோமின் காரியத்திற்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும் என்று வாதிட்டான். ஏனெனில் உம்முடைய தகப்பன் சவுரிய வான் என்றும் அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள் என்றான். மேலும் வல்லமையை வெளிக்காட்டுவதில் விருப்பமுடைய வீணானதும் சுயநலமுமான இயல்வை கவருகிற ஒரு திட்டத்தை அவன் யோசனையாகக் கூறினான். நான் சொல்லுகிற யோசனையாவது, தான் முதல் பெயெர்செபா மட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர் தானே கூட யுத்தத்துக்குப் போகவேண்டும். அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின் மேல் இறங்குவது போல் அவர்மேல் இறங்குவோம், அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை. ஓரு பட்டணத்திற்குள் பு குந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின் மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.PPTam 972.2

    அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் : அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள். ஆனால் வஞ்சிக்கப்படாத ஒருவன் அப்சலோமினுடைய அழிவிற்கேதுவான தவறின் விளைவுகளை முன்னதாகவே தெளிவாகக் கண்ட ஒருவன் இருந்தான். கலகக்காரரின் முயற்சி தோல்வியடைந்ததை அகிதோப்பேல் கண்டான். இளவரசனின் முடிவு என்னவாக இருப்பினும் அவனுடைய மகா பெரிய குற்றத்தைத் தூண்டிவிட்ட ஆலோசகனுக்கு அங்கே நம்பிக்கை இல்லை. அகிதோப்பேல் அப்சலோமை கலகத்தில் உற்சாகப் படுத்தியிருந்தான். மிகவும் அருவருக்கப்படத்தக்க துன்மார்க் கத்திற்கு அவன் தகப்பனுடைய கன்னத்திற்கேதுவாக அவனுக்கு ஆலோசனை சொல்லியிருந்தான். தாவீதை கொல்லும் படி அறிவுறுத்தி அதை நிறைவேற்ற திட்டமும் பண்ணியிருந்தான். இராஜாவுடனான தன் சொந்த ஒப்புரவாகுதலுக்கான கடைசிச் சந்தர்ப்பத்தையும் அவன் விட்டிருந்தான். இப்போது அப்சலோ மாலும் அவனுக்கு முன்பாக வேறொருவன் முக்கியப்படுத்தப் பட்டான் பொறாமையும் கோபமும் விரக்தியும் அடைந்த அகிதோப் போல் தன் கழுதையின் மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரில் இருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்று கொண்டு செத்தான். இப்படிப்பட்டதே தன்னுடைய அனைத்துத் திறமைகளோடும் தேவனை தன்னுடைய ஆலோசகராக வைக்காத ஒருவனுடைய ஞானத்தின் விளைவு . சாத்தான் மனிதனை முகஸ்துதி செய்யும் வாக்குத்தத்தங்களால் மயக்குகிறான். ஆனால் பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23) என்பது கடைசியில் ஒவ்வொரு ஆத்துமாவினாலும் கண்டறி யப்படும்.PPTam 973.1

    நிலையற்ற இராஜாவால் தன்னுடைய ஆலோசனை எடுத்துக் கொள்ளப்படும் என்பதில் ஊசாய் நிச்சயமற்றிருந்து, தாமதிக்காது யோர்தானைத் தாண்டி தப்பிச் செல்லும்படி தாவீதை எச்சரிக்க நேரத்தை வீணாக்காதிருந்தான். தங்கள் குமாரர் மூலமாக அதை அனுப்பவிருந்த ஆசாரியர்களிடம் ஊசாய். இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனை சொன்னான், நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன். இப்பொழுதும் நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளில் தங்க வேண்டாம் ; ராஜாவும் அவரோடிருக்கிற சகல ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்குத் தாமதம் இல்லாமல் அக்கரைப்பட வேண்டும் என்று செய்தி அனுப்பினான்.PPTam 974.1

    வாலிபர்கள் சந்தேகிக்கப்பட்டு பின்தொடரப்பட்டனர். எனினும் ஆபத்தான ஊழியத்தை நடப்பிப்பதில் அவர்கள் வெற்றியடைந்தனர். முதல் நாள் ஓட்டத்தின் உழைப்போடும் வருத்தத்தோடும் இருந்த தாவீது, அவனுடைய குமாரன் அவன் உயிரை தேடிக்கொண்டிருப்பதால் அந்த இரவில் கண்டிப்பாக யோர்தானை கடக்க வேண்டும் என்ற செய்தியைப் பெற்றுக் கொண்டான்.PPTam 974.2

    கொடுமையாகதவறிழைக்கப்பட்ட தகப்பனும் இராஜாவுமாக இருந்தவனுடைய உணர்வுகள் இந்த பயங்கரமான ஆபத்தில் என்னவாயிருந்தன? பராக்கிரமசாலி, யுத்த வீரன், ஒரு இராஜா, அவனுடைய வார்த்தை சட்டமாயிருந்தது. அப்படிப்பட்டவன் தான் நேசித்து திளைத்திருந்து ஞானமின்றி நம்பியிருந்த குமாரனால் காட்டிக்கொடுக்கப்பட்டு, தவறிழைக்கப்பட்டு, கனம் மற்றும் விசுவாசத்தின் பலமான கட்டுகளால் அவனோடு கட்டப்பட்டிருந்த பிரஜைகளால் தவறிழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு எப்படிப்பட்ட வார்த்தைகளில் தாவீது தன் ஆத்துமாவின் உணர்வுகளை ஊற்றுகிறான்? மிக இருண்ட போராட்டத்தின் மணி வேளைகளில் தாவீதின் இருதயம் தேவன் மேல் தங்கியிருந்தது.PPTam 975.1

    அவன். கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக் கிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். நான் படுத்து நித்திரை செய்தேன் ; விழித்துக்கொண்டேன், கர்த்தர் என்னைத் தாங்குகிறார். எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன் . கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போட்டீர். இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின் மேல் இருப்பதாக (சங்.3:1-8) என்று பாடினான்.PPTam 975.2

    தாவீதும் அவன் கூட்டத்தாரெல்லாரும் போர்வீரரும் அனுபவமும் மதிப்பும் கொண்ட ஆலோசகரும், வயதானவர்களும் வாலிபரும், பெண்களும் குழந்தைகளும் இரவின் இருளில் ஆழமும் வேகமுமாக ஓடியிருந்த ஆற்றைக் கடந்தனர். பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை .PPTam 975.3

    தாவீதும் அவனுடைய படைகளும் இஸ்போசேத்தின் சிங்காச னமிருந்த மக்னாயீமிற்குச் சென்றனர். இது பலமாக பாதுகாக் கப்பட்டிருந்து, ஒருவேளையுத்தம் ஏற்படுமானால் ஒதுங்குவதற்குத் தகுதியான இடமாக மலைப்பட்டணங்களால் சூழப்பட்டிருந்தது. இந்த தேசம் நன்கு வளமாயிருந்தது; மக்கள் தாவீதின் காரியத்திற்கு நண்பர்களாக இருந்தனர். இங்கே அநேக ஆதரவாளர்கள் அவ னோடு சேர்ந்தனர். ஐசுவரியவான்களான கோத்திரத்தார் ஏராளமான உணவுகளையும் தேவையான பொருட்களையும் பரிசா கக் கொடுத்தனர்.PPTam 975.4

    ஊசாயின் ஆலோசனை தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை தாவீதிற்குக் கொடுத்து அதன் நோக்கத்தை நிறைவேற்றியது. ஆனால் கண்மூடித்தனமும் மூர்க்கமுமான இளவரசனை அதிக காலம் கட்டுப்படுத்த முடியவில்லை . விரைவில் அவன் தன் தகப் பனைத் துரத்திச் சென்றான். அப்சலோமும் சகல இஸ்ரவேல ரோடுங்கூட யோர்தானைக் கடந்தான். அப்சலோம் தாவீன் சகோதரியான அபிகாயிலின் மகனான அமாசாவை தன் படைக்கு தளபதியாக்கியிருந்தான். அவனுடைய படை பெரியதாக இருந்தது. எனினும் ஒழுங்கற்றதும் அவனுடைய தகப்பனின் அனுபவப்பட்ட படைவீரரோடு எதிர்த்து நிற்க ஆயத்தமற்றதாகவும் இருந்தது.PPTam 976.1

    யோவாப், அபிசாய், கித்தியனாகிய ஈத்தாய், இவர்களின்கீழ் தாவீது தன் படைகளை மூன்று பட்டாளங்களாகப் பிரித்தான். போர்க்களத்தில் தன்னுடைய படையை தானே நடத்துவது அவனுடைய நோக்கமாக இருந்தது. ஆனால் இதற்கு படையின் அதிபதிகளும் ஆலோசகரும் மக்களும் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்து, நீர் புறப்படவேண்டாம், நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம் பேருக்குச் சரி, நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள். அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் (2 சாமு. 183, 4) என்றான்.PPTam 976.2

    பட்டணத்தின் சுவர்களிலிருந்து பார்த்தபோது கலக படையின் நீண்ட வரிசைகள் முழுவதும் காணப்பட்டது. அபகரிப்போன் பரந்த சேனையோடு இருந்தான். அதோடு ஒப்பிட்ட போது தாவீதின் படைகையளவே இருந்தது. ஆனால் எதிர்க்கும் படையை இராஜா பார்த்தபோது அவன் மனதில் வந்த முதல் சிந்தனை கிரீடமோ இராஜ்யமோ அல்ல, யுத்தத்தின் விளைவை சார்ந்திருந்த அவனுடைய சொந்த உயிரும் அல்ல. தகப்பனுடைய இருதயம் கலகக்கார மகன் மேல் இருந்த அன்பினாலும் பரிதாபத்தினாலும் நிறைந்தது. படை பட்டணத்தின் வாசலிலிருந்து சென்ற போது தாவீது தனக்கு உண்மையான படைவீரரை உற்சாகப்படுத்தி, இஸ்ரவேலின் தேவன் அவர்களுக்கு வெற்றி தருவார் என்று நம்பிச் செல்லும்படியாகக்கூறினான். இங்கே கூட அப்சலோமின் மேலிருந்த அன்பை அவனால் அடக்க முடியவில்லை . முதல் வரிசையை நடத்தின் யோவாப் அரசனைக் கடந்தபோது, நூற்றுக்கணக்கான யுத்தக்களங்களை வென்றிருந்த அவன், பெருமையான தன் தலையை அரசனின் கடைசி செய்தியைக் கேட்பதற்காக தாழ்த்தி னான். அப்போது நடுங்கும் குரலில் தாவீது : பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கூறினான். அபிசாயும் ஈத்தாயும் பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்ற அதே கட்டளையைப் பெற்றார்கள். ஆனால் அவனுடைய இராஜ்யத்தைக் காட்டிலும், அவனுடைய சிங்காசனத்திற்கு விசுவாசமாயிருந்த குடிகளைவிடவும், அப்சலோம்தான் அவனுக்கு மிகவும் நெருக்க மானவன் என்று அறிவிப்பதைப்போன்று தோன்றிய இராஜாவின் விசாரம், இயற்கைக்கு மாறான மகனுக்கு எதிரான வீரர்களின் கோபத்தை அதிகப்படுத்தவே செய்தது.PPTam 976.3

    யுத்த இடம் யோர்தானுக்கு அருகேயிருந்த ஒரு காடாக இருந்தது. அது மிக அதிக எண்ணிக்கையிலான அப்சலோமின் படைக்கு சாதகமற்றதாகவே இருந்தது. அந்தப் புதருக்கும் சதுப்பு நிலத்திற்கும் நடுவில் ஒழுங்கற்ற இந்த படைகள் குழப்பமடைந்து சமாளிக்கக்கூடாததாயிற்று. இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சே வகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றைய தினம் இருபதினாயிரம் பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று. அந்த நாளில் தான் தோல்வியடைந்ததைக் கண்ட அப்சலோம் தப்பியோடுவதற்காகத் திரும்பினான். அப்போது பரந்திருந்த ஒரு மரத்தின் கிளைகளில் அவன் தலை மாட்டிக் கொண்டது. அவனுடைய கழுதை அவனுக்குக் கீழிருந்து தாண்டிச் சென்றது. உதவியற்றவனாக அவன் தன்னுடைய சத்துருக்களுக்கு இரையாகத் தொங்கிக்கொண்டிருந்தான். இந்த நிலையில் அவன் ஒருவீரனால் கண்டுபிடிக்கப்பட்டான். இராஜாவை அதிருப்திப்படுத்தும் பயத்தில் அப்சலோமை விட்டுவைத்த அவன், தான் கண்டதை யோவாபிடம் அறிவித்தான். யோவாப் எந்த வித மன உளைச்சலாலும் கட்டுப்படுத்தப்படவில்லை. அவன் அப்சலோமை நண்பனாக்கியிருந்தான். தாவீதோடு ஒப்புரவாவதற்கு இரண்டு முறை அவனுக்கு உதவியிருந்தான். அந்த நம்பிக்கை வெட்கத்திற்கேதுவாக காட்டிக்கொடுக்கப்பட்டிருந்தது. யோவாபின் இடைப்படு தலினால் அடைந்த ஆதாயங்கள் இல்லாத பட்சத்தில் அப்சலோமின் இந்தக் கலகம் அதன் அனைத்து பயங்கரங்களோடும் நடந்திருக் காது. இப்போது இந்த அனைத்து தீமையையும் தூண்டினவனை ஒரே அடியில் அழிப்பது யோவாபின் வல்லமையில் இருந்தது. தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்ச லோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான். அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன் மேல் மகாபெரியகற்குவியலைக் குவித்தார்கள்.PPTam 977.1

    இஸ்ரவேலில் கலகத்தைத் தூண்டினவர்கள் இவ்விதம் அழிந்தனர். அகிதோப்போல் தன் சொந்தக் கைகளால் மரணமடைந்தான். யாருடைய மகிமையான அழகு இஸ்ரவேலின் பெருமையாக இருந்ததோ அந்த இளவரசனான அப்சலோம், அவனுடைய வாலிபத்தின் பலத்தில் வெட்டப்பட்டான். மரித்த அவன் சரீரம் ஒரு குழியில் போடப்பட்டு, நித்தியமான நிந்தனையின் அடையாளமாக கற்குவியலால் மூடப்பட்டது. அவன் உயிரோடிருந்தபோது இராஜாவின் பள்ளத்தாக்கில் தனக்கு ஒரு விலையுயர்ந்த நினைவுச்சின்னத்தை நிறுத்தியிருந்தான். ஆனால் அவனுடைய கல்லறையைக் குறிப்பிட்ட நினைவுச்சின்னம் - வனாந்தரத்தில் இருந்த கற்குவியல்!PPTam 978.1

    கலகத்தின் தலைவன் கொல்லப்பட, யோவாப் எக்காள சத்தத்தினால் ஓடிக்கொண்டிருந்த சேனையைப் பின்தொடருவ திலிருந்து படையைத் திரும்ப அழைத்தான். செய்தியை இராஜாவிற்குக் கொண்டு செல்ல தூதுவர்கள் உடனடியாக அனுப்பப்பட்டனர்.PPTam 978.2

    பட்டணத்தின் சுவரிலிருந்த காவல்காரன் யுத்த களத்தை நோக்கியிருந்து, ஒரு மனிதன் தனியாக ஓடிவருவதைக் கண்டுபிடித்தான். விரைவில் இரண்டாமவன் வந்தான். முதலாமவன் அருகே வந்தபோது வாசலருகே காத்திருந்த இராஜாவிடம் காவல்காரன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் குமாரன் அகிமாசுடைய ஓட்டம் போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா : அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான். அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி : சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய ஆண்டவனுக்கு விரோதமாய்த்தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான். பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா? என்ற இராஜாவின் ஆர்வமான வினாவிற்கு அகிமாஸ் ஒரு மழுப்பலான பதிலைக் கொடுத்தான்.PPTam 978.3

    இரண்டாவது தூதுவன் : ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாயெழும்பின் எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயம் செய்தார் என்று ஆர்ப்பரித்துக்கொண்டு வந்தான். மீண்டும் தகப்பனுடைய உதடுகளிலிருந்து பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சு கமாயிருக்கிறானா? என்ற ஆட்கொள்ளும் கேள்வி வந்தது. பாரமான செய்தியை மறைக்கக்கூடாதவனாக அறிவிப்பாளன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்தது போல, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது. என்று பதில் தந்தான். அது போதும்; தாவீது மேற்கொண்டு கேள்வி கேட்கவில்லை. தன் தலையைத் தாழ்த்தி, கெவுனிவாசலின் மேல் வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான், அவன் ஏறிப் போகையில் : என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும். அப்சலோமே, என் மகனே, என்று சொல்லி அழுதான்PPTam 979.1

    களத்திலிருந்து வெற்றிகண்டு திரும்பி வந்த படைபட்டணத்தை நெருங்கியது. அவர்களுடைய வெற்றியின் ஆர்ப்பரிப்பு குன்றுகளில் எதிரொலித்தது. ஆனால் அவர்கள் பட்டண வாசலில் வந்தபோது ஆர்ப்பரிப்பு ஒடுங்கியது. அவர்களுடைய கொடிகள் கைகளிலிருந்து கீழிறங்கின. முகத்தை தொங்கவைத்தவர்களாக வெற்றிபெற்றவர்களைக்காட்டிலும் தோல்வியடைந்தவர்களைப் போல் அவர்கள் சென்றனர். ஏனெனில் அவர்களை வரவேற்க இராஜாகாத்திருக்கவில்லை. மாறாக, என்மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும். அப்சலோமே, என் மகனே என்ற புலம்பல் வாசலுக்கு மேலேயிருந்த அறையிலிருந்து கேட்கப்பட்டது.PPTam 979.2

    அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று. யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டள்வாய் வருகிறவர்கள் போல், ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.PPTam 979.3

    யோவாப் மூர்க்கமானான். வெற்றி கொள்ளவும் மகிழ்ச்சியடை யவும் தேவன் அவர்களுக்குக் காரணம் கொடுத்திருந்தார். இஸ்ரவேலில் இதுவரை அறியப்பட்டிருந்த மிகப் பெரிய கலகம் நசுக்கப்பட்டிருந்தது. எனினும் ஆயிரக்கணக்கான பலசாலிகளின் இரத்தத்தை சிந்தி குற்றஞ் செய்த ஒருவனுக்காக இந்த மாபெரும் பெற்றி புலம்பலாக மாறியது. நயமற்ற முரட்டுத்தனமான தளபதி வேகமாகச் சென்று இராஜாவிடம்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத் தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச்சிநேகிக்கிறவர்களைப்பகைக்கிறீர் என்று விளங்குகிறது. அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்து கொண்டேன். இப்போதும் எழுந்திருந்து வெளியே வந்து, உம்முடைய ஊழியக் காரரோடே அன்பாய்ப் பேசும், நீர் வெளியே வராதிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதில்லை என்று கர்த்தர் மேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறு வயது முதல் இதுவரைக்கும் உமக்கு நேரிட்ட எல்லாத் தீமையைப் பார்க்கிலும், அது உமக்கு அதிக தீமையாயிருக்கும் என்று தைரிய மாகக் கூறினான்.PPTam 980.1

    இருதயத்தில் அடிக்கப்பட்டிருந்த இராஜாவிற்கு கடுமையான தாக இன்னும் கொடுமையானதாக இருந்தபோதும் கடிந்துகொள்ளு தலால் தாவீது சினங்கொள்ளவில்லை. தன்னுடைய தளபதியின் வார்த்தைகள் சரியே என்று கண்ட அவன் கீழே வாசலுக்கு இறங் கினான். உற்சாகத்தின் வார்த்தைகளாலும் புகழ் வாழ்த்துதலாலும் அவனைத் தாண்டிச் சென்ற தைரியமான வீரர்களை அவன் வரவேற்றான்.PPTam 980.2