Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    1—எருசலேமின் அழிவு!

    (மூலநூல் : The Great Controversy பக்கம் : 17—38)

    “உ னக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத் திற்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும். இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கின்றன. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச்சூழ மதில்போட்டு, உன்னை வளைத்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்குச்செய்யும் நாட்கள் உனக்கு வரும்” (லூக்கா 19:42- 44) என்றார். (1)GCTam 1.1

    ஒலிவ மலையின்மீது நின்று, இயேசு எருசலேமை நோக்கினார். அவர்முன்பாக நேர்த்தியும் சமாதானமுமான காட்சி வியாபித்திருந்தது. அது பஸ்கா பண்டிகையின் காலம். தேசியப் பண்டிகையான அதைக் கொண்டாடும்படி எல்லா இடங்களிலிருந்தும் யாக்கோபின் பிள்ளைகள் அங்கு கூடியிருந்தனர். இஸ்ரவேலின் தலைநகரமான அது, அழகிய திராட்சைத் தோட்டங்களுக்கும் பசுமையான சரிவுகளுக்கும் நடுவில் யாத்ரீகர்களின் கூடாரங்களால் நிறைந்த பனிக்குன்றுகளை உடையதாகவும், அரச அரண்மனைகளினாலும் பெரும் மாளிகைகளினாலும் எழும்பினதாகவும் இருந்தது. “வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும், சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது; அதுவே மகாராஜாவின் நகரம்” (சங்கீதம் 48:2) என்று பண்டைய ஆஸ்தான பாடகர்கள் பாடினதற்கிசைவாக, பரலோகத்தின் ஆதரவில் அது இருப்பதாக எண்ணி, அழகுடனும் பாதுகாப்புடனும் இருப்பதாகக்கருதி, துன்பத்தைக் காணாத ஒரு அரசியைப் போல, நான் அமர்ந்திருக்கிறேன் என்றவண்ணமாக இருந்தது. எருசலேம் தேவாலயத்தின் மாபெரும் கட்டிடங்கள் கண்களுக்குப் பூரணமான காட்சியாக இருந்தன. பனிபோன்ற வெண்மையான அதன் பளிங்குச் சுவர்களின்மீதும், தங்கமயமான வாசலின்மீதும், கோபுரங்களின்மீதும் மறைகின்ற சூரியனின் ஒளி படவே, அவை பளபளத்தன. யூத நாட்டின் பெருமையாக-பூரண வடிவுள்ளதாக அது நின்றிருந்தது. எந்த இஸ்ரவேல் பிள்ளையால்தான் அதைக் கண்டு மகிழாமலும், மனக்கிளர்ச்சி அடையாமலும், போற்றாமலும் இருக்கவியலும்! ஆனால், இயேசுவின் உள்ளம் வேறுவிதமான சிந்தனை களை உடையதாக இருந்தது. “அவர் சமீபமாய் வந்தபோது, நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுதார்”-லூக்கா 19:41. வெற்றிவீரராக அவர் எருசலேமிற்குள் நுழைந்தபோது, குருத்தோலைகள் அசைந்து, ஓசன்னா என்று எழுப்பிய ஆரவாரம் குன்றுகளில் மோதி எதிரொலித் தது. ஆயிரக்கணக்கானவர்கள் ராஜா என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென உண்டான ஒரு மர்மமான துயரம் உலக மீட்பரைத் திகைக்க வைத்தது. மரணத்தை வென்றவர், அதன் அடிமைத்தளையில் இருந்தவர்களை கல்லறைகளிலிருந்து அழைத்து எழுப்பியவர், தேவகுமாரன், இஸ்ரவேலுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டவர், துயரத்தால்-சாதாரணத் துயரத்தால் அல்லாமல், மிகுந்த-அடக்கமுடியாத வேதனையால் அழுதார்! (2)GCTam 1.2

    தமது பாதங்கள் எங்கே சென்றுகொண்டிருந்தன என்பதை அவர் நன்கு அறிந்திருந்தும், தமக்காகக் கண்ணீர் சிந்தவில்லை. அவரை வேதனைக்குள்ளாக்கவிருக்கும் காட்சி- கெத்செமெனே, அவர்முன் இருந்தது. நூற்றாண்டுகளாகப் பலிஆடுகள் நடத்திச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த பாதையில், “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல” (ஏசாயா 53:7) அவர் செல்லவேண்டியதாயிருந்ததும், ஆட்டுவாசலும் அவரது காட்சிக்கு வந்தன. அவர் சிலுவையில் அறையப்படவேண்டிய இடமாகிய கல்வாரி வெகுதூரத்தில் இல்லை. பாவநிவாரணபலியாக கிறிஸ்து தமது ஆத்துமாவை ஊற்றிவிடும் சமயம், அவர் நடந்துசெல்ல வேண்டியதான பாதையில் இருளும் திகிலும் விழவேண்டியிருந்தது. அப்படியிருந்தும், மகிழ்ச்சிமிக்க இந்தவேளையில், மேலே சொல்லப்பட்ட காட்சிகளை எண்ணிப் பார்த்ததினால் அவருக்குள் துயரத்தின் சாயல் படியவில்லை. அவருக்கு நேரிடவிருக்கிற, மனித இனத்தால் தாங்கிக்கொள்ள இயலாத வேதனைகள் தன்னலமற்ற அவரது ஆத்துமாவை இருளச் செய்யவில்லை. எருசலேமின் ஆயிரக்கணக்கானவர்களுக்காக-யாரை இரட்சிக்கவும் ஆசீர்வதிக்கவும் வந்தாரோ, அவர்களது குருட்டுத்தனத்தையும், மனந்திரும்ப மறுக்கும் சுபாவத்தையும் பார்த்து அழுதார். (3)GCTam 2.1

    தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்துக்கு ஆயிரக்கணக்கான வருடங்களாக தேவனால் வழங்கப்பட்டிருந்த சிறப்பான ஆதரவும் பாதுகாப்பும், இயேசுவின் கண்களுக்குமுன் வந்தது; வாக்குத்தத்தத்தின் மகன் எதிர்ப்பில்லாத பலி ஆடாகக் கட்டப்பட்டுக்கிடந்த-தேவகுமாரன் தம்மைப் பலியாகச் செலுத்துவதின் முன்னடையாளமாக இருந்த பலிபீடத்தின் இடமாக மோரியா மலை இருந்தது; அங்குதான் விசுவாசத்தின் தகப்பனுக்கு மேசியாவைப்பற்றிய மகிமைமிக்க வாக்குத்தத்தமும் ஆசீர்வாதமிக்க உடன்படிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டது (ஆதி. 22:9,16-18). குற்றமுள்ள மனிதர்களின் இரட்சிப்பிற்காக நிகழ இருக்கின்ற இரட்சகரின் ஈடுபலியைக் காட்டும் அடையாளமாக, சங்காரதூதனின் (1 நாளா. 21) பட்டயத்தைத் தடுத்த, பலியின் அக்கினி உயர எழும்பிச்சென்ற ஒர்னானின் களம் அந்த இடத்தில் இருந்தது; சர்வபூமியிலும் தேவனால் சிறப்பிக்கப்பட்ட இடமாக எருசலேம் இருந்தது. கர்த்தர் “சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்” (சங். 132:13). பரிசுத்த தீர்க்கதரிசிகள் அங்கிருந்துதான், காலம் நெடுகிலும் எச்சரிப்பின் தூதைக் கொடுத்துவந்தனர். ஆசாரியர்கள் அவர்களுடைய தூபகலசங்களை அசைக்க, வணங்குபவர்களின் ஜெபங்களுடன் சேர்த்து, சுகந்த வாசனையான மேகம் அங்கிருந்துதான் தேவசமூகத்திற்கு எழும்பி இருந்தது. அங்குதான் மகிமையின் மேகத்தில், கிருபாசனத்திற்கு மேலாக, யேகோவா தமது பிரசன்னத்தை வெளிப்படுத்தியிருந்தார். பரலோகத்தையும் பூலோகத்தையும் இணைக்கின்ற ஏணியின் அடிப்பாகம் அங்குதானிருந்தது. அந்த ஏணியின் வழியாகத்தான் தேவதூதர்கள் பூமிக்கு இறங்கவும் பரலோகத்திற்கு ஏறவும் (ஆதியாகமம் 28:12; யோவான் 1:51) வழியைக் கண்டனர். அதுவே எல்லாவற்றிற்கும் மேலான பரிசுத்தமான இடத்திற்குச் செல்லும் பாதையை உலகிற்குத் திறந்தது. இஸ்ரவேல் ஒரு தேசமாக, பரலோகத்துடன் அதற்குண்டாயிருந்த பிணைப்பைத் தொடர்ந்து பாதுகாத்திருந்தால், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதாக என்றென்றைக்கும் நிலைத்திருந்திருக்கும் (எரே. 17:21-25). ஆனால் அனுகூலம் பெற்றிருந்த அந்த மக்களின் வரலாறு, பின்னிட்டுப்போவதும் கலகம்செய்வதுமான அத்தாட்சிகளை உடையதாக இருந்தது. அவர்கள் பரலோகத்தின் கிருபையை நிராகரித்துவிட்டனர். வழங்கப்பட்டிருந்த சலுகைகளைத் தவறான வழியில் வீணடித்திருந்தனர். கொடுக்கப்பட்டிருந்த வாய்ப்புக்களை மலிவானவைகளாக எண்ணி, கைநழுவவிட்டிருந்தனர். (4)GCTam 3.1

    இஸ்ரவேல், “தேவனுடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்திருந்தபோதிலும்” (2 நாளா. 36:16), கர்த்தர் இன்னமும் இரக்கத்தைக் காக்கின்றவராகவும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவராகவும், இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமும் உள்ளவராகவும் இருந்தார் (யாத்திராகமம் 34:6). அதுமட்டுமன்று, மறுபடியும் மறுபடியும் அவர்கள் தேவனை நிராகரித்தபோதும், அவரது இரக்கம் அவர்களுடன் மன்றாடிக்கொண்டிருந்தது. ஒரு தகப்பனுக்கு மகன்மீது இருக்கக்கூடிய அன்பைவிட, அதிகமான அன்போடு “தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்க முள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே அனுப்பினார்” (2 நாளா. 36:15). கண்டனம், கெஞ்சுதல், கடிந்து கொள்ளல் அனைத்தும் பயனற்றுப் போனபோது, பரலோகத்தின் அதிஉன்னதமான ஈவை அவர்களிடம் அனுப்பினார். அதுமட்டுமல்ல. அந்த ஒரே ஈவின் மூலமாக பரலோகம் முழுவதையுமே தாரைவார்த்துவிட்டார்! (5)GCTam 3.2

    மனம் திரும்ப மறுக்கும் அந்தப் பட்டணத்தினிடம் வேண்டுதல் செய்யும்படி, தேவகுமாரன்தாமே அனுப்பப்பட்டார். நற்கனி தரும் ஒரு திராட்சைச் செடியாக, இஸ்ரவேலை எகிப்திலிருந்து கிறிஸ்துதான் கொண்டுவந்தார் (சங். 80:8). அவரது கரமே அஞ்ஞான மார்க்கத்தை அதற்கு முன்னிருந்து துரத்தியது. செழிப்பான குன்றின்மீது அவர் அதை நாட்டியிருந்தார். அவர் தமது பாதுகாவலினால், அதைச் சுற்றிலும் வேலி அடைத்திருந்தார். அதைச் சீர்படுத்திக் காத்திட அவரது ஊழியக்காரர்கள் அனுப்பப்பட்டிருந்தனர். “நான் என் திராட்சத் தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்?” (ஏசா. 5:1-4) அதற்குச் செய்யப்படாதது என்ன? என்று அவர் வியந்தார். அது நல்ல திராட்சைக்கனிகளைக் கொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தபோது, அது காட்டுத் திராட்சைக் கனியைக் கொடுத்தது. என்றபோதிலும் அது நற்கனிதரும் என்ற ஆவல்மிகுந்த நம்பிக்கையில், அவர் தமது திராட்சைத் தோட்டத்திற்கு நேரடியாக வந்தார்; அதை அழிவிலிருந்து காக்கவேண்டும் என்பதற்காக வந்தார்; அவர் அவருடைய திராட்சைச் செடியைச் சுற்றிலும் கொத்தினார்; அதைக் கிளை நறுக்கி உரமிட்டார்; அவரால் நடப்பட்ட இந்தத் திராட்சைச் செடியைக் காப்பதற்கு அவர் தொடர்ந்து சகல முயற்சிகளையும் செய்தார்.(6)GCTam 4.1

    ஒளியின் கர்த்தரான மகிமையின் கர்த்தர் மூன்று ஆண்டுகள் சொந்த ஜனங்களிடம் உள்ளும் புறமுமாகச் சென்றார். “நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்”-அப்போ. 10:38; லூக். 4:18; மத். 11:5. பிசாசினால் ஒடுக்கப்பட்டிருந்த அனைவரையும் குணப்படுத்தி, தரித்திரருக்குச் சவிசேஷத்தைப் பிரசங்கித்து, இதயம் நறுங்குண்டவர்களைக் குணமாக்கி, சிறைப்பட்டவர்களை விடுதலைசெய்து, குருடருக்குப் பார்வையைத் தந்து, சப்பாணிகளை நடக்கச்செய்து, செவிடர்களுக்கு காது கேட்கச்செய்து, குஷ்டரோகிகளைச் சுகப்படுத்தி, மரித்தோரை எழுப்பி, நன்மைசெய்கிறவராக எங்கும் சுற்றித்திரிந்தார். “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்னும் கிருபையின் அழைப்பு சகல வகுப்பினருக்கும் ஒரேவிதமாகக் கொடுக்கப்பட்டது. (7)GCTam 4.2

    நன்மைக்குப் பதிலாகத் தீமையும், அன்புக்குப் பதிலாக வெறுப்பும் அவருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டபோதிலும் (சங். 109:5), இரக்கம் காட்டுதல் என்னும் கிருபையின் ஊழியத்தை அவர் சீராகச் செய்தார். அவரது கிருபையை நாடிச்சென்றவர்களை அவர் ஒருபோதும் நிராகரிக்கவில்லை. நிந்தையையும் அவமானங்களையும் அன்றாடப் பங்காகப் பெற்று, மனிதர்களின் தேவைகளைச் சந்திக்கவும், அவர்களது துயரங்களை இலகுவாக்கவும் ஊழியம்செய்தவர், நித்திய ஜீவனாகிய பரிசைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினார். அவருக்கென்று ஒரு வீடில்லாதவராக, அலைந்து திரிபவராக இருந்தார். முரட்டாட்டமிக்க மிகக் கடினமான இதயங்களால், அவரிடமிருந்து வந்த இரக்கத்தின் அலைகள் திருப்பியடிக்கப்பட்டபோது, விவரிக்க இயலாத அன்பும் இரக்கமும் நிறைந்த பலத்த அலையாக மீண்டும் அவரிடமிருந்து அவர்களை நோக்கி அனுப்பப்பட்டது. இஸ்ரவேல் தனக்கு உதவக்கூடியவராக இருந்த ஒரே நண்பரையும் விட்டுத் திரும்பிவிட்டது. அவரது அன்பின் வேண்டுதல்கள் நிந்திக்கப்பட்டன. அவரது ஆலோசனைகள் கேட்கப்படவில்லை. அவரது எச்சரிப்புகள் கேலியாக்கப்பட்டன! (8)GCTam 5.1

    நம்பிக்கை, மன்னிப்பு ஆகியவைகளின் காலம் வேகமாகக் கடந்துகொண்டிருந்தது. நெடுநாட்களாக தாமதப்படுத்தப்பட்டிருந்த, தேவ கோபாக்கினையின் பாத்திரம் கிட்டத்தட்ட நிரம்பி இருந்தது. காலங்கள் நெடுகிலும் நிகழ்ந்த மருளவிழுகையினாலும் கலகத்தினாலும் குற்றமுள்ளதாயிருந்த ஒரு ஜனத்தின்மேல் சொரிவதற்கென்று ஆபத்துக்களாகிய மேகங்கள் கருமை அடைந்துகொண்டிருந்தன. நிகழவிருக்கின்ற அந்த நிலையிலிருந்து அவர்களைக் காக்கக்கூடியவரான, ஒரே ஒருவரை அவர்கள் அலட்சியப்படுத்தி-நிந்தித்து-நிராகரித்தனர். விரைவில் அவரைச் சிலுவையில் அறையவும் உள்ளனர். தேவனுடைய ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற்றிருந்த இஸ்ரவேல் ஜனத்தின் நாட்கள், கிறிஸ்து கல்வாரியில் தொங்கும்போது முடிவடைய இருந்தது. உலகத்தின் ஆதாயங்களையும் பொக்கிஷங்களனைத்தையும்விட, ஒரு ஆத்துமாவின் இழப்பு கணக்கிட முடியாத அளவிற்கு நஷ்டமாயிருந்தது. கிறிஸ்து எருசலேமைப் பார்த்தபோது, ஒருகாலத்தில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டிருந்த அந்த ஜனம், அவரது விசேஷமான பொக்கிஷ மாக இருந்த அந்த இடம், முற்றிலுமாக அழிய இருக்கும் காட்சியைக் கண்டார். (9)GCTam 5.2

    இஸ்ரவேலின் பாவங்களால், அதற்கு நிகழ இருக்கும் பயங்கரமான பாழ்க்கடிப்பிற்குக் காரணமான, அதன் மருளவிழுகையை எண்ணி, தீர்க்கதரிசிகள் அழுதனர். அடிமைகளாக்கப்பட்டுப்போன கர்த்தரின் மந்தைக்காக, வெட்டுண்டுபோன தன் ஜனத்தின் குமாரத்திகளுக்காக இரவும்- பகலும் அழுவதற்குத் தனது கண்கள் கண்ணீரூற்றாயிருக்கவேண்டும் என எரேமியா விரும்பினார் (எரே. 9:1; 13:17). அப்படியிருக்க, வருடங்களாக மட்டுமின்றி, யுகங்கள் நெடுகிலுமான தீர்க்கதரிசனப் பார்வையை உடையவரின் துயரம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்! இதுவரை யேகோவாவின் வாசஸ்தலமாயிருந்த அந்த நகரத்தின்மீது சங்காரதூதன் கடந்துசெல்லுவதை அவர் கண்டார். பிற்காலத்தில் தீத்து அரசனும் அவனது இராணுவமும் சூழ்ந்துகொள்ளவிருக்கின்ற அதே இடமான ஒலிவமலைச் சிகரத்தின்மீது அவர் நின்று, கண்ணீரால் மங்கிய கண்களினால், அந்த நகரத்தின் பள்ளத்தாக்குகளையும் புனிதமான பிராகாரங்களையும், எதிரிகளின் இராணுவம் அவைகளைச் சூழ்ந்து கொண்டிருப்பதையும் கண்டார். யுத்தம் செய்வதற்காக இராணுவம் நடக்கின்ற சத்தத்தை அவர் கேட்டார். முற்றுகையிடப்பட்ட அந்த நகரத்திலிருந்து தாய்மார்களும் குழந்தைகளும் உணவிற்காக அழுகின்ற குரலை அவர் கேட்டார். அவர்களுடைய புனிதமான அழகான வீடுகளும் அரண்மனைகளும் கோபுரங்களும் அக்கினிக்கு இரையாக்கப்பட்டு, ஒரு காலத்தில் அவை நின்றிருந்த இடங்கள் மண்மேடுகளாகவும் இடிபாடுகளாகவும் இருக்கப்போவதையும் அவர் கண்டார்! (10)GCTam 6.1

    காலத்தினூடாக அவர் நோக்கியபோது, உடன்படிக்கையின் ஜனங்கள் கவனிப்பாரற்று, “கடற்கரையில் சிதறிக்கிடக்கும் உடைந்த கப்பலின் பாகங்களைப்போல” ஒவ்வொரு நாட்டிலும் சிதறிக்கிடப்பதை அவர் கண்டார். எருசலேமிற்கும் அவளது பிள்ளைகளுக்கும் வரவிருக்கும் தண்டனையால், முதல் தடவையாக பருகவிருக்கும் கோபாக்கினையின் முழுப்பாத்திரத்தையும் அவர் கண்டார். “எருசலேமே! எருசலேமே! தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக, நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று”-மத் 23:37. தேவ அன்பும், ஏக்கமும், இரக்கமும் நிறைந்தவரிடமிருந்து இப்படிப்பட்ட துக்கமான வார்த்தைகள் வந்தன. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாய் இருக்கும். நியாயத்தீர்ப்பைச் செலுத்தும் தேவதூதனை நான் நிறுத்திவைத்தேன். உன்னை மனந்திரும்பும்படி நான் அழைத்த அழைப்பு வீணாயிற்று. நீ சாதாரணமான வேலைக்காரர்களையோ பிரதிநிதிகளையோமட்டும் நிராகரிக்காமல், உன்னுடைய மீட்பரான, இஸ்ரவேலின் பரிசுத்தரையே நிராகரித்துவிட்டாய். நீ அழிக்கப்பட்டுப்போனால், அதன் பொறுப்பு உன்னுடையதாகமட்டுமே இருக்கும். “அப்படி இருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை”-யோவான் 5:40. (11)GCTam 6.2

    கீழ்ப்படியாமைக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பைச் சந்திக்க விரைந்து சென்றுகொண்டிருந்த எருசலேமில், அவிசுவாசத்தாலும் கலகத்தாலும் கடினப்பட்டுப்போன ஒரு உலகத்தை கிறிஸ்து கண்டார். விழுந்துபோன ஒரு இனத்தின்மீதுள்ள ஆபத்து, அவரது ஆத்துமாவை நெருக்கியதால், அவரது உதட்டிலிருந்து அதிக வருத்தமான அழுகை உண்டானது. துன்பமும் கண்ணீரும் இரத்தம்சொரிதலும் மானிடரின் பாவத்தினால் உண்டானவைகள் என்னும் ஆதாரத்தை கண்டதால், துயரத்தால் அமிழ்ந்துபோன பூமியின்மீது அவரது எல்லையற்ற இரக்கம் நிறைந்த இதயம் நெகிழ்ந்தது. அவர்களெல்லோரையும் விடுவிக்க அவர் வாஞ்சித்தார். உதவிகளுக்கு ஆதாரமாயிருப்பவரை ஒருசிலர்மட்டுமே தேடுவார்கள். இரட்சிப்பை அவர்களுக்கு அருகில் கொண்டுவருவதற்காக அவர் தமது ஜீவனை மரணத்தில் ஊற்றவும் விருப்பமுள்ளவராக இருந்தார். ஆனால் ஜீவனைப் பெற்றுக்கொள்ளுவதற்காகச் சிலர்மட்டுமே அவரிடம் வரக்கூடியவர்களாக இருந்தனர். (12) பரலோகத்தின் மேன்னையானவர் கண்ணீரில் இருக்கிறார்! முடிவில்லாதவரான தேவனின் குமாரன் ஆவியில் கலங்கி, துயரத்தில் கீழே கவிழ்கிறார். இந்தக் காட்சி பரலோகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தினது. இந்தக் காட்சி பாவத்தின் அநீதத்தன்மையை நமக்கு வெளிக்காட்டுகிறது. தேவப் பிரமாணத்தை மீறும்போது உண்டாகும் விளைவுகளிலிருந்து குற்றவாளியைக் காப்பதுதென்பது, எல்லையற்ற வல்லமைக்குங்கூட எவ்வளவு கடினமான ஒரு காரியமாக இருக்கிறது என்பதையே இந்தக் காட்சி வெளிக்காட்டுகிறது. உலகின் கடைசித் தலைமுறையை இயேசு நோக்கிப்பார்த்து, எருசலேமின் அழிவிற்குக் காரணமான வஞ்சனையைப் போன்ற வஞ்சனையில், அவர்கள் ஈடுபட்டிருப்பதை கண்டார். கிறிஸ்துவை நிராகரித்ததுதான் யூதரின் பெரும் பாவமாக இருந்தது. அதைப்போலவே, பரலோகத்திலும் பூமியிலுமுள்ள இறையரசின் அஸ்திவாரமாகிய தேவப்பிரமாணத்தை நிராகரிப்பதே கிறிஸ்தவ உலகின் பெரும் பாவமாயிருக்கும். யேகோவாவின் கற்பனைகள் நிந்திக்கப்பட்டு, இல்லாதவைகளென்று எண்ணப்படும். இரண்டாம் மரணத்தினால் உண்டாகும் அழிவிற்குப் பாத்திரமான இலட்சக்கணக்கானவர்கள் சாத்தானுக்கும் பாவத்திற்கும் அடிமையானவர்கள், தங்களைச் சந்திக்கும் நாளில் சொல்லப்படும் சத்திய வார்த்தைகளைக் கவனிக்க மறுத்துவிடுவார்கள். கடுமையான குருட்டாட்டம்! விநோதமான ஏமாற்றுதல்!! (13)GCTam 7.1

    கிறிஸ்து பஸ்கா பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, யூத ஆட்சியாளர்களின் மாய்மாலத்தை மறுதலித்து கடைசித் தடவையாகத் தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டபின்பு, மறுபடியும் அவர் தமது சீடர்களோடுங்கூட ஒலிவமலைக்குச் சென்று, அந்தப் பட்டணத்தை நோக்கி இருந்த ஒரு சரிவான புல்வெளியில் அமர்ந்தார். அவர் மறுபடியும் ஒருமுறை அதன் சுவர்களையும், அதன் கோபுரங்களையும், அதன் மாளிகைகளையும் நோக்கினார். அழகின் கிரீடமாக அந்த புனித மலையைச் சிங்காரித்து ஜொலித்துக் கொண்டிருந்த ஆலயத்தை மீண்டும் நோக்கினார். (14)GCTam 8.1

    “சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது” (சங். 76:2) என்று ஆயிரம் வருடங்களுக்குமுன் இஸ்ரவேலை தேவன் தாம் வாசம்பண்ணும் இடமாகத் தெரிந்துகொண்டதினால் அதன் மீது அவருக்கிருந்த ஆதரவை சங்கீதக்காரன் பெரிதுபடுத்திக் கூறினார். “யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார். தம்முடைய பரிசுத்தஸ்தலத்தை மலைகளைப் போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திவாரப்படுத்தின பூமியைப் போலவும் கட்டினார்”-சங். 78:68,69. இஸ்ரவேல் வரலாற்றின் மிக உன்னதமான காலத்தில் முதலாம் ஆலயம் கட்டப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான பொக்கிஷங்கள் தாவீது அரசனால் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் நிர்மாணப் பணியின் திட்டமனைத்தும் தெய்வீக ஏவுதலால் செய்யப்பட்டிருந்தது (1 நாளா 28:12,19). இஸ்ரவேலின் ஞானிகளில் சிறந்தவனான சாலொமோன் அரசனால் அது கட்டிமுடிக்கப்பட்டிருந்தது. உலகம் அதுவரை கண்டிருந்த கட்டிடங்கள் அனைத்தையும்விட, அந்த தேவாலயம் மிக மேலானதாக இருந்தது. அப்படியிருந்தும் இரண்டாவது தேவாலயம்பற்றி, ஆகாய் தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர்: “முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும்.” ‘சகல ஜாதிகளையும் அசையப் பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன்” (ஆகாய் 2:9,7) என்றார். (15)GCTam 8.2

    முதல் தேவாலயம் நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்பட்டபின், கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன், அது திரும்ப எடுத்துக்கட்டப்பட்டது. ஆயுட்காலம் முழுவதும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்த ஜனங்கள் பாழடைந்து கிட்டத்தட்டப் பாலைவனம்போலிருந்த அதை திரும்பக் கட்டினார்கள். இரண்டாவது ஆலயத்தின் அஸ்திவாரம் போடப்பட்டபோது, சாலொமோனின் தேவாலத்தின் மகிமையைக் கண்டிருந்த, அவர்கள் நடுவிலிருந்த வயதுசென்ற முதியவர்கள், அது முதலாம் தேவாலயத்தைவிடத் தரக்குறைவாக இருப்பதைக் கண்டு அழுதனர். “இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக் காண்கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாதது போல் காண்கிறதல்லவா” (ஆகாய் 2:3; எஸ்றா 3:12) என்று அந்த ஜனங்களில் உண்டாயிருந்த உணர்ச்சியை ஆகாய் தீர்க்கதரிசி அழுத்தமாக விவரித்தார். அதற்குப்பின், இந்த இரண்டாம் ஆலயத்தின் மகிமை முதலாம் ஆலயத்தின் மகிமையைவிட மேலானதாக இருக்குமென்கிற வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. (16)GCTam 9.1

    ஆனால் இரண்டாம் ஆலயத்தின் கட்டிடச்சிறப்பு முதலாம் ஆலயத்தைவிட மேலானதாக இருக்கவில்லை. மேலும் முதலாம் ஆலயத்திலிருந்த தேவப் பிரசன்னம் இதில் இருக்கவில்லை. அதன் பிரதிஷ்டையைக் குறிக்கும் தெய்வீக வல்லமை எதுவும் அச்சமயம் வெளிக்காட்டப்படவில்லை. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஆசரிப்புக்கூடாரம் நிரம்பும்படி மகிமையின் மேகம் எதுவும் காணப்படவில்லை. அதின் பலிபீடத்தின்மீது படைக்கப்பட்ட பலியை எரிக்க, பரலோகத்திலிருந்து அக்கினி கீழே இறங்கவில்லை. அங்கு கேருபீன்களுக்கு மத்தியிலிருந்த கிருபாசனம் இருக்கவில்லை. அங்கு ஷெக்கினா என்னும் தேவப்பிரசன்னம் இருக்கவில்லை. சாட்சியின் பலகைகளும் அதற்குள் இருக்கவில்லை. யேகோவாவினிடத்தில் விசாரிக்கும் ஆசாரியனுக்கு யேகோவாவின் சித்தம் இன்னதென்று அறிவிக்கும் சத்தமும் அங்கு கேட்கப்படவில்லை. (17)GCTam 9.2

    ஆகாயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட தேவ வாக்குத்தத்தம் நிறைவேறிவிட்டது என்பதைக் காட்டும் வீண் முயற்சியில் நூற்றாண்டு களாக யூதர்கள் ஈடுபட்டிருந்தனர். அதேசமயம், தீர்க்கதரிசியின் வார்த்தையின் உண்மையான பொருள் என்ன என்பதை அறிய முடியாதபடிக்குப் பெருமையும் நம்பிக்கையின்மையும் அவர்களைக் குருடாக்கி இருந்தன. யேகோவாவின் மகிமைமிக்க மேகத்தினால், இரண்டாவது ஆலயம் சிறப்பிக்கப்படவில்லை. ஆனால் தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் தமக்குள் வாசமாய் கொண்டிருப்பவரின் பிரசன்னத்தினால்-மாம்சத்தில் வந்த தேவனால் அது நிரம்பி இருந்தது. நாசரேத்தின் மனிதன் அந்த ஆலயத்தின் பரிசுத்த பிராகாரங்களில் போதித்து சுகமளித்தபோது, சகல ஜனங்களாலும் விரும்பப்பட்டவர் உண்மையில் அந்த ஆலயத்திற்கு வந்திருந்தார். முதலாம் ஆலயத்தின் மகிமையைவிட இந்த ஆலயத்தின் மகிமை கிறிஸ்துவின் பிரசன்னம் ஒன்றினால் மட்டுமே மேலானதாக இருந்தது. ஆனால் பரலோகம் அளித்த ஈவை, இஸ்ரவேல் நிராகரித்து விட்டது. மிகத் தாழ்மையான அந்த ஆசாரியர் அந்த ஆலயத்தின் தங்கவாசலைக் கடந்துசென்ற அந்த நாளிலேயே அதன் மகிமையும் அந்த ஆலயத்தை விட்டு நிரந்தரமாக நீங்கிப்போயிற்று. “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” (மத். 23:38) என்ற இரட்சகரின் வார்த்தைகள் ஏற்கனவே நிறைவேறிவிட்டன. (18)GCTam 9.3

    எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டுப்போகும் என்று கிறிஸ்து முன்னறிவித்தபோது, சீடர்கள் ஆச்சரியமும் பயமும் நிறைந்தவர்களாக, அவரது வார்த்தைகளின் பொருளைப் பூரணமாக அறிந்துகொள்ள விரும்பினார்கள். அந்தக் கட்டிடத்தின் அலங்காரத்தைச் சிறப்பிக்க, செல்வமும் வேலையும் கட்டிடப் பணியின் திறனும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செலவிடப்பட்டிருந்தன. அந்த ஆலயம் மிகச் சிறப்பானதாக இருக்கும்படி ஏரோது மன்னன் அரசின் செல்வத்தையும் யூதர்களின் பொக்கிஷங்களையும் தாராளமாகச் செலவுசெய்திருந்தான். உலகப் பேரரசனுங்கூட அதற்காகத் திரளான நன்கொடைகளைச் செலுத்தியிருந்தான். ரோமாபுரியிலிருந்து தருவிக்கப்பட்ட மிகப்பெரிய பளிங்குக் கற்களால் அதன் வடிவின் ஒருபகுதி அமைக்கப்பட்டிருந்தது. “இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! பாரும்” (மாற்கு 13:1) என்று அவரது சீடர்கள் கூறி, அவரது கவனத்தை ஈர்த்தனர். இதற்குப் பதிலாக: “இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 24:2) என்று இயேசு சொன்னார். (19, 20)GCTam 10.1

    கிறிஸ்து உலகப்பிரகாரமான மகிமையில் வந்து மனந்திரும்பாத யூதர்களைத் தண்டித்து, ரோமரின் நுகத்தடியை அந்த ஜனத்தின் மீதிருந்து உடைத்தெறிந்து, உலகச் சக்கரவர்த்தியாக இருக்கப்போகும் சம்பவத்தை அவரது சீடர்கள் எருசலேமின் விழுகையுடன் இணைத்துப் பார்த்தனர். கர்த்தர் இரண்டாம் தடவை வரப்போவதாக அவர்களுக்குச் சொல்லியிருந்தார். எனவே, எருசலேமின்மீது நிகழ இருக்கின்ற நியாயத்தீர்ப்புகள்பற்றி குறிப்பிடப்பட்டபோது, அவர்களது எண்ணங்கள் அவரது வருகையை நோக்கிச் சென்றன. அவர்கள் ஒலிவ மலையின்மீது அவரைச் சூழ்ந்திருந்தபோது, “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும்” (மத். 24:3) என்றார்கள். (21)GCTam 10.2

    எதிர்காலக் காட்சியானது அந்தச் சீடர்களுக்குக் கிருபையினால் திரையிடப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது; அவர்களுடைய மீட்பரின் பாடுகளையும் மரணத்தையும் அவர்களுடைய நகரமும் தேவாலயமும் அழியப்போகிறதையும் அந்த வேளையில் அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்களானால், பயங் கரங்கள் அவர்களை மேற் கொண்டிருந்திருக்கும். காலத்தின் முடிவிற்கு முன்னிருந்த முக்கிய சம்பவங்களைக் கிறிஸ்து மேலோட்டமாக வரைந்து காட்டினார். அவரது வார்த்தைகள் அப்பொழுது சரியாக அறிந்துகொள்ளப் படவில்லை. ஆனால் அவைகளின் பொருளும் அதில் சொல்லப்பட்டிருந்த போதனைகளும் தேவையானபோது அவருடைய ஜனங்களுக்கு வெளிப் படுத்தப்படவேண்டியதாக இருந்தது. அவர் உரைத்த தீர்க்கதரிசனம் இருவகைப் பொருள் உள்ளதாக இருந்தது. அது எருசலேமின் அழிவை நிழலாட்டமாகக் காட்டிய அதே சமயத்தில், கடைசி நாளில் நிகழ விருக்கும் பயங்கரங்களையும் தீர்க்கதரிசனமாக முன்னறிவித்தது. (22)GCTam 11.1

    மருள விழுந்துபோன இஸ்ரவேலின்மீது வரவிருக்கும் நியாயத் தீர்ப்பைக் குறித்து, குறிப்பாக மேசியாவை நிராகரித்துச் சிலுவையில் அறைவதனால் உண்டாகக்கூடிய தேவ கோபத்தின் பழிவாங்குதலைக் குறித்து, அவரது பேச்சைக் கவனித்திருந்த சீடர்களுக்கு இயேசு அறிவித்தார். பயங்கரமான உச்சக்கட்டத்தை அடையுமுன் சற்றும் தவறாத அடையாளங்கள் நிகழும். பயப்படும் அந்த வேளை சடுதியாவும் விரைவாகவும் வரும் என்று இதைப்பற்றி தமது அடியார்களை இரட்சகர் எச்சரித்தார். “மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்தஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்”-மத். 24:15,16. ரோமர்களின் உருவ வழிபாட்டுமுறைகள் எருசலேமின் மதில்களுக்குச் சற்றுத் தொலைவில், பரிசுத்த பூமியின்மீது அமைக்கப்படும்போது, கிறிஸ்துவின் அடியார்கள் நகரத்தைவிட்டு வெளியே ஓடிப்போவதில் பாதுகாப்பு பெறவேண்டும். எச்சரிப்பின் அடையாளம் காணப்படும்போது, தப்பிச்செல்ல இருப்பவர்கள் தாமதிக்கக்கூடாது. எருசலேமிலும் யூதேயாவெங்கிலும் தப்பிச்செல்லுவதற்காகக் காணப்படும் அடையாளத்திற்கு உடனே கீழ்ப்படியவேண்டும். வீட்டின் மேலிருக்கிறவன் தனது விலைமதிப்புள்ள பொக்கிஷத்தைக் காப்பதற்கென்று வீட்டிற்குள் செல்லக்கூடாது. வயல்களிலோ அல்லது திராட்சைத்தோட்டங்களிலோ தங்கள் மேலாடைகளைக் கழற்றிவைத்துவிட்டு பகலின் உஷ்ணமான வேளையில் வேலை செய்பவர்கள், தங்கள் மேலாடைகளை எடுப்பதற்குத் திரும்பக்கூடாது. பெரும் அழிவிற்குள்ளாகாதபடிக்கு அவர்கள் விநாடி நேரங்கூடத் தாமதிக்கக்கூடாது. (23)GCTam 11.2

    ஏரோதின் நாட்களில், எருசலேம் அழகுபடுத்தப்பட்டதாக மட்டும் இராமல், கோபுரங்களினாலும் சுவர்களினாலும் கோட்டைகளினாலும் நிர்மாணம் செய்யப்பட்டு, அதனுடைய இயற்கையான பலம் அதிகரிக்கப்பட்டு, வலிமையுடையதாகவும், எதிரிகள் உள்ளே நுழையமுடியாததாகவும் இருந்தது. அதன் அழிவுபற்றி அந்தக் காலத்தில் வெளிப்படையாக யார் முன்னறிவித்தாலும் அவர்களை, நோவாவை பயத்தைக் கொண்டு வருபவன் என்று நோவாவின் காலத்தில் அக்காலத்து மக்கள் எப்படிக் கருதினார்களோ அப்படியே கருதினார்கள். ஆனால் “வானமும் பூமியும் ஒழிந்துபோம் என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத்தேயு 24:35) என்று கிறிஸ்து அறிவித்திருக்கிறார். எருசலேமின் பாவத்தினிமித்தம், அதற்கு எதிராக தேவகோபம் உண்டாகும் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதன் முரட்டுத்தனம்மிக்க அவநம்பிக்கை அதன் விழுகையை நிச்சயமாக்கியிருந்தது. (24)GCTam 12.1

    “நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத் தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள். அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லு கிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்” (மீகா 3:9-11) என்று கர்த்தர் மீகா தீர்க்கதரிசியின் மூலமாக அறிவித்திருந்தார். (25)GCTam 12.2

    கள்ளத்தனமும், சுய நீதியுமிக்க எருசலேம்வாசிகளைப்பற்றி, இந்த வார்த்தைகள் உண்மையாக விவரிக்கப்பட்டிருந்தன. நாங்கள் மிகுந்த கண்டிப்புடன் தேவப்பிரமாணங்களை அனுசரிப்பவர்கள் என்று அவர்கள் தங்களைப்பற்றிக் கூறிக்கொண்டு, தேவப்பிரமாணத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் மீறிக்கொண்டிருந்தனர். கிறிஸ்துவினுடைய பரிசுத்தமும் மாசின்மையும் அவர்களுடைய அக்கிரமங்களை வெளிக்காட்டினதால், தங்களுடைய பாவங்களின் பலனாக ஏற்பட்ட துன்பங்களுக்கெல்லாம் கிறிஸ்துதான் காரணம் என்று குற்றஞ்சாட்டி, கிறிஸ்துவை வெறுத்தனர். அவர் பாவமற்றவர் என்று அவர்கள் அறிந்திருந்தபோதிலும், தங்களுடைய ஜனங்களின் பாதுகாப்பிற்கு, அவருடைய மரணம் தேவையானது என்று அறிவித்திருந்தனர். “நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள், அப்பொழுது ரோமர் வந்து, நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்”- யோவான் 11:48. கிறிஸ்து பலியாக்கப்பட்டால், தாங்கள் மறுபடியும் ஒருமைப் பாடுள்ள பலமிக்க ஜனமாக இருக்கமுடியும் என்று இவ்விதமாக ஆராய்ந்து நிதானித்து, ஜனங்கள் முழுவதும் அழிவதைவிட, ஒருவன் மரிப்பது நல்லது என்று அவர்களுடைய பிரதான ஆசாரியன் சொன்னதற்கு இசைந்தார்கள். (26)GCTam 12.3

    இவ்வாறாக, “சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும்” யூதத் தலைவர்கள் கட்டினார்கள். இரட்சகர் அவர்களுடைய பாவத்தைக் கண்டித்ததினால், அவரைக் கொலை செய்தபின்னும், அவர்கள் நாங்கள் தேவனுடைய அனுகூலத்தையுடைய அவருடைய சுவிசேஷத்தை நிராகரித்தவர்களின்மீதும், அவரது குமாரனை கொலைசெய்தவர்களின்மீதும் தேவன் காட்டிய நீடியபொறுமை மிக வியப்பானது! கனிகொடாத மரத்தைப்பற்றிய உவமை, யூத ஜனங்களுடன் தேவன் நடந்துகொண்டவிதத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. ‘இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது” (லூக்கா 13:7) என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்ட போதிலும், தேவ இரக்கம் சிறிதுகாலம் தாமதித்தது. கிறிஸ்துவின் சுபாவத்தையும் அவரது ஊழியத்தையும் குறித்து, இன்னும் அறிவில்லாத அநேக யூதர்கள் இருந்தனர். பெற்றோர்களுக்குக் கிடைத்திருந்த வெளிச்சத்தையும், வாய்ப்புகளையும் பெறாத அவருடைய ஜனங்கள், எங்கள் எதிரியிடமிருந்து அவர் எங்களை விடுவிக்கவேண்டும் என்பது அவர்களுடைய சுயநீதி நிறைந்த எண்ணமாக இருந்தது. “ஆகையால் உங்கள் நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப் போம்” (மீகா 3:12) என்று மீகா தீர்க்கதரிசி முன்னுரைத்தார். (27)GCTam 13.1

    எருசலேமின் வீழ்ச்சியைக்குறித்துக் கிறிஸ்து தாமே அறிவித்த நாற்பது வருடங்களுக்குப் பின்னும், அந்த நகரத்தின்மீதும் அதன் ஜனத்தின்மீதும் நிகழ இருந்த நியாயத்தீர்ப்பை அவர் தாமதிக்கச் செய்தார். அநேக பிள்ளைகள் இருந்தனர். கிறிஸ்துவின் பிறப்பிலும் ஜீவியத்திலும் மட்டுமல்லாது, அவரது மரணம் உயிர்த்தெழுதலிலும் தீர்க்கதரிசனம் எவ்விதமாக நிறைவேறியது என்பதைக் காணும்படி, அப்போஸ்தலர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்தவர்கள் மூலமாகக் கொடுக்கப்பட்ட பிரசங்கங்களின் வழியாக, தேவன் அவர்கள்மீது ஒளிவீசும்படிச் செய்தார். பிள்ளைகள் பெற்றோரின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படவில்லை. பெற்றோருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சகல வெளிச்சத்துடன்கூட, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகப்படியான வெளிச்சத்தையும் நிராகரித்ததின் காரணமாக, பிள்ளைகள் அவர்களுடைய பெற்றோர்களின் பாவங்களுக்குப் பங்காளிகள் ஆகி, தங்களுடைய அக்கிரமங்களின் அளவை நிரப்பினார்கள்.(28)GCTam 13.2

    எருசலேமின்மீதான தேவனுடைய நீடியபொறுமை, யூதர்களின் முரட்டுத்தனமான பிடிவாதத்தன்மையை உறுதிப்படுத்தியது. இயேசுவின் சீடர்களின்மீதிருந்த வெறுப்பாலும் மூர்க்கத்தனத்தினாலும் அவர்கள் தங்களது இரக்கத்தின் இறுதி அழைப்பை நிராகரித்தனர். அப்பொழுது தேவன் அவர்களின்மீதிருந்த பாதுகாப்பைப் பின்னிழுத்து, சாத்தான்மீதும் அவனது தூதர்களின்மீதும் தாம் வைத்திருந்த தடைசெய்யும் வல்லமையை நீக்கிவிட்டார். அதினால், அந்த ஜனங்கள் தாங்கள் தெரிந்துகொண்ட, அவர்களது தலைவனான சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள் விட்டுவிடப்பட்டனர். தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிற கிறிஸ்துவின் கிருபையை அவர் களுடைய பிள்ளைகள் நிராகரித்துவிட்டதினால், அவர்களிடத்தில் இருந்த அவ்வுணர்வுகள் இப்பொழுது வெற்றியடைந்தன. மிகப் பயங்கரமான— ஆத்துமாவின் மிகக் கீழ்த்தரமான இச்சைகளை சாத்தான் அவர்களில் அனுப்பினான். உணர்ச்சிகளினாலும் குருட்டுத்தனமான வெறிகளினாலும் ஆட்கொள்ளப்பட்டு, காரண காரியங்களை அறியவும் சிந்திக்கவும் மனிதர்கள் தவறினர். கொடுமைசெய்வதில் அவர்கள் சாத்தானைப் போலாகி விட்டிருந்தனர். சந்தேகம், விரோதம், சண்டைகள், கலகம், கொலை ஆகியவைகள் குடும்பங்களிலும், ஜனங்களிடத்தில் மேலானவர்கள்முதல் கீழானவர்கள்வரை அனைவரிடத்திலுமிருந்தது. ஓரு இடத்திலும் பாதுகாப்பு இருக்கவில்லை. நண்பர்களும் உறவினர்களும் ஒருவரையொருவர் வஞ்சித்தனர். பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளையும், பிள்ளைகள் தங்கள் பெற்றோரையும் கொன்றனர். அதிபதிகள் தங்களை ஆளும் வல்லமையை இழந்தவர்களாக இருந்தனர். கட்டுப்பாடற்ற இச்சைகளின் வெறியினால், அவர்கள் பயங்கரவாதிகளாயினர். குற்றமற்றவரான களங்கமற்ற தேவ குமாரனைக் குற்றவாளியாக்குவதற்காக யூதர்கள் பொய்ச்சாட்சிகளையும் அங்கீகரித்திருந்தனர். இப்போது பொய்க்குற்றச்சாட்டுகள் அவர்களுடைய சொந்த வாழ்க்கையை நிலையற்றதாக்கிவிட்டது. “இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள்” (ஏசாயா 30:11) என்று அவர்கள் தங்களுடைய செயல்களின்மூலமாக காலங்காலமாகவே சொல்லிக்கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்களுடைய விருப்பம் அவர் களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. அதற்குமேல் தேவபயம் அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை. அந்த ஜனத்தின் தலைமையில் சாத்தான் இருந்தான். மிகமேலான சமூக, மார்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளெல்லாரும் அவனால் வாரிக்கொள்ளப்பட்டனர். (29)GCTam 14.1

    ஒருவரை ஒருவர் எதிர்க்கும் பிரிவுகளின் தலைவர்கள், துர்ப் பாக்கியமாகப் பலியாக்கப்பட்டவர்களைக் கொள்ளையடிக்கவும், சித்திர வதை செய்யவும் ஒன்று சேர்ந்தவர்கள், மறுபடியும் ஒருவர்மீது ஒருவர் வீழ்ந்து, இரக்கமின்றி வெட்டிக் கொலைசெய்தனர். பயங்கரமான அவர் களது கோபாவேசத்தை ஆலயத்தின்மீதுள்ள பக்தியினாலுங்கூடக் கட்டுப் படுத்தமுடியவில்லை. ஆராதனைசெய்துகொண்டிருந்தவர்கள், பலிபீடத்தின் முன் அடித்து வீழ்த்தப்பட்டனர். கொலையானவர்களின் உடல்களினால் ஆலயம் தீட்டுப்பட்டிருந்தது. அப்படியிருந்தும், இந்த நரகத்தன்மைமிகுந்த செயல்களைச் செய்யத்தூண்டியிருந்தவர்கள், அவர்களது குருட்டுத்தனமான தேவதூஷணமிக்க இறுமாப்பினால், எருசலேம் தேவனுடைய நகரமாக இருப்பதினால், அது அழிக்கப்படும் என்னும் பயம் தங்களுக்கில்லை என்று ஜனங்கள்முன் அறிவித்திருந்தனர். பெரும் படைவரிசைகளான ரோம நாட்டுப் படையினர் அந்த நகரத்தை முற்றுகையிட்டிருந்த அந்த நேரத்தில், (யூதத் தலைவர்கள்) தங்களுடைய வல்லமையை மேலும் உறுதியாக ஸ்திரப்படுத்திக்கொள்ளுவதற்காக கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு லஞ்சம்கொடுத்து, தேவனிடத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை வருவதற் காக அவர்கள் காத்திருக்கவேண்டும் என்று அறிவிக்கும்படிச் செய்திருந்தனர். அவர்களுடைய எதிரிகளைத் தோற்கடிக்க உன்னதமானவர் குறுக்கிடுவார் என்று திரளானவர்கள் கடைசிவரை நம்பியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த தெய்வீகப் பாதுகாப்பை உதைத்துத் தள்ளியிருந்தது. எனவே, இப்போது அதற்கு பாதுகாப்பு இல்லை. எதிரிகளின் சேனைகள் அவர்களது அரண்களைத் தகர்த்து போர்செய்யக்கூடியவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், உட்கட்சிப் பிரிவினை களால் ஒருவராலொருவர் கொலைசெய்யப்பட்ட அவர்களது பிள்ளைகளின் இரத்தத்தால் அவர்களது தெருக்கள் கருஞ்சிவப்பு நிறமாகிக்கொண்டிருந்தது. அந்தோ, பரிதாபத்திற்குரிய எருசலேமே! (30)GCTam 15.1

    எருசலேமின் அழிவைப்பற்றிக் கிறிஸ்துவினால் முன்னறிவிக்கப்பட்ட வைகள் அனைத்தும் எழுத்தின்படி நிறைவேறின. “நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” (மத். 7:2) என்ற அவரது எச்சரிப்பில் இருந்த உண்மையை யூதர்கள் அனுபவித்தனர். (31)GCTam 15.2

    நிகழ இருக்கும் பாழ்க்கடிப்பு, வீழ்ச்சி ஆகியவைகளை முன்னறி விக்கும் துன்பகரமான சம்பவங்களுக்காக, அடையாளங்களும் அதிசயங் களும் தோன்றின. நடுஇரவு நேரத்தில் செயற்கையான ஒரு ஒளி, ஆலயத்தின்மீதும் பலிபீடத்தின்மீதும் பிரகாசித்தது. சூரியன் மறையும் வேளையில், மேகங்களின்மீது இரதங்களும் போர் வீரர்களும் யுத்தம் செய்வதற்காக அணிதிரள்வது போன்ற காட்சிகள் சித்திரங்களாகத் தெரிந்தன. இரவுநேரங்களில், பரிசுத்தஸ்தலத்தில் ஊழியத்தில் ஈடுபட்டிருந்த ஆசாரியர்கள் இனம்புரியாத சத்தங்களினால் பயந்து, கலங்கினார்கள். நிலம் நடுங்கிற்று. நாம் இங்கிருந்து வெளியேறிச் செல்லுவோமாக என்னும் திரள் கூட்டமானவர்களின் அழுகுரல்கள் கேட்கப்பட்டன. பெரிய கிழக்கு வாசல் கதவு-மனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து நகர்த்தினாலுங்கூட சாத்தமுடியாத அளவிற்கு மிகவும் கனமானதாக இருந்த, கல்தளத்திற்கடியில் மிக ஆழமாகப் புதைக்கப்பட்டிருந்த தடித்த இரும்புத் தூண்களுடன் பிணைக்கப்பட்டிருந்த அந்த வாசல் கதவு, காணக்கூடிய ஒருவரும் இல்லாமல் நள்ளிரவில் திறவுண்டது! -Milman, The History of the Jews, book 13. (32)GCTam 16.1

    ஒரு மனிதன் எருசலேம் நகரின் தெருக்களில், மேலும் கீழுமாக, ஏழு வருடங்கள் தொடர்ந்து நடந்து, அந்த நகரத்திற்கு வர இருக்கும் ஆபத்துக்களை அறிவித்திருந்தான். அவன் பகலிலும் இரவிலும் கிழக்குத் திசையிலிருந்து ஒரு சத்தம், மேற்குத் திசையிலிருந்து ஒரு சத்தம், நான்கு திசைகளிலிருந்தும் எருசலேமுக்கும் ஆலயத்திற்கும் எதிரான ஒரு சத்தம், மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் எதிரான ஒரு சத்தம், சகல ஜனங்களுக்கும் எதிரான ஒரு சத்தம், என்ற வார்த்தைகளை ஒரு அவலமான ஒப்பாரியைப் போல சோகமாக அலறிக்கொண்டிருந்தான்.-Ibid. அந்த அந்நியன் சிறையாக்கப்பட்டு, கசையால் அடிக்கப்பட்டான். ஆனால் அவனது உதடுகளில் இருந்து எவ்விதமான குற்றச்சாட்டும் உண்டாகவில்லை. அவமதிப்புக்கும் நிந்தனைக்கும் ஆளான போதும், எருசலேமிற்கு ஐயோ! அதன் குடிகளுக்கு ஐயோ! என்று மட்டும் பதில் கூறினான். அவன் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே, கொலைசெய்யப்படும் நாள்மட்டும் அவன் கூறிவந்த எச்சரிப்புக்கள் ஓயவில்லை. (33)GCTam 16.2

    எருசலேமின் அழிவின்போது, ஒரு கிறிஸ்தவன்கூட அழியவில்லை! “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதன் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவி லிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமில் இருக்கிறவர்கள் வெளியே புறப்படவும் வேண்டும்” (லூக்கா 21:20,21) என்று கிறிஸ்து அவரது சீடர்களை எச்சரித்திருந்தார். அவரது வார்த்தைகளை நம்பியிருந்த அனைவரும் வாக்குப்பண்ணப்பட்டிருந்த அடையாளத்தைக் கவனித்திருந்தனர். செஸ்டியஸ் என்னும் ரோம நாட்டுத் தளபதியின் தலைமையில் ரோம ராணுவவீரர்கள் எருசலேமைச் சூழ்ந்துகொண்டபின், உடனடியான ஒரு தாக்குதலுக்குச் சாதகமான அனைத்தும் அவர்களுக்கு இருந்தது. முற்றுகைக்கு உள்ளானவர்கள் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையற்ற நிலையில், எதிர்ப்பு எதுவும் இல்லாமல் சரணடையக்கூடிய நிலைமையில் இருந்தபோது, சற்றும் எதிர்பாராத விதத்தில், வெளிப்படையான எந்த காரணமுமின்றி, அந்த ரோம நாட்டுத் தளபதி தனது இராணுவத்தைப் பின்வாங்கச் செய்து அந்த முற்றுகையை விட்டுவிட்டுச் சென்றனர். ஆனால் தேவனுடைய மக்களின் நன்மைக்காக, தேவனுடைய இரக்கமிக்க ஏற்பாடு, நிகழ்ச்சிகளை இயக்கியிருந்தது. காத்துக்கொண்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு முன்குறிக்கப்பட்டிருந்த அடையாளம் கொடுக்கப்பட்டு, இரட்சகரின் எச்சரிப் புக்குக் கீழ்ப்படிய விரும்பின அனைவருக்கும் இப்பொழுது ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. யூதர்களானாலும் ரோமர்களானாலும் கிறிஸ்தவர்கள் ஓடிப்போவதற்கு இடையூறு செய்யாதபடி நிகழ்ச்சிகள் ஆட்சிசெய்யப்பட்டன. செஸ்டியஸ் திரும்பிச்சென்றபோது, முற்றுகையிடப்பட்டிருந்த யூதர்கள் வெளியேவந்து, போர்செய்யாமல் சென்றுகொண்டிருந்த அவனது சேனையைப் பின்தொடர்ந்தனர். இவ்விதமாக, இந்த இரு கூட்டத்தினரும் ஈடுபட்டிருந்தபோது, அந்த நகரத்தைவிட்டு வெளியேறக் கிறிஸ்தவர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர்களைக் குறுக்கிட முயன்றிருந்திருக்கக்கூடிய எதிரிகளும் அந்த நாட்டில் இல்லாமலிருந்தனர். அச்சமயத்தில், கூடாரப்பண்டிகையை முன்னிட்டு யூதர்கள் எருசலேமில் கூடியிருந்தனர். அதனால் அந்த தேசம் முழுவதிலுமிருந்த கிறிஸ்தவர்கள் தடைசெய்யப்படாதவர்களாகத் தப்பிச்செல்லமுடிந்தது. யோர்தானுக்கு அப்பாலுள்ள, பெரேயா தேசத்தில் இருந்த பெல்லா என்னும் நகருக்கு அவர்கள் ஓடிப்போனார்கள்.(34)GCTam 16.3

    செஸ்டியசின் சேனையைப் பின்தொடர்ந்த யூதசேனைகள், ரோமர்களின் சேனையை அழித்துவிடக்கூடிய விதத்தில், அவர்களது இராணுவத்தின் பின்பகுதியின்மீது மிகப் பயங்கரமாகப் பாய்ந்தனர். ரோமர்களின் சேனை மிகுந்த கஷ்டத்துடன் பின்திரும்பிச் செல்லுவதில் வெற்றி அடைந்தது. ஏறத்தாழ எவ்விதமான இழப்புமின்றி தங்களுக்குக் கிடைத்த கொள்ளைப் பொருட்களுடனும் வெற்றியுடனும் யூதர்கள் எருசலேமிற்குத் திரும்பினர். என்றபோதிலும், வெளிப்படையாகத் தோன்றிய இந்த வெற்றி, அவர்களுக்குத் தீங்கைத்தான் கொண்டுவந்தது. ரோமர்களின் தாக்குதலைத் தடுக்கவேண்டுமென்ற பிடிவாதமான ஆவியை அவர்களில் தூண்டிவிட்ட அது, விழுந்துபோன அந்த நகரத்தின்மீது, சொல்லிமுடியாத ஆபத்தை விரைவாகக் கொண்டுவந்தது. (35)GCTam 17.1

    எருசலேமின் மீதான முற்றுகையை ரோமநாட்டுத் தளபதி டைட்டஸ் திரும்பவும் தொடங்கினபோது, அதன்மீது உண்டான ஆபத்துக்கள் மிகப் பயங்கரமானவையாக இருந்தன. பஸ்கா பண்டிகையின் சமயத்தில், இலட்சக்கணக்கான யூதர்கள் அந்த நகரத்திற்குள் கூடியிருந்தபோது, அந்த நகரம் முற்றுகையிடப்பட்டது. அங்கு உணவுப் பொருட்கள் ஏராளமாக இருந்திருந்தது. அவைகளைக் கவனமாகச் செலவுசெய்திருந்தால், அதுவே அவர்களுக்குப் பல வருடங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், அங்கிருந்த ஒருவரை ஒருவர் எதிர்க்கும் பிரிவினைக்கோஷ்டிகளின் பொறாமையினாலும், பழிவாங்குதலினாலும் அந்த உணவுப்பொருட்கள் அதற்கு முன்னதாகவே அழிக்கப்பட்டுவிட்டதினால், இப்பொழுது பட்டினியின் பயங்கரங்கள் அனைத்தும் அனுபவத்திற்கு வந்தன. ஒரு படி கோதுமை, ஒரு தாலந்துக்கு விற்கப்பட்டது. மனிதர்கள் அவர்களது அரைக் கச்சைகளின்(பெல்ட்) தோலையும், காலணிகளின் தோலையும், ஆயுத உறைகளின் தோலையும் கடித்துத் தின்னுமளவிற்கு பசியின் கொடுமை அத்தனை பயங்கரமாயிருந்தது! நகரத்தின் சுவர்களுக்கு வெளியில் வளர்ந்திருந்த காட்டுச்செடிகளை உணவிற்காகப் பிடுங்கிக்கொண்டுவர மக்கள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக பெரிய எண்ணிக்கையில் கோட்டைச்சுவரைக் கடந்துசென்றனர். இதில் அநேகர் பிடிபட்டு, கொடுமையான சித்திரவதைகளுக்கும் மரணத்திற்கும் உள்ளாகியிருந்தபோதிலும், இந்த நிலைமை தொடர்ந்தது. இவ்வளவு பெரிய ஆபத்துக்கிடையில், அவர்கள் சேகரித்து வந்த பொருட்கள், அடிக்கடி அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்டன. மறைத்து வைத்திருந்த கொஞ்ச உணவை அவர்களிட மிருந்து பிடுங்கிக்கொள்ள, அதிகாரத்திலிருந்தவர்கள் கொடூரமான-மனிதத்தன்மை யற்ற, சித்திரவதைகளைச் செய்தனர். இப்படிப்பட்ட கொடுமைமிக்க செயல்கள் நல்ல முறையில் உணவை உண்டிருந்தவர்களாலேயே அடிக்கடி நடத்தப்பட்டிருந்தது. எதிர்காலத்திற்காக உணவுப் பொருட்களைச் சேகரித்து வைப்பதற்காகவும் அவர்கள் இப்படிச்செய்தனர். (36)GCTam 18.1

    பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் ஆயிரக்கணக் கானவர்கள் இறந்தார்கள். இயல்பான மனிதநேயம் அழிந்து விட்டதுபோல் காணப்பட்டது. கணவர்கள் மனைவிகளையும், மனைவிகள் தங்கள் கணவன்களையும் கொள்ளையிட்டனர். வயதுசென்ற பெற்றோர்களின் வாய்களிலிருந்து, அவர் களது பிள்ளைகள் உணவைப் பிடுங்கிச்செல்லுவது காணக்கூடியதாக இருந்தது. “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?” (ஏசாயா 49:15) என்னும் தீர்க்கதரிசியின் கேள்விக்கு, விழுந்துபோன அந்த நகரின் சுவருக்குள்ளிருந்து “இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின” (புலம்பல் 4:10) என்று பதில் கிடைத்தது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, “உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்; உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங் காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்” (உபாகமம் 28:56,57) என்று தீர்க்கதரிசனமாகக் கொடுக்கப்பட்ட எச்சரிப்பு மறுபடியும் நிறைவேறியது. (37)GCTam 18.2

    ரோம நாட்டு சேனைத்தலைவர்கள், யூதர்களுக்குப் பயத்தை உண்டுபண்ணி, அதினால் அவர்களைச் சரணடையச்செய்யலாம் என எண்ணினார்கள். சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளில் எதிர்ப்புக் காட்டியவர்கள் சவுக்கால் அடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அந்த நகரச்சுவரின் முன்பாகச் சிலுவைகளில் அறையப்பட்டனர். இந்தவிதமாக, நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் சாகடிக்கப்பட்டனர்; இத்ததைய பயங்கரமான செயல்கள், யோசபாத்தின் பள்ளத்தாக்கு, கல்வாரி ஆகிய இடங்களில் சிலுவைகளுக்கிடையில் கடந்துசெல்ல இடமில்லாமல் போகுமட்டும் தொடர்ந்தது. “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளை கள்மேலும் இருப்பதாக” (மத்தேயு 27:25) என்று பிலாத்துவின் நியாயாசனத் திற்குமுன் கூறப்பட்ட பயங்கரமான வஞ்சம்தீர்க்கும் சொல்லாகிய சாபத்தின் பலன் அவர்களைப் பயங்கரமாகச் சந்தித்தது. (38)GCTam 19.1

    பயங்கரமான அந்தக் காட்சிக்கு ஒரு முடிவைக்கொண்டு வரவும், அதின்மூலமாக எருசலேமை அதன் முற்றிலுமான அழிவிலிருந்து காக்கவும், டைட்டஸ் மனப்பூர்வமான விருப்பமுள்ளவனாக இருந்தான். பள்ளத்தாக்கு கள் எங்கும் இறந்தவர்களின் உடல்கள் குவியல்களாக இருந்ததை அவன் பார்த்தபோது, திகைத்துப்போனான். வசியம் செய்யப்பட்ட ஒருவனைப்போல, அவன் ஒலிவ மலையின் உச்சியில் நின்று, மேன்மையான அந்த ஆலயத்தைப் பார்த்து, அதின் ஒரு கல் கூடத் தொடப்படலாகாது என்று கட்டளையிட்டான். அந்த பலம் மிக்க இடத்தைக் கைப்பற்றிக்கொள்ள முயலுமுன், பரிசுத்தமான அந்த இடத்தை இரத்தத்தால் தீட்டுப்படுத்தும்படி தன்னை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்ற தனது ஆர்வமிக்க வேண்டுகோளை, யூதத் தலைவர்களுக்கு விடுத்தான். அவர்கள் வெளியே வந்து, வேறு எந்த இடத்திலிருந்தாவது போர்செய்தால், எந்த ஒரு ரோம நாட்டு வீரனும் அந்த ஆலயத்தின் பக்திமிக்க தன்மையை மீறமாட்டான் என்றான். அவர்களையும் அவர்களது நகரத்தையும் அவர்களது தொழுகையின் இடத்தையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் சரணடையவேண்டும் என்று ஜோசிபஸ் என்பவனும் (சரித்திர ஆசிரியன்) மிகமேலான பேச்சுத்திறனுடன், அவர்களைக் கெஞ்சி மன்றாடி னான். ஆனால் கசப்பான சாபங்கள் அவனது வார்த்தைகளுக்குப் பதிலாகக் கிடைத்தன. அவர்களது இறுதி மத்தியஸ்தனாக இருந்த அவன் அவர்களுக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருந்தபோது, கூரிய ஆயுதங்கள் அவன்மீது வீசி எறியப்பட்டன. தேவகுமாரனுடைய வேண்டுகோள்களை யூதர்கள் நிராகரித்திருந்தனர். சிநேகபாவமிக்க ஆட்சேபணையும் கெஞ்சுதலும் இப்பொழுது கடைசிவரை எதிர்த்து நிற்க அவர்களை நடத்தியது, அந்த ஆலயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற டைட்டசின் முயற்சி வீணானதாக இருந்தது. அவனைவிடப் பெரியவரான ஒருவர்: “ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி இடிக்கப்பட்டுப்போகும்” என்று அறிவித்திருந்தார்! (கி.பி. 70-ல் இந்த நிகழ்ச்சியானது தீர்க்கதரிசனத்தின்படியே நிகழ்ந்தேறியது). (39)GCTam 19.2

    யூதத் தலைவர்களின் குருட்டுத்தனமான பிடிவாதமும் முற்றுகை இடப்பட்டிருந்த நகருக்குள் நிகழ்ந்திருந்த அதிக வெறுப்புமிக்க குற்றங்களும், ரோமர்களின் அச்சமூட்டக்கூடிய கோபத்தையே தூண்டிவிட்டன. எனவே, அந்த ஆலயத்தைப் பலாத்காரத்தினால் கைப்பற்ற டைட்டஸ் இறுதியாக முடிவுசெய்தான். அப்படியிருந்த போதிலும், கூடுமானால் அது அழிவிலிருந்து காப்பாற்றப்படவேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால், அவனது கட்டளைகள் கருத்தில் கொள்ளப்படாமற்போயின. பின்பு, இரவு நேரத்தில் அவன் தனது கூடாரத்திற்குச் சென்றபின், முற்றுகையிடப்பட்ட ஆலயத்திலிருந்த யூதர்கள் வெளியிலிருந்த போர்வீரர்களைத் தாக்கினார்கள். இந்த போராட்டத்தின்போது, ஒரு வீரன் அந்த ஆலயத்தின் நுழைவு மண்டபத்தின் திறந்தவெளியின் வழியாக ஒரு தீப்பந்தத்தை வீசியெறிந்தான் உடனே கேதுரு மரப்பலகையால் மூடப்பட்டிருந்த அதன் அறை தீப்பற்றி எரிந்தது. டைட்டஸ் தனது சேனையின் துணைத் தலைவர்களுடன் அந்த இடத்திற்கு விரைந்து, அந்தத் தீயை அணைக்கும்படி இராணுவ வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அவனது வார்த்தைகள் செவிமடுக்கப்படாமல் போயிற்று. இராணுவ வீரர்கள் அவர்களது கோபாவேசத்தில் எரியும் தீப்பந்தங்களை ஆலயத்தைச் சேர்ந்திருந்த அறைகளிலும் வீசியெறிந்து, அங்கு அடைக்கலமாயிருந்த ஏராளமானவர்களை அவர்களது பட்டயத்தினால் கொன்றுகுவித்தனர். ஆலயப்படிக்கட்டுகளின்வழியாக இரத்தம் தண்ணீரைப்போல பெருக்கெடுத்து ஓடியது. ஆயிரம் ஆயிரங்களான யூதர்கள் அழிந் தனர். போரின் சத்தத்திற்குமேலாக “இக்கபோத்” (மகிமை நீங்கிப் போய்விட்டது) என்னும் உரத்த சத்தங்கள் கேட்கப்பட்டன. (40)GCTam 20.1

    இராணுவ வீரர்களின் கோபாவேசத்தைத் தடுக்கமுடியவில்லை என்பதை டைட்டஸ் கண்டான். அவன் தனது உடன் அதிகாரிகளுடன் அந்தப் பரிசுத்த மாளிகையின் உட்பகுதியைச் சுற்றிக் கவனித்தான். அதன் அழகிய தோற்றமும் பிரகாசமும் அவனை ஆச்சரியத்தால் நிரப்பியது. அக்கினி பரிசுத்த ஸ்தலத்திற்குள் இன்னும் பரவாமல் இருந்ததினால், அதைக் காக்கும் கடைசி முயற்சியில் அவன் ஈடுபட்டு, பாய்ந்து முன்சென்று, அந்தப் பெருந்தீயின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும்படி வீரர்களை எச்சரித்தான். லிபராலிஸ் எனும் நூற்றுக்கு அதிபதி, கீழ்ப்படிந்து செயல்படும்படி தனது சேவகர்களை வற்புறுத்தினான். ஆனால் யூதர்களின்மீதிருந்த பகையுணர்வு, போரின் பயங்கரமான அமளி, கொள்ளைப் பொருள்களின் மீதிருந்த தீராத ஆசை ஆகியவைகள், பேரரசனின்மீதிருந்த மதிப்பையுங்கூட விட்டுவிடச்செய்திருந்தன! அக்கினித் தழலின் ஒளியில் தங்களைச் சுற்றிலும் காணப்படும் அனைத்தும் பொன்னாக ஜொலிப்பதைப் போர்வீரர்கள் கண்டு, கணக்கில் அடங்காத பொக்கிஷங்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக யூகித்துக்கொண்டனர். ஒரு வீரன் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே தனது தீ பந்தத்தை கதவின் கீல்களுக்கிடையில் நுழைக்கவே, வினாடி நேரத்தில் அந்தக் கட்டிடம் முழுவதும் தீக்கிரையாயிற்று. கண்தெரியாமல் போகச்செய்யும் புகையினாலும் அக்கினியினாலும் வீரர்கள் பின்வாங்கிச்செல்ல நேரவே, மேன்மைமிக்க அந்த மாளிகை அதன் முடிவைக்காண விட்டுவிடப்பபட்டது! (41)GCTam 21.1

    ரோமர்களின் பார்வைக்கே அது வேதனைதரும் திடுக்கிடக் கூடிய காட்சியாக இருந்தபோது, யூதர்களுக்கு எவ்விதமாக இருந்திருக்கும்? அந்த நகரத்தின் தலைமையிடமாக இருந்த அந்தக் குன்று, ஒரு எரிமலையைப்போல எரிந்தது. பயங்கரமான ஓசையுடன் கட்டிடங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்து வீழ்ந்தன. கேதுரு மர மச்சுப்பாவிய கூரைகள் நெருப்புத் தகடுகளாயின. உயர்ந்தெழும்பி நின்றிருந்த கோபுரங்கள், சிவப்புநிற ஒளியுடன் நெருப்புத் தூண்களைப் போலாயின. வாசற்கோபுரங்களில் இருந்து பெரும் நெருப்பும், பெரும் புகையும் எழும்பின. இந்தப்பெரும் நெருப்பினால், பக்கத்துக் குன்றுகளும் வெளிச்சத்தால் நிறைந்தது. கருமையடைந்த பெரும் மனிதக்கூட்டத்தினர் அழிவு நெருங்கிவருவதைப் பயங்கரமான திகிலுடன் கவனித்துக்கொண்டிருந்தனர். நகரத்தின் மேல்பகுதியின் சுவர்களும், உயரமான இடங்களும், வெளிரிய முகங்களாலும் நம்பிக்கையற்ற வேதனையால் நிறைந்த முகங்களாலும் நிரம்பியிருந்தன. மற்றவர்கள் ஒன்றும் செய்யமுடியாத கோபத்தால் முகத்தைச் சுளித்துக்கொண்டிருந்தனர். அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த ரோமவீரர்களின் அமளிகளும், அக்கினி ஜூவாலையால் அழியும் கலகக்காரர்களின் கூச்சல்களும், சீறி எழும் நெருப்புச் சுவாலையின் சீற்றத்துடனும், கீழே விழும் பெரும் உத்தரங்களின் இடி முழக்கங்களுடனும் கலந்தன. நகரின் மேல்பகுதியில் இருந்த மக்களின் வீறிடும் அலறல்களும், மார்பில் அடித்துக்கொள்ளும் கதறல்களும், மலைகளிலும் அதன் சுவரெங்கிலும் எதிரொலித்தது. பசியினாலும் பஞ்சத்தினாலும் செத்துக்கொண்டிருந்த மனிதர்கள், தங்க ளுடைய மனத்துயரம், பாழ்க்கடிப்பு ஆகியவைகளை வெளிக்காட்டி, அலறு வதற்கு தங்களிடம் மீதமாக இருந்த பலத்துடன் ஒன்று திரண்டனர். (42)GCTam 21.2

    நகரின் உட்புறத்தில் நிகழ்ந்த படுகொலைகள் வெளியில் காணப்பட்டதைவிட, அதிகப் பயங்கரமானதாக இருந்தது. ஆண்களும், பெண்களும், முதியோரும், இளைஞரும், கலகக்காரர்களும், ஆசாரியர்களும், சண்டையிட்டவர்களும், இரக்கம் காட்டும்படி மன்றாடினவர்களும் வேற்றுமை யின்றி கோடரிகளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கொலைசெய்தவர்களின் எண்ணிக்கை யைவிட அதிகமாக இருந்தது. படுகொலைசெய்யச் சென்ற இராணுவத்தினர், தங்களது வேலையைச் செய்வதற்கு, பிணக்குவியல்களின்மீதுதான் ஏறிச் செல்லவேண்டியதிருந்தது. -Milman, The History of the Jews, book 16. (43)GCTam 22.1

    அந்த ஆலயத்தின் அழிவிற்குப்பின், விரைவில் அந்த நகரம் முழுவதும் ரோமர்களின் கரங்களுக்குள் வீழ்ந்தது. உள்ளே நுழைய முடியாதவைகளாக இருந்த தங்களுடைய கோபுரங்களை, யூதத் தலைவர்கள் கைவிட்டுவிட்டு தனிமையாக நிற்பதை டைட்டஸ் கண்டான். அவன் வியப்புடன் அவர்களைப் பார்த்து: “தேவன் அவர்களைத் தனது கரங்களுக்குள் கொடுத்துவிட்டார்” என்று அறிவித்தான். ஏனெனில் எப்படிப்பட்ட சக்திவாய்ந்த இயந்திரத்தினாலும் கூட பிரம்மாண்டமான அந்தக் கோட்டை கொத்தளங்கள் மேற்கொள்ளப்பட முடியாததாக இருந்தது; அந்த நகரமும், ஆலயமும் அவைகளின் அஸ்திவாரம்வரை எரிந்துபோயின; பரிசுத்தமான அந்த வீடு (ஆலயம்) நின்றிருந்த நிலம், ஒரு வயலைப்போல உழப்பட்டது. “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்”-எரேமியா 26:18. முற்றிகைக்குப்பின் நிகழ்ந்த படுகொலையில் இலட்சக்கணக்கான மக்கள் அழிந்தனர். உயிருடன் இருந்தவர்கள் வெற்றிபெற்றவர்களின் பரிசுப்பொருட்களாக ரோம் நகருக்கு இழுத்துச்செல்லப்பட்டு, அடிமைகளாக விற்கப்பட்டனர். ரோம் நகரின் விளையாட்டு அரங்கங்களில் காட்டுமிருகங்களுக்கு இரையாக வீசி எறியப்பட்டனர். அல்லது உலகம் முழுவதிலும் வீடில்லாமல் அலைபவர்களாகச் சிதறடிக்கப்பட்டனர். (44)GCTam 22.2

    யூதர்கள் அவர்களைக் கட்டும் விலங்குகளை அவர்களாகவே வார்த்திருந்தனர் பழிவாங்குதலின் பாத்திரத்தை அவர்கள் தாங்களாகவே நிறைத்திருந்தனர். ஒரு ஜாதியாக இருந்த அவர்களின் மீது வந்த முழுமையான அழிவு, சிதறடிப்பின்போது பின்தொடர்ந்த ஆபத்துகள் ஆகியவை, அவர்களது சொந்தக் கரங்களினால் விதைத்ததின் அறுவடையைச் செய்துகொண்டிருந்தன. “இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்”- ஓசியா 13:9; 14:1. தேவனுடைய நேரடியான கட்டளையினால் தான் அவர்களுக்குத் தண்டனை வந்தது என்று அவர்களது துன்பங்களால் அடிக்கடி எடுத்துக்காட்டப்படுகின்றன. பெரும் வஞ்சகனாகிய சாத்தான் இவ்விதமாகத்தான் அவனது சொந்த வேலையை மறைக்க வகைதேடுகிறான். தெய்வீக அன்பையும் இரக்கத்தையும் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் நிராகரித்ததினால், தேவனுடைய பாதுகாப்பு தங்களைவிட்டு விலகிச்செல்லும்படிச் செய்தனர். அதனால் அவர்களது விருப்பத்தின்படி அவர்களை ஆளுவதற்குச் சாத்தான் அனுமதிக்கப்பட்டான். சாத்தானின் வல்லமைக்கு தங்களை விட்டுக்கொடுப்பவர்களுக்கு என்ன நிகழும் என்பதன் நடைமுறை விளக்கமாக எருசலேமின் அழிவில் நிகழ்த்தப்பட்ட சகிக்கமுடியாத கொடுமைகள் உள்ளன. (45)GCTam 23.1

    நாம் அனுபவிக்கும் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்த அளவிற்கு, கிறிஸ்துவிற்குக் கடன்பட்டிருக்கிறோம் என்பதை நாம் அறியோம். கட்டுப்படுத்தும் தேவனுடைய வல்லமைதான், மனித இனம் முற்றிலுமாக சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள் கடந்து சென்றுவிடாதபடி, தடுத்துக்கொண்டிருக்கிறது. தீமைசெய்கிறவனின் கொடுமைமிக்க- தீமைமிக்க வல்லமையைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் தேவனுடைய இரக்கத்திற்கும் நீடியபொறுமைக்கும், கீழ்ப்படியாதவர்களும் நன்றிகெட்டவர்களும் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டியதற்குக் காரணம் இருக்கிறது. தெய்வீகச் சகிப்புத்தன்மையின் எல்லையை மனிதர்கள் கடந்துசெல்லும்போது, அந்தக்கட்டுப்படுத்துதல் நீக்கப்படுகிறது. மீறுதலுக்கான தண்டனையை நடத்திவைக்கும் ஒருவரை நிராகரித்தவர்களை, அவர்கள் விதைத்தவைகளை அவர்களே அறுவடை செய்துகொள்ளும்படி அவர் விட்டுவிடுகிறார். நிராகரிக்கப்பட்ட ஒளிக்கதிர் ஒவ்வொன்றும், நிந்திக்கப்பட்ட அல்லது செவிசாய்க்கப்படாமல் விடப்பட்ட எச்சரிக்கை ஒவ்வொன்றும், நடப்பிக்கப்பட்ட வெறிச்செயல் ஒவ்வொன்றும், தேவப் பிரமாணத்தின் மீறுதல் ஒவ்வொன்றும், விதைக்கப்பட்ட ஒரு விதையாக இருந்து, அதன் தவறாத அறுவடையைத் தருவதாக உள்ளது. தொடர்ந்து பிடிவாதமாக எதிர்க்கப்படுவதால், தேவனுடைய ஆவியானவர் இறுதியில் பாவியிடமிருந்து விலக்கிக்கொள்ளப்படவே, ஆத்துமாவின் தீய ஆசைகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை இல்லாமலாகிவிடுகிறது. தெய்வீகக் கிருபையுடனும் ஈவுடனும் சச்சரவுசெய்து, தெய்வீக இரக்கத்தின் பரிந்துபேசுதலைத் தடுத்துக்கொண் டிருக்கும் அனைவருக்கும், எருசலேமின் அழிவு பயங்கரமான- பக்தி விநயமான எச்சரிப்பாக உள்ளது! பாவத்தின்மீதுள்ள தேவனுடைய வெறுப்பு, குற்றமுள்ளவனின்மீது உண்டாகக்கூடிய தண்டனையின் நிச்சயம், ஆகியவைகளுக்கு இதைவிட அதிகமான ஒரு சாட்சி ஒருபோதும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. (46)GCTam 23.2

    எருசலேமைச் சந்திக்கவுள்ள நியாயத்தீர்ப்புபற்றிய இரட்சகரின் தீர்க்கதரிசனம், பயங்கரமான பாழ்க்கடிப்பைப்பற்றிய மற்றொன்றின் நிறைவேறுதலின் மங்கிய நிழலாக இருந்தது. தெரிந்துகொள்ளப்பட்ட நகரத்தில், தேவனுடைய இரக்கத்தை நிராகரித்து, அவரது பிரமாணத்தைக் காலின்கீழிட்டு மிதித்ததினால், உலகத்தில் ஏற்பட்ட பயங்கரமான அழிவினை நாம் காணலாம். உலகம் இதுவரை சாட்சியாகக் கண்டுள்ள மனித இனத்தின் துன்பங்களின் பதிவேடுகள் இருண்டவையாக உள்ளன. அதை சிந்திக்கும்போது, இதயம் நோயடைந்து மனம் மயக்கமடைகிறது. பரலோக அதிகாரத்தை நிராகரித்ததின் பலன் பயங்கரமானவைகளாக உள்ளது. ஆனால், எதிர்காலத்தைப்பற்றிய வெளிப்படுத்தல்களில், அதைவிடவும் இருளடைந்த ஒருசாட்சி முன்வைக்கப்பட்டுள்ளது. அமளிமிக்க நீண்ட ஊர்வலங்கள், சச்சரவுகள், அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்கள், இரத்தத்தில் புரண்ட உடுப்பு (ஏசாயா 9:5) ஆகியவை கடந்த காலத்தின் பதிவேட்டுச் சான்றுகளாக உள்ளன. மனிதர்களுடைய வெறிகளையும், சாத்தானின் கோபத்தையும் கட்டுப்படுத்தாதபடி தேவனுடைய ஆவி முற்றிலுமாக விலகிச்செல்லும் அந்த நாளில் உண்டாகக்கூடிய பயங்கரங்களுடன் ஒப்பிடும்போது, இவையெல்லாம் ஒன்றுமில்லை. அப்போது, இதற்குமுன் ஒருபோதும் இருந்திராத விதத்தில், உலகம் சாத்தானின் ஆளுகையின் முடிவுகளைப் பார்க்கும். (47)GCTam 24.1

    ஆனால் எருசலேமின் அழிவைப்போன்றிருக்கும் அந்த நாளில், நித்திய ஜீவனுக்கென்று பெயரெழுதப்பட்டிருக்கும் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் (ஏசாயா 4:4). விசுவாசமுள்ளவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளுவதற்காக, தாம் இரண்டாம் முறை வருவதாக கிறிஸ்து அறிவித்திருக்கிறார். “அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களை வானத்தின் ஒருமுனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலுதிசைகளிலுமிருந்தும் கூட்டிச்சேர்ப்பார்கள்”-மத்தேயு 24:30-31. “நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்”-2தெசலோனிக்கேயர் 2:8. பண்டைய இஸ்ரவேலர்களைப் போலவே, துன்மார்க்கர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளுகின்றனர். அவர்களுடைய அக்கிரமத்தினால், அவர்கள் விழுகிறார்கள். பாவமிக்க ஒரு வாழ்க்கையினால் அவர்கள் தேவனுடன் தொடர்பில்லாத ஒரு நிலையில் தங்களைத் தாங்களே விலக்கிவைத்துக்கொள்கின்றனர். தீமையினால் அவர்களது தன்மைகள் மிகவும் கீழாகிவிட்டதினால், அவரது மகிமையின் பிரசன்னம் அவர்களைப் பட்சிக்கும் ஒரு அக்கினியாக இருக்கிறது. (48)GCTam 24.2

    கிறிஸ்துவின் வார்த்தைகளினால் கொடுக்கப்பட்டுள்ள போதனைகளை அலட்சியப்படுத்தமலிருக்க மனிதர்கள் எச்சரிக்கை உள்ளவர்களாக இருப்பார்களாக. வரவிருக்கும் பாழாக்குதலில் இருந்து தப்பிக்கும்படியாக தமது சீடர்களுக்கு அடையாளங்களைக் கொடுத்து எச்சரித்ததுபோல, இறுதி அழிவைக் குறித்த அடையாளங்களைக் கொடுத்து, வரவிருக்கும் கோபத்திற்குத் தப்பி ஓடிச்செல்லும்படி அவர் உலகை எச்சரித்திருக்கிறார். “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்”- -லூக்கா 21:25. அவரது வருகையின் இந்த முன்னடையாளங்களான “இவைகளை எல்லாம் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்” (மத்தேயு 24:29; மாற்கு 13:24-26; வெளி. 6:12-17) என்பதை அறிய வேண்டும். “ஆகையால் நீங்கள் விழித்திருங்கள்” என்று எச்சரிக்கிறார். அந்த எச்சரிப்பிற்குச் செவிசாய்ப்பவர்களை, அந்தநாள் மேற்கொள்ளாதபடிக்கு அவர்கள் அந்தகாரத்தில் விடப்படமாட்டார்கள். ஆனால், விழித்திராதவர்களின்மீது, “இரவிலே திருடன் வருகிற விதமாய்க் கர்த்தருடைய நாள் வரும்”-1தெச. 5:2. (49)GCTam 25.1

    எருசலேமின் அழிவைப்பற்றிய இரட்சகரின் எச்சரிப்பைப் பெற்றுக்கொள்ள யூதர்கள் எப்படி ஆயத்தமற்றவர்களாக இருந்தார்களோ, அதைப்போலவே, இந்தக் காலத்திற்குரிய தூதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமற்றதாக உலகம் இருக்கிறது. அந்தநாள் எப்பொழுது வந்தாலும் தெய்வபக்தி இல்லாதவர்களுக்கு அவர்கள் அறியாத நேரத்தில்தான் வரும். வாழ்க்கை அதன் மாறாத வட்டத்தில் சுழன்றுகொண்டிருக்கும் போது, மனிதர்கள்—இன்பம் காண்பதிலும் வியாபாரத்திலும் போக்குவரத்திலும் பணம் சம்பாதிப்பதிலும், சமயத் தலைவர்கள்-உலகத்தின்முன்னேற்றத்தைப்பற்றியும் அறிவு வளர்ச்சியைப்பற்றியும், மக்கள்-ஒரு பொய்யான பாதுகாப்பு என்னும் தொட்டிலில் ஆடுவதிலும் ஈடுபட்டிருக்கும்போது, காவல் இல்லாத வீட்டிற்குள், நடுஇரவில் திருடன் நுழைவதுபோல், கவனமற்றவர்களின்மீதும் தெய்வபக்தி இல்லாதவர்களின்மீதும் அழிவு திடீரென்று வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. (50)GCTam 25.2