Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    31—தீய ஆவிகளின் செயல்பாடுகள்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 511-517)

    காணமுடியாத உலகத்துடனுள்ள காணக்கூடியவற்றின் இணைப்பு, தேவனுடைய தேவதூதர்களின் ஊழியம், தீய ஆவிகளின் கூட்டங்கள் ஆகியவை வேதவாக்கியங்களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு, மனித வரலாற்றுடன் பிரிக்கமுடியாத விதமாக கலந்து பின்னப்பட்டுள்ளது. தீய ஆவிகள் உள்ளன என்ற கருத்தின்மீது அவநம்பிக்கை வளர்ந்துவரும் நேரம், “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்” (எபி. 1:14) பரிசுத்த தூதர்கள் மரித்தவர்களின் ஆவிகளாக கருதப்படுகின்றனர். ஆனால் வேதவாக்கியங்கள் நல்ல தீய தூதர்கள் இருக்கிறார்கள் என்பதை மட்டுமல்ல, அவர்கள் மரித்தவர்களின் ஆவிகளல்ல என்பதையும் கேள்விக்கிடமற்ற வகையில் போதிக்கிறது. (1)GCTam 599.1

    மனிதனைப் படைப்பதற்கு முன்னரே தேவதூதர்கள் இருந்தனர். எப்படியென்றால், பூமியின் அஸ்திவாரம் போடப்பட்டபோது, “விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே”- யோபு 38:7. மனிதனுடைய விழுகைக்குப்பின் ஜீவவிருட்சத்தைக் காவல் செய்யும்படி தேவதூதர்கள் அனுப்பப்பட்டனர். அந்த நிகழ்ச்சி, எந்த ஒரு மனிதனும் மரிப்பதற்கு முன்பே நிகழ்ந்தது. தேவதூதர்கள் இயற்கையில் மனிதர்களைவிட மேலானவர்கள். ஏனெனில், “நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்” (சங். 8:5) என்று சங்கீதக்காரன் கூறுகிறான். (2)GCTam 599.2

    பரலோகவாசிகளின் எண்ணிக்கை, வல்லமை, மகிமை, தேவ அரசாங்கத்துடனுள்ள அவர்களது தொடர்பு, அத்துடன் மீட்பின் பணியில் உள்ள அவர்களது சம்பந்தம் ஆகியவைபற்றி வேதவாக்கியங்களினால் நாம் தெரிவிக்கப்பட்டிருக்கிறோம். “கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.’ “சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக்கேட்டேன்;” “கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே” (சங். 103: 19—21 வெளி. 5:11) என்று தீர்க்கதரிசி சொல்லுகிறார். ராஜாதி ராஜாவின் சமுகத்தில் பலத்த சவுரியவான்களாகிய தூதர்கள் கர்த்தருக்குப் பிரியமானதைச்செய்ய, அவருடைய சத்தத்தைக் கேட்க காத்திருக்கின்றனர். “ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்”-தானி. 7:10. “நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்” (எபி. 12:22) என்று அப்போஸ்தலனாகிய பவுல் அறிவித்தார். தேவனுடைய தூதர்களாகிய அவர்கள், “அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல் ஓடித்திரிந்தன”—எசே. 1:14. அவர்களது மகிமை அப்படி ஜுவாலிப்பதாகவும் அவர்களது போக்கு அவ்வளவு விரைவானதாகவும் இருந்தது. இரட்சகரின் கல்லறையில் தோன்றின அந்த தேவதூதனின் முகம் எப்படி இருந்தது? “அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்’- மத்தேயு 28: 3—4. அகந்தைமிக்க அசீரியனான சனகெரிப், தேவனை நிந்தித்துத் தேவதூஷணம் கூறி, இஸ்ரவேலை அழிக்கப்போவதாக பயமுறுத்தியபோது, “அன்று இராத்திரியில் ... கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்” -2 இரா. 19:35. “அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்;” —2 நாளா 32:21. (3)GCTam 599.3

    தேவனுடைய பிள்ளைகளுக்கான இரக்கத்தின் பணியில் தூதர்கள் அனுப்பப்படுகின்றனர். ஆபிரகாமுக்கு ஆசீர்வாதங்களின் வாக்குத்தத்தத்துடனும், அக்கினியினாலான அழிவிலிருந்து நீதிமானாயிருந்த லோத்தைக் காப்பதற்காக சோதோமின் வாசலுக்கும், வனாந்தரத்தில் களைப்பினாலும் பசியினாலும் மடிந்துபோகாதபடிக்கு எலியாவினிடத்திற்கும், எலிசாவிற்கு எதிரிகளால் சூழப்பட்டிருந்த சிறிய ஊருக்கு அக்கினியுமான இரதங்களாலும் குதிரைகளாலும், தானியேலுக்கு அஞ்ஞான அரசனின் சபையில் ஞானத்தைத் தேடியிருந்தபோதும் சிங்கத்திற்கு இரையாகும்படி கைவிடப்பட்டபோதும், ஏரோதின் நிலவறையில் சாகும்படி விடப்பட்டிருந்த பேதுருவிற்கும், பிலிப்பியிலிருந்த கைதிகளுக்கும், நடுக்கடலில் புயல்காற்றில் அகப்பட்டிருந்த பவுலுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும், அந்நிய புறஜாதியானாயிருந்த கொர்நேலியுவுக்கு இரட்சிப்பின் தூதுடனும், இவ்விதமாகக் காலங்கள் நெடுகிலும் பரிசுத்த தேவதூதர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு ஊழியம் செய்துள்ளனர். (4)GCTam 600.1

    கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறான். இந்தப் பரலோகக் கண்காணிப்பாளர்கள் நீதிமான்களைத் துன்மார்க்கரின் வல்லமையிலிருந்து கேடயமாக இருந்து காக்கின்றனர். “அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?” (யோபு 1:9,10) என்று யோபுவைப்பற்றி சொன்னபோது சாத்தானே உணர்ந்திருந்தான். “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” (சங். 34:7) என்னும் சங்கீதக்காரனின் வார்த்தைகளில் தேவன் அவரது மக்களை எந்த ஏதுகரத்தினால் பாதுகாக்கிறார் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 18:10) என்று இரட்சகர் அவரை நம்புகிறவர்களைப்பற்றிப் பேசும்போது கூறினார். தேவனுடைய பிள்ளை களுக்கு ஊழியம் செய்யும்படியாக ஏற்படுத்தப்பட்டுள்ள தூதர்கள், எந்த நேரத்திலும் அவருடைய சமுகத்திற்குச் செல்லக்கூடியவர்கள். (5)GCTam 601.1

    இவ்வாறாக, அந்தகாரப்பிரபுவின் வஞ்சிக்கும் வல்லமைக்கும் கண்ணயராத விரோதங்களுக்கும் தீமையின் சேனைகள் அனைத்துடனும் உள்ள போராட்டத்திற்கும் ஆளாகி உள்ள தேவனுடைய ஜனங்களுக்கு பரலோக தேவதூதர்களின் ஓய்வில்லாத பாதுகாப்பு நிச்சயிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் அப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்படவில்லை. வல்லமைமிக்க தீமையின் ஏதுகரங்களை தமது பிள்ளைகள் சந்திக்கவேண்டியதிருப்பதால், கிருபையையும் பாதுகாப்பையும் தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தங்களாகக் கொடுத்திருக்கிறார். இந்த ஏதுகரங்கள் எண்ணிக்கையில் அதிகமானவைகளாக தீர்மானமுடைய களைப்படையாதவைகளாக உள்ளன. இவைகளின் பயங்கரத்தையும் வல்லமையையும் அறியாதவர்களாக கேட்காதவர்களாக எவரும் பாதுகாப்புடன் இருக்க இயலாது. (6)GCTam 601.2

    ஆதியில் பாவமற்றவர்களாகப் படைக்கப்பட்டிருந்த தீய ஆவிகள் இப்பொழுது தேவனின் தூதர்களாக உள்ள பரிசுத்த தூதர்களுடன் இயல்பிலும் வல்லமையிலும் மகிமையிலும் சமமாக இருந்தனர். ஆனால் பாவத்தின் மூலமாக விழுந்துபோன அவர்கள், தேவனுக்கு கனவீனத்தை உண்டுபண்ணவும், மனிதர்களை அழிக்கவும் ஒரு கூட்டமைப்பாக ஒன்றுசேர்ந்துள்ளனர். சாத்தானின் கலகத்தில் அவனுடன் இணைந்து பரலோகத்திலிருந்து துரத்திவிடப்பட்ட அவர்கள், அதன் பின்னான காலங்கள் நெடுகிலும், தெய்வீக அதிகாரத்திற்கு எதிராகப் போர் செய்வதில் சாத்தானுடன் ஒத்துழைத்துள்ளனர். அவர்களது கூட்டம், அரசாங்கம், பலவித நிலைகள் நுண்ணறிவு, தந்திரம், மனிதர்களின் சமாதானம், மகிழ்ச்சி ஆகியவைகளுக்கெதிரான அவர்களது தீய திட்டங்கள் அனைத்தையும்பற்றி வேதவாக்கியங்களில் நாம் கூறப்பட்டுள்ளோம். (7)GCTam 602.1

    பழைய ஏற்பாட்டு வரலாறு, அவர்களைப்பற்றியும் அவர்களது பிரதிநிதிகளைப்பற்றியும் இங்குமங்குமாக எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் கிறிஸ்து பூமியில் இருந்த காலத்தில்தான், தீய ஆவிகள் அவைகளின் வல்லமைகளை மிக நன்றாகக் காணும் வகையில் வெளிக்காட்டின. மனிதனின் மீட்பிற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த திட்டத்தில் பிரவேசிப்பதற்காக கிறிஸ்து வந்திருந்தார். சாத்தான் உலகினைக் கட்டுப்படுத்தும் அவனது உரிமையை வலியுறுத்தத் தீர்மானித்திருந்தான். பாலஸ்தீன நாட்டைத் தவிர, பூமியெங்கிலும் அதன் ஒவ்வொரு பகுதியிலும் உருவ வழிபாட்டை ஏற்படுத்துவதில் அவன் வெற்றி அடைந்திருந்தான். சோதனைக்காரனின் அதிகாரத்திற்கு இணங்காமலிருந்த அந்த ஒரே நாட்டு மக்களின்மீது பரலோகத்தின் ஒளியை வீசச்செய்யக் கிறிஸ்து வந்தார். இங்கு ஒன்றை ஒன்று எதிர்க்கின்ற இரு வல்லமைகள் மேலாதிக்கத்தை உரிமைபாராட்டின. இயேசு கிறிஸ்து மன்னிப்பையும் சமாதானத்தையும் காண விரும்பிய அனைவரையும் அவரது அன்பின் கரங்களை நீட்டிவிரித்து, அழைத்துக்கொண்டிருந்தார். இருளின் சேனைகள் தங்களிடம் அளவில்லாத கட்டுப்படுத்தும் வல்லமை இல்லை என்பதைக் கண்டன. கிறிஸ்துவின் ஊழியம் வெற்றியடையுமானால் தங்களின் ஆளுகை (பிசாசுகளின்) முடிவடையும் என்பதை அவைகள் புரிந்துகொண்டன. சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு சிங்கத்தைப் போல சாத்தான் அடங்காதவனாக, மனிதர்களின் ஆத்துமா சரீரத்தின்மீது தனக்குள்ள வல்லமையை கடுங்கோபத்துடன் வெளிக்காட்டினான்.(8)GCTam 602.2

    மனிதர்கள் பிசாசுபிடித்தவர்களாக இருந்தனர் என்னும் உண்மை புதிய ஏற்பாட்டில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விதமாகத் துன்பப்பட்டவர்கள், இயற்கையான காரணங்களினால் உண்டாகும் நோய்களினால் மட்டும் பாடனுபவிப்பவர்களாக இருக்கவில்லை. கிறிஸ்து எவைகளுடன் இடைப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதைப்பற்றிய தெளிவாகப் புரிந்திருந்தார். தீய ஆவிகளின் நேரடியான பிரசன்னத்தையும் அவைகளின் பிரதிநிதிகளையும் இனம் கண்டவராக இருந்தார். (9)GCTam 602.3

    கதரேனருடையநாட்டில், பிசாசுகள் பிடித்திருந்தவனை சுகப்படுத்தியதில், அவைகளின் எண்ணிக்கை, வல்லமை, கொடூரம் ஆகியவைகளைப்பற்றியும் கிறிஸ்துவின் வல்லமை, இரக்கம் ஆகியவைகளைப்பற்றியும் உள்ள தெளிவான உதாரணத்தையும் விபரத்தையும் வேதவாக்கியங்களில் காணலாம். அந்த துர்ப்பாக்கியமான பிசாசுபிடித்தவர்கள், எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் மீறிக்கொண்டு, உடலை முறுக்கிக்கொண்டு, நுரை தள்ளிக்கொண்டு, கடுங்கோபத்துடன் இருந்தனர். தங்களுடைய உரத்த சத்தத்தினால் ஆகாயத்தை நிரப்பி, தங்களுக்குத் தாங்களே கொடுமை செய்துகொண்டு, அவர்களை நெருங்கும் யாவருக்கும் ஆபத்தை விளைவித்துக்கொண்டும் இருந்தனர். அவர்களது இரத்தம் சொட்டிய உருவழிந்த உடல்கள், நிலைதடுமாறிய மனங்கள் அந்தகாரப் பிரபுவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற காட்சியைக் கொண்டு வந்தது. துன்பப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தியிருந்த பிசாசுகளில் ஒன்று, நாங்கள் அநேகராக இருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்றது (மாற்கு 5:9). ரோமர்களின் இராணுவத்தில் லேகியோன் என்பது மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம்வரையுள்ள வீரர்களின் காலாட்படைகளாகும். சாத்தானின் சேனைகளும் கூட்டங்களாக அணிவகுக்கின்றன. இந்த ஒரு படையிலிருந்த பிசாசுகள் ஐயாயிரத்திற்கும் குறைவற்றவைகளாக இருந்தன. (10)GCTam 603.1

    இயேசுவின் கட்டளையால் அந்த தீய ஆவிகள் தாங்கள் பிடித்துக்கொண்டிருந்தவர்களை இரட்சகரின் பாதத்தில் அமைதி அடைந்தவர்களாக நுண்ணறிவுடையவர்களாக -சாதுவானவர்களாக இருக்கும்படி விட்டு விலகிச்சென்றன. ஆனால் இந்தப் பிசாசுக்கள் ஒரு பன்றிக்கூட்டத்தை கடலுக்குள் அடித்துச்செல்ல அனுமதிக்கப்பட்டன. கதரேன் ஊர் மக்களுக்கு கிறிஸ்து அருளின ஆசீர்வாதத்தைவிட, இந்தப்பன்றிகளின் இழப்பினால் உண்டான நஷ்டம் அதிகமாகத் தோன்றவே, அவர்கள் அந்தத் தெய்வீக சுகமளிப்பவரைத் தங்களுடைய ஊரைவிட்டுச்செல்லும்படி வேண்டினர். இப்படிப்பட்ட பலனை அடைந்துகொள்வதற்குத்தான் சாத்தான் திட்டமிட்டிருந்தான். அவர்களது நஷ்டத்திற்கான காரணத்தை இயேசுவின்மேல் சுமத்தி, அந்த மக்களின் சுயநலத்தினால் உண்டான பயத்தை எழுப்பி, அவருடைய வார்த்தைகளை அவர்கள் கவனிப்பதைத் தடுத்தான். நஷ்டங்கள், நல்வாய்ப்புகளின் இழப்புகள், பாடுகள் ஆகியவைகள் சாத்தானுக்கும் அவனது பிரதிநிதிகளுக்கும் காரணமாயிருக்கும்போது, இவைகளுக்குங்கூட கிறிஸ்தவர்கள்தான் காரணம் என்று தொடர்ச்சியாக அவர்களைக் குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறான். (11)GCTam 603.2

    ஆனால் கிறிஸ்துவின் நோக்கங்களைத் தோற்கடிக்க முடியவில்லை. இலாப நோக்கத்திற்காக இந்த அசுத்தமான மிருகங்களை வளர்த்து வந்த யூதர்களுக்கெதிரான ஒரு கடிந்துகொள்ளுதலாக, அந்தத் தீய ஆவிகள் அந்தப் பன்றிக்கூட்டங்களை மட்டும் கடலில் அமிழ்த்தினதோடல்லாமல், அவைகளை மேய்த்திருந்தவர்களையும் உரிமையாளர்களையுங்கூடக் கடலில் மூழ்கடித்திருக்கும். அந்த உரிமையாளர்களையும் பன்றி மேய்ப்பவர் களையும் பாதுகாத்தது, அவர்களது விடுதலைக்காக இரக்கத்துடன் செயலாற்றிய அவரது வல்லமைக்கே உரியது. அதற்கும் மேலாக, மனிதர்களின்மீதும் மிருகங்களின்மீதும் சாத்தான் செயலாற்றிய அவனது கொடுமைமிக்க வல்லமைகளைச் சீடர்கள் சாட்சியாகக் காணும்படி இந்த நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்டது. அவரது அடியார்கள் சந்திக்க வேண்டியதாக இருந்த எதிராளியைப்பற்றிய அறிவை அடைந்து, அவனால் வஞ்சிக்கப்படாதபடிக்கும், அவனது உபாயங்களால் மேற்கொள்ளப்படாத படிக்கும் இருக்கவேண்டுமென்று இரட்சகர் விரும்பினார். சாத்தானால் உண்டாயிருக்கும் அடிமைத்தளையைத் தகர்த்து, அடிமைப்பட்டவர்களாக இருப்பவர்களுக்கு, விடுதலையை வழங்கக்கூடிய இயேசுவின் வல்லமை யையும் அந்தப் பிரதேசத்து ஜனங்கள் காணவேண்டும் என்பது அவரது சித்தமாக இருந்தது. இயேசு அந்த இடத்தைவிட்டுச் சென்றபோதிலும் ஆச்சரியமான விதத்தில் விடுதலையாக்கப்பட்ட அந்த மனிதர்கள் தங்களுக்கு நன்மை செய்தவரின் இரக்கத்தை அறிவிக்க அங்கு தங்கியிருந்தனர். (12)GCTam 604.1

    இப்படிப்பட்ட வேறு பல நிகழ்ச்சிகளும் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிரோபோனிக்கேயா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீ, தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். (மாற்கு 7:26—30). “அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்” (மத்தேயு 12:22). “ஊமையான ஒரு ஆவி பிடித்த... இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று” (மாற்கு 9:17—27). “ஜெபஆலயத்திலே அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்” (லூக்கா 4:33-36). கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் ஓய்வுநாளின் அமைதிக்கு இவன் இடையூறு செய்தான். இவர்களெல்லாம் மன உருக்கமிக்க இரட்சகரால் சுகப்படுத்தப்பட்டனர். கிட்டத்தட் ஒவ்வொரு சம்பவத்திலும் கிறிஸ்து அந்தப் பிசாசை நுண்ணறிவுமிக்க ஒரு தனி நபராகவே பாவித்து, அவன் பிடித்திருந்த மனிதனை இனிமேல் உபத்திரவிக்காதபடி, அவனை விட்டு வெளியே வரும்படிக்கு கட்டளையிட்டார். கப்பர்நகூமில் ஆராதனை செய்திருந்தவர்கள் எல்லாரும் ஆச்சரியப்பட்டு: “இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்”- -லூக்கா 4: 33—36. (13)GCTam 604.2

    பொதுவாக, பிசாசு பிடித்தவர்கள் மிகுந்த பாடுள்ள நிலையில் இருப்பதாக எடுத்துக்காட்டப்படுகின்றனர். அப்படியிருந்தாலும் இந்த நியதிக்கு தவிர்ப்புகளும் இருந்தன. இயற்கைக்கு மேலான வல்லமையை அடைந்துகொள்ளுவதற்காகச் சிலர், சாத்தானின் செல்வாக்கை வரவேற்றனர். மாயவித்தைக்காரனான சீமோன், குறிசொல்லுகிறவனான எலிமா, பிலிப்பு பட்டணத்தில் பவுலையும் சீலாவையும் பின்தொடர்ந்த பெண், ஆகிய இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், குறிசொல்லும் ஆவியை உடையவர்களாக இருந்தனர். (14)GCTam 605.1

    நேரடியான, போதுமான வேதவாக்கியங்களின் சாட்சிகளைக் கொண்டிருந்தும் பிசாசும் அவனுடைய தீய தூதர்களும் இருப்பதை மறுப்பவர்களைவிட வேறு எவரும் தீய ஆவிகளின் செல்வாக்கினால் ஏற்படும் பெரும் ஆபத்தில் இல்லை. அவைகளின் தந்திரமாக ஏமாற்றும் தன்மைபற்றி நாம் அறியாமல் இருக்கும்வரை, அவைகள் நம்மால் ஏறத்தாழ புரிந்துகொள்ளமுடியாத அனுகூலத்தை உடையவைகளாக உள்ளன. தங்களுடைய சுயஞானத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு இருக்கும்போது, அநேகர் இந்தத் தீய ஆவிகளின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்கின்றனர். இதனாலேயே நாம் காலத்தின் முடிவைச் சமீபிக்கும்போது, வஞ்சிக்கவும் அழிக்கவும் சாத்தான் மிக அதிகமான வல்லைைமயுடன் செயல்பட இருக்கும்போது, சாத்தான் என்று ஒருவன் இல்லை என்னும் நம்பிக்கையை எங்கும் பரப்புகிறான். தன்னையும் தான் செயல்படும் விதத்தையும் மறைத்துக்கொள்ளுவது அவனது கொள்கையாக உள்ளது. (15)GCTam 605.2

    அவனது உபாயங்களுடன் நாம் அறிமுகமாகிவிடுவோம் என்பதைவிட, அந்தப் பெரும் வஞ்சகன் அதிகமாகப் பயப்படுகின்ற காரியம் வேறு எதுவும் இல்லை. அவனது உண்மையான சுபாவத்தையும் நோக்கங்களையும் மறைப்பதை மேன்மைப்படுத்த, கேலிச் சிரிப்பையும் கண்டனத்தையும்விட, பலத்த உணர்ச்சிகளை எழுப்புவதில்லை. சாத்தானை சிரிக்கத்தக்க விநோத மான அருவருப்பான பொருளாக, உண்மை உருவமைப்புள்ளவனாக, பாதி மிருகம் பாதி மனிதன் என்றெல்லாம் வண்ணம் தீட்டும்போது, அவன் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறான். மேலும் விளையாட்டுகளிலும் கேலிப்பேச்சுகளிலும் தங்களை நுண்ணறிவுள்ளவர்களும், நன்கு தெரிந்தவர்களுமாக எண்ணிக் கொள்ளுபவர்களால் அவனது பெயர் பயன்படுத்தப்படுவதைக் கேட்பதில் அவன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறான். (16)GCTam 605.3

    இப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்னும் கேள்வி, அவன் தன்னை அடையாளங்கண்டுகொள்ளமுடியாதபடி, திறமையாக மறைத்துக் கொண்டிருப்பதினால் பரவலாகப் பேசப்படுகிறது. மத உலகில் வேதவாக்கியங்களின் மிகத் தெளிவான சாட்சியங்களுக்குப் பொய்யான தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளுவது அவனது வெற்றிக்கான ஒரு சான்றாக உள்ளது. சாத்தானுடைய செல்வாக் கைப்பற்றிய உணர்வே இல்லாதவர்களின் மனங்களை, சாத்தானால் உடனடியாகக் கட்டுப்படுத்தமுடியும் என்பதால்தான் தேவனுடைய வார்த்தை அவனது அநீதியான செயல்களைப்பற்றிய அநேக உதாரணங்களைத்தந்து, அவனது இரகசியமான படைகளை, நமக்கு முன்பாகத் திரைநீக்கம்செய்து, இப்படியாக அவனது தாக்குதலுக்கெதிராக நம்மைக் காக்கிறது. (17)GCTam 606.1

    நமது மீட்பரின் மேலான வல்லமையில் அடைக்கலமும், விடுதலையும் இல்லாதவர்களாக இருந்தோமானால், சாத்தானின் —அவனது சேனைகளின் வல்லமையும் விரோதமும் நம்மை பயப்படச்செய்வது சரியாக இருக்கும். கெட்ட மனிதர்களிடமிருந்து நமது சொத்துக்களையும் உயிர்களையும் காத்துக்கொள்ள, நாம் மிகக் கவனமாக நமது வீடுகளைத் தாழ்ப்பாள்களினாலும் பூட்டுகளினாலும் காக்கிறோம். ஆனால் நம்மிடம் தொடர்ச்சியாக வருவதற்கு வகைதேடிக்கொண்டிருக்கும் தீய தூதர்களையும் அவர்களால் நமக்குள்ள தாக்குதல்களையும் நமது சுயபலத்தால் பாதுகாக்க நாம் வகையற்று இருப்பதைப்பற்றியும் மிகக் குறைவாகவே சிந்திக்கிறோம். அனுமதிக்கப்பட்டால், அவர்களால் நமது மனங்களை வேறு பக்கமாகத் திருப்பவும், ஒழுக்கக்கேட்டை உண்டுபண்ணவும், நமது சரீரத்தை சித்திரவதை செய்யவும், நமது உடமைகளையும் உயிர்களையும் அழிக்கவும் முடியும். துன்பங்களும் அழிவும் மட்டுமே அவர்களது மகிழ்ச்சியாக உள்ளது. தேவன் அவர்களைத் தீய ஆவிகளின் கட்டுப்பாட்டிற்குள் விட்டுவிடுமளவிற்கு, தெய்வீக உரிமைகளைத் தடுத்து, சாத்தானின் சோதனைகளுக்கு இணங்குபவர்களின் நிலைமை மிகவும் பயங்கரமானது. ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அவரது கவனத்தில் எப்பொழுதும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களைப் பாதுகாப்பதற்காக வெல்லும் திறனுள்ள, பலமிக்க தேவதூதர்கள் பரலோகத்திலிருந்து அனுப்பப்படுகின்றனர். தேவன் அவரது மக்களைச் சுற்றிப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருக்கும் காவலை உடைத்துச்செல்ல தீமையாளனான சாத்தானால் முடியாது. (18)GCTam 606.2