Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆடையும் அலங்கரிப்புகளும்

    ஆடைக்கடுத்த சச்சரவை எழுப்புவது என்பது உங்களது மதத்தின் முக்கியக் கருத்தாக இருக்கவேண்டியது அவசியமல்ல. அதைக்காட்டிலும் மேன்மையான காரியங்கள் பேசுவதற்கு இருக்கின்றன. கிறிஸ்துவைக் குறித்து பேசுங்கள். இதயம் மாற்றப்படும்போது, வேதவாக்கியங்களுக்கு ஒத்துப்போகாத அனைத்து காரியங்களும் அகன்றுபோகும். — Ev 272 (1889).கச 63.6

    நாம் நடக்கவேண்டிய பாதையிலே, நமது இயற்கையான மன விருப்பங்களைக் குறுக்காக ஊடுருவிப் பிரித்தாலும்கூட நாம் உண்மை யான கிறிஸ்தவர்களாக இருந்தால், கிறிஸ்துவைத் தொடர்ந்து பின்செல்வோம். நீங்கள் இதைத்தான் அணியவேண்டும் இதை அணியக் கூடாது என்று உங்களிடத்தில் சொல்வதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை. ஏனெனில், உங்கள் இருதயத்தில் இப்படிப்பட்ட மாயையான பொருள்களின்மீது நாட்டம் இருக்குமென்றால், உங்களது அலங்கரிப்புகளை நீக்கிவிடுவதென்பது ஒரு மரத்தின் இலைகளைத் தறித்துப்போடுவதைப்போல் இருக்கும். மாம்சமான இருதயத்தின் விருப்பங்கள் மீண்டுமாக தங்களுக்குத் தாங்களே தொடர்ந்து செயலாற்றிக்கொள்ளும். எனவே, உங்களைக் குறித்த ஒரு ஜாக்கிரதை உணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். — CG429, 430 (1892).கச 63.7

    தேவனுக்கு முன்பாக கவனமாயும் ஜாக்கிரதையாயும் நடந்துகொள்ளும்படி நம் ஜனங்களை நான் வருத்திக் கேட்டுக்கொள்கின்றேன். ஆடை அணிவதில், ஆரோக்கிய கொள்கைகளுக்கு ஒத்து போகக் கூடிய விதத்தில் உள்ள பழக்கவழக்கங்களைப் பின்பற்றுங்கள். நம் சகோதரிகள் அநேகர் செய்வதுபோல தோற்றத்தில் பகட்டில்லாத விதத்தில் ஆடை அணியட்டும். அதாவது நல்ல தரமான, இந்தக் காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியட்டும். ஆடைகளைப் பற்றின சச்சரவு, எப்போதும் உங்கள் மனதை நிரப்ப வேண்டாம். எளிமையான முறையில் நம் சகோதரிகள் ஆடைகளை அணிய வேண்டும். தகுதியான உடையாலும், நாணயத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், அவர்கள் தங்களை அலங்கரிக்கவேண்டும். உங்கள் உள்ளத்தில் இருக்கின்ற தேவகிருபையை உலகத்துக்குக் காண்பிக்கும் விதத்தில் உடை உடுத்துங்கள். தேவனின் கிருபையினால் உண்டான உள்ளான அலங்கரிப்பின், ஒரு உயிருள்ள சாட்சியான வெளிப்பாட்டை இந்த உலகத்திற்கு அளியுங்கள். — 3SM 242 (1897).கச 64.1

    வெளிப்புறத் தோற்றம் இருதயத்தின் பிரதிபலிப்பாகும். — 1T 136 (1856).கச 64.2