Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    64 - அடைக்கலம் தேடி அலையும் தாவீது

    கோலியாத்தைக் கொன்ற பிறகு சவுல் தாவீதை தன்னோடு வைத்துக்கொண்டு, அவனுடைய தகப்பன் வீட்டிற்குத் திரும்ப அவனை அனுமதிக்காதிருந்தான். யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தானும் தாவீதும் சகோதரர்களாக இணைக்கப்பட, ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். இராஜாவின் மகன் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி அதையும், தன் வஸ்திரத்தையும், தன்பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சை யையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான். தாவீதிடம் முக்கியமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. எனினும் அவன் அடக்கமாக இருந்து மக்களுடைய பிரியத்தையும் அரசவீட்டாரின் பிரியத்தையும் சம்பாதித்தான்.PPTam 852.1

    தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின் மேல் அதிகாரியாக்கினான்; தாவீது விவேகமும் உண்மையுமாயிருந்தான். தேவனுடைய ஆசீர்வாதம் அவனோடு இருந்ததென்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இஸ்ரவேலின் அரசாங்கத்திற்கான தனது தகுதியின்மையை சவுல் அவ்வப்போது உணர்ந்து, ஆண்டவரிடமிருந்து போதனைகளைப் பெற்ற ஒருவன் தன்னோடு இணைக்கப்பட்டிருந்தால் இராஜாங்கம் அதிக பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தான். தாவீதோடு கொண்டிருக்கும் தன்னுடைய இணைப்பு தனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று சவுல் நம்பினான். தாவீது ஆண்டவரிடம் தயவு பெற்று அவரால் மறைக்கப்பட்டிருந்ததால், யுத்தத்திற்கு அவனோடு கூட செல்லும் போது அவளிருப்பது சவுலுக்கு ஒரு பாதுகாப்பாயிருக்கும்.PPTam 852.2

    தாவீதை சவுலோடு இணைத்தது தேவனுடைய ஏற்பாடே. அரச அவையில் தாவீதிற்குக்கிடைத்த பதவி எதிர்காலமேன்மைக்கு அவனை ஆயத்தப்படுத்தும்படி, அரசாங்க நடக்கையைக் குறித்த ஒரு அறிவை அவனுக்குக் கொடுக்கும். தேசத்தின் நம்பிக்கையைச் சம்பாதிக்க அது அவனைத் தகுதிப்படுத்தும். சவுலின் பகையினால் அவனுக்கு நேரிட்ட வாழ்க்கையின் மாற்றங்களும் கடினமும், தேவனை சார்ந்திருப்பதை உணர்ந்து அவர்மேல் முழு நம்பிக்கையையும் வைக்க அவனை நடத்தும். தாவீதுடனான யோனத்தானின் நட்பும் இஸ்ரவேலின் எதிர்கால அதிபதியின் வாழ்க்கையை பாதுகாக்கும் படியான தேவனுடைய ஏற்பாடே. இவை அனைத்திலும் தாவீதுக்கும் இஸ்ரவேல் ஜனத்திற்குமான தமது கிருபையுள்ள நோக்கங்களை தேவன் செயல்படுத்திக் கொண்டிருந்தார்.PPTam 853.1

    எனினும் சவுல் நீண்டகாலம் தாவீதோடு நட்பாயிருக்கவில்லை. சவுலும் தாவீதும் பெலிஸ்தரோடு நடந்த யுத்தத்திலிருந்து திரும்பிபோது, ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலு மிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். ஒரு கூட்டம் சவுல் கொன்றது ஆயிரம் என்று பாட, மற்ற கூட்டம் பல்லவியை எடுத்து தாவீது கொன்றது பதினாயிரம் என்று பதிலளித்தது. பொறாமையின் பிசாசு அரசனின் இருதயத்திற்குள் நுழைந்தது. இஸ்ரவேல் பெண்களுடைய பாடலில் தாவீது தனக்கு மேல் உயர்த்தப்பட்டதினால் அவன் கோபம் கொண்டான். இந்த பொறாமையான உணர்வுகளை அடக்குவதற்குப் பதிலாக தன்னுடைய குணத்தின் பெலவீனத்தை வெளிக்காட்டி : தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று கூறினான். சவுலின் குணத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய குறை, பாராட்டின் மேலிருந்த பிரியமே. இந்த குணம் அவனுடைய செவி களிலும் நினைவுகளிலும் கட்டுப்படுத்தும் செல்வாக்கைக் கொண்டிருந்தது. புகழப்படவும் சுயத்தை உயர்த்தவும் அவனுக்கு இருந்த விருப்பத்தால் அனைத்தும் குறிக்கப்பட்டன. பிரபலமான புகழ்ச்சியின் கீழான தரமே, சரி மற்றும் தவறைக் குறித்த அவனுடைய தரமாயிருந்தது, புகழாரத்தில் தேவனுடைய பாராட்டுதலைத் தேடாமல், மனிதரை முதலாவது பிரியப்படுத்த வாழும் எந்த மனிதனும் பாதுகாப்பாயில்லை. மனிதரின் கணிப்பில் முதலாவதாக இருக்கவேண்டும் என்பது சவுலின் இலட்சியமாக இருந்தது. இந்த புகழ் பாடல் பாடப்பட்டபோது, தாவீது மக்களின் இருதயங்களைக் கவர்ந்து அவனுடைய இடத்திலிருந்து ஆட்சி செய்வான் என்கிற உணர்த்துதல் அவன் மனதில் தங்கியது.PPTam 853.2

    சவுல் பொறாமையின் ஆவிக்கு தன் இருதயத்தைத் திறந்தான். அதினால் அவன் ஆத்துமா விஷமானது . தேவன் அவர் தெரிந்துகொள்ளும் எதையும் நிறைவேற்றுவார் என்றும், எவரும் அதைத் தடுக்கலாகாது என்றும் அவனுக்குப் போதனை செய்த சாமுவேல் தீர்க்கதரிசியிடமிருந்து பாடங்களைப் பெற்றிருந்தும், தேவனுடைய திட்டங்களையோ அல்லது வல்லமையையோ குறித்த எந்த மெய்யான அறிவும் தனக்கு இல்லையென்பதை இராஜா வெளிப்படையாக்கினான். நித்தியமானவரின் சித்தத்திற்கு எதிராக இஸ்ரவேலின் அரசன் தன்னுடைய சித்தத்தை வைத்தான். இஸ்ரவேலின் இராஜ்யத்தை அரசாண்ட நேரம் தன்னுடைய சொந்த ஆவியை ஆள வேண்டும் என்பதை சவுல் கற்றிருக்கவில்லை. தன்னுடைய உணர்ச்சியின் கொந்தளிப்பில் மூழ்கும் வரையிலும் தன்னுடைய நிதானத்தைக் கட்டுப்படுத்த அவன் தன் உணர்வுகளை அனுமதித்தான். அவ்வப்போது உக்கிரம் சடிதியாக வெளிப்பட, அவ்வேளைகளில் அவனுடைய சித்தத்தை எதிர்க்க துணிந்த எவருடைய வாழ்க்கையையும் முடிக்க அவன் ஆயத்தமாயிருந்தான். இந்த கோளாறிலிருந்து மனசோர்விற்குள்ளும் சுய நிந்தனைக்குள்ளும் அவன் செல்ல, அவனுடைய ஆத்துமாவை குற்ற உணர்வு எடுத்துக்கொள்ளும்.PPTam 854.1

    தாவீது தன்னுடைய சுரமண்டலத்தில் வாசிப்பதைக் கேட்க அவன் விரும்பியிருந்தான். தீய ஆவிசிலகாலம் துரத்தப்பட்டிருந்தது போல தோன்றியது. ஆனால் ஒருநாள் அந்த வாலிபன் அவன் முன்பு வேலை செய்து தன்னுடைய இசைக்கருவியிலிருந்து இனிமையான இசையைக் கொண்டுவந்து தேவனுக்குத் துதியாக தன் குரலினால் பாடினபோது, அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு முடிவைக்கொண்டுவரும் நோக்கத்தில் சவுல் சடிதியாக தன்னுடைய ஈட்டியை இசைக்கலைஞன்மேல் வீசினான். பைத்திமாகியிருந்த அரசனின் உக்கிரத்திலிருந்து தேவனுடைய தலையீட்டினால் தாவீது பாதுகாக்கப்பட்டு காயமின்றி தப்பியோடினான்.PPTam 854.2

    தாவீதின் மேலிருந்த சவுலின் வெறுப்பு அதிகமான போது, அவனுடைய வாழ்க்கையை முடிக்கும் ஒரு சந்தர்ப்பத்தைத் தேடுவதில் அவன் அதிகமதிகமாக கவனமாயிருந்தான். ஆனால் ஆண்டவரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு எதிரான அவனுடைய திட்டங்கள் எதுவும் வெற்றியானதாயில்லை. சவுல் தன்னை ஆட்சி செய்திருந்த தீய ஆவியின் கட்டுப்பாட்டிற்கு தன்னைக் கொடுத்திருந்தான். தாவீதோ ஆலோசனையில் வல்லவரும் விடுவிப்பதில் பலமுள்ளவரின் மேல் நம்பிக்கை யாயிருந்தான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தில் ஆரம்பம் நீதி. 910. தேவன் முன்பாக பூரணமான பாதையில் நடக்கவேண்டு மென்று தாவீதின் ஜெபங்கள் தொடர்ச்சியாக தேவனிடம் ஏறெடுக்கப்பட்டன.PPTam 855.1

    தன்னுடைய போட்டியாளனிடமிருந்து விடுவிக்கப்படும் வாஞ்சையில் இராஜா அவனை ஆயிரம் பேருக்கு அதிபதியாக வைத்தான் ; ... இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சினேகித்தார்கள். தாவீது தகுந்த நபர் என்பதை காண்பதில் ஜனங்கள் தாமதமாயிருக்கவில்லை. அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்த காரியங்கள் ஞானத்தோடும் திறமையோடும் நிர்வகிக்கப்பட்டன. வாலிபனின் ஆலோசனைகள் ஞானமும் புத்தியுமானவைகளாயிருந்து, பின்பற்ற பாதுகாப்பானவைகளென்று நிரூபிக்கப்பட்டன. அதேநேரம் ச வுலின் நியாயங்கள் சில வேளைகளில் நம்பக்கூடாதவைகளாகவும் அவனுடைய தீர்மானங்கள் ஞானமற்றவைகளாகவும் இருந்தன.PPTam 855.2

    தாவீதை அழிக்கும் ஒரு சந்தர்ப்பத்திற்கு எப்போதும் சவுல் ஜாக்கிரதையாயிருந்தபோதும், ஆண்டவர் அவனோடிருப்பது வெளிப்படையாக இருந்ததால் அவனைக் குறித்த ஒரு பயத்தோடு சவுல் இருந்தான். தாவீதின் குற்றமற்ற குணம் அரசனின் உக்கிரத்தை எழுப்பியது. சொந்த குணத்தை சாதகமற்ற சூழ்நிலையில் வைத்ததால் தாவீதின் ஜீவனும் வாழ்க்கையுமே அவன்மீது ஒரு நிந்தனையை வீசுவதாக எண்ணினான். பொறாமையே சவுலை துன்பப்படுத்தி அவனுடைய இராஜ்யத்தின் தாழ்மையான குடிமகனின் வாழ்க்கையையும் ஆபத்திற்குட்படுத்தியது. இந்த தீய குணம் நமது உலகத்தில் சொல்லக்கூடாத எத்தனை தீங்குகளை செய்திருக்கிறது. ஆபேலின்கிரியைகள் நீதியுள்ளவைகளாயிருந்து தேவன் அவனை கனப்படுத்தினதாலும், தன்னுடைய கிரியைகள் தீயவைகளாயிருந்து ஆண்டவர் தன்னை ஆசீர்வதிக்கக்கூடாது போனதினாலும், ஆபேலுக்கு எதிராக அவனுடைய சகோதரன் காயீனின் மனதைத் தூண்டிய அதே பகைதான் சவுலின் மனதிலும் இருந்தது. பொறாமை பெருமையின் குழந்தை. அது இருதயத்தில் உபசரிக்கப்படும் போது வெறுப்பிற்கு நடத்தி, முடிவாக பழிவாங்கு வதிலும் கொலையிலும் முடிவடையும். தனக்கு ஒருபோதும் தீங்கு இழைத்திராதவனுக்கு எதிராக சவுலின் உக்கிரத்தை தூண்டிவிட்ட தில் சாத்தான் தன்னுடைய சொந்த குணத்தை வெளிக்காட்டினான்.PPTam 855.3

    அவனை அவமானப்படுத்துவதற்கு ஒரு விவேகமற்ற செயலோ அல்லது துடுக்கான செயலோ கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இராஜாதாவீதைக் கூர்ந்து கவனித்துவந்தான். அந்த வாலிபனின் உயிரை எடுக்கும் வரையிலும் தான் மனநிறைவடைய முடியாது என்றும், எடுத்த பின்னர் தன்னுடைய தீய செய்கையை தேசத்தின் முன்பாக நியாயப்படுத்த முடியும் என்றும் அவன் நினைத்தான். இன்னும் அதிக வீரியத்தோடு பெலிஸ்தருக்கு எதிராக யுத்தம் செய்யும்படியும், செய்தால், அவனுடைய வீரத்தின் பரிசாக அரச குடும்பத்தின் மூத்த மகளை திருமணம் செய்து கொடுப்பதா கவும் வாக்குக் கொடுத்து, தாவீதின் கால்களுக்கு ஒரு கண்ணியை வைத்தான். இந்த ஆலோசனைக்கு தாவீதின் அடக்கமான பதில்: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்று இருந்தது. தன் குமாரத்தியை மற்றொருவனுக்கு திருமணம் செய்து கொடுத்ததில் அரசன் தன்னுடைய உண்மையின்மையை வெளிக்காட்டினான்.PPTam 856.1

    தாவீதிற்கு சவுலின் இளைய குமாரத்தி மீகாளிடம் இருந்த பிணைப்பு தன்னுடைய போட்டியாளனுக்கு எதிராக மற்றொரு ச தித்திட்டம் செய்யும் சந்தர்ப்பத்தை இராஜாவிற்குக் கொடுத்தது. தேச விரோதிகளைத் தோற்கடித்து அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரை கொலை செய்து, கொலை செய்ததற்கான சான்று கொடுக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையில் அந்த வாலிபனுக்கு மீகாள் உறுதி பண்ணப்பட்டாள். தாவீதை பெலிஸ் தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது. ஆனால் தேவன் தமது ஊழியக்காரனை மறைத்தார். தாவீது யுத்தத்திலிருந்து வெற்றியாளனாக திரும்பி வந்து இராஜாவின் மருமகனானான். சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள். தான் அழிக்கத் தேடினவனை உயர்த்துவதில் தன்னுடைய சதித்திட்டங்கள் முடிவடைந்தது என்று கண்ட அரசன் மூர்க்கமடைந்தான். தன்னைக் காட்டிலும் மேன்மையானவன் என்று ஆண்டவர் சொல்லியிருந்தவனும், தன்னுடைய இடத்தில் இஸ்ரவேலின் சிங்காசனத்தில் ஆட்சி செய்யப்போகிறவனும் இந்த மனிதன்தான் என்பதில் அவன் இன்னும் அதிக உறுதியடைந்தான். அனைத்து வேஷத்தையும் அப்புறப்படுத்தி, யோனத்தானுக்கும் அவையின் அதிபதிகளுக்கும் தான் வெறுத்தவனை கொலை செய்யும்படி கட்டளை பிறப்பித்தான்.PPTam 856.2

    இராஜாவின் நோக்கத்தை யோனத்தான் தாவீதிற்கு அறிவித்து, இஸ்ரவேலை விடுவித்தவனுடைய உயிரை விட்டு விடும்படி அவன் தன் தகப்பனிடம் மன்றாடும் போது, ஒளிந்துக்கொள்ளும்படி அவனிடம் கூறினான். தேசத்தின் கனத்தையும் அதனுடைய ஜீவனையுங் கூட பாதுகாக்க தாவீது செய்தவைகளையும், அவனுடைய சத்துருக்களை சிதறடிக்க தேவன் உபயோகித்த ஒருவனை கொலை செய்வதினால் எப்படிப்பட்ட பயங்கரமான குற்றம் கொலையாளியின்மேல் இருக்கும் என்பதையும் அவன் இராஜாவின் முன்பு வைத்தான். இராஜாவின் மனசாட்சி தொடப்பட அவன் இருதயம் மென்மையாகிற்று. சவுல் ....... அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டான். தாவீது சவுலிடம் கொண்டுவரப்பட்டு, கடந்த காலத்தைப்போலவே அவன் முன்பு ஊழியம் செய்தான்.PPTam 857.1

    மீண்டும் பெலிஸ்தருக்கும் இஸ்ரவேலருக்கும் நடுவே யுத்தம் அறிவிக்கப்பட்டது. தாவீது அவனுடைய சத்துருக்களுக்கு எதிராக படையை நடத்திச் சென்றான். எபிரெயர்களுக்கு மாபெரும் வெற்றி கிடைக்க அவனுக்குக் கீழிருந்த மக்கள் அவனுடைய ஞானத்தையும் வீரத்தையும் புகழ்ந்தனர். இது சவுலின் முந்தைய கசப்பை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்டது. வாலிபன் இராஜாவின் முன்பு இசைக்கருவியை வாசித்து அரண்மனையை இனிமையான இசையினால் நிரப்பிக்கொண்டிருந்தபோது சவுலின் உணர்ச்சி அவனை மேற்கொள்ள, இசைக்கலைஞனை சுவரோடு சேர்த்துக் குத்துவதற்கு ஏதுவாக அவன் தனது ஈட்டியை தாவீதை நோக்கி எறிந்தான். ஆனால் ஆண்டவருடைய தூதன் சாவுக்கேதுவான ஆயுதத்தை திசைதிருப்பினான். தாவீது தப்பி தன்னுடைய சொந்த வீட்டிற்கு ஓடிப்போனான். அவன் காலையில் வெளியே வரும்போது, அவனுடைய வாழ்க்கைக்கு முடிவுகட்டும் படியாக சவுல் வேவுகாரரை அனுப்பினான்.PPTam 857.2

    தன் தகப்பனின் நோக்கத்தை மீகாள் தாவீதுக்கு அறிவித்தாள். உயிர்தப்ப ஓடிப்போகும்படி அவள் அவனை நிர்பந்தித்து, ஜன்னலின் வழியாக அவனை இறக்கி, அவன் தப்பிப்பதை அவள் சாத்தியமாக்கினாள். அவன் ராமாவிலிருந்த சாமுவேலிடம் ஓடிப்போக, அரசனின் அதிருப்தியைக் குறித்து பயமடையாத தீர்க்கதரிசி தப்பிவந்தவனை வரவேற்றான். சாமுவேலின் இல்லம் அரச மாளிகைக்கு நேரெதிராக சமாதானமான இடமாக இருந்தது. இங்கேதான் குன்றுகளுக்கு மத்தியில் ஆண்டவரால் கனப்படுத் தப்பட்ட ஊழியக்காரன் தன் வேலையைத் தொடர்ந் திருந்தான். அவனோடு கூட தீர்க்கதரிசிகளின் கூட்டம் ஒன்றும் இருந்தது. அவர்கள் தேவனுடைய சித்தத்தை முனைப்பாகப் படித்து, சாமுவேலின் உதடுகளிலிருந்து வந்த போதனைகளை பயபக்தியோடு கவனித்தனர். இஸ்ரவேலின் போதகனிடமிருந்து தாவீது கற்றுக்கொண்ட பாடங்கள் விலையுயர்ந்தவைகளாயிருந்தன. இந்த பரிசுத்த பவித்திரமான இடத்தின் மேல் படை யெடுக்க சவுலின் படைகள் கட்டளையிடப்படாது என்று தாவீது நம்பினான். ஆனால் நம்பிக்கையற்ற அரசனின் இருண்ட மனதிற்கு எந்த இடமும் பவித்திரமானதாக தோன்றியிருக்கவில்லை. தன் போட்டியாளனை முன்னேற்றுவதில் இஸ்ரவேலெங்கும் தீர்க்கதரிசியாக கனப்படுத்தப்பட்டிருந்தவன் தன்னுடைய செல் வாக்கை உபயோகிக்கக் கூடாதென்று தாவீது சாமுவேலிடம் கொண்டிருந்த தொடர்பு அரசனில் பொறாமையை எழுப்பியது. தாவீது இருக்கும் இடத்தை அறிந்த போது, அவனைகிபியாவிற்கு கொண்டு வரும்படி அதிபதிகளை அனுப்பினான். அங்கே அவனைக் கொன்றுபோட அவன் திட்டம் பண்ணியிருந்தான்.PPTam 858.1

    தாவீதின் உயிரை எடுக்கும் நோக்கத்தில் தூதுவர்கள் தங்கள் வழியே சென்றனர். ஆனால் சவுலைவிடவும் பெரியவர் ஒருவர் அவர்களைக் கட்டுப்படுத்தினார். இஸ்ரவேலை சபிக்கும்படி சென்ற பிலேயாமைப்போல் அவர்களும் காணக்கூடாத தூதர்களால் சந்திக்கப்பட்டனர். எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைக் குறித்த தீர்க்கதரிசனங்களை அவர்கள் சொல்லத்துவங்கி, யெகோவாவின் மகிமையையும் மாட்சிமையையும் அறிவித்தனர். இவ்விதம் மனிதனுடைய உக்கிரத்தை ஆண்டவர் தன்மேற்போட்டுக்கொண்டு தீமையை தடுக்கும் படியான தம்முடைய வல்லமையை வெளிக்காட்டினார். அதேநேரம் தூதர்களின் காவலினால் தம்முடைய ஊழியக்காரனுக்கு மதிலாகவும் இருந்தார்.PPTam 858.2

    தாவீதை தன்னுடைய வல்லமைக்குள் கொண்டுவரும்படி வாஞ்சையோடு காத்திருந்த சவுலுக்கு செய்தி சென்றது. ஆனால் தேவனுடைய கண்டனையை உணருவதற்குப்பதிலாக அவன் மேலும் அதிக மோசமடைந்து வேறே தூதுவர்களை அனுப்பினான். இவர்களும் தேவனுடைய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு, முதலில் வந்தவர்களோடு தீர்க்கதரிசனம் சொல்லும்படி இணைந்தனர். மூன்றாவது முறையும் தூதுவர்கள் இராஜாவால் அனுப்பப்பட்டனர். அவர்கள் தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்குள் வந்தபோது, அவர்கள் மேலும் தெய்வீக செல்வாக்கு ஏற்பட்ட அவர்களும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். பின்னர் தானே செல்லும் படி சவுல் தீர்மானித்தான். அவனுடைய மூர்க்கமான பகை கட்டுப்படுத்தக் கூடாததாகியிருந்தது. தாவீதைக் கொல்ல மற்றொரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கக் கூடாதென்று அவன் தீர்மானித்தான். விளைவு என்னவாயிருப்பினும் அருகே வந்ததும் தன்னுடைய சொந்தக் கைகளினாலே அவனைக் கொல்லவும் அவன் எண்ணியிருந்தான்.PPTam 858.3

    ஆனால் வழியிலேதானே தேவதூதன் ஒருவன் அவனை சந்தித்துக் கட்டுப்படுத்தினான். தேவனுடைய ஆவி அவனைத் தன் வல்லமையில் வைத்தது. தேவனிடம் ஜெபித்தவனாகவும், இடையிடையே பின் நடப்பதை அறிவித்தவனாகவும், பவித்திரமான பாடல்களைப் பாடினவனாகவும் அவன் முன்சென்றான். உலகத்தின் மீட்பராக வரவிருக்கும் மேசியாவைக் குறித்து அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். ராமாவிலிருந்த தீர்க்கதரிசியிடம் வந்தபோது அவனுடைய தகுதியை அடையாளப்படுத்தின் வெளி ஆடையை அப்புறப்படுத்தி, பகல் முழுவதும் இரவு முழுவதும் சாமுவேலின் முன்பும் அவன் சீடர்களின் முன்பும் தெய்வீக வல்லமையின்கீழ் அவன் விழுந்து கிடந்தான். இந்த அபூர்வக் காட்சியைக் காணும் படி மக்கள் கூடி வந்தனர். இராஜாவின் அனுபவம் வெகு தூரத்திற்கு அறிவிக்கப்பட்டது.PPTam 859.1

    இவ்விதம் மீண்டும் அவனுடைய ஆட்சியின் முடிவில் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்ற பழமொழி இஸ்ரவேலின் வழங்கியது.PPTam 859.2

    துன்புறுத்தினவன் மீண்டும் தன் நோக்கத்தில் முறியடிக்கப்பட்டான். தாவீதோடு சமாதானமாயிருப்பதாக அவனுக்கு உறுதியளித்தான். ஆனால் இராஜாவின் மனந்திரும்புதலில் தாவீதிற்கு நம்பிக்கையில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை முன்போல இராஜாவின் மனநிலை மாறுவதற்கு முன்பு தப்பிப்பதற்கான ஒன்றாக எடுத்துக்கொண்டான். அவனுடைய இருதயம் அவனுள் காயப்பட்டிருந்தது. தன் நண்பன் யோனத்தானை இன்னும் ஒருமுறைகாண அவன் ஏங்கினான். தன்னுடைய குற்றமின்மையைக் குறித்த மனசாட்சியோடு இராஜாவின் குமாரனைத் தேடி உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்று உணர்ச்சிப்பூர்வமான மன்றாட்டை வைத் தான். தன் தகப்பன் தன்னுடைய நோக்கத்தை மாற்றிவிட்டதாகவும் இனி தாவீதின் உயிரை எடுக்க உத்தேசித்திருக்கவில்லை என்றும் யோனத்தான் நம்பினான். எனவே அவனிடம் : அப்படி ஒருக்காலும் வாராது. நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை, இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான். தேவ னுடைய வல்லமை குறிப்பாக வெளிக்காட்டப்பட்ட பின்பு இன்ன மும் தாவீதிற்கு தீங்கு இழைத்தால் அது தேவனுக்கு எதிரான கலகமாக இருக்குமாகையால், தன் தகப்பன் மீண்டும் அவ்வாறு செய்வான் என்பதை யோனத்தானால் நம்பமுடியவில்லை. ஆனால் தாவீது அதை நம்பவில்லை. மிக ஆழ்ந்த உண்மையோடு, மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று அவன் யோனத்தானிடம் கூறினான்.PPTam 859.3

    அமாவாசையின் போது இஸ்ரவேலில் பவித்திரமான பண்டிகை ஒன்று கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகைதாவீதும் யோனத்தானும் சந்தித்துக்கொண்ட நாளுக்கு அடுத்தநாள் நடந்தது. இந்தப் பண்டிகையில் வாலிபர்கள் இருவரும் இராஜாவின் மேசையில் காணப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கே வர தாவீது பயந்தான். எனவே அவன் பெத்ல கேமில் தன் சகோதரர்களை சந்திக்கவேண்டும் என்று ஒழுங்கு படுத்தப்பட்டது. இராஜாவின் சமூகத்திலிருந்து மூன்று நாட்கள் ஒதுங்கியிருந்த பின்னர் அவன் திரும்பி வரும்போது விருந்து சாலைக்கு அருகாமையில் இருந்த வயலில் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும். இராஜாவின் மேல் அது ஏற்படுத்தும் விளைவை யோனத்தான் கவனிப்பான். ஈசாயின் குமாரனைக் குறித்து விசாரிக்கப்படுமானால் தன்னுடைய தகப்பனின் வீட்டார் கொடுக்கும் பலியில் கலந்து கொள்ளும்படியாக அவன் வீட்டுக்குச் சென்றிருக்கிறான் என்று யோனத்தான் சொல்ல வேண்டும். இராஜா எந்த கோபத்தையும் காண்பிக்காது, அது நல்லது என்று பதில் கொடுப்பானானால் தாவீது அவைக்கு வருவது பாதுகாப்பாயிருக்கும். மாறாக அவன் வெகுண்டு, அவன் இல்லாததற்காக கோபப்படுவானானால் தாவீது தப்பியோடுவது பற்றித் தீர்மானிக்கப்படும்.PPTam 860.1

    பண்டிகைவிருந்தின் முதல் நாளில் தாவீது இல்லாததைக்குறித்து இராஜா எந்த விசாரணையும் செய்யவில்லை. ஆனால் இரண்டாம் நாளில் அவனுடைய இடம் காலியாக இருந்தபோது, ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று கேட்டான். யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம் மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக் கேட்டு, அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப்போகிறார்கள், என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத் ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான். இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட போது சவுலின் கோபம் கட்டுக்கடங்காது போயிற்று. தாவீது உயிரோடிருக்கும் வரையிலும் இஸ்ரவேலின் சிங்காசனத்திற்கு யோனத்தான் வரமுடியாது என்று அறிவித்து, தாவீது உடனடியாக அழைக்கப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான். யோனத்தான் மீண்டும் தன் நண்பனுக்காக . அவன் ஏன் கொல்லப்பட வேண்டும்? அவன் என்ன செய்தான்?. என்று மன்றாடினான். இந்த மன்றாட்டு இராஜாவை அவனுடைய பேய்த்தனமான மூர்க்கத்தில் மேலும் அதிகமாக்க, தாவீதின் மேல் எறிய நினைத்திருந்த ஈட்டியை இப்போது அவன் தன் சொந்த குமாரன் மேல் வீசினான்.PPTam 861.1

    அந்தப் பிரபு வருத்தமும் கோபமும் கொண்டவனாக அரச சமூகத்தைவிட்டு வெளியேறினான். அவன் அந்த விருந்திற்கு அதன்பின் விருந்தாளியாக இல்லை. தன்னைக் குறித்த இராஜாவின் நோக்கத்தை அறியும் படி தாவீது இருந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்த போது, அவன் இருதயம் துக்கத்தினால் பாரமடைந்திருந்தது. இருவரும் ஒருவர் கழுத்தை ஒருவர் பிடித்து மிகவும் அழுதனர். இராஜாவின் இருண்ட உணர்ச்சிகள் இந்த வாலிபருடைய வாழ்க்கையின் மேல் ஒரு நிழலை அனுப்பியிருந்தது.PPTam 861.2

    சொல்லக் கூடாத அளவு அவர்களுடைய துக்கம் ஆழமானதாயிருந்தது. தங்களுடைய வெவ்வேறு பாதையை தொடரும் படியாக பிரிந்தபோது யோனத்தானின் கடைசி வார்த்தைகள் : நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று தாவீதின் காதில் தொனித்தன.PPTam 861.3

    இராஜாவின் மகன் கிபியாவிற்குத் திரும்பினான். தாவீது சில மைல்கள் தூரத்தில் நோபிற்குத் தீவிரித்தான். நோபு பட்டணமும் பென்யமீன் கோத்திரத்திற்குச் சொந்தமாயிருந்தது. சீலோவிலிருந்து ஆசரிப்புக் கூடாரம் அந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இங்கே பிரதான ஆசாரியனாகிய அகிமெலேக்கு ஊழியம் செய்திருந்தான். அடைக்கலத்திற்கு தேவனுடைய ஊழியக்காரனிடம் செல்வதைத் தவிர வேறு எங்கு செல்வதென்று தாவீது அறியாதிருந்தான். அவசரத்திலும் தனிமையிலும் வந்திருந்ததால் எதிர்பார்ப்பினாலும் வருத்தத்தினாலும் அடையாளப்படுத்தப்பட்டிருந்த முகத்தோடு வந்தவனை ஆசாரியன் பிரமிப்போடு பார்த்தான். அவன் ஏன் அங்கு வந்தான் என்று வினவினான். தான் கண்டு பிடிக்கப்பட்டு விடுவோம் என்கிற பயத்தில் அந்த வாலிபன் நிலையாக இருந்ததால், தன்னுடைய நெருக்கடியில் அவன் வஞ்சகத்திற்குத் திரும்பினான். மிக அவச ரமான ஒரு இரகசிய வேலைக்காக இராஜ கட்டளையோடு இராஜாவினால் தான் அனுப்பப்பட்டிருப்பதாக தாவீது ஆசாரியனிடம் அறிவித்தான். இங்கே தேவனை விசுவாசிக்கிறதில் ஒரு குறைவை அவன் வெளிக்காட்டினான். அவனுடைய பாவம் பிரதான ஆசாரியனின் மரணத்தை விளைவித்தது. உண்மை அங்கு வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருக்குமானால் அவனுடைய ஜீவனைக் காப்பாற்ற என்ன வழியைத் தொடரவேண்டும் என்பதை அகிமெலேக்கு அறிந்திருப்பான். மிகப் பெரிய ஆபத்திலும் தம்முடைய ஜனங்களை அவர்களுடைய உண்மையே அடையாளப்படுத்த வேண்டும் என்று ஆண்டவர் கோருகிறார். தாவீது ஆசாரியனிடம் ஐந்து அப்பங்களைக் கேட்டான். தேவனுடைய மனிதனிடத்தில் பரிசுத்தமான அப்பங்களைத்தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. ஆனால் தாவீது தன்னுடைய மனசாட்சியின் தயக்கத்தை அகற்றுவதில் வெற்றிகண்டு, தன்னுடைய பசியை திருப்திப்படுத்த அந்த அப்பங்களை வாங்கினான்.PPTam 862.1

    ஒரு புதிய ஆபத்து இப்போது வந்தது. சவுலின் மேய்ப்பர்களில் தலைவனாயிருந்து, எபிரெயர்களின் விசுவாசத்தை அறிக்கை செய்திருந்த தோவேக்கு ஆராதனை செய்யுமிடத்தில் தன்னுடைய பொருத்தனைகளை செலுத்திக்கொண்டிருந்தான். அந்த மனிதனைக் கண்டதினால் மற்றொரு அடைக்கல் இடத்தைக் கண்டுபிடிக்க தீவிரப்படும் படி தாவீது தீர்மானித்து, தன்னைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்படுமானால் அதற்காக ஏதாவது ஆயுதங்களை பெற்றுக் கொள்ளவும் தீர்மானித்தான். அகிமெலேக்கிடம் அவன் ஒரு பட்டயத்தைக் கேட்க, கோலியாத் தின் பட்டயத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அது அடையாளமாக கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. தாவீது : அதற்கு நிகரில்லை. அதை எனக்குத் தாரும் என்றான். பெலிஸ்தருக்காகப் பேராடினவனை அழிக்கும் படியாக ஒருகாலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பட்டயத்தைப்பிடித்தபோது அவனது தைரியம் புத்துணர்வடைந்தது.PPTam 862.2

    சவுலின் எல்லையில் இருந்ததைக் காட்டிலும் அவனுடைய ஜனத்தின் சத்துருக்கள் நடுவே அதிக பாதுகாப்பு இருந்ததாக தாவீது உணர்ந்ததினால், காத்தின் அரசனான ஆகீஸிடம் சென்றான். ஆனால் வருடங்களுக்கு முன்பெலிஸ்தருக்காக போராடினவனைக் கொன்றவன் தாவீதுதான் என்று ஆகீசுக்கு அறிவிக்கப்பட்டது. இஸ்ரவேலின் சத்துருக்களிடம் அடைக்கலம் தேடினவன் இப்போது தான் மாபெரும் ஆபத்தில் இருப்பதைக் கண்டான். பித்தங்கொண்டவனைப் போல நடித்து, தன்னுடைய சத்துருக்களை ஏமாற்றி இவ்விதம் அங்கிருந்து தப்பினான்.PPTam 863.1

    தாவீதின் முதல் தவறு, நோபில் தேவனை நம்பாதிருந்தது. அவனுடைய இரண்டாவது தவறு, ஆசீசை ஏமாற்றியது. தாவீது நேர்மையான குணங்களைக் காட்டியிருந்தான். அவனுடைய சன்மார்க்க மதிப்பு மக்களின் தயவை வென்றிருந்தது, ஆனால் அவன் மேல் போராட்டம் வந்தபோது அவனுடைய விசுவாசம் அசைக்கப்பட்ட மனித பெலவீனம் வெளிப்பட்டது. ஒவ்வொரு மனிதனிலும் அவன் ஒரு வேவுகாரனையும் காட்டிக்கொடுக்கிற வனையும் கண்டான். மாபெரும் அவசரத்தில் தாவீது உறுதியான விசுவாசக் கண்களோடு தேவனை நோக்கியிருந்து பெலிஸ்திய இராட்சதனை தோற்கடித்தான். அவன் தேவனை விசுவாசித்து அவருடைய நாமத்தில் சென்றான். ஆனால் வேட்டையாடப்பட்டு உபத்திரவப்படுத்தப்பட்ட போது, குழப்பமும் துயரமும் அவனுடைய பரலோகத் தகப்பனை அவன் பார்வையிலிருந்து ஏறக்குறைய மறைத்திருந்தது.PPTam 863.2

    எனினும் இந்த அனுபவம் தாவீதிற்கு ஞானத்தைப் போதிக்கும் படியாக இருந்தது. ஏனெனில் அவனுடைய பெலவீனத்தையும் தேவனை தொடர்ச்சியாக சார்ந்திருப்பதன் அவசியத்தையும் அது அவனுக்கு உணர்த்தியது. மனம் சோர்ந்தவர்களை உற்சாகப் படுத்தி, பெலவீனமுள்ளவர்களை பெலப்படுத்தி, ஆண்டவருடைய சோர்ந்துபோன ஊழியக்காரருக்கு தைரியத்தையும் உதவியையும் அனுப்பும்படியாக, சோர்ந்துபோயோ அல்லது விரக்தியடைந்தோ இருக்கும் ஆத்துமாக்களின் மேல் வரும் தேவனுடைய ஆவியான வரின் இனிமையான செல்வாக்கு எவ்வளவு விலையேறப் பெற்றதாயிருக்கிறது. தவறு செய்கிறவர்களிடம் மென்மையாக நடந்து, இடுக்கணிலும் நாம் மிக அதிகமான துக்கத்தினால் மேற்கொள்ளப்படும் போதும் தம்முடைய பொறுமையையும் மென் மையையும் வெளிக்காட்டுகிற நம்முடைய தேவன் எப்படிப்பட்ட தேவனாயிருக்கிறார்,PPTam 863.3

    தேவனுடைய பிள்ளைகளின் பங்கில் வரும் ஒவ்வொரு தோல்வியும் அவர்களுடைய விசுவாசக் குறைவினிமித்தமே . ஆத்துமாவை நிழல் சூழ்ந்து கொள்ளும் போதும், நமக்கு வெளிச்சமும் நடத்துதலும் தேவைப்படும் போதும் நாம் மேல்நோக்கிப் பார்க்க வேண்டும். இருளைத் தாண்டி அங்கே வெளிச்சம் இருக்கிறது. தாவீது ஒரு நொடி கூட தேவனை நம்பாது இருந்திருக்க வேண்டாம். அவரை நம்புவதற்கு அவனுக்குக் காரணம் இருந்தது. அவன் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான். ஆபத்தின் நடுவில் தேவனுடைய தூதர்களால் அவன் பாதுகாக்கப்பட்டிருந்தான். ஆச்சரியமான காரியங்களைச் செய்யும் படியாக அவன் தைரியத்தினால் இடைக்கட்டப்பட்டிருந்தான். வைக்கப்பட்டிருந்த துயரமான சூழ்நிலையிலிருந்து அவன் தன் மனதை அப்புறப்படுத்தி, தேவனுடைய வல்லமையையும் மாட்சி மையையும் நினைத்திருப்பானானால், மரண நிழலுக்கு நடுவிலுங்கூட சமாதானமாக இருந்திருப்பான். மலைகள் வில கினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் (ஏசாயா 54:10) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை நம்பிக்கையோடு அவன் திரும்பக் கூறியிருந்திருக்க முடியும்.PPTam 864.1

    சவுலின் தேடுதலிலிருந்து யூதாவின் மலைகளுக்கிடையே தாவீது அடைக்கலம் பெற்றான். மாபெரும் படைக்கு எதிராக சி றிய படை நிற்க வசதியான அதுல்லாம் என்கிற குகைக்கு அவன் பத்திரமாகத் தப்பிச்சென்றான். அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள். தாவீதோடிருந்த உறவினிமித்தம் சவுலின் காரணமற்ற சந்தேகம் தங்களுக்கு எதிராக எந்த நேரத்திலும் திரும்பும் என்று அறிந்து, தாவீதின் குடும்பம் பாதுகாப்பாக உணரவில்லை தேவன் தாவீதை தமது ஜனத்தின் எதிர்கால அதிபதியாக தெரிந்து கொண்டார் என்று இஸ்ரவேலில் பொதுவாக அறியப்பட்டிருந்ததை அவர்கள் இப்போது அறிந்தனர். பொறா மையுள்ள அரசனின் பைத்தியகாரத்தனத்திற்கு வெளிக்காட்டப்பட்டிருப்பதைக் காட்டிலும் தனிமையான குகையில் உயிர்தப்பி ஓடுகிறவனாயினும் அவனுடன் இருக்கும் போது பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.PPTam 864.2

    அதுல்லாம் குகையில் குடும்பம் பரிவோடும் பிரியத்தோடும் இணைந்தது. இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது! (சங்.133:1) என்று பாடினபோது ஈசாயின் குமாரனால் தன்னுடைய குரலினாலும் சு ரமண்டலத்தினாலும் இனிமையான இசையை உண்டாக்க முடிந்தது. தன்னுடைய சொந்த சகோதரரிடமிருந்தே கசப்பையும் அவநம்பிக் கையையும் அவன் அனுபவித்திருக்கிறான். பிரிவினையின் இடத்தை எடுத்துக்கொண்ட இணக்கம், வெளியேற்றப்பட்டவனின் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது இங்கேதான் தாவீது ஐம்பத்து ஏழாம் சங்கீதத்தை இயற்றினான்.PPTam 865.1

    இராஜாவின் வற்புறுத்துதலுக்குத் தப்ப விரும்பின மற்றவர் களும் தாவீதின் கூட்டத்தோடு விரைவில் இங்கே இணைந்தனர். இராஜா ஆண்டவரின் ஆவியானவரால் நடத்தப்படவில்லை என்பதைக் கண்டதினால், இஸ்ரவேலின் அதிபதியின் மேல் நம்பிக்கை இழந்த அநேகர் அதிலே இருந்தனர். ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவ னோடே கூடிக்கொண்டார்கள், அவன் அவர்களுக்குத் தலைவனா னான், இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந் தார்கள். இங்கே தாவீதுக்குச் சொந்தமான ஒரு சிறிய இராஜ்யம் இருந்தது. அதிலே ஒழுங்கும் கிரமமும் இருந்தது. எனினும் மலைகளிலிருந்த மறைவிடங்களிலும் அவன் பாதுகாப்பாக உணர வில்லை. ஏனெனில் இராஜா அவனுடைய கொலைகார நோக் கத்தை விட்டுவிடவில்லை என்பதற்கான தொடர்ச்சியான சான்றுகளை அவன் பெற்றுக்கொண்டிருந்தான்.PPTam 865.2

    தன்னுடைய பெற்றோர்களுக்கு மோவாபின் அரசனிடம் ஒரு அடைக்கலத்தைப் பெற்றான். ஆண்டவருடைய தீர்க்கதரிசியிட மிருந்து வந்த ஆபத்தைக் குறித்த எச்சரிப்பினால் பின்னர் தன்னுடைய மறைவிடத்திலிருந்து ஆராத்தின் காட்டிற்கு அவன் ஓடினான். தாவீது கடந்து வந்துகொண்டிருந்த அனுபவம் அவ சியமற்றதாகவோ அல்லது கனியற்றதாகவோ இருக்கவில்லை. ஞானமுள்ள தளபதியாகவும் நீதியும் இரக்கமுமுள்ள அரச னாகவும் அவனைப் பொருத்த, தேவன் அவனுக்கு ஒரு ஒழுங்கின் பயிற்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தார். தன்னுடைய கொலை கார உணர்ச்சியினாலும் குருட்டாட்டமான புத்தியீனத்தினாலும் முற்றிலும் தகுதியற்றவனாகிக்கொண்டிருந்த சவுலின் வேலையை எடுத்துக்கொள்ள, தப்பியோடின தன் கூட்டத்தோடு அவன் ஆயத்தமடைந்து கொண்டிருந்தான். மனிதர் தேவனுடைய ஆலோசனையிலிருந்து விலகும் போது, நீதியோடும் புத்தியோடும் செயல்பட அவர்களைத் தகுதிப்படுத்துகிற அந்த அமைதியையும் ஞானத்தையும் தக்கவைத்துக் கொள்ள முடியாது. தேவனுடைய ஞானத்தினால் வழி நடத்தப்படாத மனித ஞானத்தைப் பின்பற்றுவதைப்போன்ற பயங்கரமும் நம்பிக்கையற்றதுமான பயித்தியக்காரத்தனம் வேறெதுவும் இருக்காது.PPTam 865.3

    தாவீதை கண்ணிவைத்து பிடிக்க அதுல்லாம் குகையில் சவுல் ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தான். தாவீது அந்த அடைக்கல் இடத்தை விட்டுச் சென்றான் என்று கண்டுபிடிக்கப்பட்டபோது இராஜா மிகவும் மூர்க்கமடைந்தான். தாவீதின் ஓட்டம் சவுலுக்கு மர்மமாயிருந்தது. தன்னுடைய திட்டத்தையும் தான் நெருங்கி வருவதையுங்குறித்து ஈசாயின் மகனுக்கு அறிவிக்கிற துரோகிகள் பாளயத்தில் இருக்கிறார்கள் என்று நம்புவதைத்தவிர வேறு எவ்விதத்திலும் அவனால் அதற்கு காரணம் காணமுடியவில்லை .PPTam 866.1

    அவனுக்கு எதிராக ஒரு சதித்திட்டம் உண்டாகியிருப்பதாக தனது ஆலோசகரிடம் வலியுறுத்திக் கூறி, தன்னுடைய ஜனங்களில் நடுவே தாவீதிற்கு நண்பனாயிருக்கிறவனை காண்பிப்பவனுக்கு ஐசுவரியமான ஈவுகளையும் கனம் நிறைந்த தகுதிகளையும் அளிப்பதாக பேரம் பேசினான். ஏதோமியனான தோவேக்கு அதை அறிவிக்கிறவனானான். இலட்சியத்தினாலும் பேராசையினாலும், தன்னுடைய பாவங்களைக் கடிந்து கொண்ட ஆசாரியன் மேலிருந்த வெறுப்பினாலும் அசைக்கப்பட்டவனாக, தேவனுடைய மனிதனுக்கு எதிராக சவுலின் கோபத்தை தூண்டுவதற்கு ஏதுவாக தாவீது அகிமெலேக்கை சந்தித்ததை அறிவித்தான். பாதாள் அக்கினி பற்றி எரிந்த அந்த பொல்லாத நாவினுடைய வார்த்தைகள் சவுலின் இருதயத்தில் மிகக் கொடிய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டது. உக்கிரத்தினால் மதியிழந்தவனாக ஆசாரியனின் முழுக்குடும்பமும் அழியவேண்டும் என்று அவன் அறிவித்தான். அந்த பயங்கரமான கட்டளை செயல்படுத்தப்பட்டது. அகிமெலேக்கு மாத்திரமல்ல அவன் குடும்பத்தார் - சணல் நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்து பேர் தோவேக் கினுடைய கொலைகாரக்கைகளினால் இராஜாவின் கட்டளைப்படி கொலை செய்யப்பட்டனர்.PPTam 866.2

    ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக் கினால் வெட்டிப்போட்டான். இதுவே சாத்தானின் கட்டுப்பாட்டின்கீழ் சவுல் செய்ய முடிந்தது. அமலேக்கியரின் அக்கிரமம் முழுமையடைய, அவர்களை முற்றிலும் அழிக்கும் படியாக தேவன் சொன்னபோது, தெய்வீகத்தீர்ப்பைச் செயல்படுத்தக்கூடாத அளவு தன்னை மிகவும் இரக்கமுள்ளவனாக நினைத்து, அழிவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதை அவன் தப்பு வித்தான். ஆனால் இப்போது தேவனிடமிருந்து எந்த கட்டளையுமில்லாது, சாத்தானின் நடத்துதலின் கீழ் ஆண்டவருடைய ஆசாரியர்களைக் கொன்று நோபின் குடிகள் மேல் அழிவை அவனால் கொண்டு வரமுடிந்தது. இப்படிப்பட்டதே தேவனுடைய நடத்துதலை நிராகரித்த மனித இருதயத்தின் மாறுபாடு.PPTam 867.1

    இந்தச் செயல் இஸ்ரவேல் அனைத்தையும் திகிலினால் நிறைத்தது. அவர்கள் தெரிந்து கொண்ட இராஜாதான் இந்த கொடுஞ்செயலை அதுவும் தேவனுக்குப் பயப்படாத மற்ற தேசங்களின் இராஜாக்களைப் போலச் செய்திருக்கிறான். உடன்படிக் கைப்பெட்டி அவர்களோடு இருந்தது. ஆனால் அவர்கள் விசாரித்து அறிகிற ஆசாரியர்கள் பட்டயத்தினால் கொலை செய் யப்பட்டார்கள். அடுத்து என்ன வரும்?PPTam 867.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents