Go to full page →

மறுமையின் பள்ளிக்கூடம் LST 164

ஆதியில் ஏதேனில் ஸ்தாபிக்கப்பட்ட பள்ளிக்கூடத்திற்கும் மறுமையின் பள்ளிக்கூடத்திற்கும் மத்தியில் நரரின் மீறுதலையும் பாடு வருத்தத்தையும் பற்றியதும், தெய்வீக பலியைப் பற்றியதும், மரணத்தின் மேலும் பாவத்தின் மேலுமுள்ள வெற்றியைப் பற்றியதுமான சரித்திரமாகிய இவ்வுலக சரித்திம் எல்லாம் சுருக்கமாய் அடங்கிக் கிடக்கிறது. ஏதேனின் அந்த முதற் பள்ளிக்கூடத்திலுள்ள நிலைமைகள் எல்லாம் இனி வரப்போகும் அப்பள்ளிக்கூடத்தில் காண முடியாது. நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தினால் சோதிக்கப் படுவதற்கு சமயம் வாய்க்காது. சோதனைக்காரன் அங்கில்லை, தவறுவது கூடாத காரியம். ஒவ்வொருவரும் பொல்லாங்கனின் சோதனைக் கசையாதிருந்து கொண்டனர்; இனி ஒருவரும் அதின் வல்லைம்மைக்குடன் படுவதுபோலில்லை. LST 164.1

“ஜெயங் கொள்ளுகின்றவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்” என்று கிறிஸ்து சொல்லுகிறார். ------ Ed. 301-2. LST 164.2

சர்வலோகத்தின் பொக்கிஷங்களெல்லாம் தேவனுடைய பிள்ளைகளின் ஆராய்ச்சிக்கென்று திறக்கப்படும். சொல்லொண்ணா மகிழ்ச்சியுடன் நாம் மாசற்ற ஜீவிகளின் சந்தோஷத்திலும் ஞானத்திலும் பிரவேசிப்போம். தேவனுடைய கரத்தின் கிரியையை யுக யுகங்களாய்த் தியானிப்பதின் மூலமாய் அடையும் பொக்கிஷங்கள் நமது பங்காகும். ஆண்டுகள் நித்தியம் நித்தியமாய்க் கடந்து செல்லச் செல்ல அவைகள் மிக்க மகிமையான வெளிப்படுத்தலக்ளை வெளிப் படுத்திக் கொண்டே இருக்கும். “நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” தேவ ஈவுகள் என்றென்றும் சதாகாலமும் அளிக்கப்படும். -----Ed. 307. LST 164.3

* * * * *