Go to full page →

ஐந்தாம் பிரிவு—கிறிஸ்தவ ஊழியம் LST 166

சுவிசேஷ பிரபல்ய வேலை LST 166

இக்காலத்திற் குரிய சத்திய அறிவைப் பெற்றுள்ள ஒவ்வொருவரும் சுவிசேஷ ஊழியஞ் செய்ய வேண்டுமென்று தேவன் எதிர் பார்க்கிறார். யாவரும் அந்நிய நாடுகட்கு மிஷனரிகளாகப் போக முடியாது. ஆனால் யாவரும் தங்கள் குடும்பங்களிலும் அக்கம் பக்கங்களிலும் மிஷனரிகளாயிருக்கக் கூடும். சபை அங்கத்தினர் தங்களைச் சுற்றிலுமுள்ளவர்களுக்குத் தூதைக் கொடுப்பதற்குப் பல வழிகளுண்டு. அதிகமாய்ச் சிந்திக்கக் கூடிய ஓர் வழி பிரயோஜனமுள்ள தன்னயமற்ற கிறிஸ்தவ ஜீவியம் செய்வது தான். LST 166.1

பெரிய விபரீத நிலைமைகளில் ஜீவியப் போர் புரிகிறவர்கள் செலவற்ற உதவிகளினால் ஆற்றித் தேற்றப் படலாம். பேசப்பட்ட பட்சமுள்ள சிறு வார்த்தைகளும் செய்யப்பட சொற்ப உதவிகளும் ஆத்துமாவின் மேல் கூடுகிற சோதனை, சந்தேகமான மேகங்களை ஒட்டிவிடும். உள்ளான இருதயத்திலிருந்து கிறிஸ்து காண்பித்த மாதிரி சொற்ப அளவில் காட்டப்படும் அனுதாபம் கிறிஸ்துவின் ஆவியினால் மெதுவாய்த் தொடப்படவேண்டிய இருதயங்களின் கதவைத் திறப்பதற்கு வல்லமை உடையதாயிருக்கிறது. LST 166.2

கிறிஸ்துவுக்குத் தத்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவையும் ஒ எவ்வளவு சந்தோஷமாய் அவர் ஏற்றுக் கொள்ளுகிறார்! மனுஷாவதார அன்பின் இரகசியங்களை அவர் உலகத்திற்குத் தெரிவிக்கும் பொருட்டு மனுஷனைத் தேவனோடு ஐக்கியப் படும்படிச் செய்கிறார். அதைப் பேசு; அதை ஜெபி; அதைப் பாடு, அவருடைய சத்தியத்தை உலகமெங்கும் நிரப்பவதுடன் தூர தேசங்களை அடுத்துப் போ. LST 166.3

மானிடர் எப்படி யாகலாமென்றும் அவர்களுடைய கிரியையின் மூலம் கெட்டுப்போக எத்தனமாயிருக்கும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக அவர்கள் என்ன செய்து முடிக்கலாமென்றும் அவர்கள் உலகத்துக்கு வெளிப்படுத்தும் பொருட்டு, தேவ தூதாட்கள் மானிட தூதாட்களோடு ஒத்துழைக்க அயத்தமா யிருக்கிறார்கள். உண்மையைக் குணப்பட்டவன் தான் அடைந்துள்ள சந்தோஷத்தை மற்றவர்களுக்கும் கொடுக்க வாஞ்சிக்கிறவனாக அவ்வளவாய்த் தேவ அன்பினால் நிறைந்திருப்பான். LST 166.4

நமது சபையானது பரிசுத்த அலங்காரத்தை உலகுத்துக்குக் காண்பிக்க வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். கிறிஸ்து மார்க்க வல்லமையை அது காண்பிக்க வேண்டும். கிறிஸ்தவனுடைய குணத்தில் பரலோகம் பிரதி பிம்பிக்க வேண்டும். நன்றியறிந்த துதியின் கீதத்தை அந்தகாரத்திலிருப்போர் கேட்க வேண்டும். சுவேஷத்தின் நற் செய்திகளுக்காகவும், அதின் வாக்குத்தத்தங்கள் உறுதி மொழிகளுக்காகவும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய நாடுகிறதினால் நமது நன்றியறிதலைக் காட்டவேண்டும். இது களைத்துக் கலங்கிக் கஷ்டமுறும் ஆத்துமாக்களுக்கு பரம நீதியின் கதிர்களைக் கொண்டுவரும். அது வழியில் களைப்புற்றுத் தவிக்கும் பிரயாணிகளுக்குத் திறக்கப்பட்ட ஒரு ஊற்றைப் போலிருக்கும். இறக்கம், அன்பின் கிரியைகள் ஒவ்வொன்றிலும் தேவதூதர்கள் பிரசன்ன மாயிருக்கிறார்கள். LST 166.5