Go to full page →

ஆகாரம் தெரிந்தெடுத்தல் LST 180

சரீரத்தை வளர்ப்பதற்கு அவசியமான சத்துக்களை அதிகமாயுடைய ஆகாரனகலித் தெரிந்தெடுக்க வேண்டும். இதில் பிரியத்தைப் பொறுத்து ஆகாரங்கள் தெரிந்தெடுக்கப் படுவது ஓர் பத்திரமான வழியல்ல. பலவகை தானியங்கள், கனிவர்க்கங்கள், கோட்டைகள், மரக்கறிகள் முதலானவைகளே சிருஷ்டி கர்த்தாவல் நமக்கு ஆகாரமாகத் தெரிந்து கொள்ளப் பட்டவைகள். இவ்வாகாரங்கள் கூடுமான மட்டும் சுலபமும் இயல்புமான தன்மையில் பாகம் செய்யப்பட்டால் மிக்க ஆரோக்கியமும் போஷனையுமுள்ள உணவாகும். அதிகம் சேர்மானமுள்ளதும் கிளர்ச்சி உண்டு பண்ணுகிறதுமான ஓர் உணவால் பெறக் கூடாத ஓர் பித்தையும், சகிப்பின் ஆற்றலையும் அறிவின் வீரியத்தையும் அவைகள் கொடுக்கின்றன. ---- M. H. 295-6. LST 180.1