Go to full page →

மெய் இச்சை அடக்கத்திற்கோர் திருஷ்டாந்தம் LST 180

மெய் இச்சை அடக்கத்திற்கும் அதில் உண்டாகும் ஆசீர்வாதங்களுக்கும் பாபிலோன் அரண்மனையிலுள்ள யௌன தானியேளுடையவும் அவனுடைய தோழர்களுடையவும் சரித்திரத்தில் காணப்படும் திருஷ்டாந்தத்தை விட சிறந்த திருஷ்டாந்தத்தை நாம் வேறெங்கேயும் காண முடியாது. LST 180.2

எப்பொழுதும் தேவன் செம்மையானவர்களை கனம் பண்ணுகிறார். அந்தப் பெரிய வெற்றி வேந்தனால் ஜெயிக்கப்பட்ட சகல தேசங்களில் இருந்தும் தேர்ச்சி அடையக் கூடிய வாலிபர்கள் பாபிலோனுக்குக் கொண்டு வரப்பட்டார்கள்; என்றாலும் அவர்கள் எல்லோருக்குள்ளும் எபிரேய அடிமைகள் நிகரற்றுக் காணப்பட்டார்கள். வளர்ந்து நிமிர்ந்த வடிவம், தீர்க்கமான நடை, கறைப்படாத இரத்த மெனக் காட்டுகிற அழகான முகம், மாசற்ற சுவாசம் ஆகிய இவிகள் எல்லாம் நற்பழக்கங்களின் பல யோக்கிதா பத்திரங்களாய் இருந்தன; இவைகள் இயற்கைப் பிரமாணங்களுக்குக் கீழ்படிந்து நடப்போருக்கு இயற்கையாய்க் கிடைக்கும் நற்குணச் சின்னங்கள். LST 180.3

மூன்றாண்டு பயிற்சியின் முடிவில் அவர்களுடைய திறமைகளும் கல்விகளும் ராஜாவினால் சோதிக்கப்பட்டபோது “தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப் போல” வேறெவரும் காணப்படவில்லை. அவர்களுடைய நுட்ப அறிவும், அவர்களுடைய தெளிவான சிரேஷ்ட பாஷையும் அவர்களுடைய பற்பல விதாமான விஷால அறிவும் அவர்களுடைய மனோ சக்தியின் குன்றாத பெலத்துக்கும் ஊக்த்துக்கும் சாட்சியிட்டன. LST 180.4

பிற்காலங்களிலுள்ள வாலிபரின் நன்மைக்காக தானியேலுடையவும் அவனுடைய தோழர்களுடையவும் சரித்திரம் வேத புஸ்தகங்களில் எழுதி வைக்கப் பட்டிருக்கின்றது. தேவ ஊழியத்திற்காகத் தங்கள் சக்திகள் பலவீனம் அடையாமல் காக்கப்பட்டிருக்க வேண்டுமென விரும்புவோர் அவருடைய கிருபைகளை எல்லாம் உபயோகிப்பதில் கண்டிப்பான இச்சை அடக்கத்தைக் கையாடுவதுடன் கேடுண்டாக்கும் அல்லது சீர்கெட்ட பழக்க வழக்கங்களைப் பூரணமாய் விளக்க வேண்டும். ---- Historical Sketches of S. D. A. for Missions 209-10 LST 180.5