Go to full page →

கிறிஸ்துவின் வேலை அவருடைய பின்னடியாரிடம் ஒப்படைக்கப்பட்டது LST 182

இயேசு கதாம் செய்யும்படி வந்ததாகச் சொன்ன அந்தப் பெரிய வேலை பூமியுலுள்ள அவருடைய பின்னடியாரிடம் கையளிக்கப்பட்டது. கிறிஸ்து தமது தலையாக அந்த இரட்சிப்பின் பெரிய வேலையை முன்னின்று நடத்துகிறதுமன்றி நாம் அவருடைய மாதிரியைப் பின்பற்றி நடக்கும்படி நமக்குக் கற்பிக்கிறார். உலகளாவிய ஓர் தூதை அவர் நமக்குத் தந்திருக்கிறார். இந்த சத்தியம் சகல ஜாதியாருக்கும் பாஷைக் காரருக்கும், ஜனக் கூட்டத்தாருக்கும் போக வேண்டும். சாத்தானின் வல்லமையை எதிர்க்க வேன்டியோயோது; அவனம் கிறிஸ்துவானவராலும் அவருடைய பின்னடியாராலும் கூட மேற்கொள்ளப்பட வேண்டியவன்; அந்தகார வல்லமைகளுக்கு விரோதமாக விஸ்தாரமான ஓர் யுத்தம் நடைபெற வேண்டியது. இவ்வேலையை ஜெயமாய்ச் செய்து முடியோக்கும் பொருட்டு பொருள் அவசியம் வேண்டியதாயிற்று. பொருளை நேரே பரத்திலிருந்து அனுப்பித் தருகிறதற்குத் தேவன் பிரியப் படாமல் இந்த யுத்தத்தை ஆசரிப்பதில் உபயோகிக்கப் பட வேண்டுமென்னும் நோக்கமாகவே அவர் தமது பின்னடியார்கள் வசம் பொருளாகிய தாலந்துகளைத் தந்திருக்கிறார். LST 182.1

அக் காரியம் தன்னைக் கட்டி வருவதற்கு போதுமான தொகையை எழுப்புவதற்காக அவர் தமது ஜனங்களுக்கு ஓர் ஒழுங்கைக் கட்டளை இட்டிருக்கிறார். தசமபாக ஏற்பாட்டின் தேவ ஒழுங்கு எவ்வளவு தெளிவும் எவ்வளவு சமத்துவமும் பொருந்தியது! யாவரும் அதை விசுவாசத்தோடும் தைரியத்தோடும் பற்றிக் கொள்ளலாம், ஏனெனில் அது தெய்வீக ஏற்பாடு. LST 182.2

அதை யாவரும் ஏற்றக் கொள்ளும் பட்சத்தில் ஒவ்வொருவரும் தேவனுக் கென்று ஜாக்கிரதையும் உண்மையுமுள்ள பொக்கிஷதாரர் ஆக்கப்படுவார்கள்; கடைசி எச்சரிப்பின் தூதை உலகத்திற்குக் கூறியறிவிக்கும் பெரிய வேலையை முன்னேற்றம் செய்வதற்கு வேண்டிய பொருளைப் பற்றி யாதொரு குறைபாடும் உண்டாயிராது. சகலரும் இவ் வேற்பாட்டின்படி நடக்கும் பட்சத்தில் பொக்கிஷம் நிரம்பிக் கிடக்கும், கொடுத்து உதவி செய்வோர் அதினால் ஏழையாகி விடார். LST 182.3