Go to full page →

தியாகத்தில் போடப்பட்ட ஒழுங்கு LST 181

இரட்சிப்பு ஒழுங்கின் அஸ்திவாரம் பலியிலே போடப்பட்டது. நாம் இயேசுவின் தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும் பொருட்டு அவர் ராஜ அரண்மனைகளை விட்டு விட்டு தரித்திரரானார். தங்களுக்காக தேவ குமாரன் அப்படிப்பட்ட அளவற்ற பலியைக் கிரய மாகச் செலுத்தி வாங்கின இந்த இரட்சிப்பில் பங்கடைகிற அனைவரும் மெய்யான மாதிரியானவரின் மாதிரியைப் பின்பற்றுவார்கள். கிறிஸ்து பிரதான முலைக்கல்லாயிருந்தார், இந்த அஸ்திபாரத்தின் மேல் நாம் கட்ட வேண்டும். ஒவ்வொருவரும் சுயவெறுப்பு, தற்தியாக ஆவியுடையவர்களாக இருக்க வேண்டும். பூமியிலே கிறிஸ்துவின் ஜீவியம் தன்னயமற்றதாய் இருந்தது; அது மனத் தாழ்மையினாலும் தியாகத்தினாலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இயேசு பரத்திலிருந்து தங்களுக்குக் கொண்டு வந்த பெரிய இரட்சிப்புக்குப் பங்காளிகளாகிய மானிடர் தங்கள் ஆண்டவரைப் பின்பற்றி நடக்கவும் அவருடைய தங்கள் சுய வெறுப்பிலும் தியாகத்திலும் பங்கடையவும் மறுப்பார்களா? “நானே திராட்சச் செடி நீங்கள் கொடிகள்.” “என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார்; கனி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார்” என்று கிறிஸ்து உரைக்கிறார். யோவா. 15:5,2. செடி எங்கும் ஓடுகிற ஜீவாதாரமான அந்த சத்தே கொடிகள் செழித்து கனி கொடுக்கும்படி அவைகளைப் போஷிக்கிறது. வேலைக்காரன் தன் எஜமானிலும் பெரியவனா? மீட்பர் நமது நிமித்தம் சுயவெறுப்பையும் தியாகத்தையும் கையாட வேண்டும், கிறிஸ்துவின் சரீரத்தைச் சேர்ந்த அவயவங்கள் தங்கள் மட்டில் சீராடிக் கொண்டிருக்கின்றதா? சுயவெறுப்பு சீஷத்துவத்திற்கான ஓர் விசேஷ நிபந்தனையாம். LST 181.2