Go to full page →

கிறிஸ்துவின் ஜெபத்திற்கு பதிலளித்தல் LST 186

பிதா குமாரனை அனுப்பினதை உலகம் விசுவாசிப்பதற்காக தாம் பிதாவோடு ஒன்றாய் இருந்தது போல் தமது சீஷர்களும் ஒன்றாயிருக்க வேண்டுமென்பதே கிறிஸ்து தமது சிலுவை மரணத்திற்குச் சற்று முன் செய்த ஜெபம். மிகவும் அருமையானதும் ஆச்சரியமானதுமான இந்த ஜெபம் காலங்களைக் கடந்து நமது காலத்திற்கும் செல்லுகிறது; ஏனெனில், “நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுகிறேன்” என்பது அவருடைய வார்த்தைகள். LST 186.3

கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்கிறவர்கள் தங்கள் ஜீவியங்களில் இந்த ஜெபத்திற்குப் பதிலளிக்க எவ்வளவு ஊக்கமாய்ப் பிரயாசப்பட வேண்டும். சபையோடு சம்பந்தப்பட்டிருப்பத்தின் பரிசுத்தத்தை அநேகர் உணராதிருப்பதுமன்றி கட்டுக்கும் ஒழுங்குக்கும் அடங்கி நடப்பதற்கு மனமில்லாமாலு மிருக்கிராறாக்கள். முழு சபையின் நியாயத்தையும் விட அவர்கள் தங்கள் சொந்த நியாயத்தையே மேன்மைப் படுத்துகிறதாக அவர்களுடைய செய்கையின் போங்கு காட்டுகிறது; அன்றியும் அவர்கள் அதின் சத்தத்திற்கு விரோதமான ஆவியை உண்டு பண்ணாதபடிக்கு தங்களைக் காத்துக்கொள்ளக் கவனிக்கிறதுமில்லை. சபையில் உத்தரவாதமான உத்தியோகங்களை உத்தியோகங்களை யுடையவர்கள் மற்றவர்களைப் போல தப்பிதங்களுடையவர்களாயிருக்கலாம்; தங்கள் தீர்மானங்களில் தவறலாம்; அப்படி இருந்தாலும் அற்பமாய் எண்ணப்படக் கூடாத ஓர் அதிகாரத்தை பூமியிலுள்ள கிறிஸ்துவின் சபை அவர்களுக்கு அளித்திருக்கிறது.--4 T 17. LST 187.1