Go to full page →

சகோதர சிநேகம் LST 187

நமக்கு மிகவும் அதிக மோசகரமாயிருப்பது உலகத்தின் விரோதமல்ல; விசுவாசிகள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களின் இருதையங்களில் பேணி வைத்திருக்கும் தீமையே நாம் மிக்க விசனப்படத் தக்கதான கெடுதலை உண்டாக்குகிறது மன்றி தேவனுடைய வேலையை வளர விடாமல் மிகவும் அதிகமாய்த் தடைசெய்கிறதாயும் இருக்கிறது. ஒருவரைப் பற்றி யொருவர் பொறாமையும் சந்தேகமும் கெட்ட எண்ணமுமுடையவர்களாய் குற்றங் கண்டு பிடிப்பதே முழுத்தொழிலாயிருப்பதினாலேயே நமது பக்தி குறைந்து போவதற் கேதுவாகிற தென்பது நிச்சயம். LST 187.2

பற்பல குணங்களுள்ள மனுஷருக்குள் நிலைத்திருக்கும் ஒற்றுமையும் ஐக்கியமுமே பாவிகளை இரட்சிக்க தேவன் தமது குமாரனை உலகத்திற்கு அனுப்பினார் என்பதற்கு பலத்த அத்தாட்சி. இந்த சாட்சி பகருவது நமக்குக் கிடைத்த சிலாக்கியம். ஆனால் இதைச் செய்வதற்கு நாம் கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ் அடங்க வேண்டும். நமது குணங்கள் அவருடைய குணத்தோடு இசைந்திருக்க வேண்டும், நமது சித்தங்கள் அவருடைய சித்தத்துக்கு ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுது ஒரு எண்ணமும் பிசகாமல் நாம் சேர்ந்து வேலை செய்யலாம். LST 187.3

தமது பின்னடியார்கள் தேவ நோக்கத்தைப் பூரணமாய் நிறைவேற்றுகி றார்களா வென்பதை பற்றி இரட்சகர் கவனமுள்ளவராய் இருக்கிறார். அவர்கள் உலகமெங்கும் சிதரப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அவருக்குள் ஒன்றாயிருக்க வேண்டும். ஆனால் தமது வழிக்கு அவர்கள் தங்கள் சொந்த வழியை ஒப்புக் கொடுக்க மனமற்றிருந்தால் தேவன் அவர்களைக் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக முடியாது. LST 187.4

கிறிஸ்துவின் ஜெபம் பூரணமாய் நம்பப்பட்டு அதின் போதனை தேவனுடைய ஜனங்களின் அனுதின ஜீவியமாகும் போது நம்முடையவர்களின் செய்கைகளில் ஒற்றுமை காணப்படும். கிறிஸ்துவின் அன்பின் கட்டுகளாகிய பொற் கட்டுகளினால் சகோதரன் சகோதரனோடு கட்டப்பட்டிருப்பான். தேவ ஆவியானவர் மாத்திரம் இவ்வொருமைப்பாட்டைக் கொண்டுவரக் கூடும். தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்தினவர் சீஷர்களைப் பரிசுத்தப்படுத்தக் கூடும். அவரோடு ஐக்கியப்பட்டிருந்தால், அதிகப் பரிசுத்தமுள்ள விசுவாசத்தில் அவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்பார்கள். இந்த ஐக்கியத்திற்காக நாம் பிரயாசப்பட வேண்டுமென்று தேவன் விரும்புகிறபடி நாம் பிரயாசப்படும் போது அது நமக்கு உண்டாகும். - 8 T 242-3. LST 188.1

* * * * *

தேவ அன்பு ஆத்துமாவில் நிரம்ப வேண்டும், மற்றப்படி நீதியின் கனிகள் காணப்படா, கிறிஸ்து இருதயத்தில் வாசமாய் இருக்கும் போது அந்த இருதயம் தேவனையும் மனிதனையும் பற்றிய அன்பினால் மேற்கொள்ளப்படும், அங்கே எரிச்சலும் குற்றங் கண்டுபிடிக்குதலும், வாக்குவாதம், நிலைத்திராது. இருதயத்திலுள்ள கிறிஸ்து மார்க்கம் தன்னை மேற்கொள்ளத் தேடும் இச்சைகளின் மேல் பூரண ஜெயத்தைக் கொண்டு வரும்.4 T 610. LST 188.2

* * * * *