Go to full page →

பத்திரமான பாதை LST 189

1845 முதல் தேவனுடைய ஜனங்களின் மோசங்கள் அப்போதைக்கப்போது எனக்கு முன் திறந்து காட்டப்பட்டன; அன்றியும் கடைசி நாட்களில் மீதியானவர்களைச் சூழ்ந்து கொள்ளும் திரளான ஆபத்துகளும் எனக்குக் காட்டப்பட்டன. இக் காலம் வரை நடைபெற வேண்டிய ஆபத்துகள் எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நமக்கு முன் சீக்கிரம் பெரிய காட்சிகள் வெளியாகும். கர்த்தர் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வரப் போகிறார். தான் அபகரித்த அதிகாரத்துக்கு சீக்கிரம் நித்தியமான ஓர் முடிவாகப் போகிறதென்பதை சாத்தான் அறிவான். உலகத்தைப் பிடித்துக் கொள்ளும்படிக்கான கடைசித் தருணம் இப்பொழுது அவனுக்கு முன் இருக்கிறது; பூமியின் குடிகளை நிர்மூலமாக்க அவன் மிகவும் திட்டமாய் முயற்சிப்பான். சத்தியத்தை நம்புகிறவர்கள் காவற் கோபுரத்தின் மேலிருக்கும் சாமக்காரரைப் போல உண்மையுள்ளவர்களா இருக்க வேண்டும், மற்றபடி சாத்தான் போலி நியாயங்களை அவர்களுக்குச் சொல்லுவான். அப்பொழுது அவர்கள் திவ்விய, பரிசுத்த நம்பிக்கையை மோசப்படுத்தத்தக்க அபிப்பிராயங்களை வெளியிடுவார்கள். LST 189.6

1880-ம் ஆண்டு வருடம் கண்ட ஓர் தரிசனத்தின் நான், “மோசமான இந்நாட்களில் தேவனுடைய ஜனங்களுக்கான சுக பாத்திரம் எங்கே உண்டு?” என்று கேட்டேன். “இயேசு தமது ஜனங்களுக்காகப் பரிந்து பேசுகிறார்: என்பதே அதற்கு உத்தரவு. மனுஷனுடைய மத்தியஸ்தரும் அவனுக்காகப் பரிந்து பேசுகிறவருமான இயேசு தங்களை முன்னின்று நடத்த வேண்டுமென விரும்புகிறவர்கள் எல்லாரையும் நோக்கி, “நீங்கள் நீதியின் சூரியன் தெளிவாய்ப் பிரகாசிக்கிற இடத்தில் படிப்படியாக மேல் நோக்கி எண்ணைப் பின்பற்றி வாருங்கள்: என்று சொல்லிக் கொண்டு அவர்களுக்கு முன் சொல்லுவார். LST 190.1

ஆனால் எல்லாரும் அந்த வெளிச்சத்தைப் பின்பற்றிச் செல்லுகிறவர்களல்ல. ஒவ்வொரு படியும் ஓர் தாழ்மையின் பாதையாயிருக்கிற அந்தப் பத்திரமான பாதையினின்று சிலர் தூரமாய் விலகிப் போகிறார்கள். தேவன் தமது பரிசுத்த ஆவியின் மூலமாய் அவர்களுக்கு அனுப்புகிற எச்சரிப்பின் வார்த்தைகளையும் அவர்கள் தள்ளிப் போடத் துணிகிறார்கள். LST 190.2

கர்த்தருடைய எச்சரிப்புக்களையும் கண்டிப்புக்களையும் தள்ளி விட்டு தேவ ஆவியின் சாட்சி மொழிகளை மனுஷ ஞானத்திற்கு மேலானவைகளல்ல என்று சாதிக்கிறவர்களிடம் இன்னும் என்ன வல்லமையைக் கொண்டு அவர் பேசக் கூடும்? தேவன் அந்த வேலையில் இருந்தார் என்பதற்கு அவர் உங்களுக்கு அளித்த அத்தாட்சிகளைத் தள்ளி விட்டால் நீங்கள் நியாயத்தீரிப்பில் தேவனிடம் என்ன நியாயம் சொல்லுவீர்கள்? LST 190.3

நீங்கள் சும்மா வெட்டிக் கேள்விகளைக் கேளுங்கள், பரியாசம் பண்ணுங்கள், தப்பர்த்தம் செய்யுங்கள், அது உங்கள் சொந்த ஆத்துமாக்களுக்குக் கெடுத்தியே ஒழிய வேறொன்றுமில்லை. தேவன் உபயோகிக்கிறவர்களைக் குற்றஞ் சாட்டிக் கண்டனம் செய்தால் அது அவர்களை அனுப்பின ஆண்டவரைக் குற்றஞ் சாட்டிக் கண்டனம் செய்கிறதாகும். மார்க்க விஷயங்களை சரியாய் அறிந்து கொள்ளும் பொருட்டு யாவரும் தங்கள் மார்க்க சம்பந்தமான சக்திகளை விருத்தி செய்ய வேண்டிய தவசியம் - Life Sketches 323.5 LST 190.4