Go to full page →

தவறி நடப்போரிடம் அன்புகூர்வது LST 189

இயேசு நம்மைத் தனித் தனிமையாய் அறிந்து நமது பலவீனங்களைக் குறித்துப் பரிதவிக்கிறார் என்பதை நினைத்துக் கொள்வோமாக அவருடைய சிருஷ்டிகள் ஒவ்வொருவருடைய தேவையும் அவருக்குத் தெரியும், வெளியிடாத ஒவ்வொரு இருதயத்தின் அந்தரங்க வியா குலத்தையும் அவர் வாசிக்கிறார். சிறியோருக்காக மரித்தவர் அந்தச் சிறியவரில் ஒருவனுக்குத் தீங்கு நேரிட்டால் அதைக் கவனித்து தீங்கு விளைவித்தவனை விசாரிக்கிறார். இயேசு நல்ல மேய்ப்பன். பலட்சியமான, நோயுள்ள, அலைந்து திரிகிற ஆடுகளுக்காக அவர் கவலைப்படுகிறார். அவைகளின் பெயர்கள் எல்லாம் அவருக்குத் தெரியும். ஒவ்வொரு ஆட்டினுடையவும் அவருடைய மந்தையின் ஒவ்வொரு ஆட்டுக் குட்டியினுடையவும் வருத்தமும் அனுதாப அன்புள்ள அவருடைய இருதயத்தில் தொடுகிறதுமன்றி உதவிக்காகக் கூப்பிடும் சத்தம் அவருடைய செவியில் ஏறுகிறது. பூமியின் மேல் இன்னொரு ஆல் இல்லாமல் இருப்பது போல இயேசு ஒவ்வொருவருக்காகவும் கவலைப்படுகிறார். - 5 T 346. LST 189.5