Go to full page →

பிரிவும் ஐக்கியமும் LST 194

சோதனைகள் நம்மைச் சுற்றி நெருக்கும்போது நமக்குள் பிரிவினையும் ஒருமைப்பாடும் சேர்ந்து காணப்படும். இப்பொழுது யுத்த ஆயுதங்களை எடுக்க ஆயத்தமாயிருக்கிற சிலர் மெய்யான ஆபத்தின் காலங்களை தாங்கள் கற்பாறையின் மேல் கட்டவில்லை என்பதை வெளிப் படுத்துவார்கள். அவர்கள் சோதனைக்கு நிற்க மாட்டார்கள், பெரிய வெளிச்சத்தையும் அருமையான சிலாக்கியத்தையும் உடையவர்கள் அவைகளை விருத்தி செய்யாதிருந்தால் ஏதாவதொரு காரணத்தையிட்டு அவர்கள் நம்மை விட்டுப் போய்விடுவார்கள். சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமல் போன படியால் சத்துருவின் மாயங்களினால் அவர்கள் பிடிக்கப்படுவார்கள்; வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் அவர்கள் செவிகொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவர்கள். LST 194.3

ஆனால் இதற்கு மாறாக, உபத்திரவத்தின் புயல் நம்மேல் அடிக்கும்போது மெய்யான ஆடுகள் மேய்ப்பனின் சத்தத்தைக் கேட்கும். கேட்டுப் போனவர்களை இரட்சிக்கும்படி சுயவெறுப்பின் முயற்சிகள் கையாடப்படும், அப்போது மந்தையை விட்டு அலைந்து திரிகிறவர்களில் அநேகர் அந்தப் பிரதான மேய்ப்பனைப் பின்பற்றும் படி திரும்பி வருவார்கள். தேவனுடைய ஜனங்கள் ஒன்று சேர்ந்து சத்துருவுக் கெதிரில் ஏக ஐக்கியமாய் நிற்கிறவர்களாகக் காணப்படுவார்கள். பொதுவான ஆபத்தைக் காண்கையில் முதன்மைக்கான போர் ஒழியும்; யார் பெரியவனாஇருப்பன் என்னும் தர்க்கத்திற்கு இடமிராது. அப்பொழுது மூன்றாம் தூதனுடைய தூது பலத்த சத்தமாகி பூமி முழுவதும் கர்த்தரின் மகிமையினால் பிரகாசமாகும். - 6 T 400-1. LST 195.1