Go to full page →

தேவன் தம்முடைய சபைக்காக எடுக்கும் கவலை LST 195

தம்முடைய சபையைப் பற்றி தேவன் மட்டற்ற அன்புள்ளவராயிருக்கிறார். அவர் எப்பொழுதும் தமது சுதந்திரத்தின் மேல் கவலையுள்ளவராயிருக்கிறார். சபையின் தற்கால, நித்யா நன்மைக்கென்று அதை சுத்திகரிப்பதற்கவசியமான துன்பத்தைத் தவிர வேறெந்த துன்பத்தையும் அவர் அதின் மேல் வர விடுகிறதில்லை. பூமியிலே அவர் தமது ஊழியத்தைத் துவக்கும் போதும் முடிக்கும் போதும் தேவாலயத்தை அவர் சுத்திகரித்த வண்ணம் அவர் தமது சபையைச் சுத்திகரிப்பார். உலகத்தின் சகல பாகங்களுக்கும் சிலுவை வெற்றிகளைக் கொண்டு போகிறதற்கு தமது ஜனங்கள் இன்னும் அதிகமான பக்தியையும் பெலத்தையும் அடையும் படிக்கே சபையின் மேல் அவர் கொண்டு வருகிறதெல்லாம் பரீட்சையாகவும் சோதனையாகவும் வருகிறது. செய்யும் படிக்கு எல்லாருக்கும் அவர் ஓர் வேலையை வைத்திருக்கிறார். இடைவிடா விருத்தியும் வளர்ச்சியும் இருக்க வேண்டும். வேலை ஒரு பட்டணத்திலிருந்து மறு பட்டணத்திற்கும், ஒரு தேசத்திலிருந்து மறு தேசத்திற்கும், ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு சாதிக்கும் போய் எப்பொழுதும் முன்னேறிச் சென்று வளர்ந்து, பெலப்பட வேண்டும். - 9 T 228. LST 195.3