கிறிஸ்துவுக்கு உடன் ஊழியனாயிருக்கிறவன் தன வேலையின் பரிசுத்தத்தைப் பற்றியும், அதைச் சித்திபெற நிறைவேற்றுவதற்குப் படவேண்டிய பாடு, தியாகம் இவைகளைப் பற்றியும் மிகுந்த கருத்துள்ளவனாயிருப்பான். அவன் தன்னை மறந்து போகிறான். காணாமற் போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அவன் தன்னுடைய களைப்பையும் குறையையும் பசியையும் உணருகிறதில்லை. காணாமற் போனதை இரட்சிப்பதே அவன் ஒரே நோக்கமாம். LST 202.3
உண்மையுள்ள ஊழியன் தன் பரிசுத்த உத்தியோகத்தை அற்பமாக்கத்தக்க எதையும் செய்யான். அவன் ஒழுக்கத்தில் விழிப்பாயும் தன் செய்கைகளில் ஞானமாயுமிருப்பான். கிறிஸ்து கிரியை செய்த வண்ணம் அவன் கிரியை செய்வான். கிறிஸ்து செய்தாற்போல் அவன் செய்வான். இரட்சிப்பின் செய்திகளை அறியாதவர்களுக்கு அதைக் கொண்டு போவதில் அவன் தன் சகல சக்திகளையும் பிரயோகிப்பான். கிறிஸ்துவின் நீதியைப் பற்றி ஓர் கடும் பசி அவன் இருதயத்தை நிரப்பும்.---G.W. 16-7. LST 203.1