Go to full page →

ஊழியரைப் பயிற்றுவிப்பதின் அவசியம் LST 211

வயசாளிகளான ஊழியர்கள் தற்போது சுமக்கும் பாரங்களை வாலிபர் சீக்கிரம் சுமக்க வேண்டும். உறுதியானதும், சாதனைப் போங்கானதுமான கல்வியை நாம் வாளிபருக்குக் கொடுக்க அஜாகிரதையாயிருந்த விஷயத்தில் நாம் காலதாமதம் செய்து விட்டோம். தேவனுடைய வேலை எப்போதும் வளர்ந்து செல்கிறது, முன்செல்லுங்கள் என்னும் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். சந்தர்ப்பங்களால் ஆளப்படாமல் தேவனோடு சஞ்சரிக் கிறவர்களும், அதிகமாய் ஜெபிக்கிறவர்களும், கிடைக்கக் கூடிய சகல வெளிச்சத்தையும் சேகரிக்க உற்சாகமாய் முயற்சிக்கிறவர்களுமான வாலிப ஆண்களும் பெண்களும் அவசியம் தேவை. LST 211.3

ஆண்டவருக்கு ஓர் வேலை செய்யப்பட வேண்டியதிருக்கும் போது அவர் தளகர்த்தர்களே மாத்திரம் அழையாமல் சகல ஊழியர்களையும் அழைக்கிறார். இக் காலத்தில் அவர் மனத்திலும் சரீரத்திலும் பலமும் சுருசுருப்புமுள்ள வாலிப புருஷரையும் ஸ்திரீகளையும் அழைக் கிறார். துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லா ஆவிகளின் சேனைகளோடும் புரியும் போரில் அவர்கள் தங்கள் சுத்தமும் ஆரோக்கியமுமுள்ள மூளையின் சக்திகளையும் எலும்பையும் தசைநாரையும் கொண்டு வரும்படி அவர் விரும்புகிறார். ஆனால் அவர்கள் அதற்கு ஆயத்தப்பட வேண்டியதவசியம். உண்மையில் வேலைக்குத் தகுதியற்றவர்களான சில வாலிபர் வேலை செய்ய அவசரப்படுகிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்குப் போதிக்கு முன் தாங்கள் போதிக்கப்பட வேண்டியதின் அவசியத்தை உணராதிருக்கிறார்கள். ஏதேனும் ஆயத்தமின்றி உழைத்து ஒருவாறு ஜெயம் பெற்றுள்ள மனுஷரை அவர்கள் சுட்டிக் காண்பிக்கிறார்கள். ஆனால் இம் மனுஷர்கள் சித்தியடைந்திருந்தால், அது அவர்கள் தங்கள் இருதயத்தையும் மனத்தையும் வேலையில் செலுத்தினதினால் தான். அவர்கள் ஆரம்பத்திலேயே சரியான பயிற்சியடைந்திருந்தால், அவர்கள் பிரயாசங்கள் இன்னும் எவ்வளவு அதிகப் பலனுள்ளதாயிருந்திருக்கும்! LST 211.4

நமது கொள்கையை யூகமாய் எடுத்துக் காட்டத் தக்க போதுமான வேத அறிவு நமது வாளிபருக்கில்லாதிருக்கும் போது, உபந்நியாசிக்க அவர்களுக்கு இடங் கொடுப்பதினால் நாம் அவர்களுக்கு அடிக்கடி பெருந்தீங்கை விளைவிக்கிறவர்களாயிருக்கிறோம். வேலையில் பிரவேசிக்கிற சிலர் வேதத்தில் அவ்வளவு தேறினவர்கள் அல்ல. மற்ற விஷயங்களிலும் அவர்கள் குறைவுள்ளவர்களும் பயனற்றவர்களுமானவர்கள் தான். வேதத்தை வாசிக்கும் போது அவர்கள் வார்த்தைகளைத் தடுமாறியும் தப்பிதமாய் உச்சரித்தும் வாசிக்கிறதினால் தேவனுடைய வார்த்தை நிந்திக்கப் படுகிறது. செம்மையாய் வாசிக்க இயலாதவர்கள் செம்மையாய் வாசிக்கப் படிக்க வேண்டும்; அவர்கள் ஜனங்கள் முன் நிற்கப் பிரயத்தினப்படு முன் போதிக்கத் தகுந்தவர்களாயிருக்க வேண்டும்.---C.T. 535-9. LST 212.1