ஓர் வாலிப ஊழியன் எங்கே தேவனுக்காக சாட்சி பகரும்படிக் கேட்கப் படுவானென்று அவன் அறியாதிருக்கிற படியினால், சத்தியத்தைப் பற்றிய வெள்ளரிவினால் அவன் ஒரு போதும் திருப்தியடையலாகாது. அநேகர் தங்கள் விசுவாசத்திற்காக உத்தரவு சொல்லும்படி ராஜாக்கள் முன்பாகவும் பூமியிலுள்ள கற்றரிவாளர்கள் முன்பாகவும் நிற்க வேண்டும். சத்தியத்தைப் பற்றிய அற்ப அறிவை மாத்திரம் உடையவர்கள் வெட்கப் படாத ஊழியக்காரர்களாகத் தவறி விட்டார்கள். அவர்கள் வேத வாக்கியங்களைத் தெளிவாய் விளக்கிக்காட்ட இயலாமல் திகைப்பார்கள். (2 தீமோ. 2:15 வாசி.) LST 212.2
ஓர் ஊழியன் தான் போதுமான அளவு கற்று விட்டதாகவும் இனிமேல் தன் முயற்சிகளைத் தளர விடலாமென்றும் அவன் ஒரு போதும் நினைக்கலாகாது. அவன் தன் வாழ்நாளெல்லாம் கல்வி கற் றுக்கொண்டிருக்க வேண்டும்; அனுதினமும் அவன் கற்கிறவனாயும் அதனால் அடைந்த அறிவை உபயோகிக்கிறவனாயுமிருக்க வேண்டும். LST 212.3
ஊழியத்திற்காகப் பயிற்சி அடைகிறவர்கள் இருதய ஆயத்தமே எல்லாவற்றிலும் மிக்க விசேஷ மென்பதை ஒருபோதும் மறவாதிருக்கட்டும். எவ்வளவு மனோ பயிற்சியும் அல்லது வேத சாஸ்திரப் பயிற்சியும் இதற்குரிய இடத்தை எடுக்க முடியாது. தேவனுடைய சிங்காசனத்திலிருந்து வெளிச்சம் அவன் மூலமாக அந்தகாரத்திலிருப்போருக்குப் பிரகாசிக்கு முன் நீதியின் சூரியனுடைய பிரகாசமுள்ள கதிர்கள் ஊழியனின் இதயத்துக்குள் பிரகாசித்து அவனுடைய ஜீவியத்தை சுத்திகரிக்க வேண்டும்.---G.W. 93-4. LST 213.1