ஆத்தும ஆதாய வேலையில் பெரிய யூகமும் ஞானமும் அவசியம். இரட்சகர் சத்தியத்தை ஒருபோதும் மறைக்காமல் அதை எப்பொழுதும் அன்புடன் விளம்பினார். மற்றவர்களோடு அவர் சம்பாஷிக்கையில் அவர் மகா யூகமாய் நடந்து கொண்டதுமன்றி அவர் எப்பொழுதும் பட்சமும் கவனமுமுள்ளவராயிருந்தார். அவர் ஒரு போதும் வெடு வெடுப்பாயிருந்ததில்லை, ஆத்துமாவுக்கு அனாவசியமான மன நோவைக் கொடுக்கிறதில்லை. அவன் மானிட பெலவீனத்தைக் கடிந்து கொள்ளவில்லை. அவர் மாய்மாலத்தையும், அவிசுவாசத்தையும் அக்கிரமத்தையும் பயமில்லாமல் கண்டித்துணர்த்தினார்; அப்படி அவர் உணர்த்துகிற போதெல்லாம் கண்ணீருடன் பேசினார். அவர் உண்மைக்கு ஒரு போதும் அநியாயம் செய்யாமல், எப்பொழுதும் மானிட வர்க்கத்திற்காக உள்ளக் கனிவையே வெளிப்படுத்தினார். ஒவ்வொரு ஆத்துமாவும் அவருடைய பார்வைக்கு அருமையாயிருந்தது. அவர் தெய்வ கனத்தைப் பெற்றிருந்தும், தேவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு அவயவத்தையும் பற்றியுள்ள மகா உருக்கத்தோடும் மதிப்போடும் அவர் பணிவுற்றிருந்தார். தமது ஊழியத்தினால் இரட்சிக்கப் படத்தக்கதான ஆத்துமாக்களை அவர் எல்லரிடமிருக்கக் கண்டார். LST 213.2