Go to full page →

சுவாதீன ஆவி LST 226

உலகம் முதன்மைக்காகப் புரியும் போரினால் நிறைந்திருக்கிறது. உடன் ஊழியர்களை விட்டுப் பிரிந்து போகும் ஆவி, ஒழுங்கீனத்தின் ஆவி நாம் சுவாசிக்கும் ஆகாயத்திலேயே இருக்கிறது. ஒழுங்கை ஸ்தாபிக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பாப்பதிகாரத்தைப் போல் தங்கள் சுயாதீனத்தை மட்டுப்படுத்திப் போடுகிறதாகையால் மிகவும் மோசகரமானவை என்பதாக சிலரால் மதிக்கப்படுகின்றன. வஞ்சிக்கப்பட்ட இந்த ஆத்துமாக்கள் தங்கள் இஷ்டம் போல் நினைக்கவும் செய்யவும் தக்க தங்கள் சுவாதீனத்தைப் பற்றிப் பெருமை பாராட்டுகிறது தங்களுக்குக் கிடைக்கப்பட்ட ஓர் அருளாக அதை எண்ணுகிறார்கள். அவர்கள் எந்த மனுஷனுடைய சொல்லையும் ஏற்றுக் கொள்ளுகிறதில்லை என்றும், ஒருவனும் தங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். தங்கள் சகோதரின் ஆலோசனையைக் கேளாமல், தங்கள் சொந்த வழியைத் தெரிந்து கொள்வதே தேவனுக்குப் பிரியமென்று மனுஷரை எண்ணிக் கொள்ளும்படிச் செய்வது சாத்தானுடைய விசேஷ முயற்சி என்று நானும் கற்பிக்கப்பட்டேன். LST 226.4

நமது வேலை செழித்தோங்கி வளராமர் போவதற்கானதோர் பேராபத்து இதிலே இருக்கிறது. தெய்வ பயமுள்ள ஆலோசனைக் காரரின் யோசனைக்கேற்ப நாம் ஞானமாயும் விவேகமாயும் நடந்து கொள்ள வேண்டும். இதிலே தான் நமக்குச் சமாதன சவுக்கியமும் பெலமும் உண்டு. மற்றபடி தேவன் நம்மோடும், நம்மாலும், நமக்காகவும் கிரியை செய்யார். LST 227.1

தேவ வசனத்தினால் ஒப்புக்கொள்ளப் படாத உரிமைகளை தள்ளுவதற்கும், கள்ளத்தனமாய் எழும்புங் கூட்டங்களை விலக்கிப்போட பெரிய சத்துவமாய் இருப்பதற்கும் பூரண ஒழுங்கு அவசியம் இருக்க வேண்டியதோர் காலத்தில் ஓ, சாத்தான் இந்த ஜனங்களுக்குள் புகுந்து அவர்கள் வேலையைச் சீர்குலைப்பதற்கான தன முயற்சிகளில் சித்தி பெறக் கூடுமானால் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவான்; ஞானமும் கவலையுமுள்ள பிரயாசத்தினால் கட்டப்பட்ட ஒழுங்கும் கிரமுமான ஏற்பாடு தகர்ந்து போகாதபடிக்கு நாம் நமது நூல்களைச் செம்மையாய்ப் பிடித்துக் கொள்ளள வேண்டும். இக்காலத்தில் வேலையை ஆண்டு நடத்த விரும்பும் ஒழுங்கற்ற அவயவங்களுக்கு சுவாதீனங் கொடுக்கப்படக் கூடாது. நாம் கால முடிவை நெருங்கி வரும்போது, தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் எவ்வித மார்க்க ஒழுங்குமில்லாமலே சுவாதீனமாய் நடந்து கொள்ளுவார்கள் என்று சிலர் முன் கூட்டி உத்தேசிக்கிறார்கள். ஆனால் இவ்வேலையில் ஒவ்வொருவனும் சுயாதீனமாய் நடக்கலாம் என்கிற காரியம் கிடையாதென்பதாக நான் போதிக்கப்பட்டிருக்கின்றேன். வானத்தின் நட்சத்திரங்கள் எல்லாம் பிரமாணத்திற்கு உட்பட்டு தேவ சித்தத்தின் படி செய்வதற்காக ஒன்றையொன்று தூண்டி, தங்கள் செய்கையை ஆண்டு நடத்துகிற பிரமானத்திற்குப் பொதுவாய்க் கீழடங்கி இருக்கின்றன. அவ்வாறு கர்த்தருடைய வேலை சுகமாயும் திடமாயும் முன்னேறிச் செல்லும் பொருட்டு அவருடைய ஜனங்கள் ஒன்று சேர வேண்டும். LST 227.2

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற சிலரின் அடிக்கொரு விதமான இயக்கங்கள், பலத்த ஆனால் பழக்கமில்லாக் குதிரைகளின் வேலைக்கு நன்றாய் ஒப்பிடப் பட்டிருக்கின்றன. ஒன்று முன்னே இழுக்கிற போது மற்றது பின்னே இழுக்கிறது. தங்கள் எஜமானனின் சத்தத்தில் ஒன்று முன்னே குதிக்கிறது; மற்றது அசையாமல் நிற்கிறது. இக் காலத்திற்குரிய பெரிதும் மகத்துவமுமான இந்த வேலையில் மனிதர் ஒருவருக்கொருவர் இசைந்து செல்லாவிடின் குழப்பமுன்டாகும். மனிதர் தங்கள் சகோதரருடன் ஐக்கியப்பட்டிருக்க விரும்பாமல் தனித்து நடக்கும்படி தெரிந்து கொள்ளுகிற தனது நல்ல அடையாளமன்று. செம்மையான வழிகளை விட்டுத் தூரமாய்ச் செல்லும் போதெல்லாம் அதை நேரே சுட்டிக் காட்டக் கூடிய சகோதரரை ஊழியர்கள் நம்புவார்களாக. மனிதர் கிறிஸ்துவின் நுகத்தைப் பூண்டிருந்தால் அவர்கள் பிரிந்து இழுக்கமாட்டார்கள்; அவர்கள் கிறிஸ்துவோடு சேர்ந்து இழுப்பார்கள். LST 227.3

அது மாத்திரமல்ல, எல்லாராலும் செய்ய இயலாத ஓர் விசேஷ வேலையைச் செய்வதற்கு கர்த்தரால் நடத்தப் படுகிற தனி ஊழியர்களின் முறைகளை தேவனுடைய ஜனங்களின் தலைவர்கள் கண்டிப்பதினால் உண்டாகும் மோசத்திற்கு உள்ளாகாதபடி காத்துக் கொள்ள வேண்டும். உத்தரவாதமுள்ள சகோதரர்கள் தங்களுடைய வேலை முறைகளுக்குப் பூரணமாய்ப் பொருந்திப் போகாத இயக்கங்களை உடனே கண்டனம் செய்யாதிருப்பார்களாக. எல்லா ஒழுங்கும் தங்களுடைய ஏற்பாட்டின் படியிருக்க வேண்டுமென ஒருபோதும் நினையாதிருப்பார்களாக. அவர்கள் இன்னொருவரின் முறைகளை நம்பி அஞ்சாதிருப்பார்களாக; மனத் தாழ்மையோடும் பரிசுத்த வைராக்கியத்தோடும் தேவ நியமிப்பின் படி ஓர் விசேஷ வேலையைச் செய்யும் சகோதரனை அவர்கள் நம்பாதிருப்பதினால் அவர்கள் கர்த்தரின் வேலையை முன்னேற விடாமல் தடை செய்கிறவர்களாய் இருப்பார்கள். LST 228.1