Go to full page →

கிறிஸ்துவின் சாந்தத்தில் LST 225

சிலர் நமது முயற்சிகளுக்கு இணங்குவார்கள்; ஆனால் அவர்கள் சுவிசேஷ அழைப்பை அசட்டை செய்யலாம். மற்றவர்கள், தேவனுடைய இரக்கத்தின் எல்லையைக் கடந்துவிட்டதாக நாம் நினைக்கிறவர்களும் கிறிஸ்துவண்டை கொண்டுவரப்படலாம். இன்னும் வெளிச்சத்தையும் சாட்சியையும் புறக்கணித்துத் தள்ளாமல், கார் இருளிலிருந்து, அறியாமையினால் சத்தியத்துக்கு விரோதமாய்க் கிரியை செய்கிறவர்களைப் பிரகாசிப்பதே விவாதத்திற்காகச் செய்யும் வேளைகளிலெல்லாம் மிக்கக் கடைசி வேலையாயிருக்கலாம். ஆகவே எந்த மனுஷனையும் யோக்கியனாகப் பாவித்து நடத்து. அவிசுவாசத்தில் உறுதிப் படுத்தத்தக்கதான யாதொரு வார்த்தையையும்பேசாதே, யாதொரு செய்கையையும் செய்யாதே. LST 225.3

யாதாமொருவன் ஊழியர்களை ராஜீய விஷயமாக வாகிலும் அல்லது வேறெந்தக் கேள்விகளைப் பற்றிய விஷயமாகவாகிலும் விவாதத்திற்கோ அல்லது வழக்குக்கோ இழுக்கும்படி தேடினால் அவ்வித அழைப்புக்குச் செவி கொடாதே. தேவனுடைய வேலையை கிறிஸ்துவின் சாந்தத்தோடு, கூடுமான வரையில் அமைதலாக, ஆனால் உறுதியாக பலமாக முன்னேற்றம் செய். LST 225.4

நாம் சீர்திருத்தங்களைக் காண ஆசிக்கிறோம்; நாம் ஆசிக்கிறதை காணக் கூட்டத்திருப்பதினிமித்தம் ஓர் பொல்லாத ஆவி அடிக்கடி நமது பாத்திரத்தில் கசப்பான துளிகளை விடுகிறதற்கு இடங் கொடுக்கப்பட்டு அவ்விதம் மற்றவர்கள் கசப்படைகிறார்கள். நமது யோசனை குறைந்த வார்த்தைகளினால் அவர்கள் மனங் கொதித்து கழகம் செய்ய ஏவப் படுகிறார்கள். LST 225.5

நீ பண்ணுகிற ஒவ்வொரு பிரசங்கமும் நீ எழுதுகிற ஒவ்வொரு வியாசகமும் எல்லாம் உண்மையாய் இருக்கலாம்; ஆனால் அதில் விழுந்த ஒரு கசப்புத் துளி கேட்கிறவர்களுக் காகிலும் அல்லது வாசிக்கிறவர்களுக் காகிலும் விஷயமாயிருக்கும். அந்த நஞ்சுத் துளியினிமித்தம் ஒருவன் உன் சகல நலமும் ஆரோக்கியமுமான வார்த்தைகளை வெறுப்பான். இன்னொருவன் அந்த விஷத்தையே ஆகாரமாகப் புசிப்பான்; ஏனெனில் அவனுக்கு அப்படிப்பட்ட கடின வார்த்தைகளே பிரியம். அவன் உன் மாதிரியைப் பின் பற்றிக்கொண்டு நீ பேசின படியே பேசுகிறான். இவ்விதம் தீமை பெருகுகிறது. LST 226.1

நித்தியமான சத்திய போதனைகளை எடுத்துக் கூறுகிறவர்கள் அந்த இரு ஒலிவக் கிளைகளிலிருந்து வரும் பரிசுத்த எண்ணெயை தங்கள் இருதயத்திற்குள் கொள்ள வேண்டும். இது எரிச்சலுண்டாக்காமல் சீர்த்திருத்தம் செய்யும் வார்த்தைகளைப் புறப்படச் செய்யும் சத்தியம் அன்போடு பேசப்பட வேண்டும். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தமது ஆவியின் மூலம் பலத்தையும் வல்லமையையும் அருளுவார். அது அவருடைய வேலை. LST 226.2

கோட் சொல்லுகிறதிலும் தப்பர்த்தம் பன்னுகிரதிலும் காலந் தள்ளுகிற நமது விரோதிகளின் நாப்புரட்டுகளைப் பற்றி அதிகமாய்ப் பேசிக் காலத்தையும் பலத்தையும் செலவழிக்கிறதை விட அவைகளை அதிக உத்தமமான வழியில் செலவிடலாம். நமது அயோக்கிய விரோதிகளின் தந்திரோபாயமான பேச்சுகளைப் பின்பற்றுவதில் அருமையான நேரம் செலவிடப்படும்போது, குற்றத்தை உணர்ந்து மனந்திரும்பக் கூடிய ஜனங்கள் வேண்டிய அறிவு கிடைக்காமல் மாண்டு போகிறார்கள். ஜனங்கள் காலத்திற்கேற்ற ஆகாரத்திற்காக கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிற போது, சாத்தானுடைய சொந்த சூழ்ச்சியினாலான புத்தியற்ற நாப்புரட்டுகள் வண்டிக் கணக்கை மனசுகளுக்கு முன் கொண்டு வரப்படுகின்றன. ----- G. W. 372-5. LST 226.3