Go to full page →

நாலாம் அத்தியாயம்—நமது கர்த்தரைச் சந்திக்க ஆயத்தப்படுதல் LST 25

ஜாக்கிரதையுடனும் நடுக்கத்துடனும் நாங்கள் நமது இரட்சகர் வருவாரென எதிர்பார்த்த வேளையை அடுத்து வந்தோம். நாங்கள் ஓர் ஜனமாக அவருடைய வருகையில் அவரைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கும் பொருட்டு மிகுந்த பலனுக்கேதுவான கூட்டங்கள் இன்னும் நடைபெற்றன, விசுவாசிகள் தங்கள் மித்துருக்களுக்காகவும் பந்துக்களுக்காகவும் உழைக்கும்படி தைரியப்படுத்தப் பட்டார்கள். மனமாறுதல்கள் அனுதினமும் அதிகப்பட்டன. LST 25.2

போர்ட்லாந்து நகரத்திலுள்ள போதகர்களும் சபைகளும் விரோதமாய் நின்றபோதிலும் பெத்தோவெனமண்டபத்தில் ஜனங் கள் இரவு தோறும் திரளாய்க் கூடினார்கள்; விசேஷமாய் ஞாயிறு தினங்களில் கூடின கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது, சகல வகையார்களும் இக்கூட்டங்களுக்கு வந்தார்கள். தனவந்தர், எளியோர், மேலானோர், கீழானோர், தேவ ஊழியர் சபையார் ஆகிய யாவரும் பல காரனங்களினிமித்தம் இரண்டாம் வருகையின் உபதேசத்தைத் தாங்களாய்க் கேட்கவேண்டுமென்று ஆவலாயிருந்தார்கள். வந்தவர் பலர் நிற்பதற்கிடங் கிடையாமல் வருத்தத்துடன் போய்விட்டனர். LST 25.3

கூட்டங்கள் இலேசான மாதிரி நடைபெற்றன. வழக்கமாய் ஓர் உபந்நியாசம் சுருக்கமாயும், குறிப்பாயும் செய்யப்பட்டதும் பொது வாய்ப்புத்திபோதனை கொடுப்பதற்கு யாவருக்கும் சுயாதீனம் அருளப்பட்டது. கூட்டம் அவ்வளவு பெரிதாயிருந்தும் வெகு அமைதியாயிருந்தது. அவருடைய ஊழியக்காரர் தங்கள் விசுவாசத்தைக் குரிட்ட்துள்ள நியாயங்களை விவரித்துப் பேசுகையில் கர்த்தர் விரோதத்தின் ஆவியை அடக்கி வைத்திருந்தார். சில வேளைகளில் பேசுகிறவர் பெலவீன பாத்திரமாயிருந்தாலும் தேவ ஆவியானவர் தமது சத்தியத்துக்கு பெலமையையும் வல்லமையையும் அருளினார். சபையில் பரிசுத்த சம்மனசுகளின் பிரசன்ன உணர்சியுண்டானது; விசுவாசிகளின் சிறு கூட்டத்தில் அனுதினமும் அநேகர் சேர்க்கப்பட்டனர். LST 26.1

இக்காலத்தில் உவில்லியம் மில்லரும் அவருடையா கூட்டாளிகளும் 1843 யூத வருஷ காலத்திற்குள் ஓர் சமயம் கர்த்தர் வருவாரென எதிர்பார்த்தார்கள். யூத பஞ்சாங்கத்திற்கும் பொதுவாய் அனுசரிக்கப்பட்டு வந்த பஞ்சாங்கத்திற்கு முல்லா வித்தியாசனமித்தம் இது 1844 மார்ச் வரைக்கும் போகும். LST 26.2