வெளிப்படுத்தின விசேஷம் 14 ஆம் அதிகாரத்தில் வானத்தின் மத்தியிலே காட்டப்பட்டிருக்கிற மூன்று தூதர்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம் தூதனின் தூதுகளைக் கூறியறிவிக்கிறவர்களின் வேலையைக் குறிக்கிறது. எல்லாம் ஒன்றை இணைக்கப்பட்டிருக்கின்றன. இத் தூதுகளின் வல்லமை ஆயிரக்கணக்கான இருதயங்களில் ஆழமாயும் விரிவையும் கிரியை செய்து கல்விச்சாலைகளும், பிரசுர ஆலயங்களும், ஆரோக்கிய ஸ்தாபனங்களும் ஏற்படும்படிச் செய்திருக்கின்றது. இதை யாவும் கிறிஸ்து இரண்டாம் தரம் வல்லமையோடும் மகிமையோடும் வருகிறார் என்று உலகத்தில் குடியிருக்கிற ஜனங்களை எச்சரிக்கும் வேலையாகிய முதலாம், இரண்டாம், மூன்றாம் தூதர்களால் காட்டப்பட்டுள்ள அந்த மகத்தான வேலையில் ஒத்துழைக்கிறதற்கான தேவனுடைய கருவிகளாம். ----- 6 T. 17-8. LST 232.1