Go to full page →

விசுவாசிகளே சத்தியத்தில் ஸ்திரப்படுத்தும் LST 233

உயிருள்ள பிரசங்கி பிரசங்கிக்கும் தூதைக் கேட்கும் ஜனங்கள் இருக்கும் இடத்திலுங் கூட புத்தக வேலையாள் சுவிசேஷ ஊழியனோடு சேர்ந்து தன் வேலையை நடத்தக் கூடுமென்று நான் போதிக்கப்பட்டேன்; ஏனெனில் சுவிசேஷ ஊழியன் தூதை உண்மையாய் எடுத்துக் கூறின போதிலும் ஜனங்கள் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ள கூடாதிருக்கிறார்கள். ஆகையினால் இக் காலத்திற்குரிய சத்தியத்தின் முக்கியத்தைக் குறித்து அவர்களை எழுப்புவதற்காக மாத்திரமல்ல, அவர்களே சத்தியத்தில் வேரூன்றச் செய்து ஸ்திரப்படுத்துவதற்காகவும் வஞ்சகமான உபதேசங்களுக்கு விரோதமாக அவர்களை உறுதிப்படுத்துவதற்காகவும் பிரசுரங்கள் அவசியம். பத்திரிகைகளும் புத்தகங்களும் இக் காலத்துக்குரிய தூதை ஜனங்கள் முன் எப்பொழுதும் வைத்துக் கொள்வதற்கான கர்த்தரின் ஏதுக்களாம். ஆத்துமாக்களை சத்தியத்தில் பிரகாசிப்பிப்பதிலும் உறுதிப் படுத்துவதிலும் வசனத்தின் ஊழியம் மாத்திரம் செய்கிறதைவிட பிரசுரங்கள் அதிகப் பெரிய வேலை செய்யக்கூடும்.---6 T 313-6. LST 233.3