Go to full page →

அடையாளர்த்தமான ஆராதனையிலிருந்து கற்ற சத்தியங்கள் LST 44

அடையாளர்த்தமான ஆராதனையிலிருந்து பாவ நிவாரணத்தைக் குறித்த விசேஷ சத்தியங்களைக் கற்றுக் கொள்ளலாம். பாவிக்குப் பதிலாக ஓர் பிராணி ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஆனால் அப்பிராணி இரத்தத்தினால் பாவம் நீக்கப்படவில்லை. பாவம் பரிசுத்தஸ்தலத்திற்கு மாற்றப் படுவதற்கான ஓர் வழி இவ்விதமாய் உருவாக்கப்பட்டது. LST 44.1

இரத்தத்தைக் காணிக்கையாக செலுத்துவதினால் பாவி நியாயப் பிரமாணத்தின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதை மீறினதால் ஏற்பட்ட தன குற்றத்தை அறிக்கையிட்டு, வரப்போகும் மீட்பரைப் பற்றும் விசுவாசத்தின் மூலமாய் பாவ மன்னிப்பு கிடைக்க வேண்டுமென்னும் தன் விருப்பத்தை வெளியிட்டான்; ஆனால் அவன் இன்னும் முழுவதுமாய் அந்த நியாயப் பிரமாணத்தின் ஆக்கினையினின்று விடுதளையாக்கப் படவில்லை. LST 44.2

பாவ நிவாரண் நாளில் பிரதான ஆசிரியன் சபையோரிடத்திலிருந்து வாங்கின பொதுவான பாவநிவாரண பலியின் இரத்தத்தைக் கொண்டு மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, நியாயப் பிரமாணம் கேட்டதைத் திருப்தி செய்யும் பொருட்டு அப்பிரமாணம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேர் உயர கிருபாசனத்தின் மேல் அதைத் தெளித்தான். பிறகு அவன் மத்தியஸ்தனாக அப்பாவங்களைத் தன்மேல் எடுத்துக் கொண்டு பரிசுத்த ஸ்தலத்திலிருந்து சுமந்து வந்து, போக்காடகிய வெள்ளாட்டுக் கடாவின் தலிமேல் தன கைகளை வைத்து அதின் மேலே இப்பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு அவ்விதம் அடையாளமாய் அவைகளைத் தன்னிடத்திலிருந்து அந்த வெள்ளாட்டுக் கடாவிற்கு மாற்றிக் கொண்டான். பிறகு அந்த வெள்ளாட்டுக் கடா அவைகளை வெளியே சுமந்து கொண்டு போனதிலிருந்து அவைகள் என்றென்றைக்கும் ஜனந்களிடத்திலிருந்து நீக்கப்பட்டுப் போனதாக எண்ணப்பட்டது. LST 44.3

“பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கு நிழலுக்கும் ஒத்திருந்த ஆராதனை அவ்விதம் நடைபெற்றது. அடையாளமாய் பூமிக்குரிய ஊழியத்தில் நடைபெற்றதே பரலோக ஊழியத்தில் மெய்யாய் நடைபெற்றது. நமது இரட்சகர் பரலோகத்திற் கெழுந்தருளிப் போன பின்பு அவர் நமது பிரதான் ஆசாரியாக தமது வேலையை ஆரம்பித்தார்.” பவுல் சொல்லுகிறதாவது : “மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட தாயிருக்கிற பரிசுத்தஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியா மல், பரலோகத்திலேதான் இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரதிட்சை ஆகும்படி பிரவேசித்திருக்கிறார்” (எபி. 9:24) LST 44.4

அடையாளர்த்தமான அந்த ஆராதனைக் கேற்க அவர் பரிசுத்த ஸ்தலத்தில் தமது ஊழியத்தை ஆரம்பித்தார்; தானியேல் தீர்க்கதரிசி முன்னுரைத்த அந்த தீர்க்கதரிசன நாட்களின் முடிவாகிய 1844ல் அவர் தமது பக்திவிநய ஊழியத்தின் கடைசி வேலையாகிய பரிசுத்த ஸ்தல சுத்திகரிப்பின் வேலையைச் செய்யும்படிக்கு மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தார். LST 45.1