Go to full page →

நியாயதீர்ப்பின் வேலை LST 45

பூர்வத்தில் ஜனங்களின் பாவங்கள் பாவ நிவாரண பலியின் இரத்தத்தினால் அடையாளமாய் பூலோக பரிசுத்த ஸ்தலத்திற்கு மாற்றப்பட்டது போல, நமது பாவங்களும் கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்மையில் பரலோக பரிசுத்த ஸ்தலத்திற்கு மாற்றப் படுகின்றன. மேலும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தின பாவங்களைப் போக்குவதினால் அல்லது கிருக்குவதினால் அது மெய்யாய்ச் சுத்திகரிக்கப் படவேண்டும். இதினால் யார் யார் பாவத்தை விட்டு மனந் திரும்பி கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் அவருடைய பிரயாசித்த புண்ணியங்களுக்கா யிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு எழுதப்பட்ட புஸ்தகங்களைப் பரிசோதிக்கும்படியான அவசியம் ஏற்படுகிறது. LST 45.2

ஆகவே பரிசுத்த ஸ்தல சுத்திகரிப்பானது ஓர் நுட்ப நியாய விசாரணை வேலையாகிறது. இவ்வேலை கிறிஸ்து தமது ஜனங்களை மீட்டுக்கொண்டு போவதற்கு வரு முன்னதாக நடைபெற வேண்டும், ஏனெனில் அவர் வரும்போது “அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு அளிக்கும் பலன்” அவரோடு வருகிறது (வெளி. 22:12). LST 45.3

இவ்விதம் தீர்க்கதரிசன வார்த்தையின் முந்திய வெளிச்சத்தைப் பின்பற்றினவர்கள் 2300 நாட்களின் முடிவாகிய 1844ல் கிறிஸ்து பூமிக்கு வருவதற்குப் பதிலாக அவருடைய வருகைக்கு ஆயத்தமாகச் செய்யவேண்டிய பாவ நிவாரணத்தின் கடைசி வேலையைச் செய்வதற்கு தேவனுடைய சந்நிதிக்கு முன்பாக பரலோக பரிசுத்த ஸ்தலத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திலே அப்பொழுது பிரவேசித்தார் என்று கண்டார்கள். LST 45.4

“யோம் கிப்பர்” என்று சொல்லப்பட்ட பூர்வ பாவ நிவாரண நாளை யூதர்கள் இன்று வரையிலும் கைக்கொள்ளுகிறார்கள். அது அவர்களுக்கு வருஷத்தில் மிகுந்த பக்தி விநயமான நாளும் கடைசி நியாயத்தீர்ப்பின் நாளுக்கு அடையாளமுமாய் இருக்கிறது. LST 45.5