1846 நவம்பரில் மெயின் மாகாணத்தைக் சேர்ந்த டோப்ஷாமில் கூடின ஒரு கூட்டத்திற்கு நான் என் புருஷனோடு போயிருந்தேன். அதற்கு ஜோசப் பேட்ஸ் போதகரும் வந்திருந்தார். எனக்கு கிடைத்த தரிசனங்கள் எல்லாம் தேவனால் ஆனவைகள் என்று அப்பொழுது அவர் பூரணமாய் நம்ப வில்லை. அது ஒரு விசேஷமான கூட்டம். தேவ ஆவியானவர் என் மேல் இறங்கினார்; நான் தரிசனத்தில் தேவ மகிமையினால் மூடப்பட்டேன். அப்பொழுது நான் தரிசனத்தை விட்டு வெளியேறினதும் நான் கண்டதை வெளிப்படுத்தினேன். நான் வான சாஸ்திரம் கற்றதுண்டா என்று அப்பொழுது போதகர் பேட்ஸ் எண்ணை கேட்டார். அப்பொழுது நான் வான சாஸ்திரத்தை பார்த்தது எனக்கு ஞாபகம் இல்லை என்றேன். உடனே அவர் கர்த்தரால் ஆயிற்று என்றார். அவர் முகம் பரம வெளிச்சத்தினால் பிரகாசித்தது. அன்றியும் அவர் வல்லமையுடன் சபையாருக்கு புத்தி சொன்னார். LST 64.5
தரிசனங்களை பற்றியுள்ள தமது மனப்பான்மையை குறித்து பேட்ஸ் போதகர் பின் வருமாறு கூறினார். LST 65.1
“திரு வசனத்திற்கு விரோதமாய் போராடினவர்களில் நான் யாதொன்றையும் காண கூடாது இருந்தும் நான் கலக்கமடைந்து மிகவும் அதிகமாய் பரீட்சிக்கப் பட்டேன். அந்த அம்மாளுடைய சரீர நிலைமையின் நெடுங்கால பலவீனத்தின் நிமித்தமே அது அப்படி இருக்கும் என்று நான் வெகு காலமாய் நம்பிக் கொண்டிருந்தேன். LST 65.2
“ஆகவே அவர் சுயாதீனமாய் இருக்கையில் மற்றவர்களின் முன் அந்த அம்மாளையும் அவருடைய நண்பர்களையும் விசேஷமாய் அவரது மூத்த சகோதரியையும் பல கேள்விகள் கேட்டு கூடுமானவரை அதன் எதார்த்தத்தை அறிந்து கொள்ளும்படி சமயம் தேடிக் கொண்டிருந்தேன். நியூ பெட் போர்டுக்கும் வயோஹாவனுக்கும் அவர் வந்திருந்த போது நமது கூட்டங்களிலும் மெயின் மாகாணத்தை சேர்ந்த டோப்ஷோவிலும் கூட பல தடவைகளில் அவர் தரிசனம் காண நான் கண்டிருக்கிறேன். அந்த வஞ்சகமான வேலையோ அல்லது துரிய தரிசன சம்பந்தமான வேலையோ என கண்டுபிடிப்பதற்கு நான் எவ்வளவு ஆவலோடும் ஆத்திரத்தோடும் ஒவ்வொரு வார்த்தையையும் செய்கையையும் கவனித்திருந்தேன் என்பது அவ்வதிசய காட்சிகளில் சிலவற்றை கவனிதிருந்தோருக்கு நன்றாய் தெரியும். மற்றறவர்களுடன் இக்காரியங்களை கண்ணால் காண கிடைத்த சிலாக்கியத்திற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். இப்பொழுது நான் தைரியமாய் அதை பற்றி பேசக் கூடும். அது தேவனால் ஆனதோர் வேலையென்றும் சிதறப்பட்டும், கிழிக்கப்பட்டும் , தோலுரிக்கப்பட்டும் போன அவருடைய ஜனங்களை ஆறுதல் படுத்தவும் பல படுத்தவும் தக்கதாய் அருளப்பட்டதென்று நான் நம்புகிறேன். ” LST 65.3
* * * * *