1848 நவம்பர் மாதம் மாசார்சு செட்ஸ் மாகாணத்தை சேர்ந்த டோர்ச்செச்டரில் கூடின ஒரு கூட்டத்தில் முத்திரையிடும் தூதை*வெளிப்படுதல் ஏழாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனத்தை குறிப்பிடுகிறது. அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு சற்று முன் நடக்கும் சம்பவங்களைப் பற்றி தீர்க்க தரிசி கண்ட ஒரு காட்சி. கலகமும் யுத்தமும் அகிய காற்றுகள் பூமியின் மேல் அடிக்க எத்தனித்த போது ஹெவனுடைய ஊழியக்காரனின் நெற்றிகளில் முத்திரை போட்டு தீரும் மட்டும் காற்றுகள் அடிக்க கூடாதென்னும் ஓர் சத்தம் பரலோகத்தில் இருந்து உண்டானது. தேவனுடைய பிரமாணத்தின் முத்திரை நான்காம் கற்பனையில் காணப்படுகிறது. பத்து கற்பனைகளில் அது மாத்திரம் நியாய பிரமாநிக்கர் ஆகிய யகொவாவின் நாமத்தையும் அதிகாரத்தையும் ராஜ்யத்தையும் கூறுகிறது. ஆகவே உவைட் அம்மாள் விஸ்தரிப்பின் படி ஒய்வு நாள் சத்தியம் உலகமெங்கும் கூறி அறிவிக்கப் படுவதே முத்திரை ஈடும் தூதாய் இருக்கிறது. கூறி அறிவிப்பதையும் நமது பாதையில் பிரகாசித்த வெளிச்சத்தை பிரசுர வேலையின் மூலமாய் வெளிப்படுத்த வேண்டிய சகோதரரின் கடமையையும் பற்றிய ஒரு காட்சி எனக்கு அளிக்கப் பட்டது, LST 66.1
தரிசனத்தில் இருந்து வந்ததும் நான் என் புருஷனை நோக்கி “நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டிய ஒரு செய்தி உண்டு. நீங்கள் சிறிய பத்திரிக்கை ஒன்று அச்சடிக்க ஆரம்பித்து அதை ஜனங்களுக்கு அனுப்ப வேண்டும். அது ஆரம்பத்தில் சிறியதாய் இருக்கட்டும். அனால் ஜனங்கள் அதை வாசிக்க வாசிக்க அதை அச்சிடுவதற்கான பொருளை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். துவக்கத்தில் இருந்தே அது சித்தி பெரும். அற்பமான இவ்வாரம்பதில் இருந்து உலகமெங்கும் சுற்றி பாயும் ஒளி அருவிகள் போல அது எனக்கு காட்டப்பட்டது” LST 66.2
1849 கோடையில் நாங்கள் கனச்டிக்கெட்டில் இருக்கையில் என் புருஷன் நிகழ கால சத்தியத்தை எழுதி பிரசுரிப்பதற்கான வேலை வந்து விட்டதென்று பலமாய் வற்புறுத்தப் பட்டார். அவர் இதை செய்யும்படி தீர்மானித போது அதிக தைரியத்தையும், ஆசிர்வாதத்தையும் அடைந்தார். அனால் அவருக்கு பணம் இல்லாததினால் அவர் திரும்பவும் கவலையும், சந்தேகமும் பட்டார். பொருளுடயோர் பலர் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதை கொடுக்க பிரியம் இல்லாதிருந்தது. கடைசியாக அவர் அதைரியம் அடைந்து அதை விட்டு விட்டு புள் வெட்டுவதற்கு ஒரு நிலம் பார்க்க தீர்மானித்தார். LST 66.3
அவர் வீட்டை விட்டுப் போனதும், ஒரு பார்மா என் மேல் வைக்கப் பட்டது, நான் சோர்வடைந்தேன். எனக்காக ஜெபம் செய்யப்பட்டது, தேவன் என்னை ஆசிர்வதித்தார், நான் தரிசனத்தில் எடுத் துக் கொள்ளப் பட்டேன். ஒரு வருஷத்திற்கு முன்னால் என் புருஷன் நிலத்தில் வேலை செய்த போது கர்த்தர் அவரை பலப்படுத்தி ஆசிர்வதித்து இருந்தார் என்றும் அவ்விதம் சேகரித்த பொருளை சரியான படி பிரயோகம் செய்திருந்தார் என்றும் இன்னும் உண்மையாய் இருந்தால் இம்மையில் நூறு மடங்கு அதிக பலன் கிடைப்பதோடு தேவனுடைய ராஜ்யத்திலும் அதிகமான பலன் கிடைக்குமென்றும் அனால் கர்த்தர் அவருக்கு வேறு ஒரு வேலை வைதிருந்ததினால் நிலத்தில் வேலை செய்வதற்கு இப்போது அவருக்கு பலம் அளிக்கப்பட மாட்டாதென்றும் துணிந்து மறுபடியும் நிலத்தில் வேலை செய்யா போனால் அவர் பிணியினால் பீடிக்க படுவார் என்றும் அனால் அவர் எழுதி எழுதி எழுதியே விசுவாசித்து நடக்க வேண்டும் என்றும் நான் கண்டேன். அவர் உடனே எழுத ஆரம்பித்தார். எதாவாது ஒரு வாசனம் அவருக்கு கருகளாய் காணப்பட்டால் அவ்வார்தயீன் மெய் பொருளை அறிவதற்கு நாங்கள் தேவனை நோக்கி பிரார்த்திப்போம். LST 66.4