Go to full page →

“நிகழ்கால சத்தியம்” LST 67

ஜூலையில் ஒரு நாள் என் புருஷன் தமது பத்திரிக்கையின் முதல் சன்கியய்யில் ஒரு ஆயிரம் பிரதிகளை மிட்ஸ்டெனணிலிருந்து வீட்டிற்கு கொண்டு வந்தார். விஷயங்களை தயாரித்து கொண்டு அனேக தடவைகளில் அவர் எட்டு மைல் தூரம் உள்ள மில் டவுனுக்கு நடந்து போய் வருவார். அனால் இன்று அவர் பெல்டேன் சகோதரருடைய குதிரையையும் வண்டியையும் இரவலாக வாங்கி அதிலே அப்பத்ரிக்கைகளை போட்டு கொண்டு வீட்டிற்கு வந்தார். அருமையான அவ்வச்சடி பிரதிகளை எடுத்து வீட்டிற்குள் கொண்டு போய் தரையிலே வைத்தோம். பிறகு நாங்கள் ஒரு சிறு கூட்டமாய் கூடி அவைகளை சுற்றி முழங்கால் படியிட்டு கர்த்தரின் ஆசீர்வாதம் அச்சடிக்கப்பட்ட அசத்திய தூதர்கள் மேல் தாங்கும் படி மனத்தாழ்மையோடும் மிகுந்த கண்ணீரோடும் அவரைக் கெஞ்சினோம். LST 67.1

பிறகு அவைகளை நான் என் புருஷனிடம் மடித்து கொடுக்க அவர் அவைகளின் மேல் காகிதம் சுற்றி வாசிப்பார்கள் என்று தாம் எண்ணின அனைவர் பேருக்கும் விலாசம் எழுதி ஒரு துணி பைக்குள் அவைகளை போட்டு எடுத்துக் கொண்டு கால்நடையாய் மில் டவுன் போஸ்ட் ஆபிசுக்கு நடந்து செல்வார். LST 67.2

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அப்பத்ரிகையில் நான்கு சங்கிகைகள் மில் டவுனில் அச்சடிக்கப் பட்டன. சங்கிகை ஒவ்வொன்றும் எட்டு பக்கங்களுக்கு உள்ளது *அப்பக்கங்கள் சுமார் ஆறு அங்குல அகலமும் ஒன்பதரை அங்குல நீளமும் ஆனது. பத்திரிகைகள் தபாலில் அனுப்பப் படும் முன் அவைகள் எப்பொழுதும் கர்த்தரின் சமூகது துக்கு முன்பாக விரித்து வைத்து அவர் அவைகளை ஆசிர்வதிக்கும் படி கண்ணீரோடு ஊக்கமாய் ஜெபித்து அனுப்பப்பட்டன. முதல் சங்கியை அனுப்பின பிறகு சீக்கிரத்தில் அப்பத்திரிக்கையை தொடர்ச்சியாய் பிரசுரிக்க வேண்டும் என்று எங்களுக்கு நிருபங்களும் பொருட்களும் வந்ததும் தவிர, சத்தியத்தை தழுவிக் கொள்வதாய் பலரிடம் இருந்து நற்செய்திகளும் வந்தன. LST 67.3

பிரசுர வேலையை ஆரம்பித்ததோடு சத்தியத்தை பிரசன்கத்தின் மூலமாய்த் தெரிவிக்கும்படியான எங்கள் பிரயாசங்களை நாங்கள் நிறுத்தாமல், பல இடங்களுக்கும் சென்று விசுவாசிகளை தைரியபடுத்திக் கொண்டும், தப்பிதங்களை சீர் படுத்திக் கொண்டும் எங்களுக்கு பெரிய வெளிச்சத்தையும், சந்தோஷத்தையும் கொண்டு வந்த உபதேசங்களைப் போதித்துக் கொண்டும் வந்தோம். பிரசுர வேலையை ஊர்சிதமாய் நடத்துவதோடு பற்பல இடங்களில் நாங்கள் படும் பிரயாசங்களையும் அதே சமயம் விட்டுவிடாதிருக்கும் பொருட்டு அப்பத்திரிக்கை அப்போதைக்கப்போது பல இடங்களுக்கு மாற்றப் பட்டது. LST 68.1