Go to full page →

பாரம் நீக்கப்பட்டது LST 15

கர்த்தரைத் தேடிக் கொண்டிருந்த மற்றவர்களுடன் பீடத் தண்டையில் நான் பனிது நிற்கையில் “இயேசுவே உதவி செய்யும், என்னை இரட்சியும், அல்லது நான் செத்தேன்! என் ஜெபம் கேட்கப் பட்டு என் பாவங்கள் மன்னிக்கப்படுமட்டும் நான் ஓயாமல் மன்றாடுவேன்.” என்பதுவே என் இருதயப் பேச்சு. முன் ஒரு போதும் உணராத விதமாய் ஆதரவற்ற என் பரிதாப நிலைமையை நான் உணர்ந்தேன். LST 15.3

நான் முழங்காற் படியிட்டு ஜெபித்ததும் திடீரென என் பாரம் என்னை விட்டு விலகினது, என் இருதயம் இலகுவாயிற்று. முதலில் ஓர் வகையான நடுக்கம் என்னைப் பிடித்தது; திரும்பவும் என் துக்க பாரத்தைச் சுமக்க நான் பிரயாசப்பட்டேன். நான் களிகூர்ந்து சந்தோஷப்பட யாதொரு நியாயமும் கிடையாது போல் எனக்குக் காணப்பட்டது. ஆனால் இயேசு எனக்கு மிகவும் சமீபத்திலிருப்பதாய்க் காணப்பட்டார். அவர் பூமியிலிருந்த போது சஞ்சலப்பட்டவர்கள் தங்கள் சஞ்சலங்களை நீகிக் கொள்ள அவரிடம் வந்தது போல, நான் என் சகல துக்கங்களோடும் கஷ்டங்கள், சோதனைகளோடும் அவரண்டை வரக் கூடியதாயிருக்கக் கண்டேன். அவர் எனக்கு நேர்ந்துள்ள விசேஷ சோதனைகளை அறிந்து எனக்காகப் பரிதாப்பட்டாரென்பது எனக்கு நிச்சயம். அவருடைய அருள் நோக்குக்கு எவ்வளவோ அபாத்திரமாயிருந்த என் விஷயத்தில் அன்புள்ள இயேசு எனக்களித்த அபூர்வ கருணையின் நிச்சயத்தை நான் ஒரு போதும் மறக்க முடியாது. ஜெயிப்போருடன் பணிந்து நின்ற அவ்வளவு சொற்ப நேரத்திற்குள் முன் ஒரு போதும் இல்லதா விதமாய் நான் தெய்வீகத் தன்மையைப் பற்றி அதிகமாய்ப் படித்தேன். LST 15.4

இஸ்ரவேலின் தாய்மார்களில் ஒரு தாய் என்னிடம் வந்து, “அருமைக் குழந்தாய், இயேசுவை நீ கண்டடைந்தாயா?” எனக் கேட்டாள். நான், “ஆம்” எனப் பதிலளிக்கையில் அவள், “நீ நிச்சயமாய் அவரைக் கண்டடைந்தாய்; அவர் சமாதானம் உன்னோடிருக்கிறது, நான் அதை உன் முகத்தில் காண்கின்றேன்.” என்றாள்.” LST 16.1

நான் திரும்பத் திரும்ப எனக்குள் சொல்லிக் கொண்டதாவது : “இது மார்க்கமாகுமா? இது தன தப்பிதமாயிருக்கதா? கிடைப்பதற்கரியதோர் சிலாக்கியத்தைப் பெறுவதற்கு எனக்கு உரிமையுண்டென்பது எனக்கு ஏற்காத ஓர் காரியமாய்த் தோன்றினது. அதை நான் பகிரங்கமாய் அறிக்கையிட வெட்கப்பட்டாலும் இரட்சகர் என்னை ஆசிர்வாதித்தாரென்றும் என் பாவங்களை மன்னித்தாரென்றும் உணர்ந்தேன். LST 16.2