Go to full page →

“புதிதான ஜீவனில்” LST 16

இதன் பின் சீக்கிரத்தில் பாளையக் கூட்டம் முடியவும் நாங்கள் வீட்டிற்குப் புறப்பட்டோம். நாங்கள் பிரசங்களுக்கும் புத்தி போதனைகளும் ஜெபங்களும் எங்கள் மனதில் நிறைதிருந்தன. இயற்கையின் தோற்றமெல்லாம் வேறு மாதிரியாய்க் காணப்பட்டது. கூட்டம் நடந்த காலங்களில் அதிக மேகங்களும் மழையுமாயிருந்தது போல என் எண்ணங்களுமிருந்தன. இப்பொழுது வெளி வாங்கச் சூரியன் மகிமையாய்ப் பிரகாசித்து பூமிக்கு வெளிச்சத்தையும் உஷ்ணத்தையும் கொடுத்தது. புற்பூண்டு விருக்ஷங்கள் மின்னை விட அதிகப் பசுமையாயும் ஆகாயம் நீலமாயுமிருந்தது தேவ சமாதானத்துடன் பூமி புன்னகைப்பாய்க் காணப்பட்டது. அப்படியே நீதியின் சூரியக் கதிர்கள் என் மனதிலுண்டான மோகன்களையும் இருளையும் ஊடுருவிச் சென்று மந்தாரத்தை நீக்கிற்று. LST 16.3

யாவரும் தேவ சமாதானம் பெற்று அவருடைய ஆவியினருள் அடைந்திருக்க வேண்டுமென்று எனக்குக் காட்டப்பட்டது. என் கண் நோக்கினதெல்லாம் வேறு மயமாய்த் தோன்றினது. விருட்சங்கள் முன்னைவிட அழகாய்த் தோன்றின. பட்சிகள் அதிக இன்பமாய்ப் பாடின; அவைகள் தங்கள் பாட்டுகளினால் சிருஷ்டி கர்த்தாவைப் போற்றுவதாய்க் காணப்பட்டது. என் சந்தோஷம் போய் விடுமோவென்றும், இயேசு என்னை நேசிக்கிறார் என்னும் விலையேறப் பெற்ற நிச்சயத்தை நான் இழந்து விடுவேனோ என்றும் பயந்து நான் வாய் திறந்து பேசவும் பிரியப்படவில்லை. LST 16.4

என் ஜீவியம் எனக்கு வேறு விதமாய்க் காணப்பட்டது. என் பாலியத்தை இருலாக்கின உபத்திரவம் கிருபையாக நேர்ந்ததாகத் தோன்றினது. என் நன்மைக்காகவே, உலகத்தினின்றும் திருப்தி செய்யாத அதின் இன்பங்களினின்றும் என் இருதயத்தை நித்திய பரலோக இன்பங்களுக்கு நேராகத் திருப்பினது. LST 17.1

நாங்கள் பக்தி முயற்சிக் கூட்டம் பொய் திரும்பி வந்த பிறகு சீக்கிரத்தில் நான் வேறு அநேகம் பெருடன் சபையில் சேருவதற்குத் தவணை நிலையில் வைக்கப்பட்டேன். ஞானஸ்நான விஷயத்தைப் பற்றி நான் அதிகமாய்ச் சிந்தனை செய்தேன். நான் சிறு பெண்ணாயிருந்தாலும், வேத வாக்கியங்கள் ஒரே வித ஞானஸ்நானத்தை ஊர்ச்சிதப்படுத்துகிறது என்று கண்டுகொண்டேன். என் மெதடிஸ்டு சகோதரர்கள் சிலர் சொன்னதை நான் ஆட்சேபித்தேன். தெளித்தலும் வேதகாம ஞானஸ்நானமென்று என்னை உணர்த்தி வைக்க என் மெதடிஸ்டு சகோதரிகள் வீணாய்ப் பிரயாசப் பட்டார்கள். LST 17.2

கடைசியாக நாங்கள் இப் பக்தி விநயமான நியமத்தைப் பெற வேண்டிய காலம் திட்டம் செய்யப்பட்டது. பன்னிருவராகிய நாங்கள் ஞானஸ்நானம் பெறும்படி கடலுக்குள் இறங்கின நாளில் காற்று அதிகமாய் அடித்தது, அலைகள் உயரமாய் எழும்பிக் கரையின் மேல் மோதினது. ஆனால் நான் பளுவான இச்சிலுவையை எடுத்த பொது என் சமாதானம் நதியைப் போலிருந்தது. தண்ணீரிலிருந்து நான் எழும்பினதும் ஏறக்குறைய என் பெலம் எல்லாம் பொய் விட்டது. ஏனெனில் கர்த்தருடைய பெலம் என் மேல் அமர்ந்தது, இனி நான் இவ்வுலகதாளல்ல, தண்ணீர் ஆகிய பிரேதக் குழியினின்று புதிய ஜீவனுக்குயிர்த்தெழுந்தேன் என்று உணர்ந்தேன். LST 17.3

அதே தினம் சாயங்காலம் நான் சபையில் சகல உரிமையுடைய ஓர் அங்கமாக சேர்த்துக் கொள்ளப்பட்டேன். LST 17.4

பிறகு 1843-ல் இரண்டாம் வருகையைப் பற்றிய எங்களுடைய திட்டமான கொள்கைகளின் னிமித்தம் மெதடிஸ்டு சபையினின்று என் தந்தையின் குடும்பம் பிரிய வேண்டியதாயிருந்தது. LST 17.5

* * * * *