Go to full page →

கண்டு மறுரூபமடைதல் LST 135

சகோதர சகோதரிகளே ! நாம் கண்டே மறுரூப மடைகிறோம். தேவனுடைய அன்பையும் நமது இரட்சகருடைய அன்பையும் கிகதிப்பதினாலும், தெய்வீகத்தின் பூரணத்தைத் தியானிப்பதி னாலும் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் நீதியை நமதாக்கிக்கொள்வதினாலும் நாம் அந்த சாயலாகத்தானே மறுரூபமடையவேண்டும். LST 135.5

ஆகையால் நாம் சாத்தானின் வல்லமைக்கு அத்தாட்சிகளான அக்கிரமங்கள், சீர்கேடுகள், ஏமாற்றங்கள் ஆகிய கேட்ட பட்டங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, அவைகளை நமது நியாபக அறைகளில் தொங்க வைப்பதினாலும் அவைகளை குறித்துப்பேசி விசனப்படுதுவதினாலும் நமது ஆத்துமாக்கள் அதைரியமடையச் செய்யாதிருப்போமாக. அதைரியப்பட்ட ஓர் ஆத்துமா தன் மட்டில் தேவ வெளிச்சம் பெறாதிருப்பதுந் தவிர மற்றவர்களுக்கும் அவ்வெளிச்சம் போகாமல் அடைத்துப் போடுகிற இருளடைந்த ஓர் சரீரமாயிருக்கிறது. மானிடரின் விசுவாசங்களைக் கெடுத்து அவர்களை அதைரியப் படுத்துவதான தன் வெற்றிபடங்களின் பயனைக் காண சாத்தான் விரும்புகிறான். LST 136.1

பரலோகத்தில் தேவன் எல்லாவற்றிலும் எல்லமாயிருக்கிறார். அங்கே பரிசுத்தமே பிரதானமாய் ஆளுகிறது. அங்கே தேவனோடு பூரண ஐக்கியமாயிருப்பதைக் கெடுப்பதற் கொன்றுமில்லை. நாம் மெய்யாகவே அங்கு போகப் பிரயாணப் பட்டிருந்தால் பரத்தின் ஆவி இங்கே நமது இருதயங்களில் வாசம் செய்யும். ஆனால் பரம காரியங்களை பற்றிச் சிந்திக்க இப்பொழுது நமக்குப் பிரியமில்லையானால், தேவனைப் பற்றிய அறிவைக் கண்டடைய நமக்கு விருப்பமில்லையானால், கிறிஸ்துவின் குணத்தைத் தியானிக்க நமக்கு மனமில்லையானால், பரிசுத்தத்தைப்பற்றி நமக்குச் சிந்தையில்லையானால் அப்போது பரத்தைப் பற்றியுள்ள நமது நம்பிக்கை வீணாகுமென்பதை நான் நிச்சயமாயறியலாம். LST 136.2

தேவனுடைய சித்தத்துக்குப் பூரணமாக இசைந்திருப்பது தான் கிரிஸ்துவனுக்கு முன் எப்போதும் இருக்க வேண்டிய உன்னத நோக்கம். அவன் தேவனைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும், கிறிஸ்து தம்மில் அன்பு கூருகிறவர்களுக்காக ஆயத்தம் பண்ணப் போயிருக்கும் அந்தப் பேரின்ப வீட்டையும் அதின் அலங்காரத்தையும் பற்றியும் அவன் பேசப் பிரியப்படுவான். LST 136.3