Go to full page →

கிறிஸ்துவின் பள்ளிக்கூட பாடங்கள் LST 136

ஜீவியம் பரீட்சார்த்தமுள்ளது. கிரிஸ்துவனுக்கு உலகத்தில் விரோதமான காரியங்கள் சம்பவிக்கும். நஷ்டங்களையும் ஏச்சுப் பேச்சுகளையும் சாந்தமாய்ச் சகித்து, நிந்தை மொழிகளை மெதுவான உத்திரவினாலும் குரூரச் செய்கைகளைப் பட்சமாயும் ஏற்றுக்கொண்டால், கிறிஸ்துவின் ஆவி இருதயத்தில் வாசமா இருக்கிறதென்றும் உயிருள்ள திராட்சைச் செடியின் சத்து கோடிகளுக் கோடுகிறதேன்றும் காட்டுகிறதாயிருக்கும். LST 136.4

இச்சீவியத்தில் நாம் கிறிஸ்துவின் பள்ளிகூடத்திலிருக்கிறோம், இதிலே நாம் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கடைசிக் கணக்குப் பார்க்கப்படும் நாளில், நமக்கு நேரிட்ட சகல இடையூறுகளும், நாம் சகிக்கும்படி அழைக்கப்பட்ட சகல வருத்தங்களும் துன்பங்களும் கிறிஸ்தவ ஜீவியத்தின் சத்தியங்களைப் பொருந்த வைப்பதற்கான அப்பியாச பாடங்களா யிருக்கின்றனவென்று நாம் காணலாம். அவைகளை நாம் நன்றாய்ச் சகித்துக்கொள்வதினால் அவைகள் கிறிஸ்து சாயலை விருத்தியாக்கி உலகத்தானிளிருந்து கிறிஸ்தவனைப் பிரித்துக்காட்டும். LST 137.1