சாத்தானின் சாட்டங்களை ஓயாமல் எதிர்ப்பதில் தான் வெற்றிக்கான நமது ஒரே நம்பிக்கை இருக்கிறதென்று கிறிஸ்துவின் முன் மாதிரி நமக்குக் காண்பிக்கிறது. சோதனைகளாகிய போரில் ஆத்துமாக்களின் எதிராளியை வென்றவர் மனுக்குலத்தின் மேல் சாத்தானுக்கிருக்கும் வல்லமையை அறிந்து நமது நிமித்தம் அவனை ஜெயித்தார். சாத்தானின் சோதனைகளை எதிர்க்க முயலும் நமது முயற்சிகளில், அவருடைய பலத்தோடு நமது பலவீனத்தையும் அவருடைய புண்ணியங்களோடு நமது அபாத்திரத்தையும் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு ஜெய வீரரான அவர் வெற்றியின் சிலாக்கியத்தை நமக்களிதிருக்கிறார். சோதனையை சகிக்கும் அவருடைய பலத்தால் பலப்படுத்தப்பட்டவர்களாய் நாம் அவருடைய சர்வ வல்லமையுள்ள நாமத்தில் எதிர்த்து அவர் ஜெயங்கொண்டது போல ஜெயங்கொள்ளலாம். — M.Y.P -50. LST 138.3
சோதனையினின்று காக்கும் ஓர் கேடையமாகவும் சுத்ததுக்கும் சத்தியத்துக்கும் ஏவும் ஓர் எழுப்புதலாகவும் இருக்கும் தேவனுடைய பிரசன்னத்தின் உணர்ச்சிக்கு வேறெந்த சக்தியும் நிகராகா—Ed. 255 LST 138.4