தெய்வீக ஜீவியத்தில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், ஜெபத்தில் நாம் அதிகமாய்த் தரித்திருக்க வேண்டும். சத்திய தூது11844 ல் அடைந்த பெரிய எமாற்றதிற்குப் பின்னுள்ள காலத்தை குறித்து. ஆதியில் கூறி அறிவிக்கப்பட்ட போது நாங்கள் எவ்வளவு அதிகமாய் ஜெபித்தோம். அறையிலும், பண்டசாலையிலும் பழத்தோட்டத்திலும் அல்லது தோப்பிலும் விண்ணப்பத்தின் சத்தம் எவ்வளவாய் அடிக்கடி கேட்கப்பட்டது, பல முறையும் நாங்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து வாக்குத்தத்தத்தைப் பாராட்டி மணி நேரங்களாக ஊக்கமாய் ஜெபித்தோம்; அடிக்கடி அழுகையின் சத்தம் கேட்கப்பட்டது அதன் பின் ஸ்தோத்திர சத்தமும் துதியின் கீதமும் உண்டானது. LST 138.5
நாம் முதலாவது விசுவாசித்தபோது இருந்ததை விட இப்பொழுது தேவனுடைய நாள் அதிக சமீபமாயிருக்கிறதினால், முன்னே அந்த நாட்களில் இருந்ததை விட நாம் அதிக ஊக்கமாயும் அதிக வைராக்கியமாயும் அனலாயுமிருக்க வேண்டும். அப்பொழுதைப் பார்க்கிலும் இப்பொழுது நமக்கு பெரிய ஆபத்துகள் உண்டு. ஆத்துமாக்கள் அதிகமாய் கடினப்படுகின்றன. நாம் இப்பொழுது கிறிஸ்துவின் ஆவியால் நிறைந்திருக்கவேண்டும்; நாம் அதைப் பெறுமட்டும் இளைப்பாறக்கூடாது. LST 139.1