Go to full page →

கிரியை செய்யும் உயிருள்ள விசுவாசம் LST 140

உண்மையான விசுவாசமும் உண்மையான ஜெபமும் இவை எவ்வளவு உறுதியானவை. இவைகள் இரு கரங்கள் போலிருக்கின்றன. இவைகளினால் விண்ணப்பம் பண்ணும் மனுஷன் அளவற்ற அன்பின் வல்லமையைப் பற்றிப் பிடிக்கிறான். நம்பிக்கையாயிருப்பதே விசிவாசம். அவர் நம்மை நேசிக்கிறாரென்றும் நமககு நன்மையாயிருப்பதின்னதென்பது அவருக்குத் தெரியுமென்றும் அது நம்புகிறது. அவ்விதம் நாம் நமது சொந்த வழியைத் தெரிந்து கொள்வதற்க்குப்பதிலாக அவருடைய வழியைய் தெரிந்துகொள்ளும்படி அது நம்மை நடத்துகிறது. நமது அறிவீனத்திற்குப் பதிலாக அவருடைய ஞானத்தையும், நமது பலவீனத்திற்குப் பதிலாக அவருடைய பலத்தையும், நமது அநீதிக்குப் பதிலாக அவருடைய நீதியையும் அது எற்றுக்கொள்ளுகிறது. LST 140.2

நாமும் பநமது ஜீவியங்களும் இயற்கனவே அவருடையவைகள்; விசுவாசம் அவரின் உரிமையை ஒப்புக் கொள்ளுகிறது, அதின் ஆசிர்வாதத்தை ஏற்றுக் கொள்ளுகிறது. ஜீவியம் சித்தி அடைவதற்கான இரகசியங்களாக சத்தியம், நேர்மை, சுத்தம் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவைகளை நாம் அடைந்து கொள்ளும்படி செய்வது விசுவாசமே. ஒவ்வொரு நல்லெண்ணமும் ஆசையும் தேவனால் ஆயிருக்கிறது. மெய்யான வளர்ச்சியையும் சித்தியையும் உண்டாக்கக் கூடிய ஜீவனை தேவனிடமிருந்து பெறுவது விசுவாசமே. LST 140.3

“தம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெபிக்கும் ஜெபம்.” தன் பாரங்களோடும் சவலைகளோடுமுள்ள இம்மைக்கு அப்பால், இப் பொழுது நம்மைக் கலங்கச் செய்கிறவைகள் எல்லாம் தெளிவாக்கப்படும். அப்பெரிய மகிமையை நாம் எதிர் நோக்கச் செய்வது விசுவாசமே. தேவனுடைய வலது பாரிசத்தில் நமது மத்தியஸ்தராக இயேசு நிற்கிறதை விசுவாசம் காண்கிறது. தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்காகக் கிறிஸ்து ஆயத்தம் பண்ணப் போயிருக்கும் வாசஸ்தலங்களை விசுவாசம் பார்க்கிறது. விசுவாசம் ஜெயங் கொள்ளுகிறவனுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கும் அங்கியையும் கிரீடத்தையும் காண்கிறது, மீட்கப்பட்டோரின் பாட்டுகளைக் கேட்கிறது. LST 140.4