Go to full page →

விசுவாசத்திற்கு சாத்தானின் பதில் வெட்டு LST 141

விசுவாசம் உணர்ச்சியல்ல. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” மெய்யான விசுவாசத்திற்கும் துநிகரத்திற்கும் எவ்வகையிலும் ஒற்றுமை கிடையாது. துணிகரம் விசுவாசத்திற்கு பதிலான சாத்தானின் பதில் வேட்டாயிருக்கிறதினால் மெய்யான விசுவாசமுள்ளவன் மாத்திரம் துணிகரத்திற்கு விலகிப் பத்திரமாயிருப்பான். விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை தனதாக்கிக் கொண்டு , கீழ்ப்படிந்து கனி கொடுக்கிறது. துணிகரமும் வாக்குத்தத்தங்களைத் தனதாக்கிக்கொண்டு மீறுதலுக்குப் போக்காக சாத்தான் உபயோகித்தாற் போல அவைகளை உபயோகிக்கிறது. விசுவாசம், நமது ஆதிப் பெற்றோர் தேவனுடைய அன்பை நம்பவும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் செய்திருக்கும். துணிகரம், தேவனுடைய பெரிய அன்பு பாவத்தின் தீமைகளினின்று தங்களை இரட்சிக்குமென்று நம்பி, அவர்கள் அவருடைய பிரமாணத்தை மீறும்படிச் செய்தது. இரக்கம் பாராட்டப் படுவதற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றாமல் பரம தயவைக் கேட்கிறது விசுவாசமல்ல. உத்தம விசுவாசம் வேதவாக்கியங்களிற் சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களையும் பூர்வ நியமங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. LST 141.1

கிறிஸ்துவைப் பற்றி விசுவாசிப்பது போதாது; நாம் அவரில் விசுவாசிக்க வேண்டும். அவரைச் சொந்த இரட்சகராகக் கொள்ளும் விசுவாசத்தினால் மாத்திரம் நமக்கு நன்மையுண்டாகும்; அது அவருடைய புண்ணியங்களை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுகிறது. அநேகர் விசுவாசத்தை ஓர் அபிப்பிராயமாகக் கொள்ளுகிறார்கள். ஆனால் இரட்சிக்கும் விசுவாசம் ஓர் செய்கையாயிருக்கிறது; அதினால் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வோர் தங்களைத் தேவனோடு உடன்படிக்கையின் மூலமாய் ஐக்கியப்படுத்திக் கொள்ளுகிறார்கள். உத்தம விசுவாசம் ஜீவனாயிருக்கிறது. உயிருள்ள விசுவாசம் அதிகப்படியான தைரியமும் உறுதியான நம்பிக்கையுமாம், அதினால் ஆத்துமா ஜெயிக்கும் ஓர் வல்லமையாகிறது.---G.W. 259-61. LST 141.2