Go to full page →

வீட்டுப் பழக்கம் LST 151

தேவனுடைய கனத்திற்கென்றும் மகிமைக்கென்றுமே பிள்ளைகளுக்குத் திறமைகள் அளிக்கப்பட்டதென்பதை அவர்களுக்குப் போதிக்க வேண்டும். இதன் நோக்கமாகவே அவர்கள் கீழ்படிதலின் பாடம் படித்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் மனப் பூர்வமான கீழ்ப்படிதலுள்ள ஜீவியங்களினால் மாத்திரம் அவர்கள் தேவன் செய்யும்படி கேட்கிற ஊழியத்தைச் செய்யக் கூடும். பிள்ளை விசாரித்தரிகிறதற்குத் தக்க வயதாகு முன்னமே அவன் கீழ்ப்படியும் படி போதிக்கப்படலாம். சாந்தமுள்ள, தீர்க்கமான பிரயாசத்தினால் அப்பழக்கம் ஸ்தாபிக்க பட வேண்டும். இவ்விதம் பெரும்பாலும் அதிகாரத்திற்கும் சித்தத்திற்கும் பின்னல் ஏற்படும் போராட்டங்கள் எல்லாம் தடுக்கப்படலாம். சித்தத்திற்கும் அதிகாரத்திற்கும் நடக்கும் இப்போராட்டங்களோ, பெற்றோரையும் உபாத்திமாரையும் பற்றி வாலிபர் மனதில் வெறுப்பையும் கசப்பையும் உண்டாக்குகிறதற்கும் அடிக்கடி மனுஷனுடையவும் தேவனுடையவும் சகல அதிகாரங்களையும் எதிர்க்கிறதற்கும் ஏதுகரமாயிருக்கின்றன. LST 151.1

மெய்யான வணக்கம் கீழ்ப்படிதளினால் வெளிப்படுத்தப் படுகின்றதென்பதை பிள்ளைகள் அறிவார்களாக. தேவன் கட்டளையிட்டிருப்பதெல்லாம் விசேஷமானவைகளே, அவர் பேசிச் சொல்லியிருக்கும் காரியங்களுக்குக் கீல்ப்படிவதினாலேயே யன்றி அவர் விரும்பும் பக்தி வினைய வணக்கத்தைக் காண்பிக்க வேறொரு வழியுமில்லை. LST 151.2