Go to full page →

இளமையிலே ஆரம்பி LST 151

வெகுசில பெற்றோர் தான், தங்கள் பிள்ளைகளுக்குக் கீழ்ப்படிதலை இளமையிலேயே கற்பிக்க ஆரம்பிக்கிறார்கள். பிள்ளைக்குக் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொடுக்க அது மிகவும் இளமையாயிருக்கிறதென்று நினைத்து, பெற்றோர் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வருஷாமாக அதற்குக் கீழ்ப்படிதலின் பாடத்தை அப்பியாசப் படுத்தாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் இக்காலமெல்லாம் அக்குழந்தையின் இடத்தில் சுய நலம் பலமாய் வளருகிறது. அதை அடக்கி ஆளும் வேலை பெற்றோருக்கு நாளுக்கு நாள் அதிகக் கஷ்டமாகிறது. பிள்ளைகள் அதிக இளம் பிராயத்திலேயே தெளிவையும் சுருக்கமாயும் தங்களுக்குச் சொல்லப்பட்டவைகளை கிரகித்துக்கொள்ளக் கூடும், அன்றி யும் அவர்களை அன்பாயும் ஞானமாயும் கையாடி அவர்களுக்குக் கீழ்ப்படிதளைக் கற்பிக்கலாம். LST 151.3

பெற்றோருக்கு அவ மரியாதை காண்பிக்க அவர்களுக்கு ஒரு போதும் இடங் கொடுக்கக் கூடாது. சுய சித்தத்தை ஒருபோதும் கண்டிக்காமல் விடக் கூடாது. பிள்ளையின் பிற்கால வாழ்விற்கு பட்சமான அன்பும் உறுதியான சிட்சையும் அவசியம் ---- C.T. 110-2. LST 152.1