Go to full page →

பயன்படுமாறு வேதத்தைப் படித்தல் LST 155

எந்த ஆவியினால் வார்த்தை அருளப்பட்டதோ அந்த ஆவியின் சகாயத்தினால் மாத்திரம் மெய்யான வேத அறிவை அடையக்கூடும். இவ்வறிவை அடைவதற்கு நாம் அதின்படி ஜீவிக்க வேண்டும். தேவ வசனம் கற்பிக்கிறபடி யெல்லாம் நாம் கீழ்ப்படிய வேண்டும், அது அளிக்கும் வாக்குத்தத்தங்களை எல்லாம் நாம் நமது சொந்தமாகக் கொள்ளலாம். அது நம்மைச் ஜீவிக்கும்படிச் சொல்லும் ஜீவியமும் அதன் பெலத்தைக் கொண்டு நாம் ஜீவிக்க வேண்டிய ஜீவியமாயிருக்கிறது. வேதம் இவ்விதம் மதிக்கப்பட்டால் மாத்திரம் பயன்படுத்தத் தக்கதாய்ப் படிக்கக்கூடும். --- Ed. 189. LST 155.3